Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்..
இந்த 4 ராசிக்காரங்களையும் சும்மா கூட பக்கத்துல வெச்சுக்காதீங்க... அப்புறம் நீங்க அவ்ளோதான்
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒரு நாளைத் துவங்குகின்ற பொழுது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம்
மற்றவர்களுக்கு உதவி செய்ய முன் வருவீர்கள். பொதுக்கூட்டங்களில் நீங்கள் பேசும் போது, நீங்கள் எதிர்பார்த்த முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் கொஞ்சம் அமைதியுடன் நடந்து கொள்ளுங்கள். திறமைக்கேற்ற பாராட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சுக்களினால் நீங்கள் நினைத்த வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். திருமணம் குறித்த பேச்சு வார்த்தைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். வெளியில் எடுத்துச் செல்லும் உடமைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் பிறருடைய வேலையையும் சேர்த்து பார்க்கச் சொல்வார்கள். வியாபாரங்களில் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்
தொழில் மற்றும் வர்த்தகங்களில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். நீங்கள் திட்டமிட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய புதிய இலக்குகளை நோக்கிய பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களுடைய தேவையற்ற வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் நட்பு உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் முக்கிய ஆவணங்களைக் கையாளுகின்ற போது, கொஞ்நம் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரங்களில் நீங்கள் எடுக்கும் அதிரடியான முடிவுகளால் அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
வீடு மற்றும் மனைகள் மூலமாக லாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலமாக தடைபட்டு வந்த செயல்கள் நிறைவேறும். உங்களுக்குக் கிடைக்கப் போகும் கௌரவப் பதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும். அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். உங்களுடைய பழைய கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் உங்களுக்கு மேலோங்கும். இன்று அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

துலாம்
வியாபாரங்களில் நீங்கள் செய்யும் அதிரடியான செயல்களினால் உங்களுடைய போட்டிகளை மிக எளிதாக சமாளிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்தவைகளில் சில காரியங்கள் தடைபட்டாலும் எதிர்பாராத சில வேலைகள் சிறப்பாக முடியும். வீட்டில் பெற்றோர்களுடன் சிறு சிறு கருத்து மோதல்கள் தோன்றும். குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கான முயுற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வியாபாரங்களில் உங்களுடைய வாடிக்கையாளர்களால் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களுடைய நட்புறவுகள் கிடைக்கும். உங்களுடைய பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். உடன் பிறந்தோர்களின் வகையில்உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம்அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய தாய் வழியிலான உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்களுடைய ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய தேவைகள; நிவர்த்தியாகும். நட்பு வட்டம் விரிவடைந்து கொண்டே செல்லும். உங்களுடைய வீட்டை அழகுபடுத்துவதற்கான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். பழைய உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனைவி வழியிலான உறவினர்கள் மூலமும் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது மிக நல்லது. மனதில் முழு தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
வீட்டு சூழ்நிலையை அறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரங்களில் வேலையாட்களால் சில விரயச் செலவுகள் ஏற்படும். நீங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து கூட உங்களுக்கு உதவிகள் வந்து சேரும். புனித யாத்திரைகள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்
நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுடைய வியாபாரங்களில் நீங்கள் பயன்படுத்தும் பல புதிய யுக்திகளால் உங்களுடைய பழைய சரக்குகளை விற்பனை செய்து முடிப்பீர்கள். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications