ஒருவழியா சங்கடஹர சதுர்த்தி முடிஞ்சிருச்சு... இனி எந்த ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது? யாருக்கு சோத

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahibala

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. எது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது என்று இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். வீட்டை மேம்படுத்தும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். இன்று காதல் எண்ணத்தை பரப்புவீர்கள். உங்கள் மனதில் பட்டதை சொல்வதற்குப் பயப்படாதீர்கள். இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு என்றுமே இந்த அளவுக்கு இனித்ததில்லை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். மார்க்கெட்டிங் துறையில் நுழைய வேண்டும் என்ற நீண்டகால நோக்கம் நிறைவேறலாம். அது உங்களுக்கு அபரிமிதமான ஆனந்தத்தைத் தரும். வேலையைப் பெறுவதற்கு சந்தித்த எல்லா தடைகளையும் நீக்கிவிடும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கை துணைவர்/துணைவி தன் இன்னொரு பக்கமான தேவதை முகத்தை காண்பிப்பார். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். காரணங்கள் சொல்வதை உங்கள் பாஸ் ஏற்றுக் கொள்ள மாட்டார் - அவரிடம் நல்ல பெயரை தக்க வைக்க வேலையை செய்யுங்கள். 'உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்திக் கொள்ள எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். குடும்பத்தினருடன் நீங்கள் நேரத்தை செலவிடாவிட்டால் வீட்டில் பிரச்சினைகள் எழலாம் உங்கள் அன்புக்குரியவர் கடினமான மனநிலையை இன்று உருவாக்குவார். உங்களுடைய கோபமான நடத்தை நல்ல நட்பைக் கெடுத்துவிடும் என்பதால் அதைக் கட்டுப்படுத்துங்கள். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள். இன்று, நீங்கள் உங்கள் துணையுடன் ஏற்பட்ட சண்டையினால் திருமண வாழ்க்கை பலவீனமடைந்ததை போல உணரக்கூடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் இதயத்தை ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் - அது கடினமாகவும் - ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் பெருகும். காதல் விவகாரத்தில் அடிமையைப் போல இருக்காதீர்கள். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள முடிவுகள் இறுதி செய்யப்படும். புதிய முயற்சிகளுக்கான திட்டங்கள் முடிவடையும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான பிணக்குகளுக்கு பிறகு உங்கள் துணையின் அன்பான கவனிப்பு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கருப்பு நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். கோளாறான உங்களின் நடத்தை அன்புக்குரியவருடன் மோதலை ஏற்படுத்தும். இன்று ஆபீசில் உங்களுக்கு யாராவது நல்ல ட்ரீட் கொடுக்க கூடும். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் நடுநாயகமாக இருப்பீர்கள். இன்று கடினமான நாள். ஆனால் பொறுமயுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெறலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

பிள்ளைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தி எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும். உணர்ச்சிவசப்படும் இயல்பை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் நட்பை பாதிக்கலாம். கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று, ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணையுடன் சண்டை ஏற்படலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். காதலரை பரஸ்பரம் புரிந்து கொள்ள அவருடன் நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும். விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள். வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று நீங்கள் இருவரும் மீண்டும் காதலில் விழுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடலாம். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மறைமுகத் தொந்தரவுகள் உண்டாக வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்

மீனம்

மனைவியின் வழியில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் சூடு பிடிக்கும் நாளாக இருக்கும். லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று திடீர் அதிர்ஷ்டம் ஏற்படக்கூடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, February 23, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion