இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahibala

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அப்படி நடந்துகொண்டால்தான் அவர்களுக்கு திருப்தி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் செயல்படவும். சளி, காய்ச்சல் போன்ற உபாதைகள் தோன்றும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

மனதில் புதிய வகையான எண்ணங்கள் தோன்றும். சமூக சேவை புரிபவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மறுமணத்திற்கு வரன் தேடுவதற்கான சரியான காலம் இது. மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மனத் தெளிவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ஆகவும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு உல்லாசப் பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசுத்தரப்பில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக வழிபாடு மற்றும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய

அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

சொத்து சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். சமயோகித பேச்சுக்களால் காரிய சித்தி பெறுவீர்கள். அந்நியர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

உங்களுடைய முயற்சிக்கேற்ற பலன் கைமேல் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். முக்கிய உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெறுவார்கள். பயணங்களின் மூலமாக அனுகூலங்கள் உண்டாகும். வீடு மற்றும் மனையில் மூலம் லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

உங்களுடைய நெருங்கிய நண்பர்களிடம் கொஞ்சம் அமைதிப்போக்கை கடைபிடிப்பது நல்லது. தொழிலின் மூலம் பிரபலம் அடைவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அதனால் மனதுக்கு நிம்மதி கிடைக்கும். முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். மனைவியின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

உங்களுடைய நெருங்கிய உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த முடிவுகள் உண்டாகும். கலைத்துறையில் இருக்கும் கலைஞர்களுக்கு பெருமை உண்டாகும். உங்களுடைய நினைவாற்றல் மேம்படும். அயல்நாட்டு பயணங்களில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

வீட்டில் பெற்றோர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. நீங்கள் எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் உங்களுடைய காதுகளுக்கு வந்தடையும். வீடு மற்றும் மனை சம்பந்தமான சுப விரயச் செலவுகள் ஏற்படும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். உறவினர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் வரும். நெருங்கிய நண்பர்களிடம் கருத்து வேறுபாடு தோன்ற வாய்ப்புண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

உங்களுடைய மூத்த சகோதரர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்கவும். நீங்கள் செய்கின்ற நற்செயல்களால் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். புண்ணிய செயல்களுக்கு நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. புனித யாத்திரைகள் சென்று மனம் மகிழ்வீர்கள். முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

பயணங்கள் மேற்கொள்ளும் போது கொஞ்சம் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் கொஞ்சம் பொறுமையைக் கடைபிடிக்கவும். உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்கவும். நீங்கள் எதிர்பாராத பணவரவு உங்களுக்கு ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

உங்களுடைய எதிர்காலப் பலன்கள் கருதி, புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உங்களுடைய இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் பெருமைப்படக்கூடிய செய்திகள் உங்களுக்கு வந்தடையும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு லாபம் உண்டாகும். உங்களுடைய வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் இருக்கும்.

மீனம்

மீனம்

வீட்டில் பெற்றோர்களுடைய உடல் நலனில் கவனம் தேவை. உங்களுடைய நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் சூழல்கள் உண்டாகும். உங்களுடைய பேச்சில் கொஞ்சம் நிதானமும் பொறுமையும் தேவை. உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும். உங்களுடைய புதிய முயற்சிகளைத் தவிர்த்து கொஞ்சம் நிதானத்துடன் செயல்படவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, February 17, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion