Latest Updates
-
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
பங்குனி கடைசி சனிக்கிழமை... எந்த ராசிக்காரர்கள் என்ன செய்யணும்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும்.

எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நங்கள் எதிர்பாராமலேயே உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் அமையும். போட்டிகளில் பங்கு பெறுவீர்கள். உடல் சோர்வும் மன அழுத்தமும் நிவர்த்தி ஆகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
மனதுக்குள் ஒருவிதமான தடுமாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். நண்பர்களிடம் கருத்துக்களைப் பரிமாறும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உறவினர்களிடமும் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. பயணங்களின் மூலம் நினைத்த செயல்கள் நிறைவடைய கொஞ்சம் கால தாமதமாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
உடலில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். மனதுக்குள் தெளிவான சிந்தனைகள் தோன்றும் நாள். உங்களுடைய அறிவுத் திறன் மேம்பட்டு இருக்கும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். அடுத்தவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். செய்கின்ற செயலில் கொஞ்சம் திருப்தியான சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுடைய உறவினர்களுக்கு இடையில் உங்களுடைய மதிப்பு உயரும். நினைவாற்றல் அதிகரிக்கும். செய்கின்ற செயல்களால் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். போட்டிகளைச் சமாளித்து அதில் வெற்றியும் காண்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு கொஞ்சம் மேன்மையான சூழல் உருவாகும். வேளாண்மை சம்பந்தப்பட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் முன்னேற்றம் ஏற்படும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கும். வெளிநாட்டுப் பயணங்களில் இருந்து வந்த தடைகள் நீங்க ஆரம்பிக்கும். எதுவாக இருந்தாலும் அதில் கொஞ்சம் விடாப்பிடியாக செயல்பட்டு, அந்த வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாகஎண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
அருள் தரும் ஆன்மீக வேள்விகளில் கலந்து கொண்டு மனம் ஆறுதல் அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் சின்ன சின்ன அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். சாஸ்திரங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதற்குக் கொஞ்சம் கால தாமதமாகும். பணியில் நிறைய புதிய மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

துலாம்
தொழிலில் புதிய நபர்களுடைய முதலீடுகளின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். தொழில் மற்றும் பிற இடங்களில் நீங்கள் இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். சர்வதேச வணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பொருள் லாபம் உங்களுக்குக் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவினால் உங்களுடைய கவலைகள் அனைத்தும் தீர்ந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் உயர்வான இடம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பெரிய மகான்களுடைய தரிசனங்கள் கிடைக்கும் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். நிர்வாகத் துறைகளில் இருப்பவர்களுக்கு சில சோதனைகள் வரும். கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

தனுசு
வீட்டில் இருந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் குறையும். வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். மனதுக்குள் இதுவரை இருந்து வந்த கவலைகள் தீர்ந்து போகும். உங்கள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்களுடன் இணைந்து விருந்து மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மகரம்
நீங்கள் எதிர்பாராத பொருள் சேர்க்கைகள் உங்களுக்குக் கிடைக்கும். வீடு, மனை விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு உயர் அதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். தொழிலில் நீங்கள் நினைத்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். மாணவர்கள் கல்வி பயில்கின்ற விதங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பொது விவாதங்களில் பெரும் புகழ் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கும்பம்
உங்களுடைய உடன் பிறப்புகளின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கப் போகிறது. குடும்ப உறுப்பினர்களுடைன் சேர்ந்து வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் செய்யத் திட்டமிட்டிருந்த பணிகளை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கல்வித்துறை சம்பந்தப்பட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்
வெளியூர் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் இருக்கும். நீங்கள் நினைத்த காரியங்களில் திட்டமிட்ட லாபம் உண்டாகும். நண்பர்களுடைய முழு ஆதரவும் உங்களுடைய தொழிலுக்குக் கிடைக்கும். சுய தொழில் சம்பந்தமாக நல்ல செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











