இந்த மூனு ராசிக்காரருக்கும் இந்த திசையில இருந்து பெரிய அதிர்ஷ்டம் ஒன்னு தேடி வரப்போகுது

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahibala

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

horoscope

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மேஷம்

மேஷம்

வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு புகழும் வெற்றியும் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டில் தாய் மற்றும் தந்தையுடன் இருந்து வந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகுள் நீங்கும். சுமூகமான உறவு உண்டாகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையில் உள்ளவர்கள் உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்தி மற்றவர்களுடைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்களுடைய சகோதரர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். அரசு அதிகாரிகளின் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்தபடி உங்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடன் உதவிகள் கிடைக்கும். உங்களுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

வெளிநாடுகளில் வேலைக்காக முயுற்சி செய்கின்றவர்களுடைய முயற்சிகள் நிறைவேற ஆரம்பிக்கும். ஆன்மீகப் பயணங்கள், புனித யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். வர்த்தகங்கள் தொடர்புடைய செயல்பாடுகளில் நீங்கள் நினைத்தபடி லாபங்கள் கிடைக்கும். உயர் கல்வித் துறையில் நீங்கள் எதிர்பார்த்த முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். புதிய ஆட்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்கு நல்ல மாற்றமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

கடகம்

கடகம்

முக்கியப் பணிகளில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் அமையும். நீங்கள் திறம்பட கையாளுகின்ற பொருள்களில் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கடன் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளால் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

ஆன்மீக வழிபாட்டு விஷயங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியாட்களுடைய தொடர்புகளின் மூலமாக உங்களுக்கு நன்மை கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. மனதுக்குள் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். இதுவரையிலும் நிலுவையில் இருந்த பண வரவுகள் உங்களுடைய கைகளுக்க வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமாகவும் இருக்கும்.

கன்னி

கன்னி

வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். வெளியிடங்களில் உங்களுக்கு இருந்த செல்வாக்கு மேலும் மேலும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களின் விஷயங்களில் இருக்கும் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். இதுவரைக்கும் நிலுவையில் இருந்த தடைகள் நீங்கி நீங்கள் நினைத்த வெற்றி உங்களுக்கு கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

துலாம்

துலாம்

உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தேவையில்லாம வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். வீட்டில் குழந்தைகள் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். ஆன்மீகத்தில் உங்களுடைய எண்ணங்கள் அதிகரிக்கும். நீங்கள் செய்கின்ற செயல்களால் அடுத்தவர்களால் பாராட்டப்படுவீர்கள். நீங்கள் திட்டமிட்ட பயணங்களில் சில மாற்றங்கள் உண்டாகலாம். உங்களுடைய மந்தத் தன்மையினால் பணியில் கொஞ்சம் காலதாமதங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்களுடைய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வருகின்ற வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் நீங்க அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். உங்களுடைய உறவினர்களுக்கு இடையேயான உறவுகள் மேம்படும். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். கலை சம்பந்தப்பட்ட அறிவுகள் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

தனுசு

தனுசு

கால்நடைகளின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய பெற்றோர்களின் ஆதரவினால் பெரும் மனம் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைகள் ஏற்படும். வேள்வி போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகளில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரியோர்களின் முழு ஆசியும் உங்களுக்குக் கிடைக்கும். அறிவுக்கூர்மை உண்டாகும். பரம்பரை சொத்துக்களின் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமாகவும் இருக்கும்.

மகரம்

மகரம்

வெளியூா தொடர்பான தொழில் சம்பந்தப்பட்ட வாய்ப்புகளில் உங்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பாராத சில மாற்றங்களினால் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். உங்களுடன் இருக்கின்றவர்கள் பற்றிய புரிதல்கள் உங்களுக்கு உண்டாகும். சின்ன சின்ன தூர பயண்ஙகளால் உங்களுக்கு நன்மையும் லாபமும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

பொருளாதார ரீதியான தடைகள் நீங்கி அதை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் நினைத்த பலன்களை உங்களுடைய முயற்சி கொடுக்கும். புதிய நபர்களுடைய நட்புகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய வாக்குவாதத் திறமையினால் அடுத்தவர்களுடைய பாராட்டுக்களையும் பெருமைகளையும் அடைவீர்கள். உங்களுக்கான கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். முக்கியப் பணியில் உள்ளவர்களுக்கு உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

மீனம்

மீனம்

தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உங்களுக்கு வந்து போகும். வாகனங்களில் பயண்ஙகள் மேற்கொள்கின்ற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். உங்களுடைய சிந்தனைகளை மேம்படுத்தி அதில் நல்ல மாற்றங்களும் உண்டாகும். உங்களுடைய சொந்த தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் உங்களுக்கு சரியான நேரத்தில் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, April 5, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion