Latest Updates
-
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த மூனு ராசிக்காரங்க காட்லயும் இன்னைக்கு ஒரே பண மழை தான்... என்ஜாய் பண்ணுங்க
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உங்களுடைய மனதுக்குப் பிடித்த நபர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் உங்களுடைய பங்குதாரர்களுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பாராத பணவரவு உங்களைத் தேடி வரும். புதிய உங்களுக்கான லட்சியத்தைப் பற்றிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

ரிஷபம்
தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான உதவிகள் கிடைக்கும். வேலையிடத்தில் உங்களுக்கு ஆதரவான நிலைமை உண்டாகும். நீண்ட நாள் கடன் ஒன்றை அடைப்பதற்கான வழி பிறக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் நிறைவுபெறும். எந்த காரியமாக இருந்தாலும் அதில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிவாகையும் சூடுவீர்கள். மனதில் ஏதேனும் விஷயத்தைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தால் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதால் ஆறுதல் அடையலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்
வேலை சார்ந்த உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வீட்டிற்கு உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். உங்களுடைய நீண்டகால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பிரபலங்களுடைய நட்பு கிடைக்கும். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களைத் தேடி வந்து பொருள் வாங்கிச் செல்வார்கள். உங்களுக்கான பொறுப்புகள் பணியிடத்தில் அதிகரித்துக் கொண்டே செல்லும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்க ஆரம்பிக்கும். உங்களுடைய நட்பு வட்டாரம் விரவடைய ஆரம்பிக்கும். இதுவரை இருந்து வந்த பழைய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபார நுட்பங்களைக் கற்றுக் காள்ள முயற்சி செய்வீர்கள். வேலையிடத்தில் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்
அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். எந்த வேலையையும் எளிதாக செய்து முடிக்க மாட்டீர்கள். நண்பர்களிடம் கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ளுங்கள். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தேவையில்லாமல் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். உங்களுடைய வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பண வரவு கைக்கு வந்து சேர காலதாமதம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
எதிர்கால வாழ்க்கை குறித்த திட்டங்களைத் தீட்டுவீர்கள். வீட்டில் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என்று தேடிப்பிடித்து வாங்கிக் கொடுப்பீர்கள். தொழிலில் புதிதாக விநியோகஸ்தர்களும் வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்க ஆரம்பிப்பீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ள உங்களுடைய அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்
வர்த்தகங்கள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களின் செயல்பாடுகளில் நீங்கள் நினைத்தபடி வெற்றி பெறுவீர்கள். உறவினர்களின் மூலம் வியாபாரத்தில் பெரிய வியக்கத்தக்க மாற்றங்கள் உண்டாகும். முக்கிய உத்தியுாகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவினைக் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பண வரவு கிடைக்கப் பெற்று திருப்தியடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் காவி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
எதிர்காலம் சம்பந்தப்பட்ட சில முடிவுகளை எடுக்க முற்படுவீர்கள். உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களுடைய நட்புகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்களில் கொஞ்சம் பதட்டங்கள் இன்றி, கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இதுவரை தடைபட்டுக் கொண்டே இருந்த வேலைகளை மிக விரைவாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக நீங்கள் சில பொறுப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமும் இருக்கும்.

தனுசு
வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்தமான சூழ்நிலை மாறி விறுவிறுப்படையும். முக்கியமான உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் முழு நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவீர்கள். எவ்வளவு சிக்கலையும் சமாளிக்கிற துணிச்சலும் ஆற்றலும் பெறுவீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். வீட்டிலும் பொது இடங்களிலும் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். சொந்தமாகத் தொழில் செய்கின்றவர்களுக்கு நினைத்தபடி லாபம் உண்டாகும். வெளியிடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வதால் மனமகிழ்ச்சி உண்டகும். உத்தியோகத்தில் உங்களுக்கு நிறைய சவால்கள் காத்துக் கொண்டிருக்கும். அவை அத்தனையையும் சாதனையாக்கிக் காட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கும்பம்
வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வெளியிடங்களில் உங்களுக்கு வரவேற்பு அதகரிக்கும். வியாபாரங்களில் தொழில் பங்குதாரர் மற்றும் வாடிக்கையாளர்களி்டம் கொஞ்சம் நிதானமாக இருங்கள். மறைமுகமாக உங்களுக்கு நெருக்கடிகள் வந்து கொண்டே தான் இருக்கும்.அலைச்சல்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மீனம்
முக்கிய உத்தியோகஸ்தர்கள் உங்களுடைய உடன் பணி புரிகின்றவர்களிடமும் உயர் அதிகாரியிடமும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் முழு ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தி உங்களை மற்றவர்கள் முன்காக நிரூபித்துக் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வாகனங்களில் சின்ன சின்ன மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











