Latest Updates
-
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
சித்திரை முதல் செவ்வாய்... 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியது என்ன?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும். அதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
சமூக சேவையில் ஈடுபடுகின்றவர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்பட்டு நிற்கும். உங்களுடைய செயல்பாடுகளில் உங்களின் வேகம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய பழைய நினைவுகளால் மனதுக்குள் சின்ன சின்ன குழப்பங்கள் உண்டாகி மறைய ஆரம்பிக்கும். உங்களுடைய கடன்களைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய உறவினர்களால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். வாகனங்களுக்கான பராமரிப்பு செலவுகள் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மிதுனம்
நீங்கள் திட்டமிட்ட காரியங்களை முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்த முயற்சி செய்வீர்கள். உங்களுடைய உடன் பிறப்புகளைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்
இதுவரைக்குக்கும் தடைபட்டுக் கொண்டே இருந்த காரியங்கள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் சம்பந்தமாக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வெளியிடப் பணிகள் மூலம் புதிய நபர்களுடைய அறிமுகங்களும் நட்பும் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய சிந்தனையின் போக்கினில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுடைய கைக்கு வந்து சேர கொஞ்சம் கால தாமதமாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருனாதார சிக்கல்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய நினைவாற்றல் மேம்பட்டு வரும். உங்களுக்குள் புதிய எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கன்னி
வீடு மற்றும் மனையின் மூலம் உங்களுக்கு லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளை அறிந்து அதை நீங்களே நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் நீங்கி, மனம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பரம்பரை சம்பந்தப்பட்ட சுப செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். எதிர்பாராத உறவினர்களின் வருகையினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய உடன் பிறப்புகளிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய உத்தியோகத்தில் உங்களுடைய உங்களுடைய திறமைக்கேற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்களை அமைத்துக் கொண்டு அதை நிறைவேற்ற முழு முயற்சியோடு செயல்படுவீர்கள். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் நீல நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுடைய புதிய புதிய முயற்சிகளால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். கல்வி தொடர்பான பயணங்கள் மேற்கொள்கின்றவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்கள் உடன் இருப்பவர்களால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய ஆட்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். வீட்டி்ல கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நிறமும் இருக்கும்.

தனுசு
மனம் பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேன்மையும் நன்மையும் உண்டாகும். வீட்டில் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்கு உண்டாகும். உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய மந்தத் தன்மையினால் நீங்கள் செய்யும் வேலைகளில் உங்களுக்குக் காலதாமதம் உண்டாகும். தொழில் நிமித்தமான பயணங்களில் கொஞ்சம் கவனம் வேண்டும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் வெளியில் எடுத்துச் செல்லும் உடைமைகளில் உங்களுக்குக் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
நண்பர்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் உங்களுடைய எதிர்காலம் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உங்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். சுப நிகழ்ச்சிகளால் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். பழைய நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
தொழிலில் உங்களுடைய கூட்டாளிகளிடம் தேவையில்லாமல் வீண் வாக்குவாதங்களைச் செய்யாதீர்கள். மனதுக்குள் நீங்கள் நினைத்து வந்த எண்ணங்கள் நிறைவேறும். வெளியூா பயணங்களால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். உங்களுக்கான தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கௌரவப் பதவிகளின் மூலமாக உங்களுக்கு மதிப்புகள் உயரும். முக்கிய உத்தியோகத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications