Latest Updates
-
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்!
இந்த 2019 இல் எந்தெந்த நாட்களில் முடி வெட்டலாம்? எந்த நாட்களில் வெட்டக்கூடாது... தெரிஞ்சிக்கங்க
இந்த வருகிற 2019 ஆம் ஆண்டு எந்தெந்த நன்னாட்களில் முடி வெட்டலாம் என்பது பற்றி இங்கே விளக்கமாக விவாதிக்கபட்டுள்ளது.
ஒவ்வொரு நபரின் அழகு மற்றும் வசீகரத்தை அதிகரிக்கும் தன்மை தலைமுடிக்கு உண்டு. அதனால் நாம் ஒவ்வொருவரும் கூந்தல் பராமரிப்பில் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறோம். ஒரு நபரின் பழக்க வழக்கத்தை அவர்கள் தங்கள் தலை முடியை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதை வைத்து சொல்ல முடியும்.
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் அழகாக பராமரிக்கவும் நாம் தலை முடியை வெட்டிக் கொள்கிறோம் அல்லது அதன் வடிவத்தில் திருத்தம் செய்து கொள்கிறோம்.

முடி வெட்டுதல்
ஆனால் இப்படி முடியை வெட்ட அல்லது திருத்தம் செய்ய நாம் தனியாக நாள் எதுவும் பார்ப்பதில்லை. நாள் பார்த்து தான் தலை முடியை வெட்ட வேண்டும் என்பதும் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. ஆனால் தலை முடியை திருத்தம் செய்து கொள்வதற்கான அல்லது வெட்டுவதற்கான உகந்த நாட்களாக சில நாட்களை ஜோதிடம் வகுத்துள்ளது. இந்த நாட்களில் உங்கள் தலை முடியை திருத்தி வெட்டுவதால் உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கலாம். எனவே இந்த பதிவைப் படித்து அந்த நாட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சந்திரனும் முடி திருத்தம் செய்வதும்
மனித வாழ்க்கையிலும் பூமிலும் நடக்கும் பல விஷயங்களிலும் சந்திரனின் தாக்கம் அதிகம் உண்டு. வளங்களைப் பெருக்குவது சந்திரனின் கடமை ஆகும். குறிப்பிட்ட சந்திர கட்டங்களில் விதைகள் விதைக்கப்படுவதால் சிறந்த விளைச்சல் கிடைக்கும். கடலில் உண்டாகும் அலைகள் மற்றும் விலங்குகளின் நடத்தைகளிலும் சந்திரனின் தாக்கம் உண்டு. சந்திரனின் வளர்ச்சியில் மாறுபாட்டை வைத்து கடலின் சீற்றத்தில் மாறுபாடு உண்டாவதை நாம் அறிந்திருப்போம். இதே போல், உங்கள் கூந்தல் அழகாக தோற்றமளிக்கவும், கூந்தலின் ஆரோக்கியம் மேம்படவும், குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே தலை முடியை திருத்தம் செய்ய அல்லது வெட்ட வேண்டும். 2019ம் ஆண்டு அத்தகைய நாட்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.

2019ம் ஆண்டு முடி திருத்தம் செய்ய உகந்த நாட்கள்
உங்கள் தலை முடி சரியான வடிவத்தில் இல்லாமல், வறண்டு சோர்வாக காணப்பட்டால், பௌர்ணமி அன்று முடி திருத்தம் செய்வது மிகவும் நன்மை அளிக்கும். இதனால் உங்கள் முடி நல்ல வடிவம் பெறும். வலிமை மற்றும் பளபளப்பு அதிகரிக்கும்.
நீங்கள் சிறந்த முறையில் உங்கள் கூந்தலை அழகாக பராமரிப்பது உண்மை என்றால், நீங்கள் சந்திர கட்டத்தை பற்றி நிச்சயம் அறிந்து கொண்டிருக்க வேண்டும்.

அமாவாசை - முடி திருத்தம் செய்ய உகந்த நாள் அல்ல
அமாவாசை நாளன்று முடி திருத்தம் செய்வது நல்லதல்ல. அமாவாசை என்பது வானில் சந்திரன் தென்படாத நாளாகும். இந்த நாளில் முடி திருத்தம் செய்வதால் அது உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், மேலும் தலை முடியின் வேர்க்கால்கள் வலிமை இழக்கலாம். இந்த நாட்களில் முடி திருத்தம் செய்வதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள், நீங்கள் விரும்பும் பலனை கொடுக்காமல் இருக்கும் வாய்ப்புகள் அமைய நேரலாம்.

அமாவாசை நாட்கள் 2019
ஜனவரி 6
பிப்ரவரி 4
மார்ச் 6
ஏப்ரல் 5
மே 5
ஜூன் 3
ஜூலை 2
ஆகஸ்ட் 1
ஆகஸ்ட் 30
செப்டம்பர் 28
அக்டோபர் 28
நவம்பர் 26
டிசம்பர் 26

வளர்பிறை சந்திரன் வரும் நாட்களில் முடி திருத்தம்
முடி திருத்தம் செய்வதற்கு அல்லது வெட்டுவதற்கு வளர்பிறை நாட்கள் மிகவும் உகந்ததாகும். வளர்பிறை நாட்களில் முடி திருத்தம் செய்வதால் உங்கள் கூந்தல் வலிமையாகவும் வேகமாகவும் வளர்கிறது. குறிப்பாக கூந்தலில் அடி நுனி பகுதி வறண்டு இருக்கும்போது அதனை இந்த நாட்களில் திருத்தம் செய்வதால் கூந்தல் அழகு பராமரிக்கப்படுகிறது. நண்பகல் முதல் மாலை 6 மணி வரை உகந்த காலமாகும்.

2019ம் ஆண்டின் வளர்பிறை நாட்கள்
ஜனவரி 14
பிப்ரவரி 12
மார்ச் 14
ஏப்ரல் 12
மே 12
ஜூன் 10
ஜூலை 9
ஆகஸ்ட் 7
செப்டம்பர் 6
அக்டோபர் 5
நவம்பர் 4
டிசம்பர் 4

பௌர்ணமி சந்திரன் - முடி திருத்துவதற்கு சிறந்த நாள்
உங்கள் கூந்தல் மோசமான வடிவத்தில் இருந்தால், அதனைத் திருத்தி அழகு பெறச் செய்ய சரியான வழி, முடி திருத்தம் செய்வதை பௌர்ணமி நாளன்று செய்து கொள்வது தான். இதனால் உங்கள் முடி அடர்த்தியாக மற்றும் வலிமையாக வளர்கிறது. பௌர்ணமி நாளன்று காலை ஆறு மணி முதல் நண்பகல் பன்னிரண்டு மணிக்குள் உங்கள் முடியைத் திருத்தம் செய்து கொள்ளலாம்.

2019ம் ஆண்டின் பௌர்ணமி நாட்கள்
ஜனவரி 21
பிப்ரவரி 19
மார்ச் 21
ஏப்ரல் 19
மே 18
ஜூன் 17
ஜூலை 16
ஆகஸ்ட் 15
செப்டம்பர் 14
அக்டோபர் 13
நவம்பர் 12
டிசம்பர் 12

தேய்பிறை
தேய்பிறை சந்திரன் வரும் நாட்களில் மிக அதிக முடி உள்ளவர்கள் முடி திருத்தம் செய்யலாம்
மிக அதிக முடி உள்ளவர்கள், தேய்பிறை நாட்களில் அதனை வெட்டுவதால், அதிக பலன் கிடைக்கும். இப்படி செய்வதால் முடி விரைந்து வளர்வது தடுக்கப்படும். குறிப்பாக, காலை ஆறு மணி முதல் நண்பகல் பன்னிரண்டு மணிக்குள் முடி திருத்தம் செய்வது நல்லது. இந்த நேரத்தில் சந்திரனின் ஆற்றல் குறைவாக இருக்கும்.

2019ம் ஆண்டிற்கான தேய்பிறை நாட்கள்
ஜனவரி 27
பிப்ரவரி 26
மார்ச் 28
ஏப்ரல் 27
மே 26
ஜூன் 25
ஜூலை 25
ஆகஸ்ட் 23
செப்டம்பர் 22
அக்டோபர் 21
நவம்பர் 19
டிசம்பர் 19



Click it and Unblock the Notifications
