Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
உங்கள் பிறந்த தேதியின் படி உங்கள் வீட்டில் பணமழை பொழிய நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
இந்து சாஸ்திரங்களின் படி ஒருவர் பிறந்த நேரம், தேதி, நாள் மற்றும் மாதம் போன்றவற்றை பொறுத்தே ஒருவரின் விதி நிர்ணயிக்கப்படுகிறது.
அனைவருக்குமே வாழ்க்கையில் செல்வமும், அதிர்ஷ்டமும் இருக்க வேண்டுமென்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. அனைத்து மனிதர்களின் வாழ்க்கையும் விதி மற்றும் பாவபுண்ணியங்களை பொறுத்தே அமைகிறது. உங்களுடைய பாவபுண்ணியங்கள் உங்களின் செயல்கள், ஆசைகள் போன்றவற்றை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. விதியோ உங்களுடைய ஜாதகத்தை பொறுத்து அமைகிறது.

இந்து சாஸ்திரங்களின் படி ஒருவர் பிறந்த நேரம், தேதி, நாள் மற்றும் மாதம் போன்றவற்றை பொறுத்தே ஒருவரின் விதி நிர்ணயிக்கப்படுகிறது. இந்து மதத்தின் முக்கிய நூலான அங்க சாஸ்திரத்தின் படி ஒருவரின் பிறந்த நாள் அவர்களின் விதியை நிர்ணயிக்கிறது. இது பழங்கால அறிஞர்கள் பலரால் எழுதப்பட்ட முக்கியமான வேதநூலாகும். அங்க சாஸ்திரத்தின் படி உங்களின் பிறந்த எண் உங்கள் விதியை எப்படி மாற்றும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பிறந்த எண்
வேத நூல்களின் படி ஒவ்வொருவருக்கும் பிறந்த எண், விதி எண் மற்றும் பெயர் என மூன்று எண் இருக்கும். பிறந்த எண் என்பது ஒருவருடைய பிறந்த எண்ணின் கூட்டுத்தொகையாகும். அதவாது 23 என்றால் 2+3=5 ஆகும். விதி எண் என்றால் பிறந்த மொத்த தேதியின் கூட்டுத்தொகையாகும், அதாவது 12-09-1985 என்றால் 1+2+ 0 +9 +1 +9+ 8 +5= 35, 3+5=8.

பெயர் எண்
பெயர் எண் என்றால் ஒருவரின் பெயருடைய மொத்த கூட்டுத்தொகையாகும். உங்கள் பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு தனித்துவமான சத்தமும், அதற்கென சக்தியும் இருக்கும். உதாரணம் சரண்ராஜ் சிதம்பரம்= 11, 1+1=2. அங்க சாஸ்திரத்தின் படி உங்கள் பிறந்த எண்ணின் படி உங்கள் வாழ்க்கையை மாற்ற நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று பார்க்கலாம்.

பிறந்த எண் 1
உங்கள் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 1 ஆக இருந்தால் அதாவது 1,10,19,28 ஆக இருந்தால் உங்களை சுற்றி நடக்கும் சம்பவங்களால் நீங்கள் எளிதில் பாதிக்கப்படுவீர்கள். உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு சாப்பிடுங்கள். கையில் மாணிக்கக்கல் போடுவது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும்.

பிறந்த எண் 2
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 2 ஆகும். நீங்கள் திங்கள் கிழமையில் விரதம் இருப்பது நல்லது. அது இயலவில்லை எனில் திங்கள் கிழமையில் உப்பு சாப்பிட முயலுங்கள். கையில் முத்து அணிவது உங்கள் வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க உதவும்.

பிறந்த எண் 3
3, 12, 21, 30 போன்ற தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டுத்தொகை 3 ஆகும். வியாழக்கிழமையில் மஞ்சள் துணி அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் மேலும் வியாழக்கிழமையில் ப்ரஜாபதியை வழிபடுவது வெற்றியை உங்கள் தோள்கள் மீது கொண்டுவரும்.

பிறந்த எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டுத்தொகை 4 ஆகும். இவர்கள் வாழ்க்கையில் இருக்கும் தடங்கல்களை அகற்ற பிள்ளையாரை வழிபட வேண்டும். ஓம் ப்ரஹ்ம் புரிஷ் பிரம்மான் சாஹ் ரஹ்வ் நாமா என்ற மந்திரம் வெற்றியை வீடு தேடி வரவைக்கும்.

பிறந்த எண் 5
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டுத்தொகைதான் 5 ஆகும். இவர்கள் மாட்டிற்கு புதன் கிழமைகளில் புல்லும், வெல்லமும் கொடுக்க வேண்டும். பிள்ளையாரை வழிபடுவது வெற்றியின் வாய்ப்பை அதிகரிக்கும். 'ஓம் பிராம்ம் ப்ரின்ம் பிரவும் ஸால் புதயே நாமா ' என்பது இவர்களின் வெற்றிக்கான மந்திரம் ஆகும்.

பிறந்த எண் 6
6, 15, 24, தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 6 ஆகும். வியாழ கிழமைகளில் லக்ஷ்மியை வழிபட்டு இனிப்பு சாப்பிடுவது இவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும். ஓம் டிராம்ம் டிரின்ம் ட்ரான்ம் சாஹ் ஷுக்ரேரே நமாஹ் என்பது இவர்களின் வெற்றிக்கான மந்திரம் ஆகும்.

பிறந்த எண் 7
7, 16 மற்றும் 25 தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 7 ஆகும். இவர்கள் கருப்பு நாயிற்கு உணவு படைப்பது இவர்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும். நினைத்தது பலிக்க சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்ய வேண்டும்.

பிறந்த எண் 8
8, 17 மற்றும் 26 தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 8 ஆகும். இவர்கள் அரசமரத்திற்கு நெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. இவர்கள் சனிபகவானை ஊதுபத்திகள் கொண்டு வழிபடுவது இவர்களின் வாழ்க்கையில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அப்புறப்படுத்தும்.

பிறந்த எண் 9
9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 9 ஆகும். இவர்கள் செவ்வாய் கிழமைகளில் அனுமனை வழிபடுவது இவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். இவர்கள் தங்கம் அணிவது பொருளாதாரரீதியாக இவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.



Click it and Unblock the Notifications
