Latest Updates
-
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்!
இந்த பொருட்கள் உங்கள் பாக்கெட்டில் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பணகஷ்டம் எப்பவுமே தீராதாம் தெரியுமா
அதிர்ஷ்டத்தை உங்கள் பக்கம் ஈர்ப்பதுதான் கஷ்டம் ஆனால் அதனை உங்களை விட்டு துரத்துவது என்பது மிகவும் எளிது. நீங்கள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட உங்களின் அதிர்ஷ்டத்தை குறைக்கும்.
அதிர்ஷ்டம் என்பது அனைவரும் வேண்டுமென்று நினைக்கும் ஒன்றாகும். ஆனால் அதிர்ஷ்டம் அனைவருக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அப்படியே அதிர்ஷ்டம் வந்தாலும் அதனை வைத்து முன்னேறும் சாமர்த்தியமும், முயற்சியும் நம்மிடம் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்டத்தை உங்கள் பக்கம் ஈர்ப்பதுதான் கஷ்டம் ஆனால் அதனை உங்களை விட்டு துரத்துவது என்பது மிகவும் எளிது. நீங்கள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட உங்களின் அதிர்ஷ்டத்தை குறைக்கும். குறிப்பாக உங்கள் பாக்கெட்டில் வைக்கும் சில பொருட்கள் உங்களின் அதிர்ஷ்டத்தை உங்களை விட்டு துரத்துவதுடன் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும். இந்த பதிவில் உங்கள் பாக்கெட்டில் வைக்கக்கூடாத பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பழைய பில்கள்
உங்களின் நிதி காரணங்களுக்காக நீங்கள் பழைய பில்களை சேகரிக்கும் பழக்கம் இருந்தால் அதனை உங்கள் வீட்டிலேயோ, காரிலேயோ வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பாக்கெட்டில் பழைய பில்களை வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.

கோபத்தை தூண்டும் படங்கள்
எக்காரணத்தை கொண்டும் உங்கள் பாக்கெட்டில் கோபமான புகைப்படங்கள் மற்றும் கோபத்தை தூண்டும் புகைப்படங்கள் போன்றவற்றை வைக்கக்கூடாது. இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி உங்கள் மனநிலையையும் பாதிக்கும்.

கிழிந்த பர்ஸ்
உங்கள் பாக்கெட்டில் கிழிந்த அல்லது சேதமடைந்த பர்ஸை ஒருபோதும் வைக்காதீர்கள். கிழிந்த பர்ஸ் உங்கள் அதிர்ஷ்டத்தை விரட்டுவதோடு உங்களுக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

கிறுக்கிய குறிப்புகள்
தேவையில்லாத மற்றும் கிறுக்கிய குறிப்புகளை ஒருபோதும் உங்கள் பாக்கெட்டில் வைக்காதீர்கள். அப்படி உங்களுக்கு அது மிகவும் முக்கியமானதாக இருந்தால் அதனை வேறு எங்காவது வையுங்கள் உங்கள் பாக்கெட்டில் வைக்காதீர்கள்.

தின்பண்டங்கள்
நாம் சாலைகளில் விற்கும் தின்பண்டங்களை சாப்பிடவோ அல்லது வாங்கவோ சிறிதும் தயங்கமாட்டோம். இது குற்றமும் அல்ல?. ஆனால் அவற்றை வாங்கி உங்கள் பாக்கெட்டில் வைத்து கொள்வது நீங்கள் உணவை மதிக்காதது போன்ற பிம்பத்தை உண்டாக்கும். எனவே சாப்பிடுங்கள் ஆனால் பாக்கெட்டுகளில் வைக்காதீர்கள். மேலும் பாக்கெட்டில் உணவை வைப்பது தீயசக்திகளை உங்களை நோக்கி ஈர்க்கும்.

மாத்திரைகள்
உங்கள் பாக்கெட்டில் மருந்துகள் மற்றும் மாத்திரைகளை ஒருபோதும் வைக்காதீர்கள். இது உங்கள் உடல்நலம் மற்றும் துன்பத்தை ஊக்குவிக்கிறது. அவற்றை உங்கள் பக்கத்திலிருந்து விலகியே வைத்திருங்கள்.

கூரான ஆயுதங்கள்
சிலர் இதனை பழக்கமாக வைத்திருப்பார்கள், குறிப்பாக பெண்கள் அவர்களின் பாதுகாப்பிற்காக கூரான ஆயுதங்களை பாக்கெட்டில் வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் கூரான ஊசி மற்றும் கத்திகளை உங்கள் பாக்கெட்டில் வைப்பது எதிர்மறை ஆற்றலை உங்களை நோக்கி ஈர்க்கும்.

சாமிக்கயிறு
உங்கள் பாக்கெட்டில் சாமிக்கயிறு எதையும் வைக்காதீர்கள். உங்கள் ஜோதிடரால் வாஸ்துவிற்காக கயிறு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படாத வரை இதனை செய்ய வேண்டாம். இது எதிர்மறை வாஸ்து ஆகும். உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பாக்கெட்டில் வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பித்தளை மற்றும் வெள்ளி பொருட்கள்
பாக்கெட்டில் வெள்ளி பொருட்களை வைப்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை உண்டாக்க பாக்கெட்டில் எப்பொழுதும் சிறிய வெள்ளி பொருளை வைப்பது நல்லது. வாஸ்துவின் படி இது உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்திற்கும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

லக்ஷ்மி
லக்ஷ்மி தேவி இரண்டு யானைகளுடன் இருக்கும் புகைப்படம் அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும். இந்த படத்தை உங்கள் பாக்கெட்டில் வைத்திருப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

அரசமர இலை
உங்கள் பாக்கெட்டில் ஒரு அரசமர இலையை வைத்திருப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு அந்த மரத்தின் ஆசீர்வாதத்தை பெற்றுத்தருவதோடு உங்களின் ஆரோக்கியம் மற்றும் செல்வத்தையும் அதிகரிக்கும்.

தாமரை தண்டு
உங்கள் பாக்கெட்டில் எப்பொழுதும் ஒரு துண்டு தாமரை தண்டை வைத்திருங்கள். ஏனெனில் இது உங்களுக்கு நேர்மறை ஆற்றலை வழங்குவதுடன் செல்வ செழிப்பையும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications