Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பெண்களை இப்படி நடத்தும் ஆண்களின் குடும்பம் தானாகவே அழிந்துவிடும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது...!
பெண்களை எப்படி மதித்து நடத்த வேண்டும் என்று கூறியிருக்கும் நமது சாஸ்திரங்கள் எப்படி நடத்தக்கூடாது என்பதை கூறாமல் விட்டிருக்குமா?
பெண்களுக்கு சமஉரிமையும், முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும் என்பது நமது முன்னோர்கள் எழுதிய வேதங்களில் கூறப்பட்டுள்ளதாகும். அதனாலதான் சிவபெருமான் கூட பார்வதி தேவிக்கு தன் சரிபாதியை வழங்கி அர்த்தநாரீஸ்வரராக உள்ளார்.கடவுளே சொன்னாலும் பெண்களை மதிக்கவோ, சமமாக நடத்தவோ இங்கு பலருக்கும் மனம் வருவதில்லை.இதனை கௌரவமாக எண்ணுபவர்களுக்கு புரிவதில்லை அவர்களின் அழிவை அவர்களே தேடிக்கொள்கிறார்கள் என்று.

பெண்களை எப்படி மதித்து நடத்த வேண்டும் என்று கூறியிருக்கும் நமது சாஸ்திரங்கள் எப்படி நடத்தக்கூடாது என்பதை கூறாமல் விட்டிருக்குமா? பெண்களை குறிப்பாக திருமணம் முடிந்து கணவனின் வீட்டுக்கு செல்லும் பெண் அந்த குடும்பத்தினரால் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் அவர்களின் குடும்பத்தின் அழிவிற்கு அவர்களே காரணமாகி விடுவார்கள் என்று வேதங்கள் கூறுகிறது. இந்த பதவில் பெண்களை எப்படி நடத்த வேண்டும் விதிமுறைகள் மற்றும் எச்சரிக்கைகளை பற்றி பார்க்கலாம்.

முதல் எச்சரிக்கை
பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் மட்டுமே கடவுள் குடியிருப்பார். எந்த இடத்தில் பெண் அவமதிக்கபட்டு புறக்கணிக்க படுகிறார்களோ அந்த இடத்தில் உள்ளவர்கள் எவ்வளவு பெரிய புண்ணியங்களை செய்தாலும் அவர்களுக்கு அதனால் எந்த பயனும் கிடைக்காது. பெண்ணே வீட்டில் வாழ்வில் லக்ஷ்மி என்பதை மறந்து விடாதீர்கள்.

இரண்டாம் எச்சரிக்கை
ஒரு வீட்டில் வாழ வந்த பெண் மகிழ்ச்சியாக இல்லாமல் துக்கத்தில் இருந்தால் அந்த குடும்பம் விரைவில் அழிந்துவிடும். பெண் மகிழ்ச்சியுடன் இல்லாமல் இருந்தால் கூட குடும்பம் வளரலாம் ஆனால் அவமானப்படுத்த பட்டால் நிச்சயமாக அழிவு உறுதி என்பதை மறந்துவிடாதீர்கள்.

மூன்றாம் எச்சரிக்கை
பெண் உறவுகள் முறையாக கௌரவிக்க படாமல், இருக்கும் போது அவர்கள் அளிக்கும் சாபம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அவர்கள் செய்யும் கடமைகளுக்கும், வேலைகளுக்கும் அவர்களுக்கு ஏற்ற மரியாதை அளிக்கப்பட வேண்டும்.

நான்காம் எச்சரிக்கை
மனைவியாக வந்த பெண்ணொருத்தி அவள் அழகாக இல்லை என்ற காரணத்திற்காக கணவனால் வெறுக்கப்பட்டலோ, புறக்கணிக்கப்பட்டாலோ அந்த பெண்ணின் அபிமானத்தை எந்த கணவன் இழக்க நேரிடும். அந்த பெண்ணிற்கு கணவன் மீது எந்த ஈர்ப்பும் இல்லாமல் போய்விட்டால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

ஐந்தாம் எச்சரிக்கை
ஒரு ஆண் ஏதேனும் பாவம் செய்துவிட்டால் அவன் ஒருபோதும் தன் மனைவியிடம் அதனை மறைக்கக்கூடாது, அவ்வாறு மறைக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் இருமடங்காக இருக்கும். அதுமட்டுமின்றி பெண் எப்போதும் அதனை சமாளிக்க ஒரு வழி வைத்திருப்பாள், ஆண்களுக்கு அந்த அளவிற்கு இந்த விஷயத்தில் ஞானம் போதாது.

ஆறாம் எச்சரிக்கை
பெண்ணை துன்புறுத்துவதோ, அவமதிப்பதோ அவளின் கணவனாக மட்டுமல்ல அவளின் தந்தை, சகோதரன், உறவினர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் தங்கள் அழிவை தாங்களே வரவேற்கிறார்கள் என்று அர்த்தம். தன் நலனில் அக்கறை உள்ள எவரும் ஒருபோதும் பெண்ணை துன்புறுத்தமாட்டார்கள்.

ஏழாம் எச்சரிக்கை
பெண்மையின் சிறப்பை உணர்ந்த எந்த தந்தையும் ஏன் மாமனார் கூட அவர்களின் மீது எப்போதும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில் பெண் என்பவள் வெறும் பெண் மட்டுமல்ல அவர்களுக்குள் ஒரு சிறந்த ஆசிரியை, வழிகாட்டி, தாய் என பல முகங்கள் உள்ளது.

எட்டாம் எச்சரிக்கை
ஆண்களில் எந்த உறவாக இருந்தாலும் தங்களின் முட்டாள்தனத்தால் பெண்களின் சொத்தில் பயன்படுத்தி வாழ்க்கையை நடத்துபவர்கள் பூமிக்கு தேவையில்லாத சுமைகளாவார்கள். இப்படிப்பட்ட ஆண்களுக்கு நரகத்தில் ஒரு இடம் எப்போதும் காத்திருக்கும்.

ஒன்பதாவது எச்சரிக்கை
தகாத உறவு என்பது எக்காலத்திலும் மன்னிக்க முடியாத குற்றமாகும். தன் மனைவி தவிர்த்து வேறு ஒரு பெண்ணுடன் உறவில் ஈடுபடும் கணவனுக்கு கடவுளிடம் மன்னிப்பு என்பதே கிடையாது. மேலும் இந்த ஆண்களின் ஆயுளும் இந்த பாவத்திற்கேற்ப குறையும். இந்த ஆண்களை வரவேற்க நரகத்தின் கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கும்.

பத்தாவது எச்சரிக்கை
எந்த சூழ்நிலையிலும் பெண்ணை உடல்ரீதியாக துன்புறுத்தக்கூடாது. மனைவியாகவே இருந்தாலும் அவர்களை உடல்ரீதியாக வதைப்பதோ, அவர்கள் மீது வன்முறையை காட்டுவதோ கொடிய பாவங்களாகும். அவ்வாறு செய்வது உங்கள் வீட்டில் குடியிருக்கும் கடவுளை நீங்களே விரட்டுவது போன்றது.



Click it and Unblock the Notifications











