Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..!
சாணக்கியரின் அரசியல், அலுவலகம், பெண்கள் சார்ந்த கருத்துக்களில் எப்பொழுதும் உண்மை இருக்கும். அந்த வகையில் தூக்கம் தொடர்பாக அவர் கூறிய கருத்துக்களும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பூமியில் வாழ்ந்த மிகவும் புத்திசாலியான மனிதர்களில் சாணக்கியரும் ஒருவர். சந்திர குப்த மௌரியரின் ராஜகுருவாக இருந்த சாணக்கியர் அரசியல், பொருளாதாரம், தர்க்கவியல் என பல துறைகளில் வல்லவராய் இருந்தார். அவரின் பல கருத்துக்கள் இன்றும் நம் வாழ்விற்கு உதவுவதாக இருக்கிறது.

சாணக்கியரின் அரசியல், அலுவலகம், பெண்கள் சார்ந்த கருத்துக்களில் எப்பொழுதும் உண்மை இருக்கும். அந்த வகையில் தூக்கம் தொடர்பாக அவர் கூறிய கருத்துக்களும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தூக்கம் நமக்கு எவ்வளவு அவசியமானது என்று நாம் நன்கு அறிவோம். அது இல்லாமல் நம்மால் வாழவும் முடியாது, எந்த விஷயத்திலும் கவனமும் செலுத்த முடியாது. தூக்கம் பற்றி சாணக்கியர் என்ன கூறுகிறார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

யாரையெல்லாம் எழுப்பக்கூடாது?
சாணக்கியரின் கருத்துப்படி சிலர் தூங்ம்போது அவர்களை எழுப்பக்கூடாது, அதேபோல சிலரை கண்டிப்பாக எழுப்ப வேண்டும். இது இரண்டுமே உங்கள் வாழக்கையில் பல துன்பங்களை உண்டாக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். யாரையெல்லாம் அளவுக்கதிகமாக தூங்க அனுமதிக்க கூடாது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

மாணவர்கள்
மாணவர்கள் அதிகம் தூங்கினால் அவர்கள் கவனத்தை இழப்பார்கள் அதேசமயம் அதிகம் தூங்கும் மாணவர்கள் படிப்பிலும் மந்தமாக இருப்பார்கள். எனவே ஒருபோதும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மாணவர்களை தூங்க அனுமதிக்க கூடாது, எழுப்பிவிட வேண்டும்.

வீட்டு உதவியாளர்கள்
வீட்டு உதவியாளர்கள் இருப்பதன் காரணமே உங்களுக்கு உதவி செய்யத்தான். ஆனால் அவர்கள் தூங்கி கொண்டே இருந்தால் உங்களுக்கு யார் உதவுவார்கள். எனவே அவர்களை குறிப்பிட்ட நேரத்தில் எழுப்பிவிட வேண்டும்.

பயணம் செய்பவரகள்
பயணம் செய்வதன் நோக்கமே இந்த உலகத்தை பார்ப்பதும், அனுபவத்தை சேகரிப்பதும்தான். எனவே பயணம் செய்யும்போது தூங்க அனுமதிக்காதீர்கள்.

பசியில் இருப்பவர்கள்
பசியில் இருப்பவர்கள் என்றால் அது உணவு பசியை மட்டும் குறிக்காது. அறிவிற்கும், ஆற்றலுக்கும் பசியாக இருப்பவர்கள் அதிக நேரம் தூங்கக்கூடாது. அவர்களை விரைவில் எழுப்பிவிட வேண்டும்

பயத்தில் இருப்பவர்கள்
மனதளவில் அதிகம் பயப்படுபவர்கள் அல்லது நிலையற்ற மனநிலையில் இருப்பவர்கள் தூக்கத்தில் அவர்களை அவர்களே துன்புறுத்தி கொள்வார்கள். அதனால் அவர்களை சீக்கிரம் எழுப்பிவிட வேண்டுமென்று சாணக்கியர் கூறுகிறார்.

வங்கி அலுவலர்
வங்கி அலுவலர் எந்த காரணத்திற்காகவும் அதிகளவு தூங்கக்கூடாது. பணம் தொடர்பான துறையில் இருப்பவர்கள் அதிக நேரம் தூங்குவது நல்லதல்ல. யாரையெல்லாம் தூங்கும்போது எழுப்பக்கூடாது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பாம்பு
தூங்கும் பாம்பினை ஒருபோதும் தொந்தரவு செய்யவோ அல்லது எழுப்பவோ கூடாது.ஏனெனில் அவ்வாறு செய்வது உங்கள் உயிருக்கே கூட ஆபத்தை உண்டாக்கலாம்.

அரசன்
தூங்கும் அரசனை ஒருபோதும் தூக்கத்தில் இருந்து எழுப்பக்கூடாது. அவ்வாறு எழுப்புவது உங்களுக்கு சாபத்தை பெற்றுத்தரும் என்று கூறப்படுகிறது.

ஊர்வன
ஊரும் மிருகங்களோ அல்லது பூச்சிகளோ தூங்கும்போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் அவை எழுப்பப்பட்டால் நிச்சயம் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

குழந்தைகள்
குழந்தைகளை பொறுத்த வரையில் தூக்கம் என்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்களின் வளர்ச்சிக்கு தூக்கமும் அவசியமானதாகும். எனவே அவர்களை தூக்கத்தில் இருந்து ஒருபோதும் பாதியில் எழுப்பக்கூடாது.

முட்டாள்
முட்டாள்கள் விழித்திருந்து எதையும் சாதிக்க போவதில்லை. சொல்லப்போனால் அவர்கள் விழித்திருப்பது மற்றவர்களுக்கு தொந்தரவுதான். எனவே முட்டாள்களை அவர்களை விரும்பும்வரை தூங்க அனுமதியுங்கள்.



Click it and Unblock the Notifications











