Latest Updates
-
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்...
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு இது கட்டாயம் நடக்கும்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்களுடைய உறவினர்களிடம் சுப செய்திகள் உங்களுடைய காதுகளுக்கு வந்து சேரும். உங்களுடைய பேச்சில் இனிமையும் நேர்மையும் அதிகரிக்கும். உங்களுடைய வியாபாரத்தில் உங்களின் முழு திறமையும் வெளிப்படும். பெற்றோர்களின் வழியில் உங்களுக்கு ஆதரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்களும் அவர்களின் மூலம் ஆதாயங்களும் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய புதிய முயற்சிகள் உங்களுக்கு வீண் அலைச்சல்களை அதிகரிக்கச் செய்துவிடும். வீட்டில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். எனவே அதில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பெற்றோர்கள் பற்றிய கவலைகள் மேலோங்கி இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற சாதகமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் தொடர்பான வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்பபுகள் வந்து சேரும். உங்களுடன் உடன் பிறந்தவர்களிடம் கொஞ்சம் நிதானமாக இருப்பது தான் உத்தமம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய வியாபாரத்தில் உங்களுக்கு வருவாய் அதிகரிக்கும். அதனால் இயல்பாகவே உங்களுடைய பொருளாதாரம் உயர் அதிகரிக்கும். உங்களுடைய வெளியூா பயணங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் எடுத்துச் செல்கின்ற உங்களுடைய உடமைகளில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். அதேபோல் மற்றவர்களுடன் வாக்கு கொடுக்கும் போதும் பேசுகின்ற பொழுதும் கொஞ்சம் கவனமாகச் செயல்படுங்கள். தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகச் செயல்படுவது தான் உங்களுக்கு நல்லது. உங்களுடைய வியாபாரத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
மனதுக்குள் நீங்கள் நினைத்த எண்ணங்கள் உங்களுக்கு நிறைவேறும். உங்களுடைய முயற்சிகள் கைகூட ஆரம்பிக்கும். மகதில் தைரியம் அதிகரிக்கும். எதையும் சாதிக்கின்ற திறன் உங்களுக்குள் மேம்படும். உங்களுடைய குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களுடைய விலையுயர்ந்த பொருள்களை கையாளுகின்ற பொழுது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

சிம்மம்
நீண்ட நாட்களாக மனதில் நினைத்து வைத்திருந்த காரியங்களை நிறைவேற்றுவதற்கான தருணம் கைகூடி வரும். ஏற்கனவே திட்டமிட்ட சில பயணங்களில் தடைகள் ஏற்படும். வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருக்கிற மனக்கசப்புகள் வந்து போகும். தொழிலில் புதிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். அப்படியே செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீட்டில் சுப செலவுகள் உண்டாகும். புதிய நபர்களுடைய அறிமுகம் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி
பணியின் காரணமாக அலைச்சல்கள் உண்டாகும். ஆனால் அலைச்சல் இருந்தாலும் தொழிலில் மேன்மைதான் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். அதனால் சேமிப்பு உயர ஆரம்பிக்கும். தொழிலில் கூட்டாளிகளிடம் இருந்து வந்த இன்னல்கள் குறைந்து நிம்மதி உண்டாகும். தேவையில்லாத வீண் செலவுகளைக் குறைப்பதற்கன முயற்சிகளை மேற்கொள்வீர்கள். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 5ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
மனதில் புதுப்புது எண்ணங்கள் உருவாகும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த பிரார்த்தனைகள் நிறைவேற ஆரம்பிக்கும். மனதில் நினைக்கும் காரியங்களை வேகமாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கும் இருக்கும்.

விருச்சிகம்
நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அது சம்பந்தப்பட்ட பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்புகள் உயரும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

தனுசு
முக்கிய ஆவணங்களைக் கையாளுகின்ற போது, கொஞ்சம் கவனமாக இருங்கள். மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மனதில் புதுப்புது எண்ணங்கள் உண்டாகும். உடல் நலத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். உங்களுடைய மேலதிகாரிகளிடம் பேசும்போது, கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கப்போகிறது.

மகரம்
உறவினர்களின் மூலமாக, உங்களுக்கு நிறைய அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் மூலம் அபாரமான லாபம் கிடைக்கும். நண்பர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீரும். எதிர்பார்த்த தனவரவுகளின் மூலமாக உங்களுக்கு மனதில் திருப்தி உண்டாகும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக வடமேற்கும் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கும்பம்
வேலையிடத்தில் நிதானமாகச் செயல்பட்டு நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். புதிய நகைகள், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வீடு, மனை வாங்குவதற்கான செயல் திட்டங்களைத் தீட்டுவீர்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். உங்களுடைய நடை, உடை, பாவனை, செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மீனம்
வேலை செய்யும் இடங்களில் உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை உயர ஆரம்பிக்கும். வீட்டில் உள்ள குழந்தைகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்க கால தாமதம் உண்டாகும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் எண்ணாக 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கப் போகிறது.



Click it and Unblock the Notifications











