For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த தானியங்களை கொண்டு சிவனை வணங்கினால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்

சில பொருட்களை கொண்டு சிவபெருமானை வழிபடுவது சிவபெருமானின் கோபத்தை அதிகரிக்கும். அதேபோல சில பொருட்களை கொண்டு ஈசனை வழிபடுவது அவரின் பூரண அருளை உங்களுக்கு பெற்றுத்தரக்கூடும்.

|

இந்துக்கள் வழிபடும் மும்மூர்த்திகளுள் ஒருவர்தான் சிவபெருமான். அழிக்கும் கடவுளான சிவனை ருத்ரமூர்த்தியாகவே பெரும்பாலான மக்கள் அறிவார்கள். ஆனால் உண்மையில் சிவபெருமான் தன் பக்தர்களுக்கு சாந்த மூர்த்தியாக இருந்து அருளை வழங்குபவர். நல்லவர்களா, கெட்டவர்களோ தன்னை முழுமையாக சரண்டைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரத்தை வழங்குபவர். இதற்கு நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் பல உதாரணங்கள் உள்ளது.

Lord Shiva

சிவபெருமானை வழிபடுவதற்கென சில வழிமுறைகள் உள்ளது. ஏனெனில் சில பொருட்களை கொண்டு சிவபெருமானை வழிபடுவது சிவபெருமானின் கோபத்தை அதிகரிக்கும். அதேபோல சில பொருட்களை கொண்டு ஈசனை வழிபடுவது அவரின் பூரண அருளை உங்களுக்கு பெற்றுத்தரக்கூடும். அந்த வகையில் சில தானியங்களை கொண்டு ஈசனை வழிபட்டால் அவருக்கு உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவார். இந்த பதிவில் எந்தெந்த தானியங்களை கொண்டு சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திங்கள் வழிபாடு

திங்கள் வழிபாடு

திங்கள் கிழமை சிவபெருமானை வழிபடுவது மிகவும் விஷேசமானது. திங்கள் கிழமையன்று சிவலிங்கத்தை குளிர்ந்த பால், வில்வ இலைகள் மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு வழிபடுவது சிவெபருமானை அதிகம் மகிழ்விக்க கூடியதாகும்.

வேதங்களின் படி தானியங்களின் முக்கியத்துவம்

வேதங்களின் படி தானியங்களின் முக்கியத்துவம்

இந்த தானியங்கள் ஒவ்வொன்றும் வேதங்களில் குறிப்பிடதக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. புராண கால முனிவர்கள் பூமியில் உள்ள ஒவ்வொரு தானியமும் சிவபெருமானை எப்படி சரணாகதி அடைகிறது என்று கூறி இருக்கிறார்கள். எந்தெந்த தானியங்கள் புனிதமான முக்கியத்துவம் கொண்டது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பார்லி

பார்லி

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிக பிரச்சினைகளையும், துயரங்களையும் எதிர்கொள்பவராய் இருந்தால் நீங்கள் சிவபெருமானை பார்லி தானியத்தை கொண்டு வழிபடவேண்டும். இது சிவபெருமானின் அருளை பெற்றுத்தருவதோடு மட்டுமின்றி இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறை சக்திகளை அதிகரித்து நீங்கள் இழந்த மகிழ்ச்சியை மீட்டுத்தரும். உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து தீயசக்திகளையும் விரட்டும்.

கம்பு

கம்பு

சிவபெருமானை கம்பு தானியத்தை கொண்டு வழிபடுவது திருமணமான தம்பதிகளுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்தும். சிறந்த மனைவி அல்லது கணவன் வேண்டுமென விரும்புபவர்கள் நிச்சயம் இந்த தானியத்தை வைத்து சிவபெருமானை வழிபடவேண்டும். மேலும் இது நீங்கள் செய்த பாவங்களில் இருந்து உங்களுக்கு விமோட்சணத்தை வழங்கும்.

MOST READ: இந்த ராசிக்காரர்கள் எங்க போனாலும் அங்க ஒரே பஞ்சாயத்துதான்... இது உங்க ராசி இல்லயே?

அரிசி

அரிசி

இந்து மதத்தின் படி அரிசியை வைத்து கடவுளை வழிபடுவது அனைத்து சுபகாரியங்களிலும் இருக்கும் முக்கிய சடங்காகும். சிவபுராணத்தின் படி அரிசியை வைத்து சிவபெருமானை வழிபடுவது ஒருவரின் நிதி நிலைமையை அதிகரிக்கக்கூடும், மேலும் வருமானத்தையும் அதிகரிக்கும்.

கோதுமை

கோதுமை

குழந்தை இல்லாமல் தவிர்ப்பவர்கள் சிவபெருமானை வழிபட வேண்டியது அவசியம் என புராணங்கள் கூறுகிறது. முனிவர்களின் கூற்றுப்படி குழந்தை இல்லாத தம்பதிகள் திங்கள் கிழமைகளில் கோதுமை வைத்து வழிபடுவது அவர்களுக்கு விரைவில் குழந்தை செல்வத்தை பெற்றுத்தரும்.

எள் விதைகள்

எள் விதைகள்

நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபட சிவபெருமானை எள் கொண்டு வழிபடுவது நல்லது. இவ்வாறு வழிபடுவது விரைவில் அவர்கள் நோயிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ உதவும்.

பச்சைப்பயிறு

பச்சைப்பயிறு

புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி சிவபெருமானை பச்சைப்பயிறு கொண்டு வழிபடுவது உங்களின் பாவங்களை விலக்கி உங்கள் வாழ்க்கையில் நேர்மறை சக்திகளை கொண்டு வரும். நீங்கள் வாழ்வில் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும்.

MOST READ: குடல் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்க தினமும் இந்த பொருளை உணவில் சேர்த்தாலே போதும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worship Lord Shiva With These Grains To Fulfill Wishes

Shiv Purana and Vedas mention the importance of offering ‘grains’ to the Shivlinga. Offering grains to Lord Shiva will give many benefits to us.
Desktop Bottom Promotion