மிட்டாய் ஜோசியம் தெரியுமா?... இதில் பிடித்த மிட்டாய சொல்லுங்க... உங்கள பத்தி சொல்றோம்...

Posted By: Kripa Saravanan
Subscribe to Boldsky

உங்கள் குணநலன்களை பற்றி சொல்லும் உங்களுக்கு பிடித்த சாக்லேட் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

favourte candy

உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கொண்டிருப்பவர்களும் மயங்குவது சாக்லேட் சுவைக்கு மட்டும் தான். உங்கள் இசை ரசனை, திரைப்பட ரசனை போன்றவற்றின் மூலம் ஓரளவுக்கு உங்கள் குண நலன்களை தெரிந்து கொள்ள முடியும். அதே போல் உங்களுக்கு பிடித்த சாக்லேட் மூலமாகவும் உங்கள் குணத்தை அறிந்து கொள்ள முடியும். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? எந்த சாக்லேட் எந்த குணத்தை பற்றி கூறுகிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. கம்மி பியர்ஸ் (Gummy Bears)

1. கம்மி பியர்ஸ் (Gummy Bears)

இந்த இனிப்பை பலரும் விரும்பி சுவைக்க காரணம் அதன் வடிவம். கரடி பொம்மை போன்ற இதன் வடிவத்தை பார்த்து பலரும் இந்த சாக்லேட்டை விரும்பி சுவைப்பர். இதனை விரும்பி உண்ணுபவர்கள் மனத்தால் ஒரு குழந்தையை போல் இருப்பவர்கள். நீங்கள் ஒரு நேர்மறை எண்ணம் உடையவர். சமூக சிந்தனை உடையவர். இதே போன்ற நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்கள் உங்களை சுற்றி இருக்க வேண்டும் என்று நினைப்பவர். வாழ்கையை முழுவதும் அனுபவிக்கும் உங்களை , உங்கள் நண்பர்கள், மிகவும் நாணயமானவர், அன்பானவர் என்று வர்ணிப்பார்கள்.

2. லாலி பாப்

2. லாலி பாப்

லாலிபாப்பை அதிகம் விரும்பி உண்ணுபவர்கள் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பார். எந்த ஒரு உறவையும் நீங்கள் முதல் ஆளாக தொடங்க விரும்ப மாட்டீர்கள். ஒருவரை பற்றி முழுவதும் அறிந்து கொள்ள தேவையான நேரத்தை எடுத்துக் கொள்வீர்கள். அவர்களுடன் நெருங்கி பழகும் வரை உங்கள் மனதில் உள்ளவற்றை அவரிடம் சொல்ல மாட்டீர்கள்.

3. டார்க் சாக்லேட்

3. டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. உயர்தர ஆனால் மிதமான இனிப்பு சுவையை கொண்ட டார்க் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுபவர்கள், ஒரு யதார்த்தவாதி. இளம் வயதிலேயே முதிர்ந்த அறிவை பெற்றிருப்பீர்கள். பெரிய பெரிய பார்டிகளில் கூட மிகவும் நெருக்கமான நபர்களுடன் மட்டும் பழகுவீர்கள். தனித்தன்மை பெற்றவராக இருப்பீர்கள் .

4. எம் & எம்ஸ்

4. எம் & எம்ஸ்

இது ஓட்டிற்குள் அடைக்கப்பட்ட ஒரு சாக்லேட் . சாலை பயணத்தின் போது இதனை எடுத்துச் செல்வது பலரின் வழக்கம். இந்த சாக்லேட்டை விரும்பி உண்ணுகிறவர்கள் துணிச்சலானவர்கள். கவனிக்கத்தக்க தருணங்கள் கொண்ட பயணத்தை விரும்புபவர்கள். பல நிறங்களை கொண்ட இந்த சாக்லேட்டை போல் உங்கள் குணநலனும் வண்ண மயமாக இருக்கும் . உங்களை சுற்றி நண்பர்கள் மற்றும் உறவு பட்டாளம் சூழ்ந்து கொண்டே இருக்கும்.

5. கம்பால்ஸ்

5. கம்பால்ஸ்

எப்படி உங்களுக்கு இவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்ற கேள்வியை உங்களை பார்த்து பலரும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். எப்போதும் பல குறிக்கோளை மனதில் தாங்கி அதனை நோக்கியே பயணித்துக் கொண்டு இருப்பீர்கள். ஓய்வு என்பதே உங்களுக்கு இல்லை. இரவு எந்த நேரம் தூங்கினாலும், காலையில் அலாரம் அடித்தவுடன் எழுந்துவிடும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர்.

6. பீனட் பட்டர் கப்

6. பீனட் பட்டர் கப்

நீங்கள் தைரியமானவர், குறிக்கோள் உடையவர் மற்றும் சுதந்திரத்தை விரும்புபவர். உங்கள் விருப்பத்தை பற்றி நீங்கள் அறிவீர்கள், அதனால் அதனை நோக்கி செல்வதில் உங்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை. திடீரென்று தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்று விடுவீர்கள். மற்றபடி, நீங்கள் ஒரு நாணயமான ஒரு நண்பராக உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு தோன்றும்.

7. ஸ்டார் பர்ஸ்ட்

7. ஸ்டார் பர்ஸ்ட்

துடிப்பான, அன்பான மற்றவர்களை எளிதில் கவரக் கொடிய தன்மை உடையவர். நீங்கள் குழந்தையாக இருக்கும்போதே , மிகவும் கூலாக இருந்தவர். மனதில் தோன்றுவதை வெளிப்படையாக கூறும் இயல்பை கொண்டவர். இதே போல் உங்கள் எதிரில் உள்ளவரும் இல்லாதபோது உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் நண்பர்கள் குழுவின் பாதுகாவலராக இயங்குவீர்கள். அவர்களுக்கு எதாவது ஒரு பிரச்சனை வரும்போது, உங்கள் அறிவுரைக்காக அவர்கள் உங்களையே முதலில் நாடுவர்.

8. லிகோரைஸ்

8. லிகோரைஸ்

நீங்கள் ஒரு பழைய பஞ்சாங்கம். நீங்கள் கருப்பு வெள்ளை படங்களை விரும்பி பார்ப்பீர்கள், விதிகளை மதிப்பவர், நேரம் தவறாமையை கடைபிடிப்பவர். மற்றவர்களும் இந்த குணத்தை கொண்டிருக்கும்போது அவர்களை பாராட்டுவீர்கள். உங்கள் வேலையில் நேர்மை , பண்பு மற்றும் ஒழுக்கம் போன்றவற்றிற்காக உங்கள் நண்பர்கள் உங்களை நேசிப்பார்கள்

9. ரசிநேட்ஸ்

9. ரசிநேட்ஸ்

வாரம் முழுவதும் ஒரு சிறந்த உழைப்பாளியாக இருக்கும் நீங்கள் வெள்ளி கிழமை இரவு மாதிரி இருப்பீர்கள். உங்கள் வேலை நேரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய இரண்டையும் பிரித்து உணரும் தன்மை கொண்டவர். வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருக்க இந்த பிரித்து பார்க்கும் தன்மை மிகவும் முக்கியம். ஆரம்பத்தில் மிகவும் அமைதியாக இருக்கும் நீங்கள், ஓவருடன் பழகப் பழக உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக உணர்த்துவீர்கள்.

10. சோர் கம்மீஸ்

10. சோர் கம்மீஸ்

தைரியமான முடிவுகளை உங்களை தவிர வேறு யாராலும் அவ்வளவு எளிதில் எடுக்க முடியாது. உங்கள் வாழ்க்கை முழுவதும் பார்ட்டி தான். உங்களை போன்ற சுவாரஸ்யமானவரை சந்தித்ததே இல்லை என்று உங்களிடம் பழகும் நபர்கள் கூறுவார்கள். மற்றவரிடம் எளிதில் பழகும் தன்மை கொண்டவர், பயம் இல்லாதவர் மற்றும் ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் உங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

11. ஸ்நிகேர்ஸ்

11. ஸ்நிகேர்ஸ்

பள்ளிபருவத்தில் தடகள போட்டிகளில் கலந்து கொண்டிருபீர்கள். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்துபவராக இருப்பீர்கள். உங்கள் வார இறுதியை, ஓட்டப்பயிற்சி, ஜிம் செல்லுதல் என்று ஆக்கபூர்வமான வேலைகளுக்காக பயன்படுத்துவீர்கள். குழுவாக இணைந்து பணியாற்றும் திறமை உள்ளவர். மற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பவர். நாணயமானவர். நாய்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

12. கேரமல் சூஸ்

12. கேரமல் சூஸ்

உங்களைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது கற்பது. உங்கள் நண்பர்கள் குழுவில் நீங்கள் ஒரு அறிவாளி.. நீங்கள் வாழும் உலகில் பல விஷயங்களை கண்டுபிடிக்க விரும்புவீர்கள். உங்களை போன்ற அறிவு பசி கொண்டவர்களுடன் நட்பாக இருந்து அவர்களிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். நீங்கள். ஒரு பெரிய குழவில், உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுக்காக உங்கள் மனதை எடுத்துச் சொல்ல நீங்கள் தயங்குவது இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: zodiac ஜோதிடம்
English summary

What Your Favorite Candy Says About Your Personality

What Your Favorite Candy Says About Your Personality
Story first published: Friday, March 23, 2018, 17:20 [IST]