உங்க ராசியை சொல்லுங்க... உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற பெரிய சக்தி என்னன்னு சொல்றோம்?...

Subscribe to Boldsky

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான உணர்ச்சிகள், பலம், பலவீனங்கள் உள்ளன. இத்தகைய சிறப்புக்குரிய சக்திகள் தான் நம்மை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. இந்த மிகப்பெரிய சக்தியின் மூலம் மிகப்பெரிய பொறுப்பும் நம்மிடம் வந்து சேருகின்றன.

zodiac stories

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு மிகப்பெரிய சக்தி உள்ளது. அது வெளிப்படும் தருணத்திற்காக நம் ஒவ்வொருவருடைய மனதும் அந்த சக்தி வெளிப்படக் காத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் ராசியின் சக்தியைப் பற்றி அறிந்துக் கொள்ளும் நேரமிது, வாருங்கள் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

எல்லையில்லா ஆற்றல். மேஷம் என்பது எல்லையில்லா ஆற்றல் கொண்டது. நீங்கள் சூப்பர் வலிமை மற்றும் சூப்பர் வேகம் கொண்டவர். உதாரணமாக சொல்லப் போனால், மற்றும் வேகமான புல்லட்டை விட வேகமாக உங்களால் பறக்க முடியும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் நேரத்தை மெதுவாக்கும் தன்மை உள்ளவர்கள். நேரத்தை மிதப்படுத்தும் தன்மை உங்களுக்கு உண்டு. உங்களை எளிதில் உடைக்க முடியாது. வாழ்க்கையில் கடும் புயல், பேரழிவு மற்றும் கடுமையான பாரத்தையும் தாங்கக் கூடியவர் நீங்கள்.

மிதுனம்

மிதுனம்

விலங்குகளிடமும் தொடர்பு வைத்துக் கொள்வீர்கள். துல்லியமான நினைவாற்றல் கொண்டவர். உயிரில்லாத பொருட்கள் மற்றும் மிருகங்களிடமும் தொடர்பு கொள்ளும் திறன் உள்ளவர். உங்கள் அறிவுத் திறனுக்கு சமமாக வேறு எதுவும் இல்லை.

கடகம்

கடகம்

யாரிடமும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். மற்றவர்களின் உணர்சிகளை கட்டுப்படுத்த உங்களால் முடியும். மற்றவர்கள் என்ன உணர்வார்கள் என்பதை உங்களால் உணர முடியும், எந்த ஒரு உயிரினத்தோடும் உணர்வு ரீதியாக உங்களால் இணைய முடியும்.

சிம்மம்

சிம்மம்

தொடுவதெல்லாம் பொன்னாகும். நீங்கள் உங்கள் திறமையால் எந்த ஒரு மிகப்பெரிய சாதனையையும் நிகழ்த்தலாம். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்கள் வெளிச்சத்தின் மூலம் எதிரிகளை குருடாக்கலாம். உங்களை பயமுறுத்துகிறவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள சில வினாடிகளில் ஒரு பாதுகாப்பு வளையத்தை உங்களால் உருவாக்க முடியும்.

கன்னி

கன்னி

வேகம். உங்கள் வேகம் மற்றும் தீவிர செய்கையால் ஒரு மனித சூறாவளியாக மாறி விடுவீர்கள். ஒரு பொருளைத் தொடுவதன் மூலம் அதன் எண்ணிலடங்கா ஆற்றலை நீங்கள் உறிஞ்சிக் கொள்வீர்கள்.

துலாம்

துலாம்

எந்த ஒரு வேலையிலும் அதிகாரத்தை செலுத்தக் கூடும். ஒரு முறை பார்த்தவுடன் எந்த ஒரு வெளியையும் உங்களால் சிறப்பாக செய்ய முடியும். வாழ்க்கையை எல்லா கோணத்திலும் அணுகுவதற்கு இந்த சக்தி உங்களுக்கு உதவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

மனத்தைக் கட்டுப்படுத்த முடியும். எந்த ஒரு மனிதனின் மனதையும் உங்களால் கட்டுப்படுத்த முடியும். ஒரே பார்வையிலேயே ஒருவரின் ஆன்மாவின் ஆழத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் உண்மையில் யார் என்று உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

தனுசு

தனுசு

யாரிடமிருந்தும் உண்மையை வாங்கலாம். யாரிடமிருந்தும் உண்மையை வாங்கும் திறன் உங்களுக்கு உண்டு. உங்கள் வேலை மிகச் சரியாகவும் துல்லியமாகவும் இருக்கும்.

மகரம்

மகரம்

யாரையும் வளைக்க முடியும். உங்கள் மனதின் சக்தி மூலம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் யாரையும் வளைக்க முடியும். நீங்கள் முகவும் பிராக்டிகலானவர். மிகவும் ஒழுக்கமானவர். சில நேரங்களில் எதிர்மறை எண்ணம் கொண்டவர். மிகவும் அமைதியானவர்.

கும்பம்

கும்பம்

உலகம் சுற்றும் வாலிபர். புதிய கலாச்சரங்களை அறிந்து கொள்ள உலகம் முழுவதும் சுற்றி வருபவர். நீங்கள் மனிதாபிமானம் மிக்கவர். ஆனாலும் மற்றவர்களை சாராமல் இருப்பவர், சுதந்திரமானவர் மற்றும் நேர்மையானவர்.

மீனம்

மீனம்

மாயைகளை உருவாக்குபவர். ஒரு மாயையான விஷயத்தை உருவாக்கும் திறன் கொண்டவர். மற்றவர்களை கையாளும் திறன் கொண்டவர். நீங்கள் உருவாக்கும் எந்த ஒரு கற்பனையையும் உண்மையாக்கும் திறன் உங்களுக்கு உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    What is your unknown superpower based on zodiac

    Each of us has a complex range of emotions, strengths, and weaknesses that are unique to us. This special power is what makes us different from others.
    Story first published: Monday, July 9, 2018, 16:20 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more