பாலியல் வன்கொடுமை தொடர்ந்து அதிகரிக்க இது தான் காரணம்!

Posted By:
Subscribe to Boldsky

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யும் கொடூர சம்பவம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. குடும்பத்தின் கௌரவம், குழந்தையின் எதிர்காலம் ஆகியவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பல விஷயங்கள் வெளியில் தெரியாமலே மூடி மறைக்கப்படுகிறது.

அப்படி வெளியில் தெரிகிற ஒரு சில குழந்தைகளின் மரணங்களும் நம்மால் ஜீரணிக்க முடியாத அளவில் இருக்கிறது. சமீபத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் நடந்த சிறுமி அசீஃபாவின் மரணம் இன்னமும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி பல கேள்விகளை எழுப்பி வருகிறது. இந்நிலையில் பாலியல் குற்ற வழக்குகள் அதிகம் நடைபெறுகிற மாநிலங்களில் ஒன்று ஹரியானா.

ஹரியானாவில் இருக்கிற சாதரண மக்களிடத்தில் பாலியல் வன்கொடுமை குறித்து சில கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது, அதற்கு பதிலளித்த ஒவ்வொருவரும் சொன்னது எல்லாம் அதிர்ச்சியளிக்கிற வகையில் அமைந்திருக்கிறது, ஆரம்பித்திலிருந்தே அவர்களுக்கு பெண்களைப் பற்றி கற்பித்த விதமும் அவர்களது நம்பிக்கையும் இந்த பாலியல் குற்றங்களில் பெண்கள் மீதே தவறு என்று காட்டும் வகையில் அமைந்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பத்து நாட்களில் :

பத்து நாட்களில் :

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹரியானாவில் மட்டும் பத்து நாட்களில் பத்து பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . இந்த சம்பவத்தை தொடர்ந்தே ஒரு குழுவினர் அந்த மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது.

இது போன்ற சம்பவங்களை அவர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை பார்க்க கிளம்பியிருக்கிறார்கள்.

Image Courtesy

 ரேப் கல்ச்சர் :

ரேப் கல்ச்சர் :

பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தால் முதல் வேலையாக பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்வது அல்லது அவளை ஊரை விட்டு ஒதுக்குவது அல்லது அவள் நடத்தை கெட்டவள் என்று சொல்லி முத்திரை குத்துவது தான் நடக்கிறது.

தப்பித்தவறி கூட அவர்களுக்காக குரல் கொடுப்போம், அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதில்லையாம். மாறாக இவளாகத்தான் சென்றிருப்பாள் என்று தான் சொல்கின்றனர். இதனைத் தன ரேப் கல்ச்சர் என்கிறார்கள். அதாவது பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய பாலியல் வன்கொடுமைகளை சமூகம் அமைதியாக ஏற்றுக் கொள்வது.

Image Courtesy

மக்கள் :

மக்கள் :

ஹரியானாவின் ஜிண்ட்,ரோஹ்டாக்,பிஹ்வானி மற்றும் சார்கி தாத்ரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களிடம் பேசியிருக்கிறார்கள். அங்கு எல்லாமே இது பெண்களின் தவறு என்று தான் சொன்னார்களாம்.

மக்களிடையே இது தவறான செயல் என்றே பதியாத போது அங்கிருந்து எப்படி நாம் நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியும்

Image Courtesy

 அடிப்படை :

அடிப்படை :

இந்த ரேப் கல்ச்சரின் அடிப்படையே விக்டிம் ப்ளேமிங். பாதிக்கப்பட்ட நபரையே குற்றம் சமத்துவது. வயதானவர்கள்,பள்ளி மாணவர்கள் இன்னும் ஏன் அங்கிருக்கும் போலீஸ் அதிகாரிகள் முதற்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்கள் மீது தான் குற்றம் சுமத்துகிறார்கள்.

அவள் அப்படி உடை அணிந்திருந்தாள் என்பதில் தொடங்கி பல காரணங்களை சொல்கிறார்கள். சிலரிடத்தில் காரணங்களே இல்லை அவள் எதாவது செய்திருப்பாள் என்று முடிவு கட்டிவிடுகிறார்கள்.

Image Courtesy

இது ரேப் கிடையாது :

இது ரேப் கிடையாது :

ஒரு பெண் பதினான்கு வயதோ அல்லது பதினைந்து வயதோ கடந்து விட்டால் என்றால் அவளை பலாத்காரம் செய்வதாக சொல்லக்கூடாது மாறாக அவளது ஒப்புதலுடன் தான் நடக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஒரு முதியவர்.

அந்த பெண் எதாவது தவறாக செய்திருப்பாள் அதனால் தான் அவள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள் என்கிறான் ஒரு பள்ளி மாணவன்.

Image Courtesy

ஆண் மட்டும் ஜெயிலுக்கா? :

ஆண் மட்டும் ஜெயிலுக்கா? :

இதில் ஆண் பெண் இருவருமே எதோ ஒரு வகையில் தவறு செய்திருக்கிறார்கள். இப்படியிருக்கும் போது பெண்ணை பாதுகாப்பாக வீட்டில் உட்கார வைப்பதும் ஆணை மட்டும் ஜெயிலுக்கு அனுப்புவதும் எந்த வகையில் நியாயம்.

அதோடு இதில் பெண் மீதும் தவறு இருக்கத்தானே செய்கிறது பிறகு ஏன் எல்லா பழியையும் ஆண் மீதே சுமத்துகிறீர்கள் என்று கோபத்துடன் கேட்கிறார் ஒரு பெண்மணி. இவரின் மகளும் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

Image Courtesy

போலீஸ் :

போலீஸ் :

அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகளிடமும் இது குறித்து கேள்வி முன் வைக்கப்படுகிறது. இதில் இரண்டு தரப்பினர் மீதும் தவறு இருக்கிறது. இப்போது உங்களை எனக்கு முன்ன பின்ன தெரியாது எனும்பட்சத்தில் உங்களிடத்தில் வந்து நான் பேசவே மாட்டேன். அதே போலத்தான் உங்களை யாருக்கும் தெரியாது அல்லது தெரியாத நபர்களிடமிருந்து உங்களுக்கு தொல்லைகள் வர வாய்ப்பில்லை.

ஒரு பெண் வலிய வந்து பேசுகிறாள் என்னும் போது தான் அவளுக்கு ஒப்புதல் போல என்று ஆண் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான்.

Image Courtesy

கடத்தல் :

கடத்தல் :

பெரும்பாலான பாலியல் குற்ற வழக்குகளில் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று தான் வருகிறது. அது எதனால் நடக்கிறது என்று அவரிடமே கேட்கப்படுகிறது. ஆனால் இதற்கு பதிலளித்த அதிகாரியோ எப்படி சாதரணமாக உங்களை கடத்திவிட முடியும் என்று கேட்டுக் கொண்டே கடந்து செல்கிறார்.

ஹரியானவில் மட்டுமே கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான செய்திகள் பலவும் காட்டப்படுகிறது.

Image Courtesy

கௌரவம் :

கௌரவம் :

நம் குடும்ப கௌரவமே பெண்களிடத்தில் தான் இருக்கிறது. கௌரவத்தை காப்பாற்ற பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பெண்ணா கௌரவமா என்று வரும் பட்சத்தில் நாம் கௌரவத்தின் பக்கம் தான் நிற்க வேண்டும். அந்த கௌரவத்திற்காக பெண்களை கொன்றாலும் தவறில்லை.

குடும்ப கௌரவத்திற்கு இலுக்கு ஏற்படுத்துகிற வகையில் எதாவது செய்தால் அந்த பெண் வெட்டிப் போடுவது தான் பெருமை என்று நினைக்கிறார்கள்.

Image Courtesy

சேஃப் ஹோம் :

சேஃப் ஹோம் :

ஹரியானாவில் ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் இதற்காகவே 22 மாவட்டங்களில் சேஃப் ஹோம் செயல்படுகிறது. இங்கு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் வசிக்கிறார்கள்.

இங்கே ஊர் பஞ்சாயத்தால், குடும்பத்தினரால் மிரட்டப்படுகிறவர்கள் எல்லாம் இங்கே தங்கிக் கொள்ளலாம்.

இவர்கள் தங்கும் இடத்தை தான் சேஃப் ஹோம் என்கிறார்கள். இங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Image Courtesy

ஆண் பெண் :

ஆண் பெண் :

ஒரே விஷயம் ஆண் செய்தால் ஒரு மாதிரியும் பெண் செய்தால் வேறு மாதிரியும் பார்க்கப்படுகிறது. குடும்பத்தின் கௌரவத்தை பொறுத்தவரையில் அது பெண்களைச் சுற்றி தான் கட்டமைத்திருக்கிறார்கள்.

ஒரு ஆண் தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைத்தால் அது சரி, இதே ஒரு பெண் செய்தால் அது பெரும் தவறு என்று பேசுகிறார்கள் பெண்கள்.

Image Courtesy

மரியாதை :

மரியாதை :

குடும்பத்தின் கௌரவம், இந்த சமூகத்தில் மரியாதை ஆகியவற்றை கையில் எடுத்துக் கொண்டு பெண்களை பல வகையில் இந்த ஆண் வர்க்கம் அடிமைப்படுத்துகிறது. குடும்ப பொறுப்புகளில்,முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில், தங்களுக்கான உரிமைகளை தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டியதில் என எல்லாவற்றிலுமே பெண் தனக்கு அடங்கியவளாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

Image Courtesy

ஜீன்ஸ் :

ஜீன்ஸ் :

காப் பஞ்சாயத்து ஹரியானாவில் செயல்படுகிறது. போலீஸ் சட்டம் ஆகியவற்றை விட இந்த பஞ்சாயத்திற்கு ஊரில் இன்னமும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்கள். அதில் பத்து வயதிற்கு மேற்பட்ட பெண்கள் யாருமே ஜீன்ஸ் அணியக்கூடாது.

இப்படி நீங்கள் ஜீன்ஸ் அணிவது தான் ஆண்களின் கவனத்தை உங்கள் பக்கம் திசை திரும்ப வைக்கிறது என்றார்கள்.

Image Courtesy

பதினாறு வயதில் :

பதினாறு வயதில் :

அதோடு சர்வ காப் ஜாட் பஞ்சாயத்து என்ற அமைப்பிலிருந்து பெண்களுக்கு பதினாறு வயதிலேயே திருமணம் செய்து வைகக் வேண்டும் என்றார்கள். இதனால் தங்களுடைய பாலியல் தேவைகளை கணவரிடமே பெற்றுக் கொள்ளமுடியும் இதற்காக வேறு ஆடவரைத் தேடி போக வேண்டியதில்லை. இப்படி இளவயதில் திருமணம் செய்து வைப்பதால் பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய பாலியல் வன்முறைகள் குறையும் என்றார்கள்.

Image Courtesy

 குழந்தைகள் :

குழந்தைகள் :

இப்படியான விஷயங்களை தான் பெரியவர்கள், ஊர்தலைவர்கள், பெற்றோர்கள் பேசுகிறார்கள் அப்படியென்றால் அங்கே வளரும் குழந்தைகள் மனதில் என்ன விதைத்திருப்பார்கள்?அவர்கள் நம்மிடமிருந்து தான் பாடங்களை படிக்கிறார்கள்.

பாலியல் வன்முறை குறித்து எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் என்ன சொல்கிறார் தெரியுமா?

Image Courtesy

நண்பர்கள் :

நண்பர்கள் :

பாலியல் வன்கொடுமையில் பெண்கள் தான் தவறு செய்து ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் இவர்களுக்கு கெட்ட விஷயம் நடக்கிறது என்கிறார். அதைவிட ஏழாம் வகுப்பு மாணவர் சொன்னது தான் ஹைலைட் இதில் ஆண் பெண் இருவருமே பொறுப்பேற்க வேண்டும். எப்போது ஒரு கையால் கைதட்ட முடியாது என்றிருக்கிறார்.

Image Courtesy

ஹரியானா மட்டுமா? :

ஹரியானா மட்டுமா? :

இவை நமக்கு வெளிப்படையாக தெரிவதினால் இங்கு வாழும் மக்கள் எல்லாம் எதோ விசித்திரமான உலகத்தில் வாழ்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ஹரியானா மட்டுமல்ல பல மாநிலங்களில் இதே நிலைமை தான்.

நம்மூரில் கூட இப்படித்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

What do People Think About Rape Victims

What do People Think About Rape Victims
Story first published: Tuesday, April 17, 2018, 11:17 [IST]