TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
பொது இடத்தில் நிர்வாணமாக நிற்கும் ஆண்கள்! ஜப்பானின் வினோத கலாச்சாரம்
ஒவ்வொரு நாட்டிற்கு என்று ஏராளமான நடைமுறைகள் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இருக்கிற தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் இருக்கிற ஏரளமான வித்யாசங்கள் இருக்கின்றன.
அவர்கள் நாட்டில் இருக்கக்கூடிய நாட்டுப்புற பாரம்பரிய விஷயங்கள் அதனை மக்களிடைய ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் ஆகியவற்றினைக் கொண்டு சில பழக்கங்களை நாம் நடைமுறைபடுத்தியிருப்போம்.
எப்போதும் வெளிநாடு மீதான ஒரு பிரம்மை இருக்கும், அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை எப்படியிருக்கும், அவர்களின் வாழ்க்கைச் சூழல் எப்படியிருக்கும் என்பதைப் போன்ற கற்பிதங்கள் தான் மிகவும் சுவாரஸ்யமானவையாக இருக்கும். ஜப்பான் நாட்டில் இருக்கக்கூடிய மிகவும் சுவாரஸ்யமான மற்றும் விசித்திரமான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து பார்க்கலாம்.
#1
ஜப்பானிய நடைமுறையின் படி அங்கே கறுப்பு நிறத்தை அதிகம் விரும்புகிறார்கள். குறிப்பாக பெண்கள் முகத்தில் கருப்பு நிற மேக்கப் அணிவது, பல்வேறு வண்ணங்களில் ஆபரணங்கள்,உடைகள் அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ஆக, ஜப்பானில் கருப்பு தான் அழகு என்கிறார்கள்
#2
வேலை வாய்ப்பு மற்றும் வேலையாட்களுக்கான சட்டங்கள் அங்கே எல்லாமே பணியாளர்களுக்கு ஆதரவான சட்டங்களே இருக்கின்றன. இங்கே எளிதாக பணியை விட்டு துரத்துவது போல எல்லாம் அங்கே முடியாது.
அவர்களுக்கு என்று பேக்கேஜ் பல கொடுக்க வேண்டும். முறையான காரணங்கள் சொல்ல வேண்டும் இதனை தவிர்க்க அங்கே என்ன நடைமுறை செய்கிறார்கள் தெரியுமா? ஒரு தனியறையில் அடைத்து வைத்து மிகவும் கடினமான டாஸ்க்கினை கொடுத்து குறுகிய காலத்தில் முடிக்கச் சொல்வார்களாம், அதனை செய்யத் தவறும் பட்சத்தில் பெர்ஃபார்மென்ஸ் இல்லை என்று சொல்லி வேலையை விட்டு நீக்கிடுவார்கள்.
#3
அங்கே எல்லாருக்கும் அடிப்படையாக படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதனை ஒரு கலாச்சாரமாகவே அங்கே கடைபிடிக்கிறார்கள். அமெரிக்காவில் கூட 86 சதவீதம் பேர் மட்டுமே கல்வியறிவு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
#4
அங்கே பெண்களை விட ஆண்கள் தான அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வெளியில் இன்னொருவரிடம் எப்படிப் பேசுவது, குறிப்பாக பெண்களிடத்தில் எப்படி பேசுவது என்ற தயக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
#5
உலக மக்களிடையே அமெரிக்கர்கள் தான் உலகளவில் அதிக காபி இறக்குமதி செய்கிறார்கள் என்ற பேச்சு எழுகிறது,இவற்றைத் தாண்டி ஜப்பானில் 85 சதவீத காபியை பயன்படுத்துகிறார்கள். அது ஜமைக்கா காபி.
#6
இங்கே நண்பர்களை சந்திக்க ஹோட்டல்,தியேட்டர் என்று பொதுஇடத்தில் சந்தித்துக் கொள்வோம். ஆனால் ஜப்பானில் குட்டில் கேஃபே என்று இருக்கிறது. அங்கே இருவரும் அருகருகில் ஒரே கட்டிலிலில் அருகருகே படுத்துக் கொள்ளலாம். அங்கே செக்ஸ் அனுமதி கிடையாது.
#7
ஒவ்வொரு வகையான தனித்தீவுகள் நிறைய பார்த்திருப்போம் ஆனால் ஜப்பானில் இருக்கக்கூடிய ஒகுனோஷிமா என்ற தீவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முயல்கள் இருக்கின்றன. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் முயல்களுக்கென்றே இருக்கக்கூடிய தனித்தீவு இது.
#8
பொதுவாக குழந்தைகளை தத்தெடுக்க நினைக்கிறவர்கள் சிறு குழந்தையாய் இருக்கும் போது, அதாவது குழந்தைக்கு விவரம் தெரியாத போதே இது தான் உன் குடும்பம், இது தான் உன் பெற்றோர் என்று அறிமுகம் செய்து வைத்துவிட விரும்புகிறார்கள்.
சில நாடுகளில் டீன் ஏஜ் வயதிற்குள்ளாக தத்தெடுத்துக் கொள்வார்கள். ஜப்பானில் குழந்தைகளை இருபதிலிருந்து முப்பது வயது வரையில் கூட ஜப்பானில் தத்தெடுத்துக் கொள்கிறார்கள்.
#9
டிசம்பர் மாதத்தில் பொனேங்காய் என்ற விழா கொண்டாடப்படுகிறது. இதற்கு பெயர் ஃபார்காட் த யியர் . அந்த ஆண்டில் நடந்த விஷயங்களை எல்லாம் மறந்து புதிய ஆண்டினை துவக்கும் விதமாக இந்த விழாவினை கொண்டாடுகிறார்கள்.
இந்த விழாவினை குறிப்பாக அனைத்து அலுவலகங்களிலும் கொண்டாடுகிறார்கள். இதனால் அலுவலகத்தின் பணியாற்றுவோரிடையே சிறந்த புரிதல் இருக்கும்.
#10
எரியும் மலை.... ஜப்பானில் மொழியில் யமயாகி என்றால் எரியும் மலை என்று அர்த்தம். ஒரு மலை முழுவதற்கும் நெருப்புக் குழம்பை பற்ற வைப்பார்கள். அதே நேரத்தில் பல வண்ண பட்டாசுகளை பற்ற வைப்பார்கள்.
இதன் ஆரம்ப கதையை பலரும் பலவாறாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
#11
அரிசி சாதம் இங்கே சர்வசாதரணமாக நாம் சாபிடுவோம் ஆனால் ஜப்பானில் மோச்சி என்று
அரிசி கேக் செய்கிறார்கள் மோச்சி உணவு ஜப்பானில் மிகவும் ஃபேமஸ் அதில் சேர்க்கப்படுகிற மோச்சி மற்றும் மோச்சி தயாரிக்க தேவையான உணவு ஆகியவை மிகவும் ஃபேமஸாக இருக்கின்றன.
#12
ஜப்பானில் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு முன்னதாக துண்டினை தலையில் கட்டிக் கொள்கிற வழக்கம் இருக்கிறது. இதன் ஆரம்ப கட்டத்தை பார்த்தால் முதலில் நீச்சல் குளத்திற்கு வந்திருக்கிறார்கள் இடம் மிகவும் சிறியதாக இருந்ததினால் அந்த துண்டினை எங்கே வைப்பது, எப்படி அதனை மெயிண்டெயின் செய்வது என்று தெரியவில்லை அதனால் வேறு வழியில்லாமல் தங்கள் தலையில் வைத்துக் கொள்ள ஆரம்பிக்க பின் அதுவே ஒரு வழக்கமாகிவிட்டது.
#13
இங்கே சம்மளங்கால் போட்டு உட்காருவது மிகவும் பேமஸ், அதனை பாரம்பரிய வழக்கம் என்று சொல்வது அங்கே சீசா பொசிசனில் காலில் உட்காரச் சொல்வார்கள் அங்கே உட்காருவது தான் பாரம்பரிய முறை என்று சொல்லப்படுகிறது
#14
உணவுக்குப் பின் சிறிது நேரம் தூங்குவது ஜப்பானில் கட்டாயம் அந்த குட்டி நேப்பினால் வேலை செய்வோரிடத்தில் மிகவும் கற்பனைத்திறன் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. உலகிலேயே மிகவும் சிறிய எஸ்கேலேட்டர் ஜப்பானில் தான் இருக்கிறது.மொத்தம் ஐந்து படிகளுக்காக எஸ்கேல்லேட்டர் வைக்கப்பட்டிருக்கிறது.
#15
ஜப்பானில் ஹடாகா மட்சூரி எனப்படுகிற ஒரு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பெரும்பாலும் ஆண்களே பங்கேற்கிறார்கள். விழாவின் ஒரு நிகழ்ச்சியாக ஆண்கள் தங்கள் உடைகளை கழற்றி நிர்வாணமாக பொது இடத்தில் நிற்கிறார்கள். இப்படிச் செய்வதினால் ஆண்களிடத்தில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் வெளியேறி நல்ல ஆற்றல் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
#16
உணவு சாப்பிடும் போது அதிக சத்துடன் சாப்பிடுவது நூடுல்ஸ் உறியும் சத்தம் எல்லாம் அங்கே மிகவும் ஃபேமஸ் நூடுல்ஸ் சூப் உறிந்து குடிப்பது மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.
ஜப்பானில் செருப்புகளுக்கு மிகவும் பெயர் போன இடம். உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் போது நமக்கு ஜோடி செருப்பைக் கொடுக்கிறார்கள். வரவேற்பதில் ஒன்றாகவே இதனைப் பார்க்கிறார்கள். அதே போல கழிவரைக்குச் செல்லவும் தனியாக ஒரு ஜோடி செருப்பு வழங்க்கப்படுகிறது இப்படி செருப்பு வழங்குவதை விருந்தோம்பலின் ஒன்றாகவே கருதுகிறார்கள்.