Latest Updates
-
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும்
இந்த 5 வாஸ்தும் பெட்ரூம்ல கரெக்டா இருந்தா உங்க வாழ்ககை எப்பவுமே சந்தோஷமா இருக்கும்...
இந்த வாஸ்து முறைப்படி வீட்டின் அமைப்பை மாற்றி செல்வத்தை மட்டுமல்ல உங்கள் காதல் வாழ்க்கையில் சந்தோஷங்களை கூட நீங்கள் அள்ளிச் செல்ல இயலும். ஆமாங்க இந்த வாஸ்து முறைகள் உங்கள் காதல் வாழ்க்கையை சுவாரஸ்யமா
இந்த உலகத்தில் பிறந்த எல்லாரும் விரும்புவது அன்பான காதல் துணையைத் தான். நல்ல துணை கிடைப்பதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அந்த மாதிரியான ஒரு காதல் வாழ்க்கையை அமைக்க சாதகமான சூழலும் மிகவும் முக்கியம். வாஸ்து சாஸ்திரம் இந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் ஒரு அறிவியல்.

இந்த வாஸ்து முறைப்படி வீட்டின் அமைப்பை மாற்றி செல்வத்தை மட்டுமல்ல உங்கள் காதல் வாழ்க்கையில் சந்தோஷங்களை கூட நீங்கள் அள்ளிச் செல்ல இயலும். ஆமாங்க இந்த வாஸ்து முறைகள் உங்கள் காதல் வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றப் போகிறது. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையேயான பந்தத்தை நெருக்கமாக்க போகிறது.

படுக்கையறை
சுவரின் நிறம்
படுக்கையறையை இருட்டில் விடக்கூடாது. இருண்ட நிறங்களில் சுவருக்கு பெயிண்ட் அடிப்பதை தவிர்க்க வேண்டும். சதுர அல்லது செவ்வக வடிவ படுக்கையை பயன்படுத்த வேண்டும். ஒரு மெத்தை மட்டும் பயன்படுத்தவும். கதவுகளுக்கு இடையில் படுக்கையை அமைத்தல் கூடாது.

அமைப்பு
வாஸ்துப்படி உங்கள் படுக்கையறை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். நீங்கள் தெற்கே தலை வைத்து தூங்குகிற மாதிரி படுக்க வேண்டும்.

கண்ணாடி
படுக்கைக்கு எதிராக கண்ணாடி இருப்பது தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும். அழகான படிக கற்களை கொண்டு படுக்கையறையை அலங்கரிக்கும் போது அவை வெளிச்சத்தை ஈர்த்து உங்கள் திருமண வாழ்க்கையும் பிரகாசமாக்கும்.

பாத்ரூம்
படுக்கையறையில் பாத்ரூம் அதன் கதவு மூடப்பட்டு இருக்க வேண்டும்.பயன்படுத்தாத சமயங்களில் கழிப்பறை இருக்கை அமைப்பும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

புகைப்படம்
கிழக்கு சுவரில் திருமண புகைப்படத்தை மாட்டி வைக்கும் போது வேலை சம்பந்தமான விஷயங்களை மறந்து துணையுடன் சந்தோஷமாக இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications
