For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றப்படுகிற மக்கள்! அதிர்ச்சியளிக்கும் விசித்திர சடங்குகள்

உங்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தியாவில் பின்பற்றப்படுகிற சில சடங்கு சம்பிரதாயங்கள்

By Staff
|

வைரமுத்து ஆண்டாளைப் பற்றி பேசியதை விட ஆண்டாளை எப்படிச் சொல்லலாம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கொந்தளிப்பவர்கள் பேசுவதைக் கேட்டால் தான் நமக்கெல்லாம் பயமாய் இருக்கிறது. உண்மையில் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு சன்னியாச வாழ்க்கையை மேற்கொண்டிருப்பவர்கள் சாந்தமாக எப்போதும் கடவுளின் சிந்தையில் இருப்பார்கள் என்று படித்திருக்கிறோம். அவர்களும் அப்படித்தான் காண்பிக்கப்பட்டார்கள்.

ஆனால் சமூக வலைதளத்தில் நேற்றிலிருந்து வைரலாக ஒரு வீடியோ பரவிக்கொண்டிருக்கிறது. அதில் ஒர் ஆசிரமத்தில் இருப்பதாக சொல்லிக் கொள்ளும் பெண்கள் சிலர் வைரமுத்துவைத் திட்டி பேசுகிறார்கள். அதில் பேசியவர்கள் யாவரும் சிறுமியர் என்பது தான் இன்னும் கொடுமை. இளவயதில் யாரோ சொன்னதைக் கேட்டு நம்பி வாழ்க்கையில் தடம் மாறுபவர்களை கண்டிப்பாக மீட்க வேண்டியது அவசியம்.

Unusual Rituals of India

இங்கே கடவுளுக்காக, கடவுளின் ஆசியை பெறுவதற்காக என்று சொல்லி நடத்தப்படுகிற சில விசித்திரமான கொண்டாட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அகோரிகள் :

அகோரிகள் :

எல்லாருக்கும் இவர்களைப் பற்றிய ஓர் அறிமுகமாவது இருக்கும். இவர்கள் சிவனை வழிபடுபவர்கள். இயற்கை நமக்கு கொடுத்த எல்லாவற்றையும் பயன்படுத்தலாம் என்று நம்பிக்கை இவர்களுக்கு அதிகம். இயற்கை படைத்த பொருட்களில் ஒன்றாகத் தான் மனிதனையும் பார்க்கிறார்கள்.

இவர்கள் கங்கை நதிக்கரையில் அதிகம் வசிக்கிறார்கள். அங்கே எரிக்கப்படுகிற பிணங்களை சாப்பிடுவது இவர்களது பழக்கமாக இருக்கிறது. உடல் முழுவதும் எரிந்த பிறகு இருக்கக்கூடிய எலும்புகளை அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

Image Courtesy

 வெனி தான் :

வெனி தான் :

அலகாபாத்தில் நடைபெறுகிற கூந்தல் தானம் விழா இது. அலகாபாத் மற்றும் மகாராஸ்டிராவைச் சேர்ந்த தம்பதிகள் இதில் பங்கேற்கிறார்கள். திருமணமானவர்கள் தங்கள் பந்தம் ஏழேழு ஜென்மத்திற்கும் தொடரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த சடங்கினை செய்கிறார்கள்.

இதன்படி, அலகாபாத்தில் இருக்கிற திருவேணி சங்கமத்தில் கூடுகிற தம்பதிகள் சில பூஜைகளை செய்கிறார்கள். இதில் ஆண்களும் பெண்களும் தங்களது பாரம்பரிய உடையினை அணிந்து கொள்கிறார்கள். பூஜை எல்லாம் முடிந்த பிறகு மனைவியின் கூந்தலை நறுக்கிறார் கணவர் பின் அந்த கூந்தல் ஆற்றில் விடப்படுகிறது. இப்படிச் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும் என்று நம்புகிறார்கள்.

Image Courtesy

அந்தரத்தில் பறக்கும் குழந்தை :

அந்தரத்தில் பறக்கும் குழந்தை :

செய்திகளில் இதுப்பற்றி ஏற்கனவே தெரிந்திருப்பீர்கள். மகாராஸ்டிரா மற்றும் கர்நாடகத்தில் இது நடைமுறையில் இருக்கிறது. டிசம்பர் மாதம் இந்தத் திருவிழா நடக்கிறது. குழந்தையின் அப்பா, அல்லது அப்பா ஸ்தானத்தில் இருப்பவர் குழந்தையை முதுகில் கட்டிக் கொண்டு கோவிலின் உச்சிக்குச் செல்கிறார். அங்கே சென்றதும் அங்கிருக்கும் பூசாரியிடம் குழந்தையை ஒப்படைத்து விடுகிறார்.

அவர் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தபடி குழந்தையை வேகமாக பெற்றுக் கொண்ட வேகத்தில் அங்கும் இங்கும் சுழற்றியபடி குழந்தையை கீழே போடுகிறார். இவர் நின்று கொண்டிருக்கும் உயரத்தில் இருந்து குழந்தை கீழே போடப்படுகிறது.

கீழே சில ஆண்கள் ப்ளேங்கெட்டை விரித்தபடி நிற்க அதில் குழந்தை விழுகிறது. இதில் விழும் வேகத்தில் குழந்தை ஒரு முறை தான் விம்ம வேண்டுமாம். உடனேயே அதிலிருந்து குழந்தையை எடுத்து அதன் தாயிடம் ஒப்படைத்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 200 குழந்தைகள் வரை இந்த சடங்கில் பங்கேற்கிறார்கள். இதில் கலந்து கொள்ளக்கூடிய குழந்தைகளுக்கு இரண்டு வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.

Image Courtesy

திங்கா கவார் :

திங்கா கவார் :

ராஜஸ்தானின் புகழ்ப்பெற்ற திருவிழா இது. இதனை ஜோத்பூரில் கொண்டாடுகிறார்கள். மாலையிலிருந்து தான் இந்த திருவிழா துவங்குகிறது. ராஜஸ்தானில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இந்தத் திருவிழா நடக்கிறது. திங்கா கவார் திருவிழாவின்படி பெண்கள் பாரம்பரிய உடையணிந்து கையில் ஒரு பிரம்புடன் நடக்கிறார்கள். நடுவில் தென்படுகிற ஆண்களை அந்த பிரம்பால் அடிக்க வேண்டும்

திருமணமான ஆண்கள் அடி வாங்கினாள் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்றும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Image Courtesy

தேங்காய் :

தேங்காய் :

தமிழகத்தில் நடைபெற்று வருகிற மிகவும் பிரபலமான ஓர் நடைமுறை இது. தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன் எப்போது ஆரம்பித்தது தெரியுமா? ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய அதிகாரிகள் ஓர் ரயில்வே பாலத்தை கட்ட நினைக்கிறார்கள்.

ரயில்வே பாலம் கட்ட வேண்டும் என்றால் வழியில் இருக்கக்கூடிய ஓர் கோவில் இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை அந்தப் பகுதி கிராம மக்கள் முழுவதுமாக எதிர்த்தனர். உடனடியாக இதனை சமாளிக்க நினைத்த ஆங்கிலேய அதிகாரிகள் கோவிலின் அருகில் இருந்த ஆற்றங்கரை ஓரத்திலிருந்து 187 கற்கள் கொண்டுவரப்பட்டது. அந்த கற்கள் ஒவ்வொன்றும் தேங்காய் அளவில் இருந்தது.

இந்த அத்தனை கற்களையும் உங்கள் தலையைக் கொண்டு உடைக்க வேண்டும்.அப்படி உடைக்கப்பட்டால் இந்த கோவிலை இடிக்க மாட்டோம் என்றிருக்கிறார்கள் ஆங்கிலேய அதிகாரிகள். கிராமத்தினர் நிறைவேற்றிக் காட்ட கோவில் இடிக்கப்படுவது தடுக்கப்பட்டது. அன்றிலிருந்து தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

Image Courtesy

 சூடான நீரில் :

சூடான நீரில் :

கேட்கவே இந்த நடைமுறை பயங்கரமானதாய் இருக்கிறது. கர்நாடக மாநிலம் பிஜலாப்பூர் என்ற இடத்தில் இந்த சடங்கு நடத்தப்படுகிறது பிறந்து மூன்று மாதங்களான குழந்தை அங்கே இருக்கக்கூடிய சூடான கொதிக்கும் நீரில் முக்கப்படுகிறது. ஒரு முறை சூடான நீரில் முக்கியெடுத்து கொடுத்து விடுகிறார்கள் என்றாலும் அது குழந்தையின் உடலில் தீக்காயங்களை உண்டாக்கும் அளவிற்கு அந்த நீரின் சூடு இருக்கிறது.

இது குழந்தை பாக்கியத்தை கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்தப்படுகிற ஓர் சடங்காம்.

Image Courtesy

 மாடு மிதித்தால் நல்லது :

மாடு மிதித்தால் நல்லது :

தீபாவளிக்கு அடுத்த நாள் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. உஜ்ஜெயின் போபால் ஆகிய இடங்களில் இது விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் மக்கள் தங்களது கால்நடைகளுக்கு பல்வேறு அலங்காரங்களை செய்கிறார்கள்.

பின்னர் அலங்காரம் செய்த விலங்குகள் அவிழ்த்து விடப்படுகிறது. அப்பகுதி முழுவதும் விலங்குகள் சுற்றி வருகிறது. மக்கள் விலங்கு சுற்றி வரும் வழியில் போய் படுத்துக் கொள்கிறார்கள். விலங்கு அவர்கள் மேல் ஏறிச் செல்கிறது. இப்படி விலங்கு தங்களின் மேல் ஏறிச் செல்வதால் தங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

Image Courtesy

வாழையிலையில் :

வாழையிலையில் :

இது பல்வேறு கோவில்களில் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே கோவில்களில் அன்னதானம் நடக்கும் . அப்படி அன்னதானம் நடந்து மக்கள் சாப்பிட்டு முடித்த எச்சில் இலைகளில் அங்கப் பிரதட்சணம் செய்கிறார்கள். இப்படிச் செய்வதால் தங்களது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று நம்புகிறார்கள்.

Image Courtesy

புதைத்து விடு :

புதைத்து விடு :

கர்நாடகத்தில் நடத்தப்படுகிற மிகவும் விசித்திரமான ஓர் பழக்கம் இது. இங்கே இருக்கக்கூடிய குழந்தைகள் குறிப்பாக உடல் வளர்ச்சியோ அல்லது மனவளர்சியோ இல்லாமல் இருக்கக்கூடிய குழந்தைகளையும்,குழந்தை முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிற குழந்தைகளை சூரிய கிரகணத்தன்று மணலில் புதைத்து வைக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் இருந்து ஆறு மணி நேரம் வரை குழந்தையை புதைத்து வைக்கிறார்கள்.

Image Courtesy

விலங்குக்கு திருமணம் :

விலங்குக்கு திருமணம் :

இங்கே மழை பொழிவது என்பதை அறிவியல் காரணங்களோடு அணுகாமல் கடவுளின் ஆசிர்வாதமாக பார்க்கிறார்கள். மழையில்லாமல் அதிக வறட்சி ஏற்பட்டால் கடவுளுக்கு பூஜையை நடத்த துவங்கிவிடுகிறார்கள். பூஜைகளின் ஒரு பகுதியாக விலங்குகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அஸ்ஸாம் மற்றும் மகாராஸ்டிராவில் தவளைகளுக்கு திருமணம் செய்யப்படுகிறது. இது தவிர கழுதைகளுக்கு, நாய்களுக்கும் திருமணம் செய்யப்படுகிறது.

Image Courtesy

முடியைப் பிடுங்கும் சடங்கு :

முடியைப் பிடுங்கும் சடங்கு :

பெரும்பாலான கடவுள் பக்திமான்கள் தங்களது இறப்பிற்கு பிறகு மோக்‌ஷம் கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.ஜெயின மதம் அல்லது புத்த மதமும் இதில் அடங்கும். இவர்களில் ஜெயின மதத்தை சேர்ந்தவர்கள் துறவறம் மேற்கொண்ட பிறகு அழகுடன் தொடர்புடைய முடியை ஒவ்வொரு முடியாக பிய்த்துப் போடுகிறார்கள்.

உலக வாழ்க்கையிலிருந்து தங்களை மீட்டெடுக்க இது உதவும் என்கிறார்கள். காயங்களை ஆற்ற காய்ந்து போன மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள்.

Image Courtesy

 திருமணம் :

திருமணம் :

மழையை வேண்டி விலங்குகளுக்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கினைப் பார்த்தோம்.இங்கே திருமண தோஷம் இருந்தால் நாய்க்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். இப்படிச் செய்வதால் பெண்களிடையே இருக்கும் கெட்ட தோஷங்கள் விலகிடும் என்று நம்புகிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Unusual Rituals of India

Unusual Rituals of India
Desktop Bottom Promotion