ராணி பத்மாவதி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

By: Staff
Subscribe to Boldsky

சில நாட்களுக்கு முன்னர் பத்மாவத் திரைப்படத்தின் சர்ச்சை முடித்து வைக்கப்பட்டது. திரைப்படம் என்பதையும் தாண்டி ராணி பத்மாவதி குறித்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.ஏற்கனவே திரைப்படம் பார்த்திருந்தால் அதை ஓரமாக வைத்துவிட்டு உண்மையில் ராணி பத்மாவதி யார் என்பதை தெரிந்து கொள்ள இதைத் தொடருங்கள்.

சிங்கல மகாராஜா கந்தர்வசென் மற்றும் தாய் சாம்பவதியின் மகள். இவருக்கு பத்மினி என்ற பெயரும் உண்டு. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டின் மெடபடா ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சித்தூரின் ராணி. இவர் ராவ்ல் ரத்தன்சிங்கின் இரண்டாவது மனைவி.பத்மாவத் என்ற நாவலில் இப்படித் தான் ராணி பத்மாதியை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பல வரலாற்று ஆய்வாளர்கள் இன்றும் பத்மாதி உண்மையில் வாழ்ந்தவரா அல்லது கற்பனை கதாப்பாத்திரமா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதற்கு காரணம் நிலையான சான்றுகள் கிடைக்கவில்லை என்பதே.

Image Courtesy

#2

#2

மாலிக் முகமது ஜெயசீ என்பவர் தான் எழுதிய பத்மாவத் என்ற காவியத்தில் கற்பனைக் கதாப்பாத்திரமாக பத்மாவதியை படைத்தார் என்றும் பின் அதுவே வரலாற்று கதாபபத்திரமாக மாறிவிட்டிருகிறது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

#3

#3

பத்மாவதி இலங்கையின் இளவரசி. பத்மாவத்தில் இடம்பெற்றிருக்கிற கவிதையின் படி, அழகான பத்மாவதி சின்கல த்விபா என்ற இடத்தின் இளவரசி என விவரித்திருக்கிறார்கள். இவர்கள் குறிப்பிட்டிருக்கும் சின்கல த்விபா தான் இன்றைய இலங்கை.

#4

#4

ஜெயசீ தன் காவியத்தில்,பத்மாவதி தன்னுடைய செல்லப்பிள்ளையாக கிளியொன்றை வளர்த்தார், அதற்கு ஹிராமணி என்று பெயர் சூட்டி மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்திருக்கிறார்.

ஆனால் பத்மாவதியின் தந்தைக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை மகளின் இந்த போக்கு பிடிக்காத தந்தை மகள் ஆசையாக வளர்க்கும் கிளியை கொன்றுவிடுமாறு உத்தரவிடுகிறார்.

 #5

#5

கூண்டை திறந்து விடும் கணத்தில் சிறகை விரித்து பறந்து தப்பித்துச் சென்று விடுகிற ஹீராமணி. ஒரு வேடனிடம் சிக்கி அவன் ஒருவனிடம் விற்றுவிடுகிறான் அவன் மூலமாக ஹீராமணி என்கிற பேசுகிளி குறித்த விவரம் சித்தூரின் அரசன் ரத்தன் சிங்கிற்கு தெரிய வருகிறது.

அவர் ஹீராமணியை பெற்றுக் கொள்கிறார். அவரிடம் ஹீராமணி ராணி பத்மாவதியைப் பற்றியும், அவரது அழகைப் பற்றியும் விவரிக்க பத்மாவதியை தேட வேண்டும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

#6

#6

ராணி பத்மாவதி தேர்ந்த போர்பயிற்சிகளில் சிறந்து விளங்கினார். போர் தந்திரங்கள் மற்றும் நுணுக்கங்கள் பலவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.பத்மாவதி சுயம்வரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. தங்கள் நாட்டின் வாள் வீரனிடம் வாள்சண்டையில் வெள்ளும் வீரரையே திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி போட்டிக்கு அழைக்கிறார் பத்மாவதி.

#7

#7

அந்த வீரனை யாராலும் வெல்ல முடியவில்லை. பிறகு தான் தெரிந்ததது, வாள்ச்சண்டை வீரராக பத்மாவதியே உருமாறிக் கொண்டு போட்டியிட்டிருக்கிறார் என்பது.அதன் பின் அங்கிருந்த ரத்தன் சிங் போட்டிக்கு வர, இருவருக்கும் கடுமையான வாள்சண்டை நடக்கிறது. இறுதியில் ரத்தன் சிங் வெற்றி பெருகிறார் .

ஏற்கனவே அறிவித்தது போலவே தன்னை வென்ற ரத்தன் சிங்கை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.

#8

#8

தன் அரசவையில் இருந்த ராகவ் சேத்தன் என்பவர் செய்த குற்றத்திற்கு தண்டனையாக அரசவையிலிருந்து வெளியேற்றி உத்திரவிடுகிறார் ரத்தன் சிங். அவர் டெல்லியின் சுல்தானான அலாவுதீன் கில்ஜியின் அரசவையில் சேர்ந்து கொள்கிறார்.

 #9

#9

அவரிடம் ராணி பத்மாவதியின் அழகையும் திறமையைப் பற்றியும் ராகவ் விவரிக்க ராணியை அடைய வேண்டும் என்று விரும்புகிறார் அலாவுதீன் கில்ஜி.ராணியை கவர்ந்து வரும் பொருட்டு சித்தூரின் மீது போர் தொடுக்கிறார்.

#10

#10

அரண்மனையை கில்ஜியால் நெருங்க முடியவில்லை, உடனே ரத்தன் சிங்கிற்கு ஒரு செய்தி அனுப்புகிறார்.அதில், ராணி பத்மாவதியின் முகத்தை ஒரு முறை பார்க்க அனுமதித்தால், உங்கள் மீது போர் தொடுக்க மாட்டேன் டெல்லிக்கே திரும்பிச் சென்று விடுவேன் என்று எழுதியிருக்கிறது.

#11

#11

போர் நிறுத்த வேண்டும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் அவையில் விவாதித்து ராணி பத்மாவதியின் பிம்பத்தை கண்ணாடியில் பார்க்கலாம் என்கிறார்.

கில்ஜியும் பத்மாவதியின் பிம்பத்தை மட்டுமே பார்த்துவிட்டு திரும்புகிறார்.திரும்பும் போது, வஞ்சகமாக பேசி ரத்தன் சிங்கை கடத்திக் கொண்டு சென்று விடுகிறார்.

#12

#12

இதே கதையை ராஜபுத்திரர்கள் கூறுகையில் சில மாறுதல்களோடு சொல்கிறார்கள்.அலாவுதீன் கில்ஜி பார்த்தது ராணி பத்மாவதியை கிடையாது, அந்த பிம்பத்தில் தெரிந்தது ராணி பத்மாவதியின் சகோதரர்.

பத்மாவதியைப் போன்றே தன்னை அலங்கரித்து வந்து நின்றிருக்கிறார்.

#13

#13

மகாராணியின் முகத்தை இன்னொரு ஆணுக்கு காட்டுவது அவமானமாக கருத்தப்படும். இதனால் பத்மாவதியின் தம்பியை சேலை அணிவித்து அலங்காரம் செய்து கில்ஜியிடம் காட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது. இருந்தும் இதனை பலரும் ஒப்புக் கொள்ளவில்லை, பிம்பத்தில் தெரிந்தது பத்மாவதி தான் என்று சொல்கிறர்கள்.

#14

#14

கணவன் ரத்தன் சிங் விடுவிக்க வேண்டுமென்றால் நீ வர வேண்டும் என்று உத்திரவிடுகிறான் கில்ஜி. பத்மாவதியும் ஒப்புக் கொண்டு 700படை வீரர்களை தன்னுடைய தாதிப் பெண்களாக உருமாற்றி டெல்லிக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே திட்டமிட்டபடி கணவன் ரத்தன் சிங்கை சித்தூருக்கு மீட்டு வருகிறார் பத்மாவதி.

#15

#15

இந்நிலையில், ரத்தன் சிங்கை கில்ஜி கடத்திச் சென்றுவிட்டான் என்ற செய்தியறிந்து கும்பால்நெரைச் சேர்ந்த ராஜபுத்திர அரசர் தேவ்பால் பத்மினியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.

கில்ஜியிடமிருந்து தப்பித்து வந்ததும் இந்த செய்தி கேள்விப்பட்ட ரத்தன் சிங், தேவ்பால் மீது போர் தொடுகிறார். அதில் இருவருமே இறக்கிறார்கள்.

#16

#16

ரத்தன் சிங் இறந்துவிட்டான் என்ற தகவல் அறிந்து மீண்டும் சித்தூருக்கு படையெடுத்து வருகிறான் கில்ஜி.இதையறிந்த பத்மாவதி, ராஜபுத்திரர்களின் கலாச்சாரப்படி நெருப்பில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்.

எதிர் நாட்டுப் படையினர் தங்களை பாலியல் வன்புணர்வோ அல்லது சிறைபிடித்துச் சென்றுவிடவோ கூடாது என்பதற்காக இப்படி இறப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Unknown Facts Of Rani Padmavathi

Unknown Facts Of Rani Padmavathi
Story first published: Monday, February 5, 2018, 9:30 [IST]
Subscribe Newsletter