For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாவீரர் நெப்போலியனின் பிறப்புறப்பு ஏலம் எடுத்த கதை தெரியுமா?

மாவீரர் நெப்போலியன் பற்றி இதுவரை தெரியாத தகவல்கள்

By Staff
|

200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த மாவிரன் நெப்போலியன். ஏழைக்குடும்பத்தில் பிறந்து பிரான்சின் மன்னனான மாவிரனைப் பற்றி எப்போதும் பல கதைகள் சுற்றிக் கொண்டிருக்கும்.

1769 ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பிரான்சில் இருக்கக்கூடிய கோர்சிக்காவில் ஏழ்மையான குடும்பத்தில் பதிமூன்றாவது பிள்ளையாக பிறந்தார் நெப்போலியன். வியன்னாவிலும் பாரிசிலும் கல்வி கற்றார். பதினாறு வயதில் பள்ளிப்படிப்பை முடித்தவர் பிரஞ்சு ராணுவத்தின் ஆர்டிலரிப் பிரிவில் சேர்ந்து கொள்கிறார்.

தொடர்ந்து பல போர்கள், ஒவ்வொன்றிலும் வெற்றி.... அவ்வளவு தான் உலகப்புகழ் பெறுகிறார் நெப்போலியன். 1804 ஆம் ஆண்டு தன்னுடைய 35 வயதில் பிரான்சின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டார் நெப்போலியன். வரலாற்று நாயகனாக திகழும் நெப்போலியன் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயரம் :

உயரம் :

நெப்போலியன் பிறரை விட குள்ளமானவர் என்கிற விமர்சனம் எப்போதும் உண்டு, ஆனால் நெப்போலியன் 5'6இன்ச் உயரம் வரை இருக்ககூடும். 1800 ஆண்டுகளில் வாழ்ந்த ஃபிரஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆண்களின் சராசரி உயரம் இது தான்.

ஆனால் ராணுவத்தில் இருந்தவர்கள் சராசரியை விட சற்று உயரமாக இருந்தார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் நெப்போலியன் உயரம் குறைவாக தெரிந்திருக்கிறது.

Image Courtesy

உடல் :

உடல் :

நெப்போலியன் இறந்த பிறகு விக்னாலி என்கிற பாதிரியார் நெப்போலியனின் உடல் உறுப்புகளை எடுத்துக் கொண்டார். அப்படி எடுத்துக் கொள்ளும் போது நெப்போலியனின் பிறப்புறப்பையும் எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

கொலும்பியா மருத்துவ பல்கலைக்கழகத்தில் சிறுநீரகத் துறையின் முன்னால் சேர்மனாக இருந்த ஜான் லேட்டிமர் என்பவர் 1977 ஆம் ஆண்டு நெப்போலியனின் பிறப்புறுப்பை ஏலத்தில் வாங்கினார். அதன் பிறகு மூன்றாயிரம் டாலருக்கு விற்கப்பட்டதாகவும் பேச்சு உண்டு.

Image Courtesy

சாலையில்.... :

சாலையில்.... :

ஐரோப்பாவில் பெரும்பாலும் இடது பக்கமாகவே வாகனங்கள் செல்ல அனுமதியுண்டு, அதனால் தங்களது ஆயுதங்களை வலது கையில் பிடித்திருக்கவும், போரிடவும் வசதியாக இருந்தது. இந்த வசதிக்காவே இடது புறம் பயணிக்கலாம் என்று சொல்லப்பட்டது. பிரஞ்சு புரட்சிக்கு பிறகு உயர்குடி மக்கள் என சொல்லிக் கொண்டோர் வலது பக்கம் வாகனங்களை செல்ல உத்தரவிட்டார்கள். இதனால் இடது பக்கம் செல்வோர், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களை குனிந்து வணக்கம் வைக்க அதுவே ஏதுவாக இருக்கும் என்று கருதினார்கள்.

1709 ஆம் ஆண்டு பீட்டர் த கிரேட் என்பவர் இந்த யோசனையால் எலிசபத் மகாராணி சந்தோஷப்பட்டதை அறிந்தார். தொடர்ந்து 1752 ஆம் ஆண்டு இனி இப்படித்தான் பயணிக்க வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் நெப்போலியன் தங்கள் நாட்டிற்கு வரும் எதிரியை திசை திருப்ப இந்த முறையை மாற்றினார்.

Image Courtesy

 ஜோஸ்பின் :

ஜோஸ்பின் :

ஜோஸ்பின் நெப்போலியனை விட இரண்டு வயது மூத்தவராக இருந்தார். இதனால் நெப்போலியனை திருமணம் செய்து கொள்வதில் சிக்கல் உண்டானது.

இருவருமிக்குமிடையில் கடிதப் போக்குவரத்து தொடர்ந்து கொண்டிருந்தது. போர்களத்திலிருந்து தனது காதலி ஜோஸ்பினுக்கு நெப்போலியன் கடிதம் அனுப்புவார். பெரும்பாலும் மிகுந்து நகைச்சுவை உணர்வுடன் கடிதம் இருக்கும். ஒரு கட்டத்தில் ஜோஸ்பினுக்கு தனது சகோதரன் மேல் மையல் உள்ளது என்பதை அறிந்த நெப்போலியன் மிகுந்த ஆத்திரம் கொண்டார்,வருத்தப்பட்டார். ஆனால் ஜோஸ்பின் மீதான அன்பு குறையவில்லை ஜோஸ்பினுக்காக ஒரு மாளிகையை கட்டிக் கொடுத்தார்.

Image Courtesy

சதுரங்க விளையாட்டு :

சதுரங்க விளையாட்டு :

வொல்ஃப்கேங் கெம்ப்லீன் என்பவரல் உருவாக்கப்பட்ட டுர்க் எனப் பெயரிடப்பட்ட திங்கிங் மெஷின் மனிதர்களுடன் செஸ் விளையாடும். 1809 ஆம் ஆண்டு அந்த மெஷினுடன் செஸ் விளையாடினார் நெப்போலியன்.

ஆரம்பத்திலிருந்து டுர்க் முன்னணியில் இருந்தது. விடாமல் போட்டியிட்ட நெப்போலியன் சில தந்திரங்களை கையாண்டார். முடிவில் அந்த டுர்க் மெஷினுக்குள் உண்மையான செஸ் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மனிதன் உள்ளேயிருந்து விளையாடுகிறான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Image Courtesy

மரணப் படுக்கையில் :

மரணப் படுக்கையில் :

ஜோஸ்பினை விவாகரத்து செய்த பிறகு நெப்போலியனின் வீழ்ச்சி ஆரம்பமானது என்றே சொல்லலாம். ரஷ்யாவும் பிரிட்டனும் நெப்போலியனை கைது செய்ய துடித்தது.

ஜோஸ்பினின் முன்னாள் கணவனுக்கு ஆதரவாக இருந்தவர்கள் பலரும் தற்போது ஜோஸ்பினுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்கள். பல கொடுமைகளை செய்தார்கள் இதனால் உடல்நலம் குன்றி விரைவிலேயே மரணித்தாள். தொடர்ந்து நெப்போலியன் மரணப்படுக்கையில் கிடந்த போது உச்சரித்த கடைசி பெயர் ஜோஸ்பின் தான்.

Image Courtesy

ஈகோ :

ஈகோ :

நெப்போலியனுக்கு ஈகோ மட்டும் இல்லையென்றால் வரலாறு எப்படி மாறிப்போயிருக்கும் என்று யாருக்கும் தெரியாது. தன்னுடைய காதலை ஜோஸ்பின் பல முறை எதிர்க்கிறார். ஈகோ எட்டிப் பார்க்கிறது நெப்போலியனுக்கு இறுதியில் பெண்களைப் பற்றிய எண்ணத்தை நாம் பெரிதுபடுத்தக்கூடாது என்பதை உணர ஆரம்பித்தார்.

இதன் பிறகு ஜோஸ்பின் மீதான ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. இதற்காக அன்பு குறைந்தது என்று அர்த்தமல்ல. இதன் பிறகு ஜோஸ்பினுக்கு நெப்போலியன் ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், ‘நான் பிறரைப் போல அல்ல... பிறர் கடைபிடிக்கிற தார்மீக ஒழுக்கங்கள்,சட்டங்கள் போன்றவை எல்லாம் எனக்கு பொருந்தாது . எனக்கு மனைவியாக வரப்போகிறவர்கள் என் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது. எனது சக்தி தான் என் மனைவி. அது என் பலமாக இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.

Image Courtesy

தற்கொலை :

தற்கொலை :

1814 ஏப்ரல் மாதம் நெப்போலியன் தன் பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டார். தன் அதிகாரம் குறைவதை தாங்கிக் கொள்ள முடியாத நெப்போலியன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

அதன் பிறகு பிரான்ஸுக்கு பயணிக்கும் வழியில் 1815 ஆம் ஆண்டு எல்பாவிலிருந்து தப்பித்தார். அதன்பிறகு செயின்ட் ஹெலினாவிற்கு நாடுகடத்தபட்டார். இந்த இடம் ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு தீவாகும். இங்கே தன்னுடைய 51வது வயதில் வயிற்று புற்றுநோயால் நெப்போலியன் உயிரிழந்தார்.

Image Courtesy

 இரண்டாவது மனைவி :

இரண்டாவது மனைவி :

ஜோஸ்பினை விவாகரத்து செய்த பிறகு மரியா லுடோவிகா என்பவரை 1810 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்கிறார். ஆஸ்ட்ரியாவின் அரசரான முதலாம் பிரான்சிஸின் மகள் தான் மரியா.

தனக்கு ஒரு வாரிசை கொடுப்பார் என்பதற்காக மட்டுமல்லாமல் பிரான்ஸ் மற்றும் ஆஸ்டியாவின் ஒற்றுமைக்கு மரியாவை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் நெப்போலியனுக்கு இருந்தது. நெப்போலியன் நாடுகடத்தப்பட்ட போது அவருடன் செல்ல விருப்பபட்டார் மரியா ஆனால் அவரது தந்தை விடவில்லை, மரியாவை வற்புறுத்தி நெப்போலியன் இறந்த பிறகு அடல்பெர்ட் என்பவரை திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

Image Courtesy

 ஓவியம் :

ஓவியம் :

நெப்போலியன் ஓவியங்கள் சிலவற்றில் நெப்போலியன் தன்னுடைய கையை கோர்ட்டுக்குள் கை வைத்திருப்பது போல இருக்கும். அதற்கு அவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது, சில சருமப் பிரச்சனைகள் இருந்தது என்று வெவ்வேறு கதைகள் சொல்லப்பட்டன.

ஆனால் உண்மையில் பழங்காலத்தில் ஆண்கள் இப்படியான போஸ் கொடுப்பது தான் வழக்கமாக இருந்திருக்கிறதாம்.

Image Courtesy

புத்தகம் :

புத்தகம் :

நெப்போலியன் இருபத்தியாராவது வயதில் மிகச்சிறிய கதையாசிரியராக இருந்திருக்கிறார். ரொமேண்டிக் கதையாக க்ளிசன் அட் யுஜினி என்ற புத்தகத்தை எழுதினார். இது முழுக்க முழுக்க தன்னுடைய வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டது.

கதையின் முக்கிய கதாப்பாத்திரம் க்ளிசன், அற்புதமான படைவீரன், அவனுக்கு க்ளாரி என்பவனுடன் காதல் அவர்கள் சந்திக்கிற பிரச்சனைகள் இறுதியில் அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதே கதை.

Image Courtesy

 பூனை :

பூனை :

பெரும்பாலனோர் இதைச் சொல்கிறார்கள் நெப்போலியனுக்கு ஐல்யுரோபோபியா இருக்கிறது. அப்படியானால் பூனையென்றாலே நெப்போலியனுக்கு அலர்ஜி, பயம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு சரியான சான்றுகள் எதுவும் இல்லை.

உணவு :

உணவு :

பல மைல் தொலைவுக்கு பயணம் செய்து போரிடும் கட்டாயத்தில் இருக்கும் போது ராணுவ வீரர்களுக்கு சரியான உணவுகள் கிடைக்கவில்லை, இதனாலேயே பல்வேறு பிரச்சனைகள் சந்திக்க நேரிட்டது.

இதனால் இந்தப் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு சொல்பவர்களுக்கு பரிசுதொகையை அறிவித்திருந்தார் நெப்போலியன். அதனைத் தொடர்ந்தே உணவை காற்றுப்புகாத கண்ணாடிப் பெட்டியில் வைப்பதினால் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க முடியும் என்பதை கண்டறிந்தனர்.

Image Courtesy

இறுதியாக :

இறுதியாக :

நெப்போலியன் தான் இறந்த பிறகு செய்னி என்ற ஆற்றில் தன் சாம்பலை கறைக்க வேண்டும் என்று விரும்பினார் ஆனால் அது நடக்கவில்லை.

எந்த உணவாக இருந்தாலும் சாப்பிட இருபது நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டாராம் நெப்போலியன். சிறிது சிறிதாக வேகமாக உண்ணும் பழக்கமுடையவராக இருந்திருக்கிறார். வறுத்த கோழியும், உருளைக்கிழங்கு ஃப்ரையும் அவருக்கு மிக பிடித்தமான உணவுகளாக இருந்திருக்கிறது. அவ்வப்போது வைன் குடிப்பார். பயணத்தின் போதும்,போர்க்களத்தில் இருக்கும் போதும், குதிரையில் அமர்ந்தபடியே உணவு எடுத்துக்கொள்வாராம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Unknown facts about Nepolean

Unknown facts about Nepolean
Story first published: Tuesday, February 27, 2018, 17:21 [IST]
Desktop Bottom Promotion