For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியால இருந்துட்டு இத தெரிஞ்சுக்கலன்னா எப்பிடி?

இந்தியாவில் நடந்த இந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

|

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றக்கூடிய மக்கள் ஒன்றிணைந்து வாழக்கூடிய ஓர் நாடு இந்தியா தான். பிற நாடுகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் நமக்கு நம் நாட்டினைப் பற்றி தெரிவதில்லை.

சுதந்திரம் பெற்றதிலிருந்து பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து ஏன், இப்போது வரையிலும் கூட அதிலிருந்து மீண்டு வர முயன்று கொண்டிருக்கிறோம். எப்போதும் நம்மிடம் இருக்கும் பொருட்களின் அருமை தெரியாது, தூரத்தில் இருப்பவற்றை பார்த்து ரசித்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருப்போம். தப்பித்தவறி கூட நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களை பற்றிய பேச்சுக்கள் இருக்காது, நம்மவர்களுக்கு வெளிநாட்டு மோகத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

வெளிநாடு மட்டுமல்ல இந்தியாவிலும் ஏரளமான சுவரஸ்யங்கள் நிறைந்திருக்கிறது அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தபால் நிலையம் :

தபால் நிலையம் :

பேஸ்புக் மற்றும் வாட்சப் அதிகளவு பயன்பாட்டிற்கு வந்த பிறகு கடிதம் எழுதுவது எல்லாம் குறைந்து விட்டது தான், ஆனால் இன்னமும் கடிதப் போக்குவரத்து சில அலுவல் ரீதியானது உயிர்ப்புடன் தான் இருக்கிறது.

இந்தியாவில் தபால் போக்குவரத்து என்பது மிகப்பெரிய போக்குவரத்தாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போஸ்ட் ஆபீஸ் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் லேக் பகுதியில் ஒரு போஸ்ட் ஆபீஸ் திறக்கப்பட்டது. இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா? இந்த அலுவலகம் ஒரு படகில் திறக்கப்பட்டது. இந்தியாவின் ஒரே மிதக்கும் போஸ்ட் ஆபீஸ் இது தான்.

Image Courtesy

கும்பமேளா :

கும்பமேளா :

இந்தியாவின் அலகாபாத்,ஹரித்துவார்,உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் ஓர் திருவிழா கும்பமேளா ஆகும். இதனை பூர்ண கும்பமேளா என்றும் அழைப்பர். பன்னிரெண்டு பூர்ண கும்பமேளாவிற்கு பிறகு வருவது தான் மகா கும்பமேளா கிட்டத்தட்ட 144 வருடங்கள் கழித்து வருவது.

உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவும் இது தான். இந்த கூட்டத்தை விண்வெளியில் இருந்து பார்த்தால் கூட தெரிந்திருக்கிறது.

Image Courtesy

 மழை :

மழை :

மேகாலயாவில் இருக்கக்கூடிய காசி மலையில் இருக்கும் ஓர் கிராமம் தான் மவுஸ்ன்ரம். உலகிலேயே அதிக மழைப்பொழிவு இங்கே தான் இருக்கிறது. ஒரு வருடத்தில் 11ஆயிரம் மில்லி மீட்டர் வரை மழைப்பொழிவு இருக்குமாம். இங்கிருக்கும் மண்ணில் அதிகம் சுண்ணாம்பு கலந்திருக்கிறது அதனால் தண்ணீரை உறிந்து கொள்ளவதில்லை.

மழைக்காலம் முடிந்ததுமே தண்ணீருக்கு திண்டாட்டம் ஏற்படுகிறது,

Image Courtesy

பூமிப் பந்தின் சுற்றளவு :

பூமிப் பந்தின் சுற்றளவு :

மும்பையின் புறநகரான பாந்திராவை வொர்லி மற்றும் நாரிமுன்னுடன் இணைக்கும் ஒர் பாலம் தான் பாந்திரா வொர்லி கடற்பாலம். சுமார் 1600 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்பட்டிருக்கிறது.

முன்னால் பாந்திராவிலிருந்து வொர்லி செல்ல 45 முதல் 60 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால் இந்த கடற்பாலம் கட்டியதிலிருந்து அந்த பயண தூரம் வெறும் ஏழு நிமிடங்களாக குறைந்திருக்கிறது. இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மனிதர்களின் உழைப்பு இதில் அடங்கியிருக்கிறது. இதன் எடை 50000 ஆப்ரிக்க யானை எடையின் ஒத்ததாக இருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கம்பிகளை ஒன்றாக இணைத்தால் அது பூமியின் சுற்றளவிற்கு சரியாக வருமாம்!

Image Courtesy

 கிரிக்கெட் :

கிரிக்கெட் :

ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் சைல் கிரிக்கெட் கிரவுண்டு உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் கிரிக்கெட் கிரவுண்டாகும். இது 2,444 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

அங்கு அமைந்திருக்கும் மிலிட்டிரி பள்ளிக்கூடத்தின் பயன்பாட்டிற்காக 1893 ஆம் ஆண்டு இந்த கிரவுண்ட் கட்டப்பட்டது.

Image Courtesy

ஷாம்பூ :

ஷாம்பூ :

ஷாம்புவைக் கொண்டு தலையை அலசும் முறையை முதன் முதலில் நாம் தான் உலகிற்கே அறிமுகப்படுத்தியிருக்கிறோம். ஆரம்பத்தில் மூலிகைகளை அரைத்து தலைக்கு பூசி வந்திருக்கிறார்கள். நாளடைவில் எண்ணெய் மற்றும் சில வாசனை திரவியங்களை சேர்த்திருக்கிறார்கள்

ஷாம்பூ என்ற வார்த்தையைக் கூட நாம் தான் முதன் முதல் பயன்படுத்தியிருக்கிறோம். சமிஸ்கிருத வார்த்தையான ஷம்பு என்பதற்கு மசாஜ் செய்வது என்ற அர்த்தம் இருக்கிறது.

கபடி கபடி :

கபடி கபடி :

இதுவரை நடந்த ஏசியன் கபடி போட்டி, கபடி உலகக் கோப்பை , ஏசியன் கபடி ஷேம்பியன்ஷிப் என அனைத்திலும் இந்திய அணி தான் கோப்பையை வென்றிருக்கிறது. ஒரு முறை கூட வேறு நாட்டிற்கு விட்டுக் கொடுக்கவில்லை.

கபடி பெண்கள் அணியும் இதே சாதனையை இன்று வரையில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

Image Courtesy

நிலா :

நிலா :

நிலாவில் தண்ணீர் இருக்கிறது, தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கின்றன என்று உலகிற்கே முதன் முதலில் சொன்னது இந்தியா தான். இஸ்ரோவிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் 1 மூன் மினராலஜி முறையில் அதனை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது.

Image Courtesy

அப்துல்கலாம் :

அப்துல்கலாம் :

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லாரும் தன்னுடைய ஆதர்ஷ நாயகனாக கொண்டாடும் ஓர் தலைவன் என்றால் அது ஏ.பி.ஜே அப்துல்கலாம் தான்.

இவர் 2006 ஆம் ஆண்டு ஸ்விச்சர்லாந்திற்கு பயணம் மேற்கொள்கிறார். இவர் அந்த நாட்டிற்கு சென்ற தினமான மே 26 ஆம் தேதியை ஸ்விச்சர்லாந்து அரசாங்கம் அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறது.

Image Courtesy

இதுவே போதும் :

இதுவே போதும் :

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் தனக்கு கொடுக்கப்படுவதாக ஒதுக்கப்பட்ட சம்பளத்தொகையில் ஐம்பது சதவீதமே தனக்கு போதுமானது என்றார்.

நீண்ட காலங்கள் குடியரசுத் தலைவராக இருந்த ஒரே தலைவர் இவர் தான் 1952 ஆம் ஆண்டு மற்றும் 1957 ஆம் ஆண்டு இரண்டு முறை நடந்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் இவரே வெற்றிப் பெற்றார். பதவி முடியும் தருவாயில் இவர் தனக்கு 25 சதவீத சம்பளமே போதும் என்று சொல்லியிருந்தார்.

Image Courtesy

ஆங்கிலம் :

ஆங்கிலம் :

உலகிலேயே அதிகம் ஆங்கில மொழி பேசுபவர்கள் இந்தியர்கள் தானாம். இப்போது வரையில் சுமார் 125 மில்லியன் மக்கள் ஆங்கில மொழியறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள். வரும் நாட்களில் இது கணிசமாக உயரும் என்று சொல்லப்படுகிறது.

வெஜிடேரியன் :

வெஜிடேரியன் :

உலகிலேயே அதிக வெஜிடேரியன்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். அதற்கு தனிப்பட்ட விருப்பமோ அல்லது மதமோ காரணியாக இருக்கலாம். இங்கு வாழுகின்ற மக்களில் இருபது முதல் நாற்பது சதவீதம் பேர் வரையில் வெஜிடேரியன்களாக இருக்கிறார்களாம்.

உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடும் இந்தியா தான்.

சர்க்கரை :

சர்க்கரை :

உலகில் அதிக சர்க்கரை நோயாளிகள் கொண்ட நாடு என்ற பெருமை மட்டுமல்ல வெள்ளைச் சர்க்கரையை உற்பத்தி செய்த கொடுமையான பெருமையும் நம்மையே சாரும்.

கரும்பிலிருந்து பாகு தயாரித்து அதிலிருந்து சர்க்கரையை எடுக்கலாம். அதில் என்னவெல்லாம் கலந்து எப்படியெல்லாம் சுத்தீகரித்து எப்படி வசீகரிக்கும் வெள்ளை நிற சர்க்கரையை தயாரிப்பது என்பதை வெளிநாட்டினரே நம்மிடம் தான் கற்றுச் சென்றிருக்கிறார்கள்.

ஒரே ஒரு வோட்டர் வரார் வழி விடுங்கோ :

ஒரே ஒரு வோட்டர் வரார் வழி விடுங்கோ :

கிர் காட்டின் பனேஜ் என்ற பகுதியில் வசிப்பவர் மஹந்த் பாரத் தாஸ் தர்ஷந்தாஸ் என்பவர் 2004 ஆம் ஆண்டிலிருந்து ஓட்டளிக்கிறார். அவர் ஓட்டளிப்பதற்காகவே தனி வாக்குச் சாவடியே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

Image Courtesy

 பரமபதம் :

பரமபதம் :

இன்றைக்கு உலகில் போர்டில் விளையாடப்படுகிற மிக பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்று ஸ்னேக் அண்ட் லேடர். இதனையும் இந்தியர்கள் தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு பாவ புண்ணியங்களைப் பற்றிச் சொல்ல பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் வியாபார யுக்தி உள்ளே நுழைந்து சந்தையில் விற்கும் ஒரு விளையாட்டாக மாறிவிட்டது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Unknown Facts About India

Unknown Facts About India
Desktop Bottom Promotion