For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

72 நாட்கள் உணவு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

நரமாமிசம் சாப்பிடுபவர்களைப் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத சில சுவாரஸ்யத் தகவல்கள்

|

ஆரம்பக் காலங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சிப் பெற்று இன்றைக்கு இந்த நவீன யுகத்தில் வந்திருக்கிறோம். அதற்காக நாம் பயணித்த பாதையை மறந்திட முடியுமா? இன்றைக்கு நினைத்தாலும் நடுங்க வைக்கிற சில உண்மைகளை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

விலங்குகளை அடித்துக் கொல்வதை விட மனிதர்களை அடித்துக் கொல்லும் அவர்களை உண்பது என்பது மிகவும் கோரமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. நரமாமிசம் உண்பது பற்றியும் அவை குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களையும் இங்கே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன்னோர்கள் :

முன்னோர்கள் :

இன்றைக்கு நர மாமிசம் சாப்பிடுவதை வினோதமாக பார்க்கப்பட்டாலும் ஆரம்பக் காலத்தில் இது மிக இயல்பான ஒரு விஷயமாகவே இருந்திருக்கிறது. சில பருவக் காலங்களில் விலங்குகளை வேட்டையாடி உண்பது என்பது இயலாத காரியமாக இருக்கும்.

அந்த நேரத்தில் பசியை போக்க, உயிரை காக்க தங்கள் கூட்டத்திலிருந்து ஒருவரையே அடித்துக் கொன்று சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

Image Courtesy

சத்துக்கள் :

சத்துக்கள் :

நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த வந்ததற்கு இதுவும் ஓர் காரணம் என்றே சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்துச் சத்துக்களையும், நரமாமிசத்திலிருந்து பெற முடியவில்லை.

அதோடு எனர்ஜிக்காக தேவைப்படுகிற கலோரியும் குறைவாகவே கிடைத்திருக்கிறது. இதனால் என்ன தான் குறைந்தது 80 கிலோவுள்ள ஒர் மனிதனை அடித்துச் சாப்பிடும் போது குறைந்த அளவிலான எனர்ஜியும் கூட கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் அந்த முயற்சியை கைவிட நினைத்திருக்கிறார்கள்.

Image Courtesy

இறப்புக்குப் பின் :

இறப்புக்குப் பின் :

உயிருடன் இருப்பவரை கொன்று அந்த உடலை உண்பது ஒர் வகையென்றால் தங்கள் குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால், குறிப்பாக வயோதிகம் காரணமாக இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதிக் காரியங்கள் செய்யாமல் அவர்களை உணவாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.

இதனால் அந்த முன்னோர்களின் ஆசிர்வாதம் தங்களுடனே இருக்கிறது. அவர்கள் எங்களோடு கலந்து விட்டார்கள் என்று நினைத்திருந்திருக்கிறார்கள். இதிலேயே சில சடங்கு சம்பிதயாங்களை சேர்த்து அதனை கட்டாயமாக்கவும் முயற்சித்திருந்திருக்கிறார்கள். முழு உடலை சாப்பிடவில்லை என்றாலும் சம்பிரதாயத்திற்காகவாது சாப்பிட வேண்டும் என்று சொல்லி சில காலங்கள் இந்த வழக்கத்தை தொடர்ந்திருக்கிறார்கள்.

Image Courtesy

விலங்குகள் :

விலங்குகள் :

மனிதர்கள் தான் இந்த வழக்கம் மிகவும் கோரமானது, மனிதாபிமானமற்றது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் விலங்கினங்களில் இது சாதரணமாக நிகழக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. பிற விலங்குகளை விட தன் குட்டியை அல்லது தன் இனத்தையே அடித்துக் கொல்லும் வழக்கம் விலங்குகளிடம் சர்வ சாதரணமாக காணப்படுகிறது.

சிலந்தி வகைகளில் ப்ளாக் விடோ என்ற வகை சிலந்தி இருக்கிறது. இணை சேரும் காலம் முடிந்தவுடன் தன்னுடன் சேர்ந்த ஆண் இணையை பெண் இணை கொன்று விடுகிறது. இதே போல சில விலங்குகள் தான் ஈன்றெடுக்கிற குட்டிகளையே சாப்பிட்டு விடுவதும் உண்டு.

Image Courtesy

வேட்டையாடு :

வேட்டையாடு :

இந்த நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் தங்கள் ஊருக்கு புதிதாக வருகிறவர்கள் அல்லது இவர்கள் போரிடவோ அல்லது உணவு தேடியோ செல்லும் போது எதிர்நாட்டு மக்களை பிடித்துக் கொண்டு வந்து சாப்பிடுவது எக்ஸோ கேனிபலிசம் என்று அழைக்கிறார்கள். பப்புவா நியூ ஜெனிவாவில் இருக்கிற மினாமின் என்ற கிராம மக்களிடையே இந்த வழக்கம் இருந்திருக்கிறது.

Image Courtesy

அதிபர் :

அதிபர் :

இந்த நரமாமிசத்திற்கு மிகச் சிறந்த உதரணமாக இந்த சம்பவத்தை குறிப்பிடலாம். ஜார்ஜ் புஷ் சீனியரை கொன்று சாப்பிட்டிருக்கிறார்கள் ஜப்பானைச் சேர்ந்த நரமாமிசம் உண்பவர்கள்.

இரண்டாம் உலகப் போரின் போது சிச்சி ஜிமா என்ற தீவுப் பகுதியில் தரையிறங்கியிருக்கிறார்கள்.

விமானத்தில் இருந்த ஒருவர் மட்டும் பாராஷூட் உதவியுடன் தப்பி விஷயத்தை சொல்ல அதன் பிறகு தான் ஜார்ஜ் புஷ் அங்கே மாட்டியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

Image Courtesy

பன்றிக் கறி :

பன்றிக் கறி :

மனிதக் கறி சுவை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் முயன்றார்கள். நரமாமிசம் சாப்பிடுவோரிடத்தில் எல்லாம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுவையைச் சொன்னாரக்ள். ஆனால் பெரும்பாலானவர்கள் சொன்னது என்னத் தெரியுமா?

முதிர்ந்த பன்றிக்கறியைப் போல இருந்தது என்பது தான்.

வெளிநாட்டவர்கள் :

வெளிநாட்டவர்கள் :

1878 ஆம் ஆண்டு, பபுவா நியூ ஜெனிவாவில் இருக்கக்கூடிய பழங்குடியினத் தலைவர் டலேலி அங்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மிஷனரிகளில் இருப்பவர்களை எல்லாம் கொன்று சாப்பிடுங்கள் என்று கட்டளையிட்டார் ஏனென்றால் அவர்கள் எல்லாம் வெளிநாட்டினர் என்று சொல்லப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து பல நூற்றாண்டு கடந்துவிட்டாலும் இந்த விஷயம் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பிக் கொண்டேயிருந்தது. இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு தங்கள் முன்னோர்கள் செய்த செயலுக்காக இன்றைக்கு வாழ்கின்ற அந்த பழங்குடி மக்கள் மன்னிப்பு கேட்டார்கள்.

Image Courtesy

ஆபத்து :

ஆபத்து :

கொஞ்சம் கொஞ்சமாக நரமாமிசம் சாப்பிடும் வழக்கம் முற்றிலுமாக குறைந்து போனது. இந்நிலையில் ஆபத்தான காலங்களில் உயிர் பிழைக்க வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் உடனிருப்பார்களையே உண்டு உயிர் பிழைக்கும் அரிதான சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது.

1972 ஆம் ஆண்டு உருகுவே நாட்டைச் சார்ந்த 571 என்ற விமானம் ஏண்டஸ் என்ற மலையில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த ஏண்டஸ் மலை உலகிலேயே மிக நீளமானதாகும். இந்த மலையின் நீலம் மட்டும் 7000 கிலோமீட்டரை தாண்டுகிறது.அகலம் என்று பார்த்தால் 200கி.மீ முதல் 700 கி.மீ வரை இருக்கிறது.

Image Courtesy

உயிரையும் காப்பான் :

உயிரையும் காப்பான் :

விபத்தில் பலியானவர்களைப் போக சிலர் உயிர் பிழைத்திருந்தார்கள் இன்னும் சிலரோ படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். விமானம் நொறுங்கி கிடக்கிறது இடிபாடுகளில் சிக்கியவர்களை இவர்களே மீட்டு முடிந்தளவு முதலுதவி அளிக்கிரார்கள். நேரம் கடந்து நாட்களாகிறது.

திடீரென்று தங்கள் பாதுகாப்பு வளையத்திலிருந்து காணமல் போன விமானத்தை தேடும் பணியை தொடர்ந்தார்கள். விமானம் எந்தப் பகுதியில் விழுந்திருக்கிறது என்பதே கண்டுபிடிக்க முடியவில்லை. மிகப்பெரிய மலைப்பகுதி அங்கே விழுந்திருக்கிறது என்று உறுதி செய்தாலும் தேடி அந்த இடத்தை அடைய நீண்ட காலம் பிடிக்கும்... இருந்தும் தொடர்ந்தார்கள்.

உணவோ குடிநீரோ இல்லாமல் அங்கிருக்கும் மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள விபத்தில் இறந்தவர்களை உணவாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட 72 நாட்கள் வரை நரமாமிசத்தை சாப்பிட்டே உயிர் பிழைத்தவர்கள் இறுதியாக மீட்கப்பட்டனர்.

Image Courtesy

சிரிப்பின் மரணம் :

சிரிப்பின் மரணம் :

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று தானே வழக்கமாக கேட்டிருப்போம் ஆனால் இங்கே சிரித்து சிரித்தே மரணமடைந்த கதைகளை சொல்கிறார்கள். பபுவா நியூ ஜெனிவாவில் வாழுகின்ற குறிப்பிட்ட மக்கள் மத்தியில் க்குரு எனப்படுகிற வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. இதனை பிரோன்ஸ் என்றும் அழைக்கிறார்கள்.

இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் ஸ்ட்ரோக் ஏற்படுவது, கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சிரிப்பு இதனால் மூச்சுத் திணறி மரணம் உண்டாவது ஆகியவை ஏற்படும்.

Image Courtesy

காரணம் :

காரணம் :

ஆரம்பத்தில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை பின் ஆராய்ச்சியாளர்களின் தொடர் ஆய்வின் முடிவில் நரமாமிசம் சாப்பிடுபவர்களுக்கு ட்விஸ்டட் ப்ரோட்டீன் நம் உடலில் வந்து சேர்கிறது நம் உடலில் இருக்கிற ப்ரோட்டீனுக்கும் புதிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய ப்ரோட்டீன் சேரத பட்சத்தில் இந்த வைரஸ் உருவாகிறது.

இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் அது முதலில் நம் மூளையைத் தான் தாக்குகிறது.

Image Courtesy

தன்னைத் தானே :

தன்னைத் தானே :

சில மனிதர்களுக்கு தன் உடலையே பிய்த்து திங்கும் குணாதிசயம் இருக்கிறது. அதாவது தங்களது தசைகளையே கடித்து சாப்பிடுவார்கள். இதனை ஆட்டோ கனிபலிசம் என்கிறார்கள். மிகத் தீவிரமான அளவில் டயாப்பட்டிக் நியூட்ரோபதியினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது வெளியுலகத்தினால் தீவிரமான மனச்சிதைவிற்கு ஆளாகியிருந்தாலோ இப்படி தங்களை தாங்களே வருத்திக் கொள்வர்.

இது மரபணு ரீதியாகவும் வரக்கூடும். மருத்துவர்கள் இதனை ஓர் குறைபாடு என்றே வர்ணிக்கிறார்கள். இந்தப் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நாக்கை அடிக்கடி கடித்துக் கொள்வர். நகங்களை, தோலை திண்பது இவற்றில் ஆரம்பக்கட்டம்.

Image Courtesy

ஜோசப் ஸ்டாலின் :

ஜோசப் ஸ்டாலின் :

1932-33 காலகட்டத்தில் ஜோசப் ஸ்டாலின் ரஷ்யாவில் விவசாயத்தை மாற்றி அமைக்கப் போவதாக சொல்லி எல்லாருடைய நிலங்களை கைப்பற்றினார். இதில் உக்ரேனிய மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்கள் நிலத்தை கொடுக்க மாட்டோம் என்றார்கள். ஸ்டாலினும் விடவில்லை, அவர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக.... நிலத்தை ஒப்புக் கொடுக்க சம்மதிக்கும் வரையில் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் செய்தார்.

மனிதனால் உருவாக்கப்பட்ட மிக பெரிய வறுமை என்று சொன்னால் இதைக் குறிப்பிடலாம். இந்த நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசியினால் உயிரிழந்தார்கள். அதோடு, பலரும் நரமாமிசம் சாப்பிட பழக்கப்பட்டிருந்தார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Unknown Facts About Cannibalism

Unknown Facts About Cannibalism
Desktop Bottom Promotion