ரயில்களில் வந்து குவிந்த எலும்புகள்! படம் சொல்லும் வரலாறு

Posted By:
Subscribe to Boldsky

மனிதனின் சுயநலத்தால் ஒவ்வொரு விலங்கினங்களாக அழிந்து வருகிறது. அதற்கு சான்றாக பல்வேறு தகவல்களை நாம் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு நம் முன்னால் சுற்றித் திரியும் சில விலங்கினங்கள் கூட அழிவின் விளம்பில் நின்று கொண்டிருக்கின்றன.

வரலாறுகள் எப்போதும் அமைதியானதாகவோ அல்லது மனதுக்கு பிடித்தமானதாகவோ இருப்பதில்லை. ரத்தக்கறை படிந்து நம் மனதி அடி ஆழத்தில் இருந்து குத்தி கேள்வியெழுப்புபவையாக இருக்கின்றன. ரத்த தொய்ந்த அந்த வரலாற்றினை நாம் கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. இப்போது இருக்கும் வசதி வாய்ப்புகளைப் போல அன்றைக்கு இருக்கவில்லை, உணவுக்காக, உடைக்காக, உடமைக்காக என தன்னுடைய சுயநலத்திற்காக பிற விலங்குகளை கொன்று குவித்தான் மனிதன்.

Tragic history about which Train has full of skulls

Image Courtesy

இதில் கொன்று குவித்தான் என்பது வெறும் வாய் வார்த்தைகளாக அல்லாமல் உண்மையிலேயே உங்கள் கண் முன்னால் ஓர் குவியலை காண்பித்தால். குவியல் என்றதும் லேசாக போகிற போக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள். பெரிய மலையைப் போல குவித்து வைத்திருக்கும் இவை எல்லாம் அமெரிக்காவில் அடித்து வேட்டையாடப்பட்ட ஒரு வகை மாடு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

1880 துவக்கத்திலிருந்து இந்த பைசன் வேட்டையாடப்படுவது துவங்கியது. இப்போதிருக்கக்கூடிய எருமை மாடுகளுக்கு மூதாதையர்கள் தான் இந்த பைசன். உலகில் வாழ்ந்த மிகப்பெரிய கால்நடைகளில் இதுவும் ஒன்று ஆனால் தற்போது முற்றிலுமாக அழிந்து விட்டிருக்கிறது.

Image Courtesy

 #2

#2

1880 களில் ஆரம்பித்து அந்த நூற்றாண்டு முடியும் போதே வெறும் சொற்ப எண்ணிக்கையில் பைசனின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு அசுரத்தனமாக வேட்டையாடியிருக்கிறார்கள்.

வேட்டையாடுகிறவர்களுக்கு அரசாங்கமே பண உதவி செய்திருக்கிறது.

Image Courtesy

#3

#3

1830களில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பைசன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருந்திருக்கிறது. இவற்றோடு சேர்ந்து சில குதிரையினங்களும் சூரையாடப்பட்டிருக்கிறது.

முக்கியமாக இவை உணவுக்காகவும், அதன் தோல் மற்றும் உரத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்று சொன்னாலும் இன்னொரு முக்கிய விஷயமும் அடங்கியிருக்கிறது.

Image Courtesy

#4

#4

அப்போது தான் அமெரிக்காவில் ரயில் போக்குவரத்து ஆரம்பித்து மக்களின் இடப்பெயர்வு அதிகரித்தது. அந்த நேரத்தில் தான் அரசாங்கம் இந்த பைசன் வேட்டையாடப்படுவதை ஊக்குவித்தது . ரயில் போக்குவரத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா?

பைசன் ஒரு கால்நடை விலங்கு ஒரேயிடத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழக்கூடியது அல்ல தொடர்ந்து தன்னுடைய உணவைத் தேடி பயணப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

Image Courtesy

#5

#5

அப்படியான பயணங்களில் பெரும்பாலும் அவை புதிதாக கட்டப்பட்டிருக்கும் தண்டவாளங்களில், ரயில் கடந்து செல்லக்கூடிய இடங்களில் வருவதும் போவதுமாக இருந்திருக்கிறது. சில நேரங்களில் தண்டவாளங்களில் ஓய்வெடுத்திருக்கிறது.

குளிர் காலங்களில் மலைகளின் இடுக்கில் போய் தன்னை தற்காத்து கொள்ளும் பைசன்களால் பல அவ்வழியாக கடந்து செல்லக்கூடிய ரயில்கள் செல்ல முடியாமல் பல நாட்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறதாம்.

Image Courtesy

#6

#6

இதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் பைசன்களை வேட்டையாட முடிவெடுத்தது. இதுமட்டுமல்லாது மேற்ச்சொன்ன சில காரணங்களாலும் அரசாங்கமும் இதற்கு ஒத்துழைத்தது. ஒரு பைசனின் எலும்புகள் கொண்டு வந்து வந்து காண்பித்தால் அதற்கு அரசாங்கம் ஊக்கத்தொகையையும் அறிவித்தது.

Image Courtesy

#7

#7

இதில் ராணுவ வீரர்களையும் களத்தில் இறக்கினார்கள். கொத்து கொத்தாக பைசன்கள் வேட்டையாடப்பட்டு ரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டன. இவர்கள் உணவுக்காக வேட்டையாடவில்லை மாற்றாக இவர்களிடம் சொல்வதற்கு இருந்தது என்ன காரணம் தெரியுமா?

Image Courtesy

#8

#8

இது பூர்வீக அமெரிக்கர்களின் பிரதான உணவாக இருந்த இந்த பைசனை வேட்டையாடி அழிப்பதால் அவர்களை தங்கள் ஆழுமைக்கு கீழ் கொண்டு வர முடியும் என்று நினைத்தார்கள். பூர்வ குடிகளை இடத்தை விட்டு அனுப்பிவிட்டால் நிலத்தை கையகப்படுத்தலாம் என்று எண்ணிக் கொண்டார்கள் ஐரோப்பியர்கள்.

ஐம்பது ஆண்டு காலம் வீரர்கள் போட்டியிட்டு இந்தியாவை அடிமைப் படுத்த எடுத்துக் கொண்ட காலத்தை விட இதனால் பூர்வீக அமெரிக்கர்கள் வீழ்ந்து விடுவார்கள் என்று நினைத்தார்கள்.

Image Courtesy

#9

#9

கோடிக்கணக்கில் இருந்த இந்த பைசன் இப்படி பல்வேறு காரணங்களை சொல்லி வேட்டையாடப்பட்டதால் சில வருடங்களிலேயே சொற்ப எண்ணிக்கையிலானது. அப்படி வேட்டையாடப்பட்ட எலும்புகளை அடுக்கி மலையென குவித்து வைத்து புகைப்படமும் எடுத்திருக்கிறார்கள்.

இப்படியான ஒரு கோர வரலாற்றை இன்றைக்கு நினைவுப்படுத்துவது இந்த புகைப்படங்கள் தான்.

மனிதனின் சுயலாபத்திற்காக ஓர் விலங்கினமே முற்றிலுமாக அழிந்துவிட்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

Image Courtesy

#10

#10

டன் கணக்கில் இந்த பைசன் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டது. இப்படி வேட்டையாடப்பட்ட பைசன் எலும்புகள் பெரும்பாலும் சர்க்கரை ஆலைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெள்ளைச் சர்க்கரையின் பளீர் வெண்மை நிறத்திற்கு பைசன் எலும்புகளை சேர்த்திருக்கிறார்கள். அதற்காக பைசன் எலும்புகள் டன் கணக்கில் சர்க்கரை ஆலைகளில் கொள்முதல் செய்யப்பட்டது.

Image Courtesy

#11

#11

இந்த பைசன் தென் அமெரிக்க நாடுகளில் கனடாவிலிருந்து மெக்சிகோ வரை வாழ்ந்து வந்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் மனிதர்களை விட அதிக எண்ணிக்கையில் வாழ்ந்த ஒர் உயிரனம் என்றால் அது இந்த பைசன் தானாம்.

ஐரோப்பிய படையெடுப்பிற்கு முன்பு ஐம்பது மில்லியனுக்கும் மேற்பட்ட பைசன்கள் வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

Image Courtesy

#12

#12

அமெரிக்காவில் இருக்கக்கூடிய பைசன் தான் மனிதார்களால் வேட்டையாடி அழிக்கப்பட்ட முதல் விலங்கு என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் அந்த நினைப்பை பொய்யாக்கும் விதத்தில் இன்னொரு தகவலைச் சொல்கிறார்கள்.

பைசன் வகைகளிலேயே இருக்கக்கூடிய ஒரு வகை இனமான ப்ரிஸ்கஸ் ( priscus) என்ற ஓர் பாலூட்டி இனம் முற்றிலுமாக அழிந்திருக்கிறது.

Image Courtesy

 #13

#13

இந்த ப்ரிஸ்கஸ் இனம் அழிவதற்கு பருவ நிலை மாற்றங்கள் மற்றும் மனிதர்களின் இடப்பெயர்வு,உணவுப் பழக்கம் ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகிறது. அவற்றிலிருந்து வந்த ஓர் இனம் தான் இந்த பைசன். இவை அமெரிக்க பூர்வ குடிகளின் கலாச்சாரம் தொடர்புடைய விஷயங்களிலும் இடம் பிடித்திருக்கிறது.

அவர்களின் கொடி,அரசாங்க முத்திரை ஆகியவற்றில் கூட இந்த பைசன் இடம்பெற்றிருக்கிறது. இந்த அமெரிக்கன் பைசனைத் தான் ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் உண்மையான எருமை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Image Courtesy

#14

#14

துவக்கத்தில், இதனை வேட்டையாடிய துவங்கிய போது இப்போது இருப்பது போல துப்பாக்கியெல்லாம் அப்போது இருந்திருக்க வில்லை. அதன் குணம், செயல்பாடுகள் எல்லாம் அறிந்தவர்கள் மட்டுமே வேட்டையாட முடியும். இந்த பைசன் வேட்டையாட பல்வேறு நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டது அவற்றில் ஒன்று தான் நம்பிக்கை துரோகம்.

உடன் வந்து கொண்டிருக்கும் ஒரு நண்பர், தகுந்த சமயம் பார்த்து நம் கழுத்தை அறுத்துப் போட்டு நாம் கீழே சரிந்து ரத்தி பீய்ச்சி வெட்டித் துடிக்க அவர் நின்று ரசிக்கும் மிருகத்தனமான காட்சி எப்படியிருக்கும்.

Image Courtesy

#15

#15

எப்போதும் இவை கூட்டமாக இருக்கும். குறைந்தது ஐந்தாறு விலங்குகள் சேர்ந்தேயிருக்கும், மனிதனை விட பல மடங்கு வலிமை வாய்ந்தது. ஒவ்வொரு முறை வேட்டையாடுவதற்கு நூற்றுக்கணக்கான மனிதர்கள் செல்ல முடியுமா அதற்காக ஒரு திட்டம் தீட்டினார்கள்.

ஏற்கனவே வேட்டையாடப்பட்ட பைசனின் தோல் பிய்த்து எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அதை போர்த்திக் கொண்டு இரண்டு வேட்டைக்காரர்கள் கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாக்கிவிடுவார்கள் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ பைசன் கூட்டதோடே சுற்றுவார்கள். அதுவும் நம் இனம் தான் என்று தயக்கத்தை களைத்து பைசன் சகஜ நிலைக்கு வந்திருக்கும். அப்போது தக்க சமயம் பார்த்து பைசன் தோல் போர்த்திருந்த மனிதர்கள் அதன் கழுத்தில் குத்தி கீழே வீழ்த்துவார்கள். பின்னர் வேட்டையாட குதிரையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Tragic history about which Train has full of skulls

Tragic history about which Train has full of skulls
Story first published: Wednesday, January 24, 2018, 12:29 [IST]
Subscribe Newsletter