இந்த ஏழு ஊர்லயும் பாலியல் தொழில் படுஜோரா நடக்குதாம்...

Written By:
Subscribe to Boldsky

பாலியல் தொழில் என்பது மிகவும் மோசமான, இந்திய கலாசாரத்துக்கு எதிரான செயலாகப் பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்ட, பாலியல் தொழில் நடக்கும் இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

Top 7 red light areas in India you, quite a few of them in fact

அவற்றில் சில இடங்களில் இந்த பாலியல் தொழில் அங்கு வாழும் மக்களுக்கான பிரதான வருமானமாக இருக்கிறது. உலகின் பல்வேறு இடங்களைப் போலவே இந்தியாவிலும் பாலியல் தொழில் மூலம் மிகப்பெரும் வருமானம் ஈட்டும் இடங்களும் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சோனாகச்சி, கொல்கத்தா

சோனாகச்சி, கொல்கத்தா

சோனாகச்சியில் நீங்கள் திரும்பிப் பர்ர்த்தாலும் பாலியல் தொழிலாளிகளைச் சந்திக்க முடியும். சோனாக்கச்சிக்கு ஆசியாவின் மிகப்பெரிய ரெட் லைட் ஏரியா என்ற புகழும் உண்டு. இந்த பகுதியில் மட்டும் சுமார் 11,000 பாலியல் தொழிலாளிகளுக்கு மேல் வசித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் பெண் குழந்தை பிறக்கும்போதே பாலியல் தொழிலாளியாகப் பிறக்கும் கொடுமை காட்சியாக்கப்பட்டுள்ளது. இது வெறும் படம் மட்டுமல்ல.

 காமத்திப்புரம், மும்பை

காமத்திப்புரம், மும்பை

இந்தியாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதி எதுவென்றால் காமத்திப்புரம் தான். இங்கு வசிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் தொழில் மூலம் வரும் வருமானத்தில் அந்த பெண்கள் அப்பகுதியில் ஒரு பீடி சுற்றும் தொழில் நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். அதனடமூலம் அந்த பகுதியில் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கொடுத்து வருகிறார்கள். 1980-களில் ஹாஜி மஸ்தான், தாவூத் இப்ராகிம் ஆகிய இந்தியாவின் மிகப்பெரிய ரவுடிகளும் இந்த காமத்திப்புரத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்.

புத்வார், புணே

புத்வார், புணே

புத்வார் பகுதி முழுக்க எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகளும் புத்தகக் கடைகளும் நிறைந்திருக்கின்றனர். ஆனால் இங்கே ஒவ்வொரு கடைக்கும் முன்பாக, பல பொலியல் தொழிலாளிகள் நின்று வாடிக்கையாளர்களை அழைக்கும் காட்சியைப் பார்க்க முடியும். இந்தப் பகுதியில், ஏறக்குறைய 5000 பாலியல் தொழிலாளிகள் வசிக்கின்றனர். இந்த புத்வர் பகுதி தான் இந்தியாவில் உள்ள மூன்றாவது பெரிய சிவப்பு விளக்குப் பகுதியாகும்.

மீர்கஞ்ச், அலகாபாத்

மீர்கஞ்ச், அலகாபாத்

இந்த மீர்கஞ்ச் பகுதி சோனாகச்சியைப் போல வெளிப்படையாக பாலியல் தொழில் நடக்கும் இடம் கிடையாது. அப்படி சொல்லிக் கொண்டாலும்கூட, இங்கு பாலியல் தொழில் நடந்து கொண்டிருப்பது கிட்டதட்ட எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். இங்கு அங்கீகரிக்கப்படாத, சட்டத்துக்குப் புறம்பாக பாலியல் தொழில் செய்யப்படுகிறது. இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் சாலையில் போகும் ஆண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு அழைத்துச் செல்வதுண்டு. இந்த பகுதிக்கு செல்பவர்களுக்கு அழகான ஆபத்துகள் எப்போதும் காத்திக்கொண்டிருக்கும்.

 ஜி.பி. ரோடு, டெல்லி

ஜி.பி. ரோடு, டெல்லி

அந்த விஷயத்தில் டெல்லி மட்டும் விதிவிலக்கா என்ன! டெல்லியில் உள்ள ஜி.பி.ரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் பாலியல் தொழிலை மையமாகக் கொண்டே நடத்தப்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள பெரும்பான்மையான கட்டடங்களில், தரைத்தளத்தில் ஆட்டோமொபைல், செல்போன், ஸ்டேஷனரி, ஹார்வேர்ஸ் போன்ற கடைகள் இருக்கும். ஆனால் அந்த கட்டடங்களின் மேல்தளங்களில் பாலியல் தொழில் படு தீவிரமாக நடைபெறும். இருட்டியபின், இரவு நேரத்தில் யார் அந்த தெரு வழியே போனாலும் அதற்காகத்தான் போகிறார்கள் என்று அர்த்தமாம்.

இத்வாரி, நாக்பூர்

இத்வாரி, நாக்பூர்

நாக்பூரில் உள்ள இத்வாரி என்னும் இடம் பாலியல் தொழிலுக்கு மிகவும் பிரபலம். அந்த குறிப்பிட்ட இடத்துக்கென தனியே டிரேடு மார்க் பிராண்ட் நேம் இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கனேள். ஆம். பாலியல் தொழில் நடக்கும் அந்த குறிப்பிட்ட இடத்தின் பெயர் கங்கா ஜமுனா என்பதாகும். இங்கு வெறும் பாலியல் தொழில் மட்டுமல்லாது, வெட்டு, குத்து, கொலை என கிரிமினல் தொழில்களும் நடைபெறுகின்றன.

சிவதாஸபுரம், வாரணாசி

சிவதாஸபுரம், வாரணாசி

உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசி என்றாலே காசி ஓடுகிற புனித ஸ்தலம் என்பது தான் நமக்குத் தெரியும். ஆனால் அங்கு மிகப்பெரிய அளவில் வெளிப்படையாகவே பாலியல் தொழிலும் நடந்து வருகிறது. இந்த சிவதாஸபுரம் என்பது ஒரு கிராமப்பகுதி. இங்கு செல்ல வேண்டுமென்றால், அதிக அளவில் பணமெல்லாம் தேவையில்லை. இங்கு பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கென்று தனி இடமெல்லாம் கிடையாது. அவரவர் வாடிக்கையாளர்களை தங்கள் வீட்டுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்கள். அந்த பெண்களுடைய கணவன்மார்களு அவர்களுக்கு ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்கள். இப்படித்தான் இங்கு படுஜோராக இந்த தொழில் நடந்து கொண்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 7 red light areas in India you, quite a few of them in fact

prostitution is a sensitive topic. Indian sex workers are by and large in the business due to situations beyond their control.