Latest Updates
-
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தவெக மாநாடு வெற்றிக்கு பின் விஜய் - த்ரிஷா பற்றி பரவும் வதந்தி: ரசிகர்கள் ஏன் இப்படி முடிச்சுப் போடுறாங்க? -
உங்க இதயம் ஆபத்திலிருப்பதை வீட்டிலேயே கண்டறியும் 5 நொடி சோதனை - செஞ்சு பார்த்து உயிரை காப்பதிக்கோங்க
சூரிய பகவானின் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு இன்று கிடைக்கும்?
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின்
நம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும். சிலரோ அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள்.

சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம் தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம். எந்தெந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியும் பாராட்டுக்களும் புகழும் கிடைக்கப் போகின்றன என்று தெரிந்து கொள்வோம்.

மேஷம்
இன்று உங்களுடைய காதுகளுக்கு நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் மூலமாக, உங்களுக்கு அனுகூலமாக பலன்கள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகளினால் உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்கும். உங்களுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய உடல் சோர்வினால் செய்யும் பணிகளில் மந்தத்தன்மை உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். மனதுக்குள் ஒருவிதமான எண்ணங்கள் உண்டாகும். ஆன்மீக ஈடுபாட்டில் மனதைச் செலுத்துவது நல்லது. புதிய புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளைச் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இடர் நீலநிறமும் இருக்கும்.

மிதுனம்
சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்து வந்த கால தாமதங்கள் நீங்கும். உங்களுடைய வாழ்க்கையைப் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். நீங்கள் செய்கின்ற செயல்களில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்
பொதுப் பணிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். முழு தன்னம்பிக்கையுடன் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். உடன் பிறப்புகளுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்
உயர் அதிகாரிகளுடைய ஆதரவினால் சில பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு கல்வியில் கவனத்துடன் இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். அதனால் மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடைய உடல் நலத்தில் மேன்மை உண்டாகும். வாகனப் பயணங்களினால் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய மதிப்புகள் கூடும். புதிய வாடிக்கையாளர்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

துலாம்
வீட்டின் பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேற்றமான சூழலே காணப்படும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகிவிடும். பெரியோர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். புதிய வேலைக்கான முயற்சிகள் உங்களுக்கு எதிர்பார்த்த பலன்களைத் தரும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தருகிற எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

விருச்சிகம்
சமூக சேவை புரிகிறவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும் வாய்ப்புகள் உண்டாகும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வுகள் மேம்படும். உடன் பிறப்புகளிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணிகளில் தேவையில்லாத அலைச்சல்களும் அதனால் வீண் விரயங்களும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்சிவப்பு நிறமும் இருக்கும்.

தனுசு
எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் திருப்தியான சூழல்கள் உண்டாகும். செய்கின்ற தொழிலில் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் வந்து சேரும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே எண்ணங்களின் ஒற்றுமையினால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்
நிலுவையில் இருந்து வந்த பண வரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். புதிய முதலீடுகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வேளாண்மை சம்பந்தப்பட்ட தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். மனதில் உள்ள கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். திருமண வரன்கள் கைகூடி வரும். வாகன வசதிகள் மேம்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கும்பம்
உங்களுடைய வாக்கு வன்மையின் காரணமாக உங்களுக்கு பெரும் லாபம் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமையும் நெருக்கமும் அதிகரிக்கும். புதிய நபர்களுடைய ஆதரவினால் சுபிட்சம் பெருகும். தந்தையினுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீடு மற்றும் மனை விவகாரங்ளில் சின்ன சின்ன தடைகள் வந்து போகும். இன்று அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்
இசைக் கலைஞர்களுக்கு உங்களுடைய திறமைக்கேற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுக்கான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பயணங்களில் இருந்து வந்த தடைகளும் இன்னல்களும் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications