இன்னைக்கு கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் என்னென்ன தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

நம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும். சிலரோ அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம்.

ஜோதிடம்

12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மூத்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

 • அதிஷ்ட திசை - தெற்கு
 • அதிஷ்ட எண் - 5
 • அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை
ரிஷபம்

ரிஷபம்

தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். பொருள்சேர்க்கை உண்டாகும். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்திகள் ண்டாகும். ஞானத்தேடல் சம்பந்தமான ஆராய்ச்சி எண்ணிய முடிவைத் தரும். பணியில் மேன்மை உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - மேற்கு
 • அதிஷ்ட எண் - 2
 • அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்
மிதுனம்

மிதுனம்

சர்வதேச வாணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் புகழ் உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். பொருள்களைக் கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

 • அதிர்ஷ்ட திசை - வடக்கு
 • அதிஷ்ட எண் - 1
 • அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு
கடகம்

கடகம்

கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க கால தாமதமாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உறவினர்களினால் அலைச்சல்கள் உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - கிழக்கு
 • அதிஷ்ட எண் - 5
 • அதிர்ஷ்ட நிறம் - பச்சைநிறம்
சிம்மம்

சிம்மம்

உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - தெற்கு
 • அதிஷ்ட எண் - 6
 • அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை
கன்னி

கன்னி

பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு பாசன வசதியால் லாபம் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான நாள்.

 • அதிர்ஷ்ட திசை - மேற்கு
 • அதிஷ்ட எண் - 9
 • அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்
துலாம்

துலாம்

பூர்விக சொத்துக்களைக் கொண்டு புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

 • அதிர்ஷ்ட திசை - வடக்கு
 • அதிஷ்ட எண் - 3
 • அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்
விருச்சிகம்

விருச்சிகம்

குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். பேச்சுக்களால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் சிறப்படையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சுரங்கப் பணியாளர்கள் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

 • அதிர்ஷ்ட திசை - கிழக்கு
 • அதிஷ்ட எண் - 1
 • அதிர்ஷ்ட நிறம் - அடர் மஞ்சள்
தனுசு

தனுசு

வாக்குவாதத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - தெற்கு
 • அதிஷ்ட எண் - 1
 • அதிர்ஷ்ட நிறம் - இளம் ஆரஞ்சு
மகரம்

மகரம்

நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

 • அதிர்ஷ்ட திசை - மேற்கு
 • அதிஷ்ட எண் - 3
 • அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்
கும்பம்

கும்பம்

சபை தலைவராக வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். மனக்கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்களில் லாபம் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை

 • அதிர்ஷ்ட திசை - வடக்கு
 • அதிஷ்ட எண் - 9
 • அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு
மீனம்

மீனம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நல்லது. தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளினால் சுப விரயங்கள் உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - கிழக்கு
 • அதிஷ்ட எண் - 7
 • அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: zodiac ஜோதிடம்
English summary

today horoscope on 26.3.18

The twelve zodiac signs were divided up among the four elements as early as the Renaissance, with three signs associated with each element. However, early associations were by no means consistent. Different sources could provide wildly different groupings.