For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளுக்கு ஆதாரமாக திகழும் சில முக்கிய புகைப்படங்கள்!

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளுக்கு ஆதாரமாக திகழும் சில முக்கிய புகைப்படங்கள்!

|

வரலாற்று நிகழ்வுகள், சில பிரபலமான நிகழ்வுகள் குறித்து நாம் அதிகம் அறிந்திருப்போம். உதாரணமாக முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர் எப்போது நடந்தது என்று நாம் அறிவோம். அதன் தருணத்தில் உலகில் உண்டான மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் குறித்து நாம் அறிந்திருப்போம். ஆனால், அப்போது மக்கள் எத்தகைய வகையில் பாதிக்கப்பட்டனர் என்று நாம் அறிந்திருக்கவோ, அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று காண காணொளி எதுவுமே இல்லை.

அதே போல, எம்ஜிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் அந்த சிங்கம் கர்ஜிக்கும் லோகோ நம் அனைவருக்கும் பரிச்சயமான காணொளி பதிவு. ஆனால், அது எங்கே, எப்படி எடுத்தார்கள் என்று நாம் அறிந்ததில்லை. அதற்கு மாறாக அதைப்பற்றி உலாவும் பல போலியான படங்கள் மட்டுமே நாம் கண்டுள்ளோம்.

இப்படியாக பிரபலமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளுக்கு ஆதாரமாக திகழும் சில முக்கிய புகைப்படங்களை தான் இந்த தொகுப்பில் நாம் கானவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹிட்லரும் போஸும்!

ஹிட்லரும் போஸும்!

ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து போரிடவும், ஆதரவு நாடியும் போதுநேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்கள் ஹிட்லரை சந்தித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படம்.

Image Source: FACEBOOK/THOUGHTSHED

மாஸ்க்!

மாஸ்க்!

உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடுகுண்டுகளால் பல இடங்களில் விஷவாயு தாக்கம் ஏற்பட்டது. இதனால், மக்கள் பலரும் அந்த விஷவாயுவில் இருந்து தற்காத்து கொள்ள இதுப்போன்ற மாஸ்க் அணிந்து வாழ துவங்கினார்கள். லண்டனில் இந்த தாக்கம் மிகுதியாகவே இருந்தது.

பிரிட்டிஷ் படையில் இருந்து இந்தியர் ஒருவர் குதிரையை பாதுகாக்க அதற்கும் மாஸ்க் அணிவித்திக் கொண்டிருந்த போது எடுத்தப்படம்.

இந்தப்படம் 1939-1945க்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டாம் உலகப்போரின் போது எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது.

Image Source: FACEBOOK/INDIAN ARMY FANS

அஞ்சலி!

அஞ்சலி!

ஏறத்தாழ 650 போர் வீரர்கள், முதலாம் உலகப்போரின் போது களத்தில் போரிட்டு மடிந்த குதிரைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குதிரையின் கழுத்து வரையிலான தலை பகுதி போன்ற வைத்வாதில் நின்றனர். மேலும், இதன் மூலமாக முதலாம் உலகப்போரில் இறந்த விலங்குகள் அனைத்துக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்திருந்தனர்.

Image Source: FACEBOOK/HORSE.COM

எம்ஜிஎம் சிங்கம்!

எம்ஜிஎம் சிங்கம்!

டாம் அன்ட் ஜெர்ரி பார்க்கும் போது எபிசொட் துவங்குவதற்கு முன்னர் கர்ஜிக்கும் சிங்கம் ஒன்று தோன்றும். அதுதான் எம்ஜிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ. அப்போது கிராபிக்ஸ் பெரிதாக இல்லாத காரணத்தால், நிஜ சிங்கத்தை வைத்தே லோகோ காட்சியை படம் பிடித்தனர்.

இதோ! 1924ல் எம்ஜிஎம் லோகோ காட்சிக்காக ஷூட் செய்தப்போது எடுக்கப்பட்ட ஒரிஜினல் படம் இதுதான்.

Image Source: FACEBOOK/LYNDA SAJOVIC

மனித சதுரங்கம்!

மனித சதுரங்கம்!

பொதுவாக சிறிய அளவிலான போர்ட் ஒன்றை வைத்துக் கொண்டு செஸ் ஆடுவோம். ஆனால், 1924ல் மனிதர்களையும், குதிரைகளையும் கொண்டே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற பகுதியில் கருப்பு, வெள்ளை யூனிபார்ம் அணிந்து சதுரங்கம் விளையாடியுள்ளனர்.

இந்த போட்டியில் சோவியத் யூனியன் சிவாப்பு இராணுவ படையினர் கருப்பு அணியாகவும், சோவியத் யூனியன் கடற்படையினர் வெள்ளை அணியாகவும் பிரிந்து விளையாடினார்கள்.

Image Source: FACEBOOK/ HISTORYINPICTURES

இனவெறி!

இனவெறி!

டொரோத்தி கவுண்ட்ஸ் ஒரு கறுப்பின மாணவி. இவருக்கு 1957ல் வடக்கு கரோலினாவில் இருந்த ஹேரி ஹார்டிங் உயர்நிலை பள்ளியில் இடம் கிடைத்தது. ஆனால், இவர் சேர்ந்த நான்காவது நாளே இவரை பள்ளியில் இருந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டனர் இவரது பெற்றோர்.

இவர் கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதால் வெள்ளியினத்தை சேர்ந்த மாணவர்கள் மிகவும் வன்கொடுமைக்கு உட்படுத்தினார்கள் என்பதே இவரை பள்ளியில் இருந்து மீண்டும் அழைத்துக் கொண்டதற்கு காரணமாக இருந்தது.

Image Source: FACBOOK/DONI GLOVER

பிரியா விடை!

பிரியா விடை!

இரண்டாம் உலகப்போரின் போது, விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்தும், வணக்கமும் கூறும் ஜப்பானிய பெண்களும், இளைஞர்களும்.

Image Source: FACEBOOK/LEONIDAS ANTONAKOPOULOS

டைட்டானிக்!

டைட்டானிக்!

டைட்டானிக் கப்பலில் பயணித்து விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் அனுஷ்டிக்க புறப்பட்ட கப்பல்களில் இதுவும் ஒன்று. கடலிலேயே சமாதியான தங்கள் உறவினர்களை கடலில் இருந்தே வணங்கி இரங்கல் அனுஷ்டித்த உறவினர்களின் படம் தான் இது. இந்த படத்தில் இவர்களுடன் ஒரு பாதிரியாரும் இருப்பதை காணலாம்.

Image Source: Facebook/History Daily

அழகிய லைலா...

அழகிய லைலா...

அழகிய லைலா பாடலில் ரம்பாவின் அந்த ட்ரேட்மார்க் போஸ் உண்மையில் மர்லின் மன்றோவுடையது ஆகும். அந்த ட்ரேட்மார்க் காட்சியை படமாக்கும் போது எடுக்கப்பட்ட படமாக இது கருதப்படுகிறது. தனது உடையை காற்றுக்கு எதிர்புறமாக அழுத்திக் கொண்டு நிற்பவர் தான் மர்லின் மன்றோ.

Image Source: FACEBOOK/HISTORYINPICTURES

காந்தி!

காந்தி!

1939 ஜூலை மாதத்தில் காந்தி ஹிட்லருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், இன்று இந்த உலகில் நிலவி கொண்டிருக்கும் போரை நிறுத்த உங்களால் தான் முடியும். இதன் மூலம் மனித நேயத்தை நிலைநாட்ட முடியும்" என போர் நிறுத்தம் கோரி காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதம்.

Image Source: FACEBOOK/DAVID HIRSH

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Stunning Photos Should Feature in Historical Textbooks!

These Stunning Photos Should Feature in Historical Textbooks!
Desktop Bottom Promotion