Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
ஒரு நிமிஷம் தலை சுற்ற வைக்கும் கோக்குமாக்கான 10 புகைப்படங்கள்!
ஒரு நிமிஷம் தலை சுற்ற வைக்கும் கோக்குமாக்கான 10 புகைப்படங்கள்!
சில விஷயங்கள் எல்லாம் நம்ம வாழ்க்கையில ஏன் நடக்குது, எதுக்கு நடக்குதுன்னு நமக்கும் தெரியாது, நம்மள சுத்தி இருக்கவங்களுக்கும் தெரியாது. ஆனா, தமிழ் நாட்டுல புது கட்சிகள் துவங்கிறது போல, அது பாட்டுக்கு நடந்துட்டு இருக்கும்.

நாம ஒழுங்கா தான் கார் ஓட்டிட்டு போயிட்டு இருப்போம், குடிச்சுட்டு ராங்வேல வந்து நம்ம கார்ல விழுந்து மண்டைய போட்டுருவாங்க. அப்பறம் கோர்ட்டு கேஸுன்னு நாம அலையணும், அவங்க நிம்மதியா சொர்கமோ, நரகமோ போயிடுவாங்க. இப்படி, ஏண்டா கடவுளேன்னு நாம தலைய பிச்சிக்கிற மாதிரி சில விஷயங்கள் கோக்குமாக்கா நடக்கும்.
கிட்டத்தட்ட இந்த போட்டோஸ் கூட அப்படி தான், என்ன நடக்குது, ஏன் நடந்தது, எப்படி நடந்துச்சுன்னு எல்லாம் தெரியாது... இன்னும் சொல்லப் போனா இத எல்லாம் ஏன் போட்டோ எடுத்தாங்கன்னு கூட தெரியாது....

முரட்டு சிங்கிள் 1!
ரொமாண்டிக் டின்னர்க்கு முரட்டு சிங்கிள் கிளம்பின போது எடுக்கப்பட்ட 'புகை'ப்படம்.
சிங்கிள்ல ரெண்டு வகை... காதலிக்க பொண்ணு கிடக்காம சிங்கிளா இருக்கிறது... காதலிக்கவே வேண்டாம்ன்னு சிங்கிளா இருக்கிறது. இதுல ரெண்டாவது வகை தான் ஒரிஜினல் சிங்கிள். முதலாவது ஃபேக் சிங்கிள்.
Image credits: collegehumor.com

மப்பு, மாப்பு!
பிரெண்ட் 1: இதுக்கு தான் ஓவரா சரக்கு அடிச்சுட்டு ஆடக் கூடாதுன்னு சொல்றது... இப்ப பாரு உள்ள போனது மொத்தமும் வெளிய வந்திடுச்சு...
பிரெண்ட் 2: நான் ஆம்லேட் போட்டது இருக்கட்டும், பின்னாடி இருந்து ஒருத்தன் உன் மானம் போறமாதிரி போட்டோ எடுத்துட்டு இருக்கான், அவன போய் பிடி முதல்ல...

கோடை காலம்!
உலகத்துலேயே எது பெரிய சுகம் கேட்டா... ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னு சொல்வாங்க... ஆனா, நல்ல வெயில் காலத்துல... தண்ணித் தொட்டிக்குள்ள நேரம் போறது தெரியாம மிதக்கிறது இருக்கே... அடடா... அதுதாம்பா உலகத்துலேயே பெரிய சுகம்!
Image credits: onlyhdwallpapers.com

டோன்ட் வொரி!
டோன்ட் வொரி மச்சி! அது பொம்மை புலி தான்.
பொம்மை புலி வேடமிட்ட நபரை நால்வர் தூக்கி செல்வதை கண்டு, தன் இனத்தவனை எவனோ வேட்டையாடிட்டான் போலன்னு... வருந்தி பார்க்கும் நிஜ புலி. புலிக்கு இருக்க ஒரு உணர்வு கூட மக்களுக்கு இல்லாம போச்சுங்கிறது தான் காலக் கொடுமை.

அங்கே என்ன தெரிகிறது?
அடேய்களா! அப்படி அங்க என்ன தெரிகிறது...அவன் தான் வெக்கம் இல்லாம பாக்குறான்... நீயுமா தாயி அங்கேயே ரசிச்சு பார்த்திட்டு இருக்க. அது ஒன்னும் அவ்வளவு ரம்மியமான, அழகு ததும்பும் இடம் இல்லையே? அப்படி என்னத்த உத்து பாக்குறாங்கன்னு தெரியலையே.

கடவுளே! கடவுளே!!
நான் என் பாட்டுக்கே கொட்டுற மழையில குளிச்சிருப்பேன். என்ன கூட்டியாந்து குளிப்பாட்டுறேன்... கண்டத பார்க்க வெச்சுட்டான் படுபாவி. டேய் நான் ஆம்பள பூனை டா... இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல விட்டுடு ப்ளீஸ்!

ரவுசு!
காலம் போன காலத்துல தாத்தா.. பாட்டிக்கு ரவுசு பாருங்க மக்களே! என்ன தான் இருந்தாலும், நம்ம பஞ்சுமிட்டாய் தாத்தாவுக்கு ரொம்ப தான் கெத்து... கோர்ட்டு சூட்டு போட்டுக்கிட்டு குதிரை சவாரி பன்றாப்புல....!

தண்ணித்தொட்டி!?
தம்பி... நீங்க ஃபுல் மப்புல உடம்பெல்லாம் கலர் பூசிட்டு தண்ணித்தொட்டின்னு நெனச்சு உங்க வூட்டு கக்கூஸ்குள்ள டைவ் அடிச்சுட்டு இருக்கீங்க... மவனே... கீழ விழுந்தா... கைகால் தான் உடைஞ்சிடும்!

முரட்டு சிங்கிள் 2!
பொண்ணுங்கன்னு சொன்னாலே பிடிக்காது... கமிட்டட்னா அலர்ஜி ஆனா... லிப்லாக் ரொமான்ஸ் பண்றதுக்கு ஆசை.... என்ன பண்ணலாம். முரட்டு சிங்கிள் கண்டுபிடிச்ச செம்ம ஐடியா!
அய்யா சாமி முப்பது தொடுற வரைக்கும் கெத்தா முரட்டு சிங்கிள்னு சொல்லிக்கலாம். அதுக்கப்பறம் பொண்டு பொடுசுங்க எல்லாம் அங்கிள்னு கூபிடுமே... அப்பவும் முரட்டு சிங்கிள்னு கெத்தா சொல்லுவீங்களா?

உலகமே அழிஞ்சாலும்...
பின்னாடி ஒரு வண்டி மலாக்கா கவுந்து கிடக்கு. நாலஞ்சு போலீஸ்க்காரங்க தலைய பிச்சுட்டு யோசிச்சுட்டு இருக்காங்க. நம்ம பயபுள்ள நெஞ்சுல ரோஸ் குத்துட்டு கையில தையல் மெஷின வெச்சுட்டு சிரிச்ச முகமா போஸ் கொடுத்திட்டு இருக்காப்புல!



Click it and Unblock the Notifications