For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழையாய் கொட்டித் தீர்த்த இறைச்சித் துண்டுகள்! விசித்திர சம்பவம்

அமெரிக்காவின் கென்ட்டகி மாநிலத்தில் நிகழ்ந்த அதிசயமான இறைச்சி மழைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்.

|

பல ஆச்சரியங்களை கொண்டுள்ளது தான் இந்த இயற்கை. மனிதனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தருணங்களை எல்லாம் நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆலங்கட்டி மழை தான் பெரும் ஆச்சரியமாக இதுவரை பேசப்பட்டு வந்தது. வெளிநாடுகளில், அதிக குளிர் பிரதேசங்களில் தான் இது போன்ற ஆலங்கட்டி மழை பெய்யும் என்று சொல்லி ஆச்சரியமாக பேசியிருப்போம்.

தமிழ்நாட்டில் எப்போதாவது பெய்யும் மழையே அதிசயமாகிவிட்ட நாளில் ஆலங்கட்டி மழையா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை தான். ஆலங்கட்டி மழைக்கே இப்படி வியந்தால் எப்படி வரலாற்றில் நிகழ்ந்த சில மழை அதிசயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக இன்று வரை மர்மமாக இருக்கும் கறி மழையைப் பற்றி....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஆம் நீங்கள் படித்தது சரி தான். அது கறி மழை தான். வானத்திலிருந்து இறைச்சித் துண்டுகள் கொட்டியிருக்கிறது. இந்த சம்பவம் நிகழ்ந்தது 1876 ஆம் ஆண்டு கென்ட்டகி என்ற மாநிலத்தில் நிகழ்ந்திருக்கிறது. வரலாற்றில் இதனை கென்ட்டகி இறைச்சி மழை என்றே அழைக்கிறார்கள்.

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இந்த மாநிலம் அமைந்திருக்கிறது.

Image Courtesy

#2

#2

1876 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு நாள் காலையில் திடீரென்று வாசலில், கூரையில் பொத்... பொத்தென்று ஏதே விழும் சத்தம் கேட்டது. முதலில் ஆலங்கட்டி மழையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டார்கள். ஐஸ்கட்டி விழுந்ததென்றால் அந்த சத்தம் இப்படியிருக்காதே சற்றே சந்தேகத்துடன் வெளியில் வந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.

சாலை முழுக்க இறைச்சித் துண்டுகள் கிடந்திருக்கிறது.

Image Courtesy

#3

#3

முதலில் அது என்னவென்றே மக்களுக்கு தெரியவில்லை. அந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண்மணி கூறுகையில் அப்போது பதினோறு மணியிருக்கும் என் வீட்டு முற்றத்திலிருந்து வெளியே வந்தேன். பார்த்தால் சாலை முழுக்க இறைச்சித் துண்டுகளாய் கிடந்தது. மழை மேகமும் இல்லை, வானம் பார்க்க தெளிவாக இருந்தது அப்போது தெற்கு பக்கத்திலிருந்து வானத்தில் ஒரு சத்தம் இடிச்சத்தம் போல கேட்டது. பார்த்தால் சிகப்பு நிற ஒளிச்சம் ஒன்று மின்னி மறைந்தது.

அந்த சத்தம் கேட்ட சிறிது நேரத்திலேயே இந்த இறைச்சி வானத்திலிருந்து விழ ஆரம்பித்து விட்டது. அப்போது சூரியனும் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது.

Image Courtesy

#4

#4

அதே ஊரில் இருந்த இன்னொருவர் கூறுகையில், வித்யாசமான சத்தம் கேட்டதுமே வாசலுக்கு வந்தேன். பார்த்தால் தரை முழுவதும் சிகப்புத் துண்டுகள் போல ஏதோ கிடந்தது. ஆலங்கட்டி மழை என்றாலும் வெள்ளையாகத்தானே இருக்கும் என்று நினைத்து எடுத்துப் பார்க்கலாம் என்று யோசித்தேன்.

மூன்று இன்ச் அளவிற்கு கிடந்தது. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கும் மேலாக இந்த மழை நீடித்தது.

Image Courtesy

#5

#5

வீட்டிலிருந்து ஒவ்வொருவராய் எட்டிப் பார்த்து அது இறைச்சி, மேலிருந்து யாரோ போடுகிறார்கள் என்று கத்தினார்கள். ஆனால் ஐந்து நிமிடத்தையும் கடந்து தொடர்ந்து விழுந்து கொண்டேயிருப்பதைப் பார்த்து இது மனிதர்கள் யாரும் செய்யவில்லை வானத்திலிருந்து தான் கொட்டுகிறது என்று நம்பினோம். அதோடு குறிப்பிட்ட பகுதி என்றல்லாமல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இந்த இறைச்சித் துண்டுகள் கிடந்ததால் வானத்திலிருந்து தான் விழுந்ததாக நம்பினோம்.

பிணந்திண்ணி கழுகுகள் சாப்பிட்டு போட்ட எச்சமாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

Image Courtesy

 #6

#6

இது ஒரு அதிசயமான நிகழ்வு என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இது அபசகுணம், உலகம் அழிவதற்கான ஓர் அறிகுறி என்று எல்லாம் பேச ஆரம்பித்தார்கள். அருகில் சென்று அதை எடுத்துப் பார்ப்பதற்கு கூட எங்களுக்கு பயம்.

100 மீட்டர் நீளமும் 50 மீட்டர் அகலமும் கொண்டிருந்த அந்த சாலை முழுவதும் கிட்டத்தட்ட வானத்திலிருந்து விழுந்த கறித்துண்டுகளால் நிறைந்து விட்டது.

Image Courtesy

#7

#7

சாலை மட்டுமல்ல, வேலி, மரம், வீட்டின் கூரை,வயல்வெளிகள்,வாகனங்கள் என எல்லாவற்றின் மேலேயும் கிடந்தது. கறித்துண்டுகள் மழையாக பெய்ய வாய்ப்பே இல்லை இதில் வேறு எதோ விஷயம் இருக்கிறது என்று மெல்ல அதை எடுத்துப் பார்த்தால் தொடும் போதும் கல்லைப் போல கடினமாக இல்லை கறித்துண்டினைப் போல நன்றாக அமுக்க முடிந்தது.

முகர்ந்து பார்த்தோம். அது பீஃப் என்றார்கள் சிலர். ஆமாம் என்றும் இல்லையென்றும் வாதம் போய்க் கொண்டிருந்தது. ஆனால் பார்க்க அதே நிறம் லேசாக அதே வாடை கூட இருந்தது.

Image Courtesy

#8

#8

எங்கள் பகுதியில் வசித்த ஓர் வேட்டைக்காரர் இல்லை இது பீஃப் கிடையாது இது கரடியின் மாமிசம் என்றார். நீண்ட நேரம் இந்த விவாதம் போய்க் கொண்டிருந்தது. அதனை தொடவே பலரும் பயந்து கொண்டிருந்தார்கள். இந்ந்த நேரத்தில் ஒரு சிலர் தைரியமாக அந்த கறித்துண்டுகளை எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில் போட்டுக் கொண்டு டவுனில் உள்ள ஆராய்ச்சி கூடத்திற்கு கொண்டு சென்றார்கள்.

நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இங்கே இருந்த ஒருவர் அதை சாப்பிட்டு பார்த்தார்.

Image Courtesy

#9

#9

ஒரு கடி கடித்தவர், இல்லை இது கறி கிடையாது என்று உறுதியாக சொன்னார். அவரைச் சுற்றியிருந்த எல்லாரும் எப்படி இருக்கிறது. இது என்ன கறி? இதை நாம் சாப்பிட்டிருக்கிறோமா? உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள். அவர் ஒரேயொரு கடி தான் கடித்தார் என்பதால் அவர் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நினைக்கிறேன்.

பின்னர் அவர், இல்லை இது கறி கிடையாது. கறியின் சுவை இல்லை என்றார் திட்டவட்டமாக.

Image Courtesy

#10

#10

அதற்குள் விஷயம் பக்கத்து ஊர்களுக்கு எல்லாம் பரவியிருந்தது. கூட்டம் கூட்டமாக அதிகாரிகள் மற்றும் மக்கள் எல்லாம் வந்தார்கள். சிலர் வானத்திலிருந்து வந்த துண்டுகளை எடுத்துச் சென்றார்கள். அதிகாரிகள் எங்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

ஆராய்ச்சிக்காக அவர்களும் நிறைய துண்டுகளை எடுத்துச் சென்றார்கள். அவை பல ஆராய்ச்சி கூடங்களுக்கு அனுப்பப்பட்டது.

Image Courtesy

#11

#11

ஆராய்ச்சி குறித்த தகவல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலாய் வெளிவந்து கொண்டிருந்தது. எங்கள் எல்லாருக்கும் அது என்ன? ஏன் திடீரென்று எங்கள் ஊரில் இந்த மழை? எங்கிருந்து வந்தது என தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வலாய் இருந்தோம்.

ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். இது நிச்சயமாக கறித்துண்டுகள் இல்லை. இது வேறு எதோ ஒரு பொருள் என்றார்கள். அதன் பிறகு ஒரேயொரு ஆராய்ச்சியாளர் இது விண்கற்களாக இருக்கலாம் என்றார்.

Image Courtesy

#12

#12

அது என்ன விண்கற்கள்? கல் என்றால் இவ்வளவு சாஃப்ட்டாக இருக்குமா என்று எங்களுக்கு எதுவும் புரியவில்லை. அதன் பிறகு எங்களிடம் பேசிய ஆராய்ச்சியாளர் கூறுகையில், சூரியனைச் சுற்றி விண்கற்கள் சுற்றிக் கொண்டேயிருக்கும். அவை பூமியின் புவியூர்ப்பு விசையினால் பூமிக்கு அருகில் ஈர்க்ப்பட்டு பூமியைச் சுற்றிலும் சுற்ற ஆரம்பிக்கும். சில நேரங்களில் அவை பூமியால் ஈர்க்கப்பட்டு இப்படி விழவும் வாய்ப்புண்டு.

சூரியன் அருகில் சுற்றும் போது அதிக டெம்ப்பரேச்சரினால் கல்லாக இருப்பவை உருக ஆரம்பிக்கும். அதனாலும் எடை குறைந்து பூமியால் ஈர்க்கப்படுகிறது என்று விளக்கம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு இது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Surprising Meat Rain in Kentucky

Surprising Meat Rain in Kentucky
Story first published: Friday, June 22, 2018, 12:11 [IST]
Desktop Bottom Promotion