For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலாம் உலகப்போர் நடைப்பெற்ற இடங்கள் 100 ஆண்டுகள் கழித்து எப்படியிருக்கிறது ?

முதலாம் உலகப்போர் நடந்து முடிந்து நூற்றாண்டுகள் கழித்து அதன் தாக்கங்கள் எப்படியிருக்கிறது என்பதை புகைப்படங்கள் வழியாக கடத்தலாம்.

|

உலக யுத்தம். முதலாம் உலகப் போர் வரலாற்றில் இன்றுவரை நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓர் நிகழ்வாக இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு தன் நூற்றாண்டு தினம் அனுசரிக்கப்பட்டது.

எங்கோ அவசரத்தில் உங்களது அத்தியாவசிய பொருளை எங்கோ வைத்து விட்டு தேடி சலித்து நொந்து போய் இருக்கும் போது திடீரென்று அந்தப் பொருள் கிடைத்தால் எப்படியிருக்கும். தொலைந்த பொருள் ஒரு மாதமோ, ஒரு வருஷமோ திரும்ப கிடைக்கலாம். ஆனால் இங்கே சில பொருட்கள் 100 ஆண்டுகள் கழித்து கிடைத்திருக்கிறது.

ஆம், முதலாம் உலகப் போர் முடிந்த நூற்றாண்டினை கடந்து வந்திருக்கும் நிலையில் அப்போது வீசப்பட்ட குண்டுகள், அப்போது பயன்படுத்த தளவாடங்கள் கிடைத்தால் எப்படியிருக்கும்? அதோடு, அன்று வீரர்கள் போரிட்ட களம் இன்று எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கனடாவைச் சேர்ந்த படைவீரர்கள் 1915 ஆம் ஆண்டு நடைப்பெற்ற முதலாம் உலகப் போரில் விஷ வாயு செலுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் நினைவாக இந்த அடைகாக்கும் ரானுவ வீரரின் சிலை பெல்ஜியத்தில் நிறுவப்பட்டது.

2014 ஆம் எடுக்கப்பட்ட அந்த நினைவுச் சின்னத்தின் நிலை தான் இது.

#2

#2

இங்கே ஓய்வாக ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தில் இன்றளவும் வெடிகுண்டுகள் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. முதலாம் உலகப்போரின் போது இந்த இடத்தை ஆயுதக்கிடங்காக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

#3

#3

பச்சை போர்வை போர்த்தியது ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த இடத்தில் தான் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உச்சக்கட்ட யுத்தம் நடந்திருக்கிறது. இன்று வரையிலும் ஆங்காங்கெ செல்களின் எச்சங்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறதாம்.

#4

#4

முதலாம் உலகப் போரின் போர்க்களமான சோமீ என்னும் இடத்தில் 2014 ஆம் ஆண்டு வெடிகுண்டு மீட்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட குண்டு. இவை முதலாம் உலகப் போரின் போது வீசப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

இப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் டன் கணக்கில் உலோகத் துண்டுகள்,கையெறி குண்டுகள்,குண்டுகள்,ஆகியவற்றை எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

#5

#5

இந்த சிற்பத்தை வடிவமைத்தவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கலைஞர் கேதி கோல்விட்ஸ். இரங்கல் தெரிவிக்கும் பெற்றோர் என்ற முறையில் தாயும் தந்தையும் இறப்பிற்கு வருந்துவதாக இந்த சிலை இருக்கிறது.

வல்டஸ்லோ என்ற இந்த கல்லறை தோட்டத்தில் முதலாம் உலகப்போரில் உயிரிழந்த இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட படைவீரர்களின் உடல்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

இச்சிலையை உருவாக்கிய கலைஞர் கேதியின் பதினெட்டு வயதான மகன் பீட்டரும் முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்டார். அவரது உடல் இந்த சிலைகளுக்கு முன்னால் புதைக்கப்பட தொடர்ந்து முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டது.

#6

#6

முதலாம் உலகப்போர் நடைப்பெற்ற யுத்த களத்திற்கு அருகில் இருந்த ஆற்றப்பகுதி தான் கேப்பி. அங்கிருந்து தண்ணீரில் மூழ்கி ஆற்றில் புதைந்திருந்த குண்டினை வெடிகுண்டு மீட்பு படையினர் மீட்டிருக்கிறார்கள்.

#7

#7

பொது சுகாதார போர் கல்லறைகள் குறித்து ஆராய்ச்சி செய்திடும் நபர் ஒருவர், கையில் ஒரு சின்னத்தை காட்டுகிறார். இலை வடிவத்தில் இருக்கும் இந்தச் சின்னம் கனடா நாட்டைச் சேர்ந்த படை வீரர்கள் தங்கள் சட்டையில் அணிந்திருப்பார்களாம்.

இது 2008 ஆம் ஆண்டு பிரான்சின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சான்கோர்ட் என்ற இடத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

#8

#8

முதலாம் உலகப்போரில் போரிட்ட பிரெஞ்ச் வீரர்கள் பயன்படுத்திய கடிகாரம். இந்த போரின் போது ஃப்ளூரி டிவண்ட் என்ற கிராமம் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து 26 படை வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன, அவர்களில் ஏழு பேர் படை வீரர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் வகையில் அவர்களின் சவக்குழியிலிருந்து சில பொருட்கள் கிடைத்திருக்கிறது. அவற்றில் ஒன்று தான் இந்த கடிகாரம்.

#9

#9

பிரிட்டிஷ் நாட்டினைச் சேர்ந்த மார்க் 4 என்ற பீரங்கி பிரான்ஸ் நாட்டிலுள்ள ஃபல்ஸ்க்யரிஸ் என்னும் இடத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் இதற்கு மேல் இதனைப் பயன்படுத்த முடியாது என்று சொல்லி 1917 ஆண்டு அப்படியே கைவிட்டுச் செல்ல அதற்கடுத்து வந்த ஜெர்மன் படையினர். இதனை அப்படியே நிலத்தில் புதைத்து,பதுங்கு குழிகளாக பயன்படுத்திக் கொண்டனர்.

#10

#10

பெல்ஜியத்தில் இருக்கும் ப்யூட்டை என்னும் இடத்தில் வளர்ந்திருக்கும் இந்த சிகப்பு பூக்கள் உலக வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடியது. ஆம், முதலாம் உலகப்போர் மிகவும் தீவிரமாக நடந்த யுத்தக்களம் இது.

இங்கே மனிதர்கள் கூட வசிக்க முடியாது என்று கருதப்பட்டு வந்த நிலத்தில், இனி இங்கே புல் பூண்டு கூட முளைக்காது என்று கருதப்பட்ட நிலத்தில் முதன் முறையாக மலர்ந்திருக்கும் பூ.

 #11

#11

பிரான்ஸ் நாட்டில் தொல்பொருள் ஆராய்சியாளர்களால் அராஸ் என்ற இடத்தில் படைவீரர்களின் எச்சங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரேயிடத்தில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் 1917 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதோடு இவர்கள் அணிந்திருக்கும் இந்த பூட்ஸ் அதனை ஊர்ஜிதப்படுத்துகிறது.

#12

#12

முதலாம் உலகப்போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் படைவீரரின் ஷூ இது. பெல்ஜியன் என்ற நகரத்திற்கு அருகில் யப்பர்ஸ் என்ற இடத்தில் இதனை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ராணுவ தளவாடங்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Stunning Photos of first world war after 100 years

Stunning Photos of first world war after 100 years
Story first published: Saturday, January 27, 2018, 14:58 [IST]
Desktop Bottom Promotion