ப்ரியா பிரகாஷ் வாரியர் இடம்பெற்ற பாடல்ல இத நோட் பண்ணீங்களா!

Posted By:
Subscribe to Boldsky
ப்ரியா பிரகாஷ் வாரியரின் பாடலின் பின்னணி இதுதான்..!!

சமீபத்திய இணையத்தின் எல்லா இடங்களிலும் பிரபலமாகி வருபவர் ப்ரியா பிரகாஷ் வாரியார். கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியிடப்பட்ட மாணிக்க பலராய பூவி என்ற பாடல் வெளியிடப்பட்டது. அதில் தன்னுடைய ரொம்பாண்ட்டிக் லுக்கினால் எக்கச்சக்கமான ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டார் ப்ரியா. தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ப்ரியா ஓவர் நைட்டில் வேர்ல்டு ஃபேமஸ் ஆகிவிட்டிருக்கிறார் என்றே தான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து காதலர் தினத்தினை முன்னிட்டு அவர் நடித்திருக்கும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் ஒரு அதார் லவ் திரைப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியிடப்பட்டது. அதிலும் ஃப்ளையிங் கிஸ்ஸுக்கு புது அர்த்தம் கொடுத்து அசத்தியிருந்தார். அதுவும் இணையத்தில் பயங்கர வைரலானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரபலம் :

பிரபலம் :

பாலிவுட் பிரபலங்களான சன்னிலியோன், தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்களை எல்லாம் முந்தி கூகுளில் அதிகம் தேடப்படும் நபராக ப்ரியா பிரகாஷ் வாரியார் இருக்கிறார். அதோடு ஒரே நாளில் இவருடைய ட்விட்டர் பக்கத்தினை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை கடந்திருந்தது. அதே போல இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியிருக்கிறது.

முன்னிலை :

முன்னிலை :

கடந்தாண்டு ஜிமிக்கி கம்மல் பாடல் ட்ரெண்ட் ஆனது அந்த பாடலை இசையமைத்திருந்த ஷான் ரஹ்மான் தான் இந்த பாடலையும் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் கோ ஆர்டிஸ்ட்டாகத்தான் முதலில் சேர்ந்திருந்தார் ப்ரியா பிரகாஷ் வாரியார். ஆனால் மக்கள் மத்தியில் அவருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பினை பார்த்து திரைப்படத்தின் முன்னணி கதாப்பாத்திரைத்தை கொடுத்திருக்கிறார்களாம்!

சர்ச்சை :

சர்ச்சை :

எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே சர்ச்சை வெடித்திருக்கிறது. ஆம், ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு எதிராக ஹைதிராபாத்தில் ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஃபரூக் நகரைச் சேர்ந்தவர்கள் ப்ரியா பிரகாஷ் வாரியார் இடம்பெற்ற அந்த பாடல் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

பாடல் இயற்றியது :

பாடல் இயற்றியது :

ப்ரியா பிரகாஷ் வாரியர் இடம்பெற்ற ஒரு அதார் லவ் திரைப்படத்தின் மாணிக்கய மலராய பூவி பாடல் புதிதாக எழுதப்பட்ட பாடல் அல்ல ஏற்கனவே எழுதிய பாடலை மீளுருவாக்கம் செய்திருக்கிறார்கள்.

இதனை பி எம் ஏ ஜபார் என்பவர் 90களில் எழுதியிருக்கிறார்.

பாடலில் :

பாடலில் :

இந்த பாடல் இஸ்லாமியர்கள் வணங்கக்கூடிய முகமதின் முதல் மனைவி கதீஜா பீவியைப் பற்றி விவரிக்கிறது. இதன் ஒரிஜினல் வெர்ஷன் கூட அன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாகியிருக்கிறது.

இதே பாடலை பல்வேறு வெர்ஷன்களில் பாடி யூடியூபில் பதிவேற்ற எல்லாமே ஹிட் கொடுத்திருக்கிறது.

Image Courtesy

மாப்பிள பாட்டு :

மாப்பிள பாட்டு :

இந்த வகை பாடலினை மாப்பிள பாட்டு என்று சொல்கிறார்கள். பொதுவாக இது இஸ்லாமியர்களின் பாரம்பரிய பாடல் முறை கேரளாவின் வடக்குப் பகுதியில் வாழக்கூடிய இஸ்லாமியர்கள் மத்தியில் புழங்கக்கூடிய மொழி இது!

இவர்கள் மலையாளத்துடன் அரபி,உருது, தமிழ்,ஹிந்தி வார்த்தைகளை கலந்து பேசுவர்.

Image Courtesy

பாடப்படும் இடம் :

பாடப்படும் இடம் :

இந்தப் பாடலை மிகவும் பாரம்பரியமிக்க கலாச்சார நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் போன்ற இடங்களில் அதிகம் பாடப்பட்டிருக்கிறது. கேரளாவின் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்தப் பாடல் அதிகம் இடம் பிடித்திருக்கிறது.

பாடலை இயற்றியவர் :

பாடலை இயற்றியவர் :

இவ்வளவு புகழ்மிக்க பாடலை இயற்றிய ஜாபர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள சிறிய கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த பாடலை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் எழுதியது என்று ஜாபர் கூறியிருக்கிறார். அப்போது அவருக்கு வயது வெறும் இருபது தானாம்.

ஜாபரைப் பற்றி :

ஜாபரைப் பற்றி :

தொடர்ந்து ஐநூறுக்கும் மேற்ப்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் ஜாபர் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்.1992 ஆம் ஆண்டு வெளியான இசை ஆல்பத்தில் தான் மாணிக்க மலராய பூவி என்ற இந்த பாடல் முதன் முதலில் இடம்பெற்றிருக்கிறது.

மகிழ்ச்சி :

மகிழ்ச்சி :

படத் தயாரிப்பாளர்களால் கடந்த சில மாதங்களுக்கு பின் இந்த பாடல் தேர்வு செய்யப்பட்டு மலையாள பின்ணனிப் பாடகரான வினித் ஸ்ரீனிவாசன் என்பவரின் குரலில் வெளி வந்திருக்கும் இந்தப் பாடலை இன்றும் ரசிகர்கள் விரும்புவது மகிழ்ச்சிக்குரியது என்கிறார் ஜாபர்.

Image Courtesy

வெற்றிக்கூட்டணி :

வெற்றிக்கூட்டணி :

இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைப்பில் ஏற்கனவே வைரலான ஜிம்மிக்கி கம்மல் பாடலை பாடியதும் இதே வினித் தான். இந்த பாடலை முதலில் இசையமைத்தது தலசேரி கே ரஃபீக்.

கல்லூரி விழா மேடையில் நான்கைந்து மாணவர்கள் சேர்ந்து ஒரு பாடலை பாடுகிறார்கள் என்று மட்டும் சீன் சொல்ல இந்தப் பாடலை தேர்ந்தெடுத்திருக்கிறார் ஷான்.

யார் பாடணும் :

யார் பாடணும் :

ஜிம்மிக்கி கம்மல் வெற்றியைத் தொடர்ந்து தான் இசைக்கப்போகிற அடுத்தப்பாடலான மாணிக்க மலராய பூவி பாடலுக்கு வினித்தை அழைக்கலாம் என்று திட்டமிட்டு இயக்குநரிடம் தெரிவிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம்.

நீங்கள் சொன்ன சீனில் கல்லூரி மேடையில் மாணவர்கள் மாணிக்க மலராய பூவி பாடலை பாடுவது போல கொண்டு வரலாம் என்று சொல்ல உடனே அப்போ இந்த பாடலை வினித் பாடட்டும் என்று இயக்குநர் ஒமர் லுலு சொல்லியிருக்கிறார்

ஏன் வினித் :

ஏன் வினித் :

வினித் ஏற்கனவே பலமுறை இந்த மாப்பிள பாட்டு பாடியிருக்கிறார். இவர் முதன் முதலில் பாடியது ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கிலிச்சுண்டன் மாம்பழம் என்ற திரைப்படத்தில் காசாவிண்டே தட்டமிட்டு என்ற ஒரு மாப்பிள பாட்டு தான். அது மிகப்பெரிய ஹிட் ஆனது. அதன் பிறகு க்ளாஸ்மேட்ஸ் திரைப்படத்தின் எண்டே க்ஹால்பைல்.... என்ற பாடல் அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்.

ரீமிக்ஸ் :

ரீமிக்ஸ் :

அதோடு பல்வேறு மேடைகளிலும் வினித் இந்த மாப்பிள பாடலினை பாடியிருக்கிறார். இதன் ஒரிஜினல் வெர்ஷன் இன்னும் வேகமாக இருக்குமாம்.ஆனால் அதனை தற்போது இசையமைப்பாளர் ஷான் மற்றும் இயக்குநர் ஒமர் ஆகியோரால் புதிதாக உருவாக்கப்பட்ட பாடலைப் போல வந்திருக்கிறது.

ஏற்கனவே மிகப்பிரபலமான பாடலான இதனை வழக்கமான பாடலுக்கு கொடுக்க வேண்டிய உழைப்பினை விட இரண்டு மடங்கு அதிக உழைப்பு கொடுத்து இசையமைக்க வேண்டியிருந்தது என்கிறார் ஷான்.

Image Courtesy

இது தான் டெக்னிக் :

இது தான் டெக்னிக் :

அதிகப்படியான இன்ஸ்ட்ரூமெண்ட் எதுவும் பயன்படுத்தாது பாடலின் டெம்ப்போவை குறைத்திருக்கிறார் . அதோடு இதில் வினித்தின் குரலே ஓங்கி உயர்ந்து தெரியவேண்டும் என்றும் சில டெக்னிக்களை கையாண்டிருக்கிறார்.

பின்னணியில் லைட் மியூசிக் மாப்பிள பாட்டுக்குரிய வழக்கமான துள்ளலை விட சற்றுக் குறைவு என்பதால் இது ஒரிஜினலின் ரீமிக்ஸ் என்று யாராலும் எளிதாக கண்டுபிடிக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Story About Viral Song Of Priya Prakash Varrier

Story About Viral Song Of Priya Prakash Varrier
Story first published: Thursday, February 15, 2018, 11:32 [IST]
Subscribe Newsletter