Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
ஆபத்தான தருணங்களில் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய திக் திக் நிமிடங்கள்!
புலிட்சர் விருது வென்ற கிஸ் ஆஃப் லைஃப் என்ற புகைப்படம் எடுக்கப்பட்ட நேரமும் அதற்கு பின்னால் நடந்திருக்கும் வரலாற்று உண்மையும்.
உதவுபவர்களை என்றும் நாம் மறக்கக்கூடாது என்று சொல்வார்கள் அது சின்ன உதவியாய் இருந்தாலும் சரி மிகப்பெரிய உதவியாய் இருந்தாலும் சரி தக்க சமயத்தில் நமக்கு கிடைக்கிற உதவிகளை என்றுமே நம்மால் மறக்க முடியாது. இங்கேயும் அப்படிப்பட்ட ஓர் உதவியைப் பற்றியும் உதவி செய்தவரும் அந்த உதவியை வாங்கியவர்களைப் பற்றிய ஓர் சுவாரஸ்யமான கதை தான் இது.
நீங்களும் உங்களுடைய நண்பரும், நண்பர் என்பதை விட அலுவலகத்தில் உடன் பணியாற்றும் நண்பருடன் வாக்கிங் செல்கிறீர்கள். அப்போது திடீரென்று நண்பர் மயங்கிவிழுந்து விட்டார் எவ்வளவு நேரம் முயன்றும் அவரை எழுப்ப முடியவில்லை. உங்களுக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது இப்போது என்ன செய்வீர்கள்.

கரண்ட் :
மிகவும் சாதுர்யமாக கையாள வேண்டிய விஷயங்களில் கரண்ட்டுக்கு முக்கிய பங்கு உண்டு. அதிலும் கரண்ட் கம்பங்களில் பணியாற்றுவோர் இதில் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.கரண்ட் கம்பங்களில் ஏறுகிற லைன் மேன்கள் எல்லாரும் என்ன தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் அவர்களுக்குள் உள்ளே பயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.
மற்ற விஷயங்களைப் போல கரண்ட்டினை நாம் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

வேலை :
அவர்களுக்கு வேலை நுணுக்கங்களை தாண்டி சமயோஜித புத்தியும் ஆபத்தான காலங்களில் எப்படி தப்பிக்க வேண்டும் என்ற வேகமும் இருந்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். இதில் இவ்வளவு ஆபத்துக்கள் இருக்கிறது என்று தெரிந்தே எல்லாவற்றிற்கும் தயாராகி வருகின்றன.

கிஸ் ஆஃப் லைஃப் :
வழக்கமாக அன்றைய தினமும் லைன் மேன்கள் ஏறி கரண்ட் கம்பத்தில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒருவருக்கு எதிர்பாராதவிதமாக ஷாக் அடித்ததில் மூர்ச்சையாக தலைக்குப்புற விழுந்து விட்டார்.
அந்த நேரத்தில் அவரைக் காப்பாற்ற இன்னொரு லைன்மேன் ஓடிச் சென்று உயிரைக் மீட்டு கொண்டுவந்திருக்கிறார். இந்த தருணங்களை யதார்த்தமாக கீழேயிருந்து ஒரு புகைப்படக்காரர் புகைப்படமெடுக்க... இந்த படத்திற்கு புலிட்சர் விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

அந்த நாள் :
ஜூலை மாதம் 1967 ஆம் ஆண்டு, அன்றைய நாளும் வழக்கமான ஓர் நாளாகத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் அந்த நாளை வரலாறு தன்னுடையதாக்கிக் கொண்டு இன்றைக்கும் அந்த நாளை நினைவுகூற வைக்கிறது.
ரோக்கோ மொராபிட்டோ என்ற பத்திரிக்கையாளர் அந்த பகுதியில் நடக்கிற சாலை மறியலை கவர் செய்வதற்காக செல்கிறார்.

முதல் க்ளிக் :
தூரத்தில் மக்கள் போராட்டம் நடத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த கூட்டம் அப்படியே கடந்து செல்கிறது அவர்கள் பின்னாலேயே செல்லத் துணிகையில் மேலேயிருந்து ஒரு சத்தம். அது சத்தம் என்பதை விட ஒருவரின் அபாயக்குரல் என்று சொல்லலாம்.
மேலே பார்க்கிறார். ஒரு கரண்ட் கம்பத்தில் பெல்ட் கட்டிக் கொண்டபடி இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கிறார்.

உதவி... :
பார்த்ததுமே விபரீதம் அவருக்கு புரிந்து விட்டது. கையில் இருக்கும் கேமராவில் க்ளிக் செய்கிறார். தாம்சன் என்பவர் தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கும் ரேண்டலை எழுப்புகிறார். மூக்கில் கைவைத்து பார்த்து விட்டு மூச்சு இல்லை என்று சைகை செய்கிறார்.
கீழே நின்று கொண்டிருக்கும் ரோக்கோவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முதலில் ஆம்புலன்ஸை கூப்பிடலாம் என்று சொல்லி தன் கார் இருக்கும் இடத்திற்கு நகர்கையில் மீண்டும் ஒரு முறை மேலே பார்க்கிறார். அப்போது தான் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது.

உயிர் முக்கியம் :
மிக நெருக்கமாக இரண்டு கரண்ட் கம்பங்கள் இருக்கின்றன. இரண்டு கம்பங்களில் தாம்சன் ஒன்றிலும் ரேண்டல் ஒன்றிலும் ஏறியிருக்கிறார்கள். முதலில் ரேண்டல் மேலே கம்பி இருக்கும் இடத்திற்கு அருகில் சென்றுவிட்டார்.
அப்போது தான் ஷாக் அடித்து கீழே விழுந்திருக்கிறார். வயிற்றைச் சேர்த்து பெல்ட் கட்டியிருந்ததால் உடலின் மேல் பகுதி மட்டும் கீழ் நோக்கி தொங்கிக் கொண்டிருந்தது. உடல் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்ததால் தாம்சனால் சிபிஆர் எனப்படுகிற முதலுதவி சிகிச்சைகளை அளிக்க முடியவில்லை.

என் நண்பன் :
ரேண்டலுக்கு மூச்சு இல்லை என்று தெரிந்ததுமே சற்று கீழேயிருந்த தாம்சன் மேலே ஏறுகிறார். தலைக்குப்பற கவிழ்ந்து கிடக்கும் ரேண்டலின் தலையைத் தூக்கி தன் மார்போடு அணைத்துக் கொள்கிறாரர். தாம்சன் உணர்சிவசப்பட்டு அழுகிறார் என்பதையறிந்த அந்த புகைப்படக்காரர் முதலில் உடனடியாக ஆம்புலன்சை அழைக்க வேண்டும் என்று துடிக்கிறார்.
ஆனால் செல்போன்கள் பிரபலமாகாத அந்தக் காலத்தில் இங்கு நடக்கும் தகவலை உடனடியாக சேர்க்க முடியவில்லை.மீண்டும் அந்த கரண்ட் கம்பம் இருக்கும் இடத்திற்கே ஓடி வருகிறார்.

வரலாறு :
ரேண்டலை கழுத்தை அணைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்த தாம்சன் அப்படியே ரேண்டலுக்கு வாய்வழியாக காற்றைக் கொடுக்கிறார். சிபிஆர் எனப்படுகிற அவசர உதவி சிகிச்சையில் இதுவும் அடக்கம். சுமார் இரண்டு நிமிடங்கள் வரை தாம்சன் ரேண்டலுக்கு வாய்வழியாக மூச்சுக் காற்றை உள்ளே செலுத்த ரேண்டலுக்கு நினைவு திரும்புகிறது.
இந்த தருணங்களை எல்லாம் கீழே நின்று பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்பட பத்திரிக்கையாளர் தன் கேமராவில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.

விருது :
இரண்டு நிமிடங்களின் முடிவில் ரேண்டலுக்கு மூச்சுத் திரும்புகிறது. தாம்சன் கத்துகிறார் ரேண்டல் பிழைத்துக் கொண்டான் என்று கத்துகிறார். அதற்குள்ளாக கீழே மக்கள் கூட்டம் சேர்ந்திடுகிறது. ரேண்டலை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.
மறுநாள் கிஸ் ஆஃப் லைஃப் என்ற தலைப்பில் தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கும் ரேண்டலுக்கு தாம்சன் வாய்வழியாக காற்றை செலுத்தி உயிரைக் காப்பாற்ற போராடுகிற புகைப்படம் வெளியானது. உலகம் முழுக்க அந்த படம் வேகமாய் பரவியது. தக்க சமயத்தில் அந்த படத்தை எடுத்ததற்காக ரோக்கோவிற்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது, அதோடு பல்வேறு பாராட்டுக்களும் குவிந்தன.

மீண்டும் பணி :
பழைய நட்பை விட ரேண்டலும் தாம்சனும் இன்னும் நெருக்கமாகினர். இருவரும் மீண்டும் லைன்மேன் பணிக்கே செல்ல ஆரம்பித்தனர். 1991 ஆம் ஆண்டு ரேண்டல் ஓய்வுப் பெற்றார் 2002 ஆம் ஆண்டு தன்னுடைய 64வது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
1995 ஆம் ஆண்டு தாம்சன் பணியிலிருந்து ஒய்வுப்பெற்றார். அப்போதும் கூட அவரத சமயோஜித் புத்திக்காகவும் துரிதமான செயல்பாட்டினால் ஒர் உயிரை காப்பாற்றியதற்காக பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது.



Click it and Unblock the Notifications
