For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  செல்வந்தர்களையும் ஆங்கிலேய அரசையும் தனியொருவனாய் மிரட்டிய நபர்!

  By Aashika
  |

  காயம்குளம் கொச்சினி என்ற மலையாள திரைப்படம் ஆக்ஸ்ட் மாத இறுதியில் வெளியாகவிருக்கிறது. நிவின் பாலி, ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகவிறுக்கும் இந்த திரைப்படத்தில் மோகன்லால் ஒரு கௌரவ வேடத்திலும் இந்தப்படத்தில் நடிக்கிறார்.

  இது ஆரம்ப காலங்களில் கேரள மாநிலத்தில் நடைப்பெற்ற ஓர் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இதே பெயரில் 1966 ஆம் ஆண்டும் ஒரு திரைப்படம் மலையாளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் வாழ்ந்த ஒரு நபர் தான் கொச்சினி. அவரைப் பற்றியும் அவர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களைத் தான் இப்போது படிக்கப் போகிறீர்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  உதாரணம் :

  உதாரணம் :

  Image Courtesy

  இந்த காயம்குளம் கொச்சினியைப் பற்றி சொல்லும் போதெல்லாம் அவருக்கு உதாரணமாக உச்சரிக்கப்படும் பெயர் ராபின் ஹூட். இங்கிலாந்தின் ஆரம்ப காலங்களில் வாழ்ந்த இவர் பணக்காரர்களிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை திருடி ஏழைகளுக்கு வழங்குவார். அவர் பெயரில் குழந்தைகளுக்கான ஏராளமான கதைகள்,வீடியோ கேம்,திரைப்படம் ஆகியவை வந்திருக்கிறது.

  இந்த சம்பவம் பதினைந்தும் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னதாக நடந்திருக்கிறது. இவரைப் போலவே தான் கொச்சினியும் பணக்காரர்களிடமிருந்து திருடி ஏழை மக்களுக்கு வழங்கி வந்திருக்கிறார்.

  இவரை கேரளாவின் ராபின் ஹூட் என்றும் அழைக்கிறார்கள்.

  போராளி :

  போராளி :

  Image Courtesy

  போராளிகளை எப்போதும் ஓர் விரோதப் போக்கில் தான் பார்க்கப்படுகிறார்கள். அவருக்கு சாதி, மத,இன அடையாளங்கள் எதுவும் தேவையில்லை.அவர் போராளி என்ற ஒற்றை அடையாளமே போதும். மக்களுக்காக அவர்களின் உரிமைகளுக்காக போராடுகிறவர் தான் கொச்சினி. கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்தின் காயம்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர் கொச்சினி.

  இவரது குழந்தைப்பருவம் பெரும் கவலைகள் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இவரது தந்தை ஒரு திருடன். அதுவும் இவர்களது மோசமான வாழ்க்கைக்கு ஓர் காரணியாக இருந்தது. கொச்சினியை பள்ளிக்கு அனுப்பும் அளவிற்கு வீட்டில் வசதியில்லை என்பதால் பள்ளிப்படிப்பு இவருக்கு கிடைக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த பகுதியில் எந்த வேலையும் கிடைக்காததால் வேலை தேடி வயிற்றுப் பிழைப்புக்காக எவ்வூர் என்ற இடத்திற்கு வருகிறார்கள்.

  உதவி :

  உதவி :

  அங்கே பார்ப்பனர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் சிறுவனாக இருந்த கொச்சினிக்கு உதவுவதாக வாக்களித்தார். அதன் படி இஸ்லாமிய சிறுவனான கொச்சினியை அழைத்துக் கொண்டு ஒரு தானியம் மற்றும் பலசரப் பொருட்கள் விற்கும் கடைக்கு செல்கிறார். அந்த கடையின் ஓனரிடம் கொச்சினியை காண்பித்து இவனுக்கு ஒரு வேலை கொடுங்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்ல அந்த கடை ஒனரும் சம்மதித்து வேலை கொடுக்கிறார்.

  அங்கே விற்பனை ஆளாக பணிக்குச் சேந்தான் கொச்சினி. அவனது தீரா உழைப்பு கொச்சினியை உயர்ந்த பொறுப்பிற்கு கொண்டு வந்து நிறுத்தியது.

  உயிரைக் காப்பாற்றிய கொச்சினி :

  உயிரைக் காப்பாற்றிய கொச்சினி :

  Image Courtesy

  அந்தக் காலத்தில் மார்க்கெட்டிலிருந்து வேண்டிய சாமான்களை கொண்டு வர வேண்டும் என்றால் அப்போதிருந்த ஒரே போக்குவரத்து படகு மட்டுமே... படகில் ஏறிச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் படகில் திரும்புகையில் ஆற்றில் பயங்கர வெள்ளம் வந்துவிட்டது. படகில் இருந்த கொச்சினி மற்றும் அந்த கடையின் உரிமையாளர் ஒரு கணம் பயந்தே விட்டார்கள்.

  படகு மெல்ல மூழ்குவதை கண்ட அந்த உரிமையாளர் பயத்தில் கத்த ஆரம்பிக்கிறார். அப்போது கொச்சினி சாமர்த்தியமாக செயல்பட்டு படகை மீட்டு கரைக்கு கொண்டு வருகிறார். அன்றிலிருந்து அந்த கடை உரிமையாளரின் நன்மதிப்புக்கு ஆளாகி அவர் எங்கே சென்றாலும் உடன் செல்லும் அளவிற்கு வளர்ந்தான் கொச்சினி.

  களரி :

  களரி :

  சில காலங்களுக்கு பிறகு அந்த கிராமத்திற்கு ஓர் இஸ்லாமிய மத குரு வருகிறார். அவர் அந்த கிராமத்தில் ஒரு பள்ளியை ஆரம்பித்து அங்கே களரிப் பயிற்சி அளிக்கிறார். தானும் களறி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் அங்கே செல்ல, அந்த குரு கொச்சினிக்கு களரிப் பயிற்சி அளிக்க மறுத்துவிடுகிறார்.

  உன் தந்தை ஒரு திருடன், அதனால் நீயும் ஒரு திருடனாகவே இருப்பாய். ஒரு திருடனுக்கு நான் களரிப் பயிற்சி அளிக்கமாட்டேன் உனக்கு என் வகுப்பில் இடமில்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

  ஏகலைவன் :

  ஏகலைவன் :

  இதனால் ஏமாற்றமடைந்த கொச்சினி மனம் தளரவில்லை. மாறாக அந்த குரு மாணவர்களுக்கு களரிப் பயிற்சி அளிப்பதை ஒரு பெரிய மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டு கவனித்தான். அதனை தினமும் இரவில் தன் வீட்டிற்கு வந்து பயிற்சி செய்து பார்த்தான். தொடர்ந்து இப்படியே களரியை கற்றுக் கொண்டான்.

  சில மாதங்கள் கழித்து ஒரு முறை களரிப் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த கொச்சினியை அந்த பள்ளியின் மாணவர்கள் பார்த்துவிட்டார்கள். குரு இவனுக்கு களரிப் பயிற்சி அளிக்கமாட்டேன் என்று திரும்பி அனுப்பினாரே பின் எப்படி இவன் களரி பயிற்சி செய்கிறான் என்று அவனை பிடித்து குருவிடம் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

  பல கலைகள் :

  பல கலைகள் :

  மரத்திற்கு பின்னாலிருந்து ஒளிந்திருந்து தான் கற்றதை ஒப்புக் கொண்டான் கொச்சினி எங்கே நீ கற்றதை செய்து காண்பி என்று குரு கேட்க அவற்றை செய்து காண்பிக்க ஒளிந்து நின்று பார்த்தே இவ்வளவு தத்ரூபமாக கற்றுக் கொண்டானே என்கிற ஆச்சரியத்தில் கொச்சினியை பாராட்டி அவனுக்கு தானே கற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தார். களிரியைத் தாண்டியும் பல கலைகளில் தேர்ச்சிப் பெற்றான் கொச்சினி.

  ஒரு பக்கம் கலைகளை கற்ற கொச்சினி இன்னொரு பக்கம் கடையில் வேலை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் அவனை அழைத்த அந்த கடையின் உரிமையாளர். கடையில் தானியங்கள் தீர்ந்துவிட்டது. வீட்டில் ஸ்டாக் இருக்கும் அதைப் போய் எடுத்துவா என்று அனுப்பியிருக்கிறார்.

  ஓட்டம் :

  ஓட்டம் :

  கொச்சினி அந்த வீட்டிற்கு அடைந்த போது மிகப்பெரிய ஆளுயற கேட்டினால் பூட்டியிருந்தார்கள். சிறிதும் தயங்கவில்லை. சட்டென அவ்வளவு பெரிய கேட்டையும் தாண்டி உள்ளே சென்று தானிய மூட்டைகளை எடுத்துக் கொண்டு அதே போல ஏறிக்குதித்து வெளியே வந்துவிட்டான் கொச்சினி. இதைப் பார்த்த ஒருவர் உரிமையாளரிடம் சொல்ல, அதை உண்மையா என்று கொச்சினியிடம் கேட்டிருக்கிறார். கொச்சினியும் ஆமாம் என்று ஒப்புக் கொண்டான்.

  உண்மையை ஒப்புக் கொண்டதற்காக கொச்சினியின் சம்பள பணத்தை விட அதிகமான பணத்தை பரிசாக கொடுத்தார். அதே நேரத்தில் நீ வேலையிலிருந்து நின்று கொள் இனி வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

  திருமணம் :

  திருமணம் :

  அதன் பிறகு தன் ஊருக்கு திரும்பிய கொச்சினி திருமணம் செய்து கொண்டான். அங்கே திருடி அந்த பொருட்களைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டி வந்தான். ஆனால் ஒரு போதும் ஏழைகளிடத்தில் அவன் கைவரிசையை காட்டியதேயில்லை.

  தனக்கு அல்லது யாருக்கேனும் பணத்தேவை என்றால் செல்வந்தர்களிடம் போய் கேட்பான். அவர்கள் கொடுத்துவிட்டால் தப்பித்தார்கள். இல்லையென்றால் அன்றைய இரவு அவர்கள் வீட்டில் கொச்சினி கைவரிசையை காட்டியிருப்பான்.

  திருட்டு :

  திருட்டு :

  இரவோடு இரவாக செல்வந்தரின் வீட்டிற்குள் புகுந்து அவ்வீட்டிலிருக்கும் எல்லா செல்வத்தையும் திருடிக் கொண்டு வந்துவிடுவான். திருடியவற்றை ஏழை மக்களுக்கு பிரித்து கொடுத்து விடுவான். ஏழைகளுக்கு உரிய கூலி வழங்காமல் கொடுமை படுத்தும் செல்வந்தர்களின் வீடும் கொச்சினியிடமிருந்து தப்பாது.

  அவன் திருடிய கதைகள் இன்றளவும் மிகவும் சுவாரஸ்யமாக பேசப்பட்டு வருகிறது.

  கூட்டாளி :

  கூட்டாளி :

  கொச்சினி தனக்கென்று ஒரு கூட்டத்தை வைத்திருந்தான். அவர்கள் யாவரும் கொச்சினி சொல்பேச்சை மீறாதவர்கள். எப்போதும் கொச்சினி வீட்டிற்குள் செல்ல மட்டான். இவனது கூட்டாளிகள் உள்ளே சென்று பொருட்களை திருடி வரும் வரை வாசலிலேயே சுற்றும் முற்றும் கண்காணித்துக் கொண்டு நின்று கொண்டிருப்பான். உள்ளே ஏதேனும் சிக்கல் என்றால் சாதுர்யமாக செயல்பட்டு பொருட்களுடன் தன் கூட்டாளிகளை மீட்டு வந்துவிடுவான்.

  ஒரு முறை ஒரு செல்வந்தரின் வீட்டில் திருடிக் கொண்டிருக்கும் போது இருட்டில் ஒரு கூட்டாளியின் கைபட்டு ஒரு பாத்திரம் விழுந்து விட்டது. உடனே விழித்துக் கொண்டவர்கள் வீட்டிற்குள் இருந்த திருடர்களை கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள்

  அழுகுரல் :

  அழுகுரல் :

  வீட்டிற்குள்ளிருந்து கூச்சல்... திருடன் திருடன் என்று கத்துகிறார்கள். உடனே சுதாகரித்த கொச்சினி வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே ஒரு குழந்தை படுத்திருந்தது அதை தூக்கி வீட்டிற்கு பக்கத்திலிருந்த வயலில் வீசினான்.

  குழந்தை வீறிட்டு அழத் துவங்கியதும் திருடனைச் சுற்றிவளைத்து நின்றிருந்தவர்கள் ஒரு கணம் திகைத்தார்கள். பின்னர் படுத்திருந்த இடத்தில் குழந்தையை காணவில்லை என்றதும் சுற்றி முற்றியும் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்களிடம் சிக்கிய தன் கூட்டாளியை மீட்டு தப்பிவிட்டான் கொச்சினி.

  தொல்லை :

  தொல்லை :

  செல்வந்தர்களுக்கு கொச்சினியின் செயல்பாடுகள் பெரும் தொல்லையாய் அமைந்திருந்தது. மன்னரிடம் தொடர்ந்து கொச்சினியைப் பற்றிய புகார்கள் வந்தன. ஒரு கட்டத்தில் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொல்லி கொச்சினியை பிடிப்பதற்கென்றே ஒர் அதிகாரியை நியமித்தார் மன்னர்.

  அந்த அதிகாரி கொச்சினி தங்கியிருந்த கிராமத்திற்கு வந்து கொச்சினையைப் பற்றிய விவரங்களை, அவனது நடவடிக்கைகளை எல்லாம் தெரிந்து கொண்டார். அவனுக்கு உதவுகிறவர்கள், அவனுடன் நெருக்கமாக பழகக்கூடியவர்கள் எல்லாம் யாரென்று தெரிந்து கொண்டான்.

  பெண் :

  பெண் :

  கடைசியில் கொச்சினி ஒரு பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வருவதையும் அவளுடன் கொச்சினி மிகுந்த அன்பு கொண்டிருப்பதையும் அந்த அதிகாரி அறிந்து கொண்டார். தன் வேலையை ஆரம்பித்த இவர் அந்த பெண்ணிடம் சென்று நிறைய பரிசுபொருட்களையும் பணத்தையும் தருவதாக ஆசை வார்த்தை கூறி அதற்கு ஈடாக நீ ஒரேயொரு முறை நான் சொல்வதை செய்ய வேண்டும் என்றார். அவளும் ஒப்புக் கொண்டாள்.

  கொச்சினிக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் தெரியாமல் நீ இதை செய்ய வேண்டும் என்று அந்த அதிகாரி சொல்ல அதன் படியே நடக்கும் என்று சொன்னாள் அந்தப் பெண்.

  சதி :

  சதி :

  இந்த சதி எதுவும் தெரியாமல் ஒரு நாள் கொச்சினி இந்த பெண்ணின் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவனுக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுக்க... அதை குடித்ததுமே கொச்சினி மயங்கிவிட்டான். உடனே அந்த அதிகாரிக்கு தகவல் சொல்ல அவர் படை வீரர்களுடன் வந்து கொச்சினியை தூக்கிச் சென்றுவிட்டார். மறுநாள் கண்விழித்த போது தான் கைது செய்யப்பட்டிருப்பதை உணர்ந்த கொச்சினி அங்கிருந்து தப்பித்து நேராக அந்த பெண் வீட்டிற்கு வருகிறார்.

  அப்போதும் அந்த பெண் தான் தன்னை சிக்க வைத்திருக்கிறாள் என்பதை உணராது தன்னுடைய கத்தி இங்கே இருக்கும் என்ற எண்ணத்தில் வீட்டிற்குள் நுழைய அங்கே வேறு ஒரு இளைஞனுடன் அந்தப் பெண் இருப்பதை பார்த்து மிகவும் கோபம் கொள்கிறான்.

  கோவில் :

  கோவில் :

  கோபத்தின் உச்சிக்கே சென்ற கொச்சினி அந்த பெண்ணையும் அவளுடன் இருந்த இளைஞனையும் கொலை செய்து விடுகிறான். அந்த அதிகாரி பலமுறை இவனை கைது செய்ய வலை விரித்திருந்தார். ஒவ்வொரு முறையும் தப்பித்துக் கொண்டேயிருந்தான் கொச்சினி.

  கடைசியாக கொச்சினியின் நெருங்கிய கூட்டாளிகள் இருவரை தன் கைக்குள் போட்டுக் கொண்டு அவர்கள் மூலமாக கொச்சினியை பிடித்துவிட்டான். சிறையில் அடைக்கப்பட்ட கொச்சினி திருவனந்தபுரம் பூஜப்புரா சிறையில் மரணமடைந்தான்.

  காயம்குளத்தில் கொச்சினிக்காகவே கோவிலொன்றும் எழுப்பப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Story About Kayamkulam Kochunni

  Story About Kayamkulam Kochunni
  Story first published: Thursday, July 19, 2018, 15:39 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more