வருடந்தோறும் மகளிர் தினம் கொண்டாடி என்ன பயன்?

Posted By:
Subscribe to Boldsky
தமிழகத்தில் அழிக்கப்பட்ட பெண்கள்... !!- வீடியோ

இன்று உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம், வாட்சப் மற்றும் முகநூல் முழுவதும் மகளிர் தின வாழ்த்துக்கள் தான் குவிந்து கொண்டிருக்கிறது.

ஆரம்ப நாட்களில் அமெரிக்காவின் பெரும்பாலான அலுவலகங்களில் எல்லாம் ஆண்கள் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற சட்டம் இருந்தது. பெண்களுக்கு வீட்டு வேலைகளை தான் செய்ய அனுமதி, குறிப்பாக அவர்களுக்கு ஆரம்ப கால கல்வி கூட வழங்கப்படாமல் இருந்து. தொடர்ந்து காலப்போக்கில் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளில் ஆண்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்பட்டாலும், சமமான ஊதியம் கிடைக்கவில்லை.

தங்களுக்கும் ஆண்களுக்கு இணையான உரிமைகள் சலுகைகள் வழங்க வேண்டி போராட்டம் நடத்துகிறார்கள் பெண்கள். தொடர்ந்து பெண்கள் உரிமை மாநாடு நடத்தப்படுகிறது, அதில் பங்கேற்ற ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த க்ளாரே செர்கினே என்பவர் மார்ச் எட்டாம் தேதியை உலக மகளிர் தினத்தை கொண்டாட பெண்களை வலியுறுத்துகிறார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இத்தனை வருடங்கள் :

இத்தனை வருடங்கள் :

தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.... சமூகத்தில் பாதுகாப்பான ஓர் சூழலைக் கூட இன்னும் கொடுக்க முடியவில்லை என்ற யதார்த்த உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

இது தான் கடைசியாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு துயர் சம்பவத்தின் போது நினைத்துக் கொண்டாலும் அது என்னவோ தொடர்கதையாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த மகளிர் தினத்தில் சில பெண்களை உங்களுக்கு நினைவூட்டுகிறோம், அவர்கள் இந்த சமூகத்தில் நடக்கிற அவலங்களை உங்களுக்கு வெட்டவெளிச்சமாய் காட்டியவர்கள் இவர்கள். காலப்போக்கில் அவர்களை நாம் மறந்தும் போன தான் கொடூரத்தின் உச்சம்

நந்தினி :

நந்தினி :

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த நந்தினியின் படுகொலையை கேட்டாலே மனம் பதறுகிறது, 17வயதான நந்தினி அப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்திருக்கிறார் அப்போது இந்து முன்னணியின் ஒன்றிய செயலாளர் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே கர்ப்பமான நந்தினியை தன்னுடைய சகாக்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பிறப்புறுப்பை சிதைத்திருக்கிறார், பின் குழந்தையை வெளியில் எடுத்து எரித்திருக்கிறார், அதோடு நந்தினியின் உடலுடன் கல்லை கட்டி கிணற்றில் வீசியிருக்கிறான். கிட்டதட்ட பதினெட்டு நாட்கள் கழித்து நந்தினியின் அழுகிய உடல் மீட்கப்பட்டது.

ஸ்வாதி :

ஸ்வாதி :

காலை அலுவலகத்திற்கு செல்ல நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த ஸ்வாதியை ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்கிறார். ஆட்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் ரயில் நிலையம் அதுவும் காலை நேரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த ரயில் நிலையத்தில் கொலை செய்யபட்ட ஸ்வாதியின் மர்ம முடிச்சுக்கள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

சில நாட்கள் கழித்து, ராம்குமார் என்ற இளைஞன் தான் கொலையாளி என்று அழைத்து வந்தார்கள், பின்னர் அவனும் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்வாதி கொலை வழக்கு மூடி மறைக்கப்பட்டது.

உமா மகேஸ்வரி :

உமா மகேஸ்வரி :

23வயதான உமா மகேஸ்வரி சென்னையில் ஐடி நிறுவனமொன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் உமா மகேஸ்வரி காணவில்லை என தேடுதல் வேட்டை துவங்கியது இந்நிலையில் பிப்ரவரி 22 ஆம் தேதி அலுவலகம் இருந்த வளாகத்திலேயே ஒரு முட்புதரில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

விஷ்ணுப்ரியா :

விஷ்ணுப்ரியா :

திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி யாக பணிபுரிந்து வந்த விஷ்ணுப்பிரியா கல்லூரி மாணவர் கோகுல் ராஜ் கொலை வழக்கினை விசாரித்துக் கொண்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்ற அவரது குறிக்கோலுடன் வந்த விஷ்ணுப்பிரியாவை தற்கொலை வரை தூண்டியது இந்த சமூகம் தான்.

கொலை :

கொலை :

யாருமில்லாத நேரம், இருட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என எந்த அவசியமும் இல்லை, ஆள்நமாட்டம் என்ன வீட்டிற்குள்ளேயே போய் கொலை செய்து விட்டு வருகிறேன் பார், ஏன் கல்லூரி வளாகத்திற்குள் கூட நுழைந்து உன்னை வெட்டுவேன் என்று பிதற்றிக் கொண்ட ஆண்களால் பலியான பெண்கள் இவர்கள்.

தன்னை காதலிக்க மறுத்ததால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியான நவீனா படுகொலை செய்யப்பட்டார், கரூரைச் சேர்ந்த சோனாலி கல்லூரி வகுப்பறையில் உட்கார்ந்திருந்த போது அதே கல்லூரியின் முன்னாள் வாலிபர் கட்டையால் தாக்கியதில் சோனாலி உயிரிழந்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த பிரான்சினாவை சீகன் கோமஸ் என்பவர் சர்ச் வளாகத்திலேயே வெட்டி கொலை செய்தார்.

ஓயவில்லை :

ஓயவில்லை :

கோவையைச் சேர்ந்த தான்யாவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது, தான்யா தன் காதலை ஏற்காமல் வேறு ஒருவருடன் திருமணம் செய்யப் போகிறாள் என்ற கோபத்தில் வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்தார் ஜாகீர்.

சென்னை பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் தன்னுடைய காதலை ஏற்க மறுத்த சோனியாவை கழுத்தறுத்து கொலை செய்தார் வினோத். தன்னை காதலிக்க மறுத்தாள் என்ற ஒரே காரணத்திற்காக இந்துஜாவின் வீட்டிற்குள் நுழைந்து பெட்டோல் ஊற்றி கொலை செய்யப்பட்டார்.

கௌசல்யா சங்கர் :

கௌசல்யா சங்கர் :

வேறு சாதியைச் சேர்ந்த சங்கரை திருமணம் செய்து கொண்டதால் இரண்டாண்டுகளுக்கு முன்பு பட்டப்பகலில் தன் அப்பா,தம்பி,மாமா உட்பட்ட குடும்பத்தாராலேயே ஆணவக் கொலைக்கு ஆளானார் கௌசல்யா, இதில் சங்கர் பலியாகிட கௌசல்யா கணவரின் குடும்பத்துடனேயே சேர்ந்து வாழ்வேன் என்று சொன்னதுடன் தொடர்ந்து சாதிக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்.

சித்ரா தேவி :

சித்ரா தேவி :

திருமங்கலத்தை சேர்ந்த சித்ரா தேவி என்ற பதினான்கு வயது மாணவியை 23 வயது மணிப்பாண்டி காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் தொடர்ந்து வர்புறுத்தி வந்திருக்கிறார்.

காதலை ஏற்க மறுத்ததுடன் பெற்றோரிடமும் மணிப்பாண்டி குறித்து சொல்லியிருக்கிறர். தொடர்ந்து மணிப்பாண்டியின் டார்ச்சர் அதிகரித்ததால் பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வருடம் பிப்ரவரி 14 ஆம் தேதியும் வந்து தன்னை காதலிக்கும்படி வறுபுறுத்த சித்ரா தேவி மறுத்திருக்கிறார் இதனால் ஆத்திரமடைந்த மணிப்பாண்டி, பேருந்து நிலையத்தில் பேருந்திருக்காக காத்திருந்த சித்ரா தேவி மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து தப்பிவிட்டார், அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட சித்ரா தேவி கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி உயிரிழந்தார்.

அனிதா :

அனிதா :

கழிவறை வசதி கூட இல்லாத மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் அனிதா. மருத்துவராகவேண்டும் என்ற லட்சிய கனவுடன் படித்தவர் பன்னிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்களை பெற்றார்,ஆனாலும் மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வினை எழுத வேண்டும் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டதால், பஸ் ஸ்டாண்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளான அனிதாவால் தன் மருத்துவக் கனவினை அடையமுடியவில்லையே என்ற ஏக்கம் இருந்திருக்கிறது. ஆனாலும் விடாப்பிடியாக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடினார்.

ஆனாலும் அனிதாவிற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை, தன் மருத்துவக் கனவு நிறைவேறாத துக்கத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹாசினி :

ஹாசினி :

சென்னையைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஹாசினி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த இவர் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த தஸ்வந்த் என்ற இளைஞன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததுடன் எரித்து கொலையும் செய்துவிட்டு நாடகமாடினான்.

ஹாசினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவனை ஜாமினில் அழைத்து வர, செலவுக்கு பணம் கேட்டபோது தர மறுத்த அம்மா சரளாவையும் கொலை செய்து தப்பினான். தற்போது அவனுக்கு 46 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆராயி,தனம் :

ஆராயி,தனம் :

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆராயி கணவர் இறந்த நிலையில் தன்னுடைய கடைசி இரண்டு குழந்தைகளான 14வயது சிறுமி தனம் மற்றும் ஏழு வயது மகன் சமயனுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இவரது வீட்டிற்குள் நுழைந்த நபர்கள் சமையனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததுடன் ஆராயியை பயங்கரமாக தாக்கியுள்ளனர், அதோடு 14வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பித்திருக்கிறார்கள்.

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

உஷா :

உஷா :

மகளிர் தினத்திற்கு முந்தைய தினம் நிகழ்ந்த கொடூரம் இது. திருச்சி அருகே இருக்கும் திருவெறும்பூரில் வாகன சோதனையில் போலீசார் ஈடுப்பட்டிருந்தார்கள். அப்போது ராஜா மற்றும் மூன்று மாதம் கர்ப்பமான மனைவி உஷாவுடன் தஞ்சாவூரிலிருந்து திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

போலீசார் நிறுத்தச் சொன்ன போதும் நிறுத்தாமல் ராஜா வண்டியை செலுத்தியதாக சொல்லப்படுகிறது, இதனால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் வண்டியை எட்டி உதைத்திருக்கிறார் இதில் ராஜா மற்றும் அவரது மனைவி உஷா இருவருமே தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்கள், இதில் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Status Of Women In TamilNadu

Status Of Women In TamilNadu
Story first published: Thursday, March 8, 2018, 18:24 [IST]