Just In
- 1 hr ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 3 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
- 4 hrs ago
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
- 5 hrs ago
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?.. கண்டிப்பா படிங்க…!
Don't Miss
- News
குளுகுளு அறையில்... கொதிப்புடன் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
- Movies
எனக்கு எதுவும் நடக்கலாம்.. அதற்கு அவர்கள்தான் காரணம்.. பிரஸ் மீட்டில் சீரியல் நடிகை பரபரப்பு புகார்!
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Automobiles
வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா
- Sports
ஒலிம்பிக் உட்பட எந்த விளையாட்டு தொடரிலும் பங்கேற்கக் கூடாது.. ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் அதிரடி தடை!
- Finance
ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எமன் உங்களை நெருங்கிவிட்டார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்
புவி வாழ்க்கையில் மறுக்கமுடியாத, தவிர்க்கமுடியாத ஒரு உண்மை என்னவெனில் அது மரணம்தான். பூமியில் பிறந்த எந்த உயிராக இருந்தாலும் கண்டிப்பாக மரணத்தை தழுவிதான் ஆகவேண்டும். மரணத்திலிருந்து தப்புவது என்பது எவராலும் இயலாது. மரணம் எப்பொழுது நிகழும் என்று எவராலும் கூற இயலாது. ஆனால் எமதர்மன் உங்களை சந்திக்கும் முன் அவர் வரபோவதற்கான அறிவிப்பை சில அறிகுறிகள் மூலம் உங்களுக்கு உணர்த்துவார்.
உண்மைதான், எமதர்மன் உங்கள் உயிரை பறிக்க வரும் முன் உங்களுக்கு முன்னறிவுப்பு போல சில அறிகுறிகளை காட்டுவார். அதற்கு காரணம் அந்த இடைப்பட்ட காலத்தில் உங்களால் முடிந்த அளவு நல்லது செய்து புண்ணியத்தை சம்பாதித்து கொள்ளத்தான். ஆனால் நாம் அதனை உணர்ந்துகொள்வதில்லை. இந்த பதிவில் எமன்உங்களை நெருங்கும் முன் தோன்றும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

முகம் நிற மாற்றம்
கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள தகவலின் படி ஒருவருடைய முகத்தின் நிறமானது மஞ்சள், வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றமடைந்தால் அவர்கள் அடுத்த 6 மாதத்தில் அவரை மரணம் நெருங்கிவிடும் என்று அர்த்தம்.

கண்களில் மாற்றம்
காலப்போக்கில் ஒருவர் அவருடைய மூக்கின் நுனியை தன்னுடைய கண்களால் பார்க்க இயலவில்லை என்றால் அவர் விரைவில் இறக்க போகிறார் என்று அர்த்தம். ஏனென்றால் அவரின் கண்கள் மேற்புறம் நோக்கி நகர்ந்து கொண்டே செல்வதால் அவர்களால் மூக்கின் நுனியை பார்க்க இயல முடியாமல் போகிறது. இறுதியில் மரணம் அடைந்தவுடன் கண்கள் முழுவதும் மேல்நோக்கி சென்றுவிடும்.

புருவங்கள்
எவர் ஒருவரால் புருவங்களுக்கு இடைப்பட்ட இடத்தை பார்க்க இயலவில்லை என்றால் அவர்கள் 7 நாள் முதல் அதிகபட்சமாக 9 நாட்களுக்குள் இறந்து விடுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல தன்னுடைய மூக்கை பார்க்க இயலாதவர்கள் மூன்று நாட்களில் இறந்து விடுவார்கள், தன்னுடைய நாக்கை பார்க்க இயலாதவர்கள் மிகவிரைவில் இறந்து விடுவார்கள் என்று எமபுராணம் கூறுகிறது.

கண்பார்வை
இது பலரும் அறிந்த ஒரு அறிகுறிதான். சில சமயங்களில் மரணம் நிகழ்வதற்கு முன்பு இறக்க போகிறவரின் கண்பார்வையில் பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக அவர்கள் பார்க்கும் நிறங்களில் மாற்றம் ஏற்படும். அதாவது அவர்கள் கண்களுக்கு எந்தவித வண்ணமும் தெரியாது. அவர்கள் கண்களுக்கு கருப்பு நிறம் மட்டும்தான் தெரியும்.
MOST READ: மனைவி ஏமாற்றியதை அறிந்தும் 35 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வருகிறேன் - My Story #314

வான்பொருட்கள்
சில சமயங்களில் மரணத்திற்கு முன்பு வானத்தில் உள்ள பொருட்கள் துண்டு துண்டாக தெரியும். மரணம் அடைய போகிறவர்களுக்கு அனைத்தும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் அப்படி அங்கு எதுவும் இருக்காது.

கண்ணீர்
மரணம் கண்களுக்கு தெரிவதை விட கண்கள் மூலம்தான் நமக்கே தெரியும். ஏனெனில் மரணம் நெருங்கும் முன் கண்களில் கண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். மூக்கில் விரிசிசல்கள் ஏற்படும் இந்த அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள் விரைவில் மரணம் அடைய போகிறார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

உணர்ச்சிகள் கூடுதல்
மனிதர்களுக்கு உணர்ச்சிகள் மிகுந்த ஐந்து உறுப்புகள் உள்ளது, ஆனால் படிப்படியாக அவற்றில் உணர்ச்சிகள் கடுமையாகி கொண்டே வந்தால் அதற்கு அவர்கள் விரைவில் இறக்கப்போகிறார்கள் என்று அர்த்தம்.

இறந்தவர்களுடன் தொடர்பு
மரணம் நெருங்குபவர்களுக்கு அவர்களுக்கு மிகவும் நெருக்கமான இறந்தவர்களின் நினைவுகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். சிலசமயம் மரணிக்கப்போகிறவர்களின் கண்களுக்கு இறந்தவர்களின் உருவம் கூட தெரியலாம். மிகவும் ஆழமான இந்த உணர்வு இறந்தவர்களுடனேயே வாழ்வது போன்ற உணர்வை அவர்களுக்கு தரும். இப்படி நேர்ந்தால் அவர்கள் விரைவில் மரணிக்கப்போவது உறுதி.
MOST READ: புரட்டாசி செவ்வாய் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் காத்திருக்கு?

கண்ணாடி பிம்பம்
கண்ணாடியை பார்க்கும் போதல்லாம் அதில் பார்ப்பவரின் பிம்பம்தான் தெரியும். ஆனால் மரணம் நெருங்குபவர்களுக்கு அவர்களின் பிம்பம் தெரியாது. அதற்கு பதிலாக மற்றவர்களின் பிம்பமோ அல்லது எதுவுமே தெரியாது. இது உடனடி மரணம் நிகழப்போவதற்கான அறிகுறியாகும்.