இறந்தவர்களை அலங்கரித்து உடன் வைத்துக் கொள்ளும் வினோத மக்கள்!

Posted By:
Subscribe to Boldsky

என்ன தான் டெக்னாலஜி வளர்ந்து விட்டது எல்லாம் நவீன மயம் என்று சொல்லிக் கொண்டாலும் கூட இன்னமும் பழமை உணர்வுடன் பழங்கால நடைமுறைகளை பின்பற்றி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த காலத்தில் இப்படியும் இருப்பார்களா என்று நம்பமுடியாத வண்ணம் அமைந்திருக்கிறது அவர்களடைய நடவடிக்கைகள்.

கடவுளின் பெயரைச் சொல்லியோ அல்லது தங்களுடை நம்பிக்கையின் பெயராலேயோ சில விசித்திரமான பழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். தங்களை காயப்படுத்தி, வருத்தப்படுத்திக் கொண்டு செய்வதாலேயே அந்த வழிபாடு முழுமையடைவதாக நம்புகிறார்கள். அதோடு அப்படிச் செய்தால் தான் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் என்றும் அவர்களால் நம்பப்படுகிறது.

கேட்கும் போதே பயம் கொள்ளச் செய்கிற, பயங்கரமான சில சடங்குமுறைகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புக்கட் திருவிழா :

புக்கட் திருவிழா :

சீனாவில் இருக்கிற மக்கள் இந்த விழாவை கொண்டாடுகிறார்கள். புக்கட் வெஜிடேரியன் ஃபெஸ்டிவல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது சுமார் பத்து நாட்கள் வரை நடக்கும் இந்த திருவிழாவின் போது யாருமே அசைவ உணவுகளைச் சாப்பிட மாட்டார்களாம். விலங்குகளை பெரும்பை படுத்தும் விதமாக கன்னம் மற்றும் வாய்ப்பகுதிகளில் கூர்மையான ஆயுதங்களால் குத்திக் கொள்கிறார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சடங்கு முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. இப்படிச் செய்வதினால் தங்களுக்கு செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

Image Courtesy

கரடி :

கரடி :

ஐனு என்ற இன மக்கள் ஜப்பான் மற்றும் ரஷ்யாவில் வசிக்கிறார்கள் இவர்களிடயே மிகவும் விசித்திரமான நடைமுறை இருக்கிறது. அதாவது இவர்கள் கரடியை தெய்வமாக நினைத்து வழிபடுகிறார்கள்.

கரடியை பலியிட்டால் மனித இனத்தில் ஆன்மா சாந்தியடையும் என்று நம்புகிறார்கள். கரடியை பலியிடுவதற்கு முன்னால் குட்டியிருந்தால் அதனை முதலில் பிரிக்கிறார்கள் தனியாக கூண்டில் அடைத்து வளர்க்கிறார்கள். அதன் பிறகு தன் குட்டிகளைப் பற்றி மறந்த பிறகு தனிமையில் தூங்கிக் கொண்டிருக்கும் கரடியை ஈட்டியால் குத்திக் கொள்கிறார்கள்.

Image Courtesy

எஸ்கிமோ :

எஸ்கிமோ :

எஸ்கிமோக்களில் வாழுகின்ற மக்கள் பெரும்பாலும் தங்களது உணவுக்கும் வாழ்வாதாரத்திற்கும் பெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் வயது முதிர்ந்தவர்கள் என்றாலே அங்கு திண்டாட்டம் தான். அவர்களை கவனித்துக் கொள்ள மறுத்து ஒரு பாயில் கட்டி ஐஸ்கட்டியில் மிதக்க விட்டு விடுகிறார்கள்.

அப்படியே பசியாலும் குளிராலும் இறந்து விடுகிறார்கள். அவர்களின் உடலை அங்கிருக்கும் விலங்குகள் கொத்தித் தின்றுவிடுகிறது.

Image Courtesy

ஜப்பான் திருவிழா :

ஜப்பான் திருவிழா :

ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு கோவில் இருக்கிறது. அந்த கோவிலில் சென்று வேண்டிக்கொண்டால் நிறைவேறும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள். ஜப்பான் மக்கள் தங்களக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்றும் , வளமான வாழ்க்கைக்கும், அந்த வருடத்தில் நல்ல விளைச்சல் வேண்டும் என்றும் இந்த கோவிலை நாடி வருகிறார்கள். ஜப்பான் நாட்டின் கொமாகி என்னும் இடத்தில் இந்த கோவில் இருக்கிறது.

இங்கே ஆண்களின் பிறப்புறுப்பினைத் தான் தெய்வமாக வழிபடுகிறார்கள். இங்கே வந்து வழிபாடு நடத்துவதால் நினைத்தது நிறைவேறும் என்று நம்புகிறார்கள்.

Image Courtesy

மாட்டின் ரத்தம் :

மாட்டின் ரத்தம் :

கென்யாவின் தெற்கு பகுதி மற்றும் தன்சானியாவின் வடக்குப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்கள். அந்த பகுதிகளில் மாசாய் என்ற பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள் இவர்கள் குழந்தை பிறந்த உடனும் திருமணத்தின் போதும் மாட்டின் நரம்பை அறுத்து ரத்தம் குடிப்பார்கள்.

Image Courtesy

 புல்லட் எறும்பு :

புல்லட் எறும்பு :

சட்டரே மாவே என்று பழங்குடியின மக்கள் மத்தியில் இந்த வழக்கம் இருக்கிறது. பத்து வயதிற்கு மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கு இந்த சடங்கு நடக்கிறது. சடங்கின் ஒரு பகுதியாக இரண்டு கைகளிலும் மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு கூடையை இரண்டு கைகளிலும் அணிவிக்கிறார்கள். அதில் முழுவதும் எறும்பு இருக்கிறது.

அதனை கையில் அணிந்தவாரே பத்து நிமிடங்கள் வரை நடனமாட வேண்டும். இதனை எல்லாரும் புல்லட் எறும்பு என்று அழைக்கிறார்கள். காரணம் இந்த எறும்பு கடித்தால் உடலில் புல்லட் துளைத்தால் எத்தகைய வலி ஏற்படுமோ அதே வலி இங்கே ஏற்படுமாம்.

Image Courtesy

இறந்தவர்களை :

இறந்தவர்களை :

ஜெனிவாவில் இருக்கிற ஃபோர் என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது. அதாவது குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அவர்களை எரிக்கவோ புதைக்கவோ செய்யாது அவர்களிடன் உடலை அறுத்து உணவு சமைத்து சாப்பிடுகிறார்கள்.

அவர்களின் உடலை இவர்களே சாப்பிட்டு விடுவதால் அவருக்கு மரியாதையாகவும் அந்த நபரின் புண்ணியங்கள் தங்களுக்கே கிடைப்பதாகவும் நம்புகிறார்கள்.

Image Courtesy

 சீனா :

சீனா :

சீனாவில் இருக்கக்கூடிய ஆண்கள் தங்களது மனைவி கர்ப்பமானால் இந்த வழிபாட்டில் பங்கேற்கிறார்கள். இதில் கர்பமாக இருக்கும் தங்களின் மனைவியை தூக்கிக் கொண்டு நெருப்புக் கங்கில் நடந்து வர வேண்டும். நம்ம ஊர் தீமிதி திருவிழா போலத்தான். ஆனால் இதில் பங்கேற்கக்கூடிய ஆண்கள் தங்களது கர்ப்பமான மனைவியை சுமந்து செல்ல வேண்டும் என்பது விதி!

இப்படிப் செய்வதால் குழந்தை பிறக்கும் போது எந்த தொந்தரவும் வராது என்று நம்புகிறார்கள்.

 கூடவே வாழ்கிறார்கள் :

கூடவே வாழ்கிறார்கள் :

இந்தோனேசியாவில் வாழ்கிற டோராஜன் என்ற மக்கள் மத்தியில் இந்த நடைமுறை இருக்கிறது. தங்கள் வீட்டில் இறந்தவர்களை அவர்கள் எரிப்பதோ புதைப்பதோ இல்லை மாறாக அவர்களை பல ஆண்டுகளுக்கு தங்கள் வீட்டிலேயே வைத்திருக்கிறார்கள்.

உடலில் ஃபார்முலின் ஊசியைப் போட்டு உடல் கெட்டுப் போகாமல் இருக்கச் செய்கிறார்கள். அவர்களை தினமும் அலங்காரப்படுத்தி உணவு படைக்கிறார்கள். அருகிலேயே இன்னொரு டப்பும் வைக்கப்படுகிறது அது அவர்களது கழிவறையாம்! தினமும் அதனைச் சுத்தப்படுத்தவும் செய்கிறார்கள்.

Image Courtesy

வானத்திலிருந்து :

வானத்திலிருந்து :

லோல்டஃபலா என்ற ஊரில் இருக்கக்கூடிய பெண்ட்டிகோஸ்ட் என்ற தீவில் வாழுகிற மக்கள் மத்தியில் இந்த வழக்கம் இருக்கிறது. 75 அடி உயரம் அதாவது தரையிலிருந்து 25 மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதிக்க வேண்டும்.

பல நேரங்களில் அப்படி விழுகிற சிறுவர்கள் பல நேரங்களில் தரையில் மோதி உயிரிழப்பதும் உண்டு. பலருக்கும் எலும்பு முறிவு உள்ளுறுப்புகள் சேதமடைவது ஆகியவை ஏற்படுமாம்.

Image Courtesy

 திபெத் :

திபெத் :

திபெத்தில் இருக்கக்கூடிய ஒரு மக்கள் கூட்டத்தினரடத்தில் இந்த வழக்கம் இருக்கிறது. ஒருவர் இறந்துவிட்டால் அவர்களை சிறு சிறு துண்டுகளாக அறுத்து மலையில் வீசிவிடுவார்களாம். அதனை கழுகுகள் கொத்தித் திண்கிறது.

அங்கிருப்பவர்களை பொருத்தவரையில் உயிரற்ற ஓர் உடல் என்பது வெறும் கூடு தான். அதனை வீணாக மண்ணில் மக்கிப் போவதற்கு பதிலாக இன்னொரு உயிருக்கு உணவாகட்டுமே என்கிறார்கள்.

Image Courtesy

ரத்தக்காயம் :

ரத்தக்காயம் :

முஸ்லீம்கள் மத்தியில் கொண்டாடப்படுகிற விழா இது. அஸ்ஹுரா என்பது இஸ்லாமியர்கள் விரதமிருக்கும் நாள் இதில் சன்னி மற்றும் சைட் ஆகிய இரண்டு பிரிவு மக்கள் பங்கேற்கிறார்கள். இதில் மக்கள் மிகவும் ஆக்ரோசமாக தங்கள் உடலில் ரத்தக்காயம் ஏற்படும் அளவிற்கு கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொள்கிறார்கள்.

Image Courtesy

ஸ்பெயின் :

ஸ்பெயின் :

ஸ்பெயினில் நடக்கக்கூடிய இந்த திருவிழாவில் பச்சிளம் குழந்தைகளை நடு வீதியில் படுக்க வைக்கிறார்கள். பின் சிகப்பு மற்றும் மஞ்சள் நிற உடை அணிந்தவர்கள் வேகமாக ஓடி வந்து குழந்தையை தாண்டி குதிக்கிறார்கள்.

சிகப்பு மற்றும் மஞ்சள் பேயின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இப்படி உடையணிந்தவர்கள் தாண்டச் செய்வதால் குழந்தைக்கு பயம் வராது என்று நம்பப்படுகிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Shocking Rituals Around the world

Shocking Rituals Around the world
Story first published: Saturday, April 7, 2018, 11:52 [IST]