For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நான் நித்தியானந்தாவின் ப்ரியசகி! அதிர வைக்கும் சிஸ்யைகளின் முகநூல் பதிவுகள்! (வீடியோ)

  By Staff
  |

  கடந்த வாரம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் பேசிய வைரமுத்து தான் நாளிதழில் எழுதிய ஆண்டாள் குறித்த கட்டுரையை அங்கே வாசித்தார். தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

  வைரமுத்துவின் நாவிற்கு பத்து லட்சம், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், ஆண்டாளைப் பற்றி தவறாக பேசியவரை கொலை செய்வோம்,மன்னிப்பு கேட்கும் வரை உண்ணவிரதம்,ஆர்ப்பாட்டம்,போராட்டம் என்று எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. வைரமுத்துவிற்கு பா.ஜ.க.,வினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்றைய தினம் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த ஃபேஸ்புக் வாயிலாக சில சிறுமிகள் வைரமுத்துவை மிகவும் மோசமாக திட்டி வீடியோவை வெளியிட்டிருந்தார்கள்.

  Shocking news about nithyaanandha ashram

  Image Courtesy

  அந்த வீடியோவில் பேசிய பெண்ணுக்கும் அவரைச் சுற்றியிருந்த சிறுமிகளுக்கும் பதினைந்து வயதிற்குள்ளாகத் தான் இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் பேசிய பேச்சுக்களோ மிகவும் ஆபசமாக இருந்தது. ஆசிரமத்தில் வளரக்கூடியவர்களிடமிருந்து இப்படியான பேச்சுக்களை யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள் தான்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  நித்தியானந்தா :

  நித்தியானந்தா :

  ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கிய நித்தியானந்தா தன்னுடைய அடுத்த அத்தியாயத்தை சத்தமின்றி துவங்கிவிட்டாரா என்றே தோன்றுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தா என்ற பெயர் மிக வேகமாக பரவியது . அதுவும் தன்னை சுவாமிஜி என்று சொல்லிக் கொள்ளும் நபரான நித்தியானந்தா ஆசிரமத்தில் இருக்ககூடிய பெண்களை தன்னுடைய பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறார் என்று வீடியோ ஆதரமாக வெளியானது.

  இதில் திரைப்பட நடிகை ரஞ்சிதாவும் சிக்கினார். கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் வழக்கும் நடைப்பெற்றது இறுதியில் விடுதலை செய்யப்பட்டார் நித்தியானந்தா.

  Image Courtesy

  நித்தியநந்திதா :

  நித்தியநந்திதா :

  வைரமுத்துவை திட்டி வீடியோவில் பேசிய சிறுமியின் பெயர் மா நித்தியநந்திதா. இவர் தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாம். பதினாறு வயது நிரம்பிய இந்தச் சிறுமி ஏழாம் வகுப்பிற்கு பிறகு தான் நித்தியானந்தாவின் குருகுல பள்ளியில் சேர்ந்திருக்கிறார்.

  பார்ப்பனர்கள் குடும்பத்தில் பிறந்த இவர் தற்போது நித்தியானந்த சங்கத்தில் இளவரசி ஸ்தானத்தில் இருக்கிறாரம்.

  Image Courtesy

  வீடியோவில் :

  வீடியோவில் :

  வைரமுத்துவிற்கு எதிராக வெளியிடப்பட்ட வீடியோவில் ‘கவிப்பேரரசு எல்லாம் அப்பறம் மொதல்ல நீ மனுஷன், ஆம்பளன்றதுக்கு ஆதாரம் காமி... ஆண்டாள் கற்பின் மறுவடிவமாக திகழ்ந்தவர் அவரைப் பற்றி எப்படி தேவதாசி என்று கூற முடிகிறது. எல்லாரும் வணங்கக்கூடிய ஆண்டாளைக் கூட எப்படி ஓர் தேவதாசி என்று பார்க்க முடிகிறது.

  இதில் நித்தியநந்திதா பேசிய சர்ச்சைக்குரிய இன்னொரு கருத்து ‘சதி'யைப் பற்றியது. கணவர் இறந்த பிறகு அவரை எரிக்கும் அதே சிதையில் மனைவியும் விழுந்து இறக்க வேண்டும். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சதி முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த வீடியோவில் சதியைப் பற்றி பேசியிருக்கிறார்.

  கணவனனுக்காக :

  கணவனனுக்காக :

  கணவர் இறந்த பிறகு தன்னுடைய உடலை கணவர் தவிர வேறு யாரும் தொடக்கூடாது என்று சிதையில் விழுந்து இறக்கிறாள் இது தவறல்ல என்று சொல்கிறார். அதோடு, நாத்திகவாதிகள் பற்றியும் வைரமுத்துவின் குடும்பத்தினரையே மிகவும் கேவலமாக விமர்சித்திருந்தார்கள்.

  Image Courtesy

  இரண்டாவது வீடியோ :

  இரண்டாவது வீடியோ :

  தொடர்ந்து இன்றைக்கு இரண்டாவது வீடியோ வெளியிட்டிருந்தார் அதில் பொறுப்பான இடத்தில் பேசுபவர்கள் பேசுவது மிக வேகமாக பரவிடும், தவறான விஷயங்களை பேசுவதற்கு முன்னால் கவனமாக இருக்க வேண்டும். பிற மதங்களைப் பற்றி விமர்சிக்க பயப்படும் நபர்கள் ஹிந்து கடவுள்களைப் பற்றி மட்டும் எளிதாக விமர்சிக்கிறார்கள்.

  கற்பின் அடையாளமான ஆண்டாளை விமர்சித்தவரை நாம் எதிர்க்கவில்லை என்றால் நம் தாய் தந்தையரை கேவலப்படுத்தியவரை எதுவும் கேட்காமல் விட்டதற்கு சமம். இந்த வாழ்க்கை முறை, இந்த குருகுல வாழ்க்கை முறை, இந்த நித்தியானந்த சீடர்கள் உயிருடன் இருக்கும் வரை தங்கள் மதத்திற்கு எதிராக யார் பேசினாலும் குரல் கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்.

  Image Courtesy

  ஆனந்தம் :

  ஆனந்தம் :

  சாதரண பெண்ணாக பெங்களூரில் ஏழாம் வகுப்பு வரை படித்து வந்த நித்தியநந்திதா அதன் பிறகு ஆசிரமத்தில் சேர்ந்ததற்கு சொல்லக்கூடிய காரணம் என்ன தெரியுமா? உங்களுடைய வாழ்க்கையில் ஒரு விருப்பம் அல்லது ஒரு லட்சியம் இருக்கிறது என்றால் அதை நீங்கள் நினைப்பதாலேயே நிஜமாக்க முடியும் என்று நித்தியானந்தா சொல்லியிருக்கிறார். இது தான் தன் வாழ்க்கையில் சந்தித்த மாற்றத்திற்கான காரணம் என்று சொல்கிறார்.

  அதோடு ஆசிரமத்தில் குருகுலத்தில் வசிப்பது ஆனந்தம் என்றும் சொல்லியிருக்கிறார்.

  Image Courtesy

  கமெண்ட்ஸ் :

  கமெண்ட்ஸ் :

  வீடியோ பதிவில் பலரும் தனக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றே சொல்லி வருகிற நித்திய நந்திதாவின் வீடியோவிற்கு கீழே மிக மோசமான ஆபாச கமெண்ட்ஸ்களும் வந்து விழுகின்றன. அதில் நித்தியானந்தாவை திட்டியும், நித்திய நந்திதாவின் அழகை வர்ணித்தும்,ஆபாச கமெண்ட்ஸ்களே அதிகமிருக்கின்றன.

  Image Courtesy

  யுவராணி :

  யுவராணி :

  இங்கே இருக்கிற குருகுலத்தில் ஒவ்வொரு பருவ வயதினருக்கும் ஒவ்வொரு பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள் இளவரசி என்றும் யுவராணி என்றும் தங்களை சொல்லிக் கொள்ளும் இந்த சிறுமிகள் ஒவ்வொருவருக்கும் தனியாக முகநூல் பக்கம் இருக்கிறது. அதில் நித்தியானந்தாவுடன் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.அதோடு சிலரது முகநூல் பக்கத்தின் பெயரே ஸ்வாமிஜியின் செல்லப்பொண்ணு என்றே இருக்கிறது.

  Image Courtesy

  லவ் :

  லவ் :

  நித்தியாநந்திதா உட்பட பல பெண்கள் நித்யானந்தாவின் புகைப்படத்தை பகிர்ந்ததோடு நித்தியானந்தாவையும் டேக் செய்து பல்வேறு போட்டோக்களையும் ஸ்டேட்டஸ்களையும் பகிர்ந்திருக்கிறார்கள்.

  அவற்றில் பெரும்பாலும் ஹிஸ் பிரின்சஸ் என்றும் ஹிஸ் பிரியசகி என்றும் ஹேஷ்டேக் இருக்கிறது.

  Image Courtesy

  லவ் ப்ரோப்போஸ் :

  லவ் ப்ரோப்போஸ் :

  இங்கே காதலுக்கு ஒரு விளக்கம் கொடுத்திருந்தால் இவர்கள் புது வித பெயரை வைத்து குரு, சுவாமிஜி ,பக்தி ,மகள் என புது விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

  இங்கே என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்க வில்லை மாறாக நீ என்னைப் போல் ஆகிறாயா என்று நித்தியானந்தா சொன்ன வார்த்தைகளை ஸ்டேட்டஸாக போட்டு தன் முகநூலில் பகிர்ந்திருக்கிறார் ஒரு சிறுமி.

  Image Courtesy

  எல்லாம் அவனுக்காக :

  எல்லாம் அவனுக்காக :

  சுவாமிஜி என்றும் தந்தையைப் போன்றவர், எங்களை மகள் என்று தான் அழைக்கிறார் என்றும் சொல்லும் இந்த சிறுமிகள் முழுவதும் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்களது முகநூல் பக்கத்தை பார்த்தாலே தெரிகிறது.

  முழுவதும் நித்தியானந்தா மீதான தங்களது அதீத அன்பை வெளிப்படுத்தி தான் அவர்களது முகநூல் பதிவு இருக்கிறது. நித்தியானந்தா தன்னை பாராட்டிவிட்டார், நாங்கள் எல்லாம் அவனுக்கு சொந்தமானவர்கள், என்ற ஸ்டேட்டஸ்களை வைத்திருக்கிறார்கள்.

  Image Courtesy

  சிறுமிகளை மீட்க வேண்டும் :

  சிறுமிகளை மீட்க வேண்டும் :

  அவர் எங்களுக்கு குரு, அவர் எங்களுக்கு பல சக்திகளை அளிக்கிறார், நான் அவரின் யுவராணி,ப்ரியசகி என்றெல்லாம் முழு மனதாக நம்புகிற சிறுமிகளை தன் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள அதிக நேரம் ஆகாது.

  அங்கிருக்கும் சிறுமிகள் அனைவரும் மீட்கப்பட்ட தகுந்த மனநல ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் வழங்க வேண்டும்.

  அனைவரும் சதி என்னும் முறை தவறானது என்று ஒப்புக் கொண்ட விஷயத்தையே சரியென்று நியாயப்படுத்தக்கூடிய இந்த சிறுமிகள் நித்தியானந்தா தங்களை பயன்படுத்திக் கொள்கிறாரா என்பதை அறியும் பருவத்திலோ சூழலிலோ இல்லை என்பது தான் சோகம். ஏதேதோ காரணத்தால் இங்கே ஏராளமான பெண் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லாரும் குருகுல கல்வியையும், கடவுளைப் பற்றியும் மட்டுமே கற்கிறார்களா என்ற கேள்விக்கு நித்தியநந்திதாவின் வைரமுத்து குறித்தான வீடியோவே பதில் சொல்லும்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  நித்தியானந்தாவின் இளவரசி என்று சொல்லிக் கொள்கிற நித்தியநந்திதா முகநூலில் பேசிய வீடியோ 

  Read more about: insync pulse
  English summary

  Shocking news about nithyaanandha ashram

  Shocking news about nithyaanandha ashram
  Story first published: Thursday, January 18, 2018, 15:01 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more