கழிவறைக்குள் கடவுளை வைத்து கும்பிடும் விசித்திர மக்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்திய மாநிலங்களிலேயே மிக குறைந்த நிலப்பரப்பைக் கொண்டது கோவா தான். கிட்டதட்ட 1500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.இங்கே ஹிந்துக்கள் 65 சதவீதம் பேரும்,கிறிஸ்துவர்கள் 26 சதவீதம் பேரும் மற்றும் முஸ்லீம்கள் 6 சதவீதம் பேரும் இருக்கிறார்கள்.

இந்த மாநிலம் 1961 ஆம் ஆண்டு தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்தியாவிற்குள் வியாபரம் செய்ய நுழைந்து நாட்டையே ஆளும் நிலைக்கு வந்த போர்ச்சுகீசியர்களின் வரலாற்று சுவடுகளை இன்றும் தன்னகத்தே கொண்டிருக்கிறது இந்த மாநிலம். இயற்கை வளங்கள் நிரம்பிய இந்த மாநிலத்திற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வாடிக்கையாக இருக்கிறது. இங்கே தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக ஒரு நடைமுறை இருக்கிறது. இந்த உலகிலேயே வேறு எங்குமே இல்லாத மிகவும் விசித்திரமான பழக்கம் அது.

கழிவறை குறித்து ஏராளமான கற்பிதங்கள் நம்மிடையே இருக்கிறது. அதன் பெயரில் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற அடக்குமுறைகளை குறிப்பிட்ட மக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் கழிவறைக்கு என்று ஒரு கடவுள், அந்த கடவுளுக்கான வேண்டுதல் விழா என கொண்டாடித்தீர்த்தால் எப்படியிருக்கும்? இது எதுவுமே கற்பனை கிடையாது. வரலாற்றில் உரைந்து கிடக்கும் உண்மைச் சம்பவங்களில் சில பகுதிகள் மட்டும் இங்கே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பன்றி டாய்லெட் :

பன்றி டாய்லெட் :

கோவாவில் இன்றும் பல இடங்களில் இந்த நடைமுறை இருக்கிறது. பழங்காலத்தில் இருந்த நடைமுறை இது. பொதுவாக பன்றிகள் கழிவுகளைச் சாப்பிடக்கூடிய விலங்கு.

அதற்கு மனிதக் கழிவுகளை உணவாக கொடுத்தால்! ஆம், கேட்கவே அருவருப்பாக இருக்கும் இந்த நடைமுறை தான் அங்கு நடக்கிறது.

Image Courtesy

வீடு :

வீடு :

வீடு கட்டப்படும் போதே இந்த வசதிகளுடன் தான் கட்டுகிறார்கள். நம்மூரில் தண்ணீர் செல்ல வழியமைத்து கட்டுவது போல. உலர் கழிப்பிடங்களான அவை தரையிலிருந்து சில அடி உயரத்தில் கழிவரை இருக்கிறது.

கீழ் தளத்தில் சில அடி தூரம் குழியை வெட்டி அங்கே பன்றியை விடுகிறார்கள். மேல் தளத்திலிருந்து கொட்டப்படுகிற மனிதக் கழிவுகள் கீழே இருக்கிற பன்றிகளுக்கு உணவாகிறது.

Image Courtesy

சீனா :

சீனா :

இந்த பழக்கம் சீனாவிலிருந்து வந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆரம்ப காலங்களில் சீனாவின் கிராமப்புறங்களில் இந்த நடைமுறையை பின்பற்றியிருக்கிறார்கள்.

அவர்கள் இதனை பிகஸ்டி என்றே அழைக்கிறார்கள்.

Image Courtesy

206 ஆம் ஆண்டு :

206 ஆம் ஆண்டு :

அங்கே இதனை அறிமுகப்படுத்தியவர் குறிப்பிட்டு சொல்லும்படி யாரென்று தெரியவில்லை ஆனால் சீனாவை 206 ஆம் நூற்றாண்டு முதல் 220 ஆம் ஆண்டு வரை வரை ஆட்சி செய்த இரண்டாவது ஏகாதிபத்திய மன்னர்களான ஹான் வம்சத்தினர் இதனை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

Image Courtesy

கலாச்சாரம் :

கலாச்சாரம் :

இதனை தங்களது கலாச்சாரமாகவே பின்பற்றி வந்திருக்கிறார்கள். அதன் பிறகு வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க சிலர் ஆதரவு தெரிவிக்க என பயங்கர சண்டையுடனே தான் இந்த கலாச்சாரம் தொடர்ந்திருக்கிறது.

20ஆம் நூற்றாண்டிற்கு பிறகு இந்த வழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று தான் அவர்கள் நினைத்திருந்தார்கள்.

Image Courtesy

இரண்டாம் உலகப் போர் :

இரண்டாம் உலகப் போர் :

ஆனால் 2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது. சீனாவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கிற சில கிராமங்களில் தொடர்வது கண்டறியப்பட்டது.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது மிக வ்வவேகமாக பரவலாகியது. கேரளாவிலும் இந்த நடைமுறை இந்திருக்கிறது . தென் கொரியாவில்1960களில் இந்த நடைமுறையில் தான் கழிவறை கட்டப்பட்டிருக்கிறது.

Image Courtesy

 பன்றிகளுக்கு பதிலாக :

பன்றிகளுக்கு பதிலாக :

சீனாவின் சில கிராமங்களில் பன்றிகளுக்கு பதிலாக சிறிய குளம் அமைத்து மீன்களை வளர்க்க ஆரம்பித்தனர். ஆனால் இந்த முயற்சி வெற்றி தரவில்லை பூச்சி தொல்லை அதிகரித்தது அதோடு நாற்றமும் குடலைப் புரட்டியது, அதோடு தேங்கி நிற்கிற நீரை மாற்ற முடியவில்லை,மீன்களாலும் அதில் தாக்குபிடிக்க முடியவில்லை. இதனால் இந்த முயற்சியை கைவிட்டார்கள்.

Image Courtesy

 கடவுள் :

கடவுள் :

ஒவ்வொரு வீட்டிலும் கழிவறைக்கான கடவுளை வைத்து வணங்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. இது ஜப்பானிலிருந்து தான் பரவியது என்றும் சொல்லப்படுவதுண்டு.

இந்த கடவுள் உடல் ஆரோக்கியத்திற்கும்,ஆயுளுக்கும் அருள்புரிவார் என்று நம்பப்பட்டது.

Image Courtesy

வேண்டுதல் :

வேண்டுதல் :

ஜப்பான் நாட்டில் கழிவறைக்கான கடவுளை க்வ்யா காமி என்று அழைக்கிறார்கள். அவர்கள் மனிதக் கழிவுகளை உரமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தாண்டிற்கும் இந்த க்டவுளுக்கு சில சம்பிரதாயங்களின் படி பூஜை நடைபெறும்.

இந்த ஆண்டு நல்ல விளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்று இந்த கடவுளிடம் வேண்டுவார்களாம்.

Image Courtesy

விருந்து :

விருந்து :

வேண்டுதலின் ஒரு பகுதியாக விருந்தும் நடைபெறுகிறது.இந்த கடவுளின் அருளால் தான் வயிறார இப்படிச் சாப்பிடுகிறோம். இதை எங்களுக்கு விளைவித்து கொடுத்ததற்கு நன்றி என்று அப்போது ஒரு வேண்டுதல் இருக்குமாம்.

வீட்டின் கழிவறைக்கு அருகில் தான் இந்த கடவுளை வைத்திருப்பார்கள் அதற்கு பக்கவாட்டில் தான் விருந்து நிகழ்ச்சியும்.

Image Courtesy

அலங்காரம் :

அலங்காரம் :

புத்தாண்டு நெருங்கு வேலையில் அதாவது இந்த கழிவறை கடவுளுக்கு விழா நெருங்கும் வேலையில் கழிவறையை விதவிதமாக அலங்காரம் செய்வார்களாம். கழிவறை அழகாக இருந்தால் கழிவறைக் கடவுளின் அருள் தங்களுக்கு கிடைக்கும் இதனால் விளைச்சல் அதிகமாகி நல்ல வருமானமும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறார்கள்.

Image Courtesy

கர்ப்பிணிகள் :

கர்ப்பிணிகள் :

இந்த கழிவறைக் கடவுள் கர்பிணிகளையும் விட்டு வைக்க வைக்கவில்லை. அந்த கழிவறையின் வடிவம் பிறக்காத குழந்தையின் அதாவது கருவில் இருக்கிற குழந்தையின் வடிவம் என்று நம்பியிருக்கிறார்கள்.

அதனை சுத்தமாக பராமரித்து அந்த கடவுளிடம் தங்களுக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்குமாம்.

Image Courtesy

அழகா வேண்டுமா?

அழகா வேண்டுமா?

ஒவ்வொரு தாய்க்குமே தங்கள் குழந்தை தான் உலகிலேயே பேரழகனாக பேரழகியாக தெரிவார்கள்.அதற்காக கர்ப்பமாக இருக்கும் போதே குங்குமப்பூ சாப்பிடுவது போன்ற பல மெனக்கெடல்களை எடுப்பதை பார்த்திருக்கிறோம். இங்கேயும் தங்கள் குழந்தை அழகாக பிறக்க வேண்டும் என்றால் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

கழிவறையை சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்க வேண்டும். அப்படி பராமரித்தால் குழந்தை அழகாக பிறக்கும் இல்லையென்றால் அசிங்கமாக பிறக்கும் என்று நம்பியிருக்கிறார்கள்.

Image Courtesy

ஈட்டி :

ஈட்டி :

அந்த கழிவறைக் கடவுளுக்கு பார்வை இல்லையென்றும் அவர் கையில் பெரிய ஈட்டியை வைத்திருப்பார் என்று சொல்லப்படுகிறது. அப்படியே தான் அதன் வடிவமைப்பும் இருந்திருக்கிறது.

கழிவறைக்கு சென்று வருபவர்கள் சுத்தமாக அதனை கழுவவில்லை என்றால் கையில் வைத்திருக்கும் ஈட்டியைக் கொண்டு நம்மை குத்திவிடுவார் என்று நம்பியிருக்கிறார்கள்.

Image Courtesy

பல பெயர்கள் :

பல பெயர்கள் :

இந்த கழிவறைக் கடவுளுக்கு பல பெயர்கள் இருந்திருக்கிறது. ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதே போல உடல் உபாதைகளுக்கு ஏற்ப இந்த கழிவறைக்க கடவுளுக்கான வேண்டுதல்கள் இருந்திருக்கிறது.

வைன், பூக்கள்,அரிசி தானியங்கள் ஆகியவற்றை வைத்து வழிபாடு நடத்தப்பட்டிருக்கிறது.

Image Courtesy

லைட் போட்டா போதும் :

லைட் போட்டா போதும் :

பல் வலி வராமல் தவிர்க்கவும், வந்த வலியை குறைக்கவும் அவர்கள் பின்பிற்றிய நடைமுறை என்ன தெரியுமா கழிவறை கடவுளுக்கு விளக்கு வைப்பது. 1930 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எம்ப்ரீ என்ற ஆராய்ச்சியாளர் ஜப்பான் நாட்டு மக்களின் வாழ்க்கை முறைப்பற்றி ஆய்வினை மேற்கொள்கிறார்.

Image Courtesy

பதிவு :

பதிவு :

அவர் ஆய்வு மேற்கொள்ள தேர்ந்தெடுத்த இடம் ஜப்பான் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைத்திருக்கும் க்யூஷூ என்கிற தீவு. அங்கே இருந்த ஒரு வீட்டின் கழிவறையில் நெட்டில் மர இலைகளால் கழிவறையின் வாயில் மற்றும் ஜன்னலை எல்லாம் அலங்கரித்திருக்கிறார்கள். கூடவே சில பூக்களும். அதோடு உள்ளே மோச்சி எனப்படுகிற வேக வைத்த அரிசி கேக் வைக்கப்பட்டு இருக்கிறது.

விசாரித்தும் ஆராய்ந்தும் பார்த்ததில் அந்த வீட்டில் வாழ்ந்த நபருக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது அதனை போக்க வேண்டி கழிவறைக்கடவுளின் நடந்த பிரார்த்தனை தான் இது

Image Courtesy

கதைகள் :

கதைகள் :

இந்த கழிவறைக்கடவுளைப் பற்றி வேண்டுதலுக்காக பல கற்பனைக் கதைகள் சொல்லப்படுகிறது. சீனாவில் இதனை வயலெட் லேடி என்று அழைக்கிறார்கள். சிலர் மாவ் கு என்றும் சொல்கிறார்கள்.

இவர் லெட்ரினின் மூன்றாவது மகள். லெட்னின் மனைவியால் மிகவும் துன்புறுத்தப்பட்டு கழிவறையிலேயே கொல்லப்படுகிறாள்.ஒவ்வொரு ஆண்டும் அந்த சிறுமியை மனதில் நினைத்து வீட்டிலேயே ஒரு பொம்மையை செய்து வழிபடுகிறார்கள். ஆண்டின் முதல் மாதத்தில் பதினைந்தாவது நாள் இந்த சிறுமிக்கு விழா கொண்டாடப்படுகிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Shocking History Of Toilet God

Shocking History Of Toilet God
Story first published: Thursday, April 5, 2018, 10:36 [IST]