இதெல்லாம் போலினு சொன்னா யாரும் நம்பவே மாட்டாங்க!

Posted By:
Subscribe to Boldsky

உண்மையைச் சொல்லி சிக்குபவர்களை விட பொய்யைச் சொல்லி அதனை சமாளிக்கத்தெரியாமல் மழுப்பத்தெரியாமல் குட்டு வெளிப்பட்டு சிக்கியவர்கள் இங்கு ஏராளம். ஏன் நமக்கே கூட அந்த அனுபவங்கள் இருக்கும்!

பொய்களைப் பற்றி நிறைய கட்டுக்கதைகளை கேள்விப்பட்டிருக்கும். பல காலங்களாக ஏன் நம் தாத்தா பாட்டி காலத்திலிருந்து சில புரளிகள் கிளம்பி இன்று வரை தொடரும் சம்பவங்களும் இருக்கிறது. அதனால் சில சமயத்தில் ஏற்படுகிற கூச்சல் குழப்பங்களும் திடீர் பிரபலங்களும் இங்கே நிறைய இருக்கிறார்கள்.

ஃபேக் என்ற சொல்லை வைத்தே கிண்டலடித்து வளர்ந்து நிற்கிற பிரபலங்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். சரி, இங்கே பொய்களைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாப் ஸ்டார் :

பாப் ஸ்டார் :

2011 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள ஒரு பாடகர்கள் அடங்கிய AKB48 என்ற குழு போலியான ஒரு பொம்மையை உருவாக்கி அதற்கென்று ஓர் உருவம், ஓர் குரலை வடிவமைத்து தங்கள் ஆல்பங்களில் பாட வைத்தார்கள்.

அந்த பொம்மைக்கு ஏமி எகுச்சி என்றும் பெயரிட்டார்கள். பல ஆண்டுகள் கழித்தே ரசிகர்கள் தொடர்ந்து சந்தேகத்தை எழுப்பவே இது பொம்மை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.அதே குழுவில் இடம்பெற்ற பெண்களின் புருவம், மூக்கு,வாய் ஆகியவற்றைக் கொண்டே ஏமி உருவாக்கப்பட்டிருந்தாள்.

Image Courtesy

ட்ராஃபிக் :

ட்ராஃபிக் :

இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த போது போலியான ரேடியோ ட்ராஃபிக் மூலமாகவும் போலியான படையெடுப்பத் திட்டங்கள் இப்படித்தான் எதிரிப்படை நம்மை தாக்கும் என்று சொல்லியும் ஹிட்லரை ஏமாற்றியிருக்கிறார்கள்.

போர் ஆரம்பித்து ஏழு வாரங்களில் மிகவும் உச்சக்கட்டத்திற்கு செல்லும் வரை அதாவது எதிரிப்படைகள் தன்னை சுற்றி வளைக்கும் வரையிலும் போர் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்ததாகவே நம்பினார் ஹிட்லர்.

Image Courtesy

 நான் ஒரே பிஸி... :

நான் ஒரே பிஸி... :

தொடர்ந்து பொய்களைச் சொல்லி விடுமுறை கேட்பதால் இப்போதெல்லாம் இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை எடுத்தாலே மருத்துவர் சான்றிதழுடன் வரச்சொல்லிவிடுகிறார்கள். மருத்தவரிடம் விஷயத்தைச் சொல்லி புரியவைத்து விடுப்புச் சான்றிதழை வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

இப்படி வருத்தப்படுபவர்களுக்காகவே அலிபி என்ற நிறுவனம் வந்திருக்கிறது. இவர்கள் விடுமுறைக்கு மட்டுமல்ல க்ளைம் செய்வதற்கு அனைத்து விதமான போலி பில்களும் இவர்களே ஏற்பாடு செய்கிறார்கள். அதோடு நான் ரொம்ப பிஸியா இருக்கேன், ஆபிஸ்ல பயங்கர வேல என்று வெளியே சொல்லிக் கொள்ள.... மொக்கை போடுபவர்கள் மற்றும் இக்கட்டான சூழலிருந்த தப்பிக்க ரெஸ்க்யூ காலும் செய்வார்களாம்! நாம் ஒரு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும். அதில் எத்தனை முறை, எவ்வளவு கால இடைவேளியில் போன்ற தகவல்களை அனுப்பிவிட்டால் அவர்கள் போன் செய்து டார்ச்சர் செய்வது போல நடித்து விடுவார்கள்

 இது மரமா? :

இது மரமா? :

1917 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது ஜெர்மானியர்கள் 25 அடி உயரம் கொண்ட மரத்தை போலியாக உருவாக்கி அதனை எதிரிப் படையினர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் வைத்தார்கள். அங்கு தங்க வைக்கப்பட்ட வீரர்கள் எதிரிப்படையினரின் அசைவுகளை ரகசியமாக கண்காணித்து தகவல்களை அனுப்பியிருக்கிறார்கள்.

ஒரு நாள் இரவு வரை காத்திருந்து அந்த இடத்தில் இருந்த மரத்தை விழச்செய்து அதே போலதொரு மரத்தை உருவாக்கி வைத்துவிட்டார்கள். போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் இது நடந்திருக்கிறது ஆங்காங்கே பீரங்கிகள் மற்றும் குண்டுகளின் சத்தங்கள் கேட்டதால் கோடாரியைக் கொண்டு மரத்தை அறுக்கும் இந்த ஓசை கேட்கவில்லையாம்.

Image Courtesy

 அமானுஷ்யம் :

அமானுஷ்யம் :

ராபர்ட் கென்னத் வில்சன் என்பவர் தான் கடலில் குளிக்கச் சென்ற போது தன்னைத் துறத்திய ஓர் அமானுஷ்ய உருவம் என்று ஒரு படத்தை வெளியிட்டார். பல ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து விட்டது என்று சொல்லப்பட்ட டைனோசர் அது என்றும், புதிய விலங்கினம் என்றும் பலரும் விவாதித்தார்கள். இறுதி வரை அது கண்டுபிடிக்கப்படவேயில்லை. அதன் பிறகு அப்படியொரு விலங்கை யாரும் பார்க்கவும் இல்லை. ஆண்டுகள் உருண்டோடியது

இந்நிலையில் ராபர்ட் கென்னத் மரணப்படுக்கையில் வீழ்ந்தார். என்ன நினைத்தாரோ பல ஆண்டுகளுக்கு முன்னர் அமானுஷ்ய உருவம் என்னை துரத்தி வந்ததாக வெளியிடப்பட்ட படம் போலியானது. 45 செ.மீ நீலமும் 30 செ.மீ உயரமும் கொண்ட ஒரு பொம்மை. அதற்கு போலியாக தலையை செட் செய்து புகைப்படம் எடுத்தேன் என்று ஒப்புக் கொண்டார்.

Image Courtesy

 போலி வீடுகள் :

போலி வீடுகள் :

ப்ரூக்லின் மற்றும் லண்டன் நகரங்களில் பல வீடுகள் போலி வீடுகளாக இருந்திருக்கிறது. அங்கிருந்து பாதாள அறைகள், புகை போக்கி வழியாக தப்பிக்கும் வழிகள் எல்லாம் இருந்திருக்கிறது.அதனை யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தத்ரூபமாய் மாற்றி வைத்திருந்தார்கள் அதே நேரத்தில் அதனை பயன்படுத்தவும் செய்தார்கள்.

Image Courtesy

 பாம் :

பாம் :

இராக் பாதுகாப்பு படையினர் குண்டு இருக்குமிடத்தை கண்டுபிடிக்க ADE 651 என்ற கருவியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த கருவியை வைத்து ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து கொண்டே தான் இருந்தது.

அந்த கருவியை ஆராய்ந்து பார்த்த போது தான். அது போலியாக தயாரிக்கப்பட்ட கருவி என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது வெறும் கயிறு போல, நீளமாகிறதே தவிர ஒன்றையும் கண்டுபிடிக்காது என்றார்கள். இந்த போலியான கருவியை இராக் அரசாங்கம் 85 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியிருக்கிறது.

Image Courtesy

பேருந்து நிலையம் :

பேருந்து நிலையம் :

ஜெர்மனியில் முதியவர்களுக்கு அல்சைமர் என்ற குறைபாடு பிரச்சனை பாதிப்பு அதிகளவு இருந்திருக்கிறது. அதற்காக ஆங்காங்கே போலியான பேருந்து நிறுத்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது மருத்துவமனைகளுக்கு அருகில் நிறைய பேருந்து நிறுத்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பஸ் ஸ்டாண்டுல நின்னா வீட்டுக்கு வந்திடலாம் என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பதால் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் செல்ல வழித் தெரியவில்லை என்றால் பேருந்து நிலையத்தில் நிற்கிறார்கள். பின் அங்கிருந்து பார்ப்பவர்கள் தகவல் சொல்ல போலீஸ் மீட்டுச் சென்று காப்பகத்திலோ அல்லது உரியவரிடத்திலோ ஒப்படைக்கிறார்கள்.

Image Courtesy

முட்டை :

முட்டை :

சீனாவில் படுஜோராக போலி முட்டை தயாரிக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க கெமிக்கல்களால் உருவாக்கப்படுகிறது. உண்மையான முட்டையை விட இந்த போலி முட்டை பல மடங்கு விலை குறைவானதாக இருப்பதால் நிறைய லாபம் பார்க்க முடிகிறது.

ஒரு நபரே ஒரு நாளைக்கு 1500 போலி முட்டைகள் வரை தயாரிக்கலாமாம்.

Image Courtesy

பிஎம்டபியூ கார் :

பிஎம்டபியூ கார் :

பிஎம் டபியூ எம் 5 ரக காரில் என்ஜின் சத்தம் சுத்தமாக கேட்காது. ஓட்டுநரின் வசதிக்காக ட்வின் டர்போ வி8 என்ஜின் மூலமாக போலியாக சத்தம் வரும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள்.

Image Courtesy

ஆம்புலன்ஸ் :

ஆம்புலன்ஸ் :

ரஷ்யாவில் இருக்கும் பணக்காரர்கள் நகரத்தின் ட்ராபிக்கை சமாளிக்க புதுமையான வழியை கையாள்கிறார்கள். இவர்கள் போலியான அம்புலன்ஸை வாடகைக்கு பிடித்து செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வார்களாம்.

வழக்கமான ஆம்புலன்ஸ் கட்டணத்தை விட நான்கு மடங்கு அதிக தொகை இதற்கு செலுத்த வேண்டும். உள்ளே நார்மலான சோஃபாக்கள் போடப்பட்டிருக்கும் ஒரு ஃப்ளாட் டிவியும் இடம்பெற்றிருக்கும். ஒரு மருத்துவக்கருவி கூட இருக்காது.

Image Courtesy

ஃபேக் ஐடி :

ஃபேக் ஐடி :

கனடாவினை தலைமையிடமாக கொண்டு இயங்கக்கூடிய ஒர் டேட்டிங் சைட் தான் ஆஷ்லி மடீசன். நாடுகள் கடந்து இதனை பலரும் பயன்படுத்துகிறார்கள். இங்கு வேலை செய்து வந்த பெண் நிறுவனத்தின் மீது 21 மில்லியன் டாலர் தனக்கு வழங்க வேண்டுமென்று வழக்கு தொடுத்தார்.

காரணம் கேட்ட போது நீதிபதி மட்டுமல்ல எல்லாருமே அதிர்ந்து தான் போனார்கள். டேட்டிங் சைட்டில் இடம்பெற்றிருக்கிற பெண்கள் பெரும்பாலனவர்கள் போலியானவர்கள் தான். 100க்கும் மேற்பட்ட செக்ஸி வுமன் ப்ரோஃபைல் உருவாக்கி சாட் செய்ததில் எனது கை பயங்கரமாக வலுவிழுந்து விட்டது அதற்காகத்தான் இந்த நஷ்ட ஈடு என்றார்.

ஆப்பிள் நிறுவனம் :

ஆப்பிள் நிறுவனம் :

புகழ்ப்பெற்ற ஆப்பிள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் சேர்கிற புது ஆட்களை முதலில் பொய்யான ப்ராஜெக்டில் தான் பணியாற்ற வைப்பார்களாம். அவர்கள் மீது நம்பிக்கை வந்த பிறகு அவர்களின் வேலை பிடித்துப் போன பிறகு தான் மற்ற வேலைகளை கொடுப்பார்களாம்.

சீனாவில் உள்ள ஹெபி என்ற இடத்தில் இருக்கக்கூடிய மியூசியம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இழுத்து மூடப்பட்டது, காரணம் அங்கு வைக்கப்பட்டிருந்த நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் போலியானது என்று கண்டுபிடித்தது தான்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Shocking Fake News Around the world

Shocking Fake News Around the world
Story first published: Thursday, April 5, 2018, 15:40 [IST]