கால் செண்டர்களில் நடக்கும் பரிதாபங்கள் - 15 வாக்குமூலங்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

உலகிலேயே கடினமான வேலைகள் என்று ஒரு பட்டியல் தேர்வு செய்தால், அதில் முதல் இடம் பிடிக்காவிட்டாலும், முதல் பத்து இடங்களில் நிச்சயம் ஒரு இடத்தைப் பிடிக்கும் இந்த கால் செண்டர் வேலை. பேச யாருக்கு தான் பிடிக்காது... ஒரு மாதம் மட்டும் கால் செண்டரில் வேலை செய்து பாருங்கள் பேச மட்டுமல்ல, போனை கையில் எடுக்கவே உங்களுக்கு பிடிக்காது.

Secret Confessions From People Who Work At Call Centers!

பிரச்சனை செய்யும் கால்களை காட்டிலும், அலுச்சாட்டியம் செய்யும் கால்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பொழுதுபோகாமல் கால் செய்து பேசுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அவர்கள் எப்படி தான் வேலை செய்கிறார்கள்.

தாங்களும் சில கோக்குமாக்கு வேலைகள் செய்வோம் என்று கன்ஃபெஷன் இணையதளம் ஒன்றில் சில பகீர் வாக்குமூலங்களை அளித்துள்ளனர் கால் செண்டரில் வேலை செய்த, செய்துக் கொண்டிருக்கும் ஊழியர்கள் சிலர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நான் ஒருபோதும் அனைவரிடமும் அடுத்தடுத்த அழைப்புகளில் ஒரே மாதியான உச்சரிப்பில் பேசியது இல்லை. இது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயமாகும். மேலும், இது என்னை நானே மேம்படுத்திக் கொள்ளவும், சில முறை என்னுடன் பேசும் கஸ்டமர்களை ஈர்க்கவும் கூட உதவுகிறது.

#2

#2

நான் ஒரு கேபிள் டிவி ஆப்ரேட்டிங் கால் செண்டரில் பணிபுரிந்து வந்தேன், என்னுடன் கஸ்டமர்கள் யார் எல்லாம் பணிவாக, கனிவாக பேசுகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் கூடுதல் சலுகை வழங்கி மகிழ்விப்பேன். அந்த சலுகை நான் தான் வழங்கினேன் என்று கஸ்டமருக்கும் தெரியாது, யாருக்கும் தெரியாது.

#3

#3

சில கஸ்டமர்கள் நாம் சொல்லும் தீர்வை காது கொடுத்து கேட்காமல் காச்சுமூச்சு என கத்திக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் பதில் பேசி மாளாது என அறிந்தால், உடனே காலை மியூட் செய்து விட்டு வேறு வேலைகள் பார்க்க துவங்கிவிடுவேன்.

#4

#4

நான் ஒரு கால் செண்டரில் பணிபுரிந்து வருகிறேன், என்னிடம் யாராவது கஸ்டமர் ஹாட்டாக பேசினால், அவர்களை ஃபேஸ்புக்கில் தேடிப்பிடித்து மெசேஜ் செய்வேன். அவர்களுடன் சில நாட்கள் பேசி பிறகு நட்பை துண்டித்துவிடுவேன்.

#5

#5

நான் பணிபுரியும் கால் செண்டரில் என்னுடன் பேசும் கஸ்டமர்களில் யாருக்கேனும் ஆங்கிலம் தெரியவில்லை அல்லது அழுதபடி பேசினார்கள் எனில், உடனே காலை துண்டித்து விடுவேன். இத்தகைய கஸ்டமர்களுடன் பேசுவது மிகவும் கடினம்.

#6

#6

என்னுடன் யாரேனும் கஸ்டமர் நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருந்தார், எனில் நான் அவருடன் பேசிக் கொண்டே பார்ன் வீடியோக்கள் பார்க்க துவங்கிவிடுவேன். இதனால், அவர்கள் t திட்டிப் பேசினாலும் அது மண்டைக்குள் ஏறி கோபவம் வர செய்யாது, என் வேலையும் பாதுகாப்பாக இருக்கும்.

#7

#7

என்னிடம் எந்த கஸ்டமர் என்ன சந்தேகம் கேட்டாலும், நாங்கள் தான் சிறந்தவர்கள் என்று கூறி அவர்களை மண்டையை கழுவ செய்வேன். ஆனால், நான் வேலை செய்யும் கால் செண்டரில் நான் எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கிறேன் என்று எனக்கு மட்டுமே தெரியும்.

#8

#8

ஒருமுறை கஸ்டமர் ஒருவரிடம் ஹலோ, நான் உங்களுக்கு என் மூலம் என்ன உதவி வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக, நான் உங்களை என்ன செய்ய முடியும் என்று, என் போனை நோண்டிக் கொண்டே கூறிவிட்டேன். அவர் வாய்விட்டு சிரிக்க, என் மானம் கப்பலேறி போனது.

#9

#9

என்னிடம் யாராவது கஸ்டமர் வேண்டும் என்றே கத்தி கூச்சலிட்டு பேசினால், அவருக்கு எந்தவொரு சலுகை விபரங்களும் போகாதபடி செய்துவிடுவேன். இது தவறுதான் எனிலும், சிலர் கஸ்டமர்கள் நம்மை திட்டுவதை காட்டிலும், நமது குடும்பத்தையும் சேர்ந்து திட்டும் போது, இதெல்லாம் ஜுஜுபி என்பது போல தான் இருக்கும்.

#10

#10

எங்கள் அணியில் யாராவது சில கஸ்டமர்கள் தொடர்ந்து கால் செய்து திட்டுவதை அறிந்தால், அந்த காலை அனைவரும் மியூட் செய்துவிடுவது உண்டு. மேலும் சில நேரத்திற்கு எந்தவொரு காலும் ஏற்காமல் நீண்ட நேரம் மியூட்டில் போட்டுவிடுவோம்.

#11

#11

ஒருமுறை நான் லேட் நைட் கால் செண்டரில் வேலை செய்துக் கொண்டிருந்த போது, என்னுடன் வேலை செய்துக் கொண்டிருந்த ஆண் ஒருவர் கஸ்டமருடன் பேசிக் கொண்டே சுய இன்பம் கண்டுக் கொண்டிருந்தார். நான் அங்கே வந்ததை கண்ட அவர் பயந்து ஓடிவிட்டார்.

#12

#12

எனக்கு சரியாக பேச முடியாது, ஆனால், கால் செண்டரை தவிர வேறெங்கும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. ஆகையால், பேசும் போது ஏற்படும் அந்த திணறலை மேனேஜருக்கு தெரியாமல் பாதுகாத்து வந்தேன். ஆனால், ஒவ்வொரு முறையும் நான் திணறுவதை என் மேனேஜர் எப்படியோ அறிந்து, என்னை அழைத்து அறிவுரை கூறிக் கொண்டே இருப்பார்.

#13

#13

எனக்கு ஆரம்பத்தில் காது கேட்கும் திறன் நன்கு தான் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக என் காது கேட்கும் திறன் குறைந்து வருகிறது. இதை யாரிடமாவது கூறினால் வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் நான் கூறுவதில்லை. அலுவலகத்திலும் கூட கொஞ்சம் கோபக்கார ஆள் போல காண்பித்துக் கொண்டு சரியாக முகம் கொடுத்து பேசாமல் தப்பித்து வருகிறேன்.

#14

#14

ஒருமுறை இரவு கஸ்டமர் பெண்மணி ஒருவரிடம் பேசிக் கொன்ன்டிருந்தேன். அவருக்கு இருந்த அனைத்து சந்தேகங்களும் தீர்த்த பிறகு அவர் ஐ லவ் யு என்று கூறினார் நான் திகைத்து போனேன். அதற்கு அவர் எப்போதுமே தான் பேசி முடித்த பிறகு ஐ லவ் யு கூறுவது வழக்கம் என்று கூறினார். ஆனால், என் வாழ்நாளில் ஒரு பெண்ணிடம் இருந்த அந்த வார்த்தை கேட்டது அதுவே முதல் முறையாகும்.

#15

#15

நான் வேலை செய்யும் கால் செண்டரில் எங்கள் கால்கள் மானிட்டர் செய்ய மாட்டார்கள். ஆகையால், ஒரு ரேடியோ ஸ்டேஷனுக்கு வழக்கமான நேயர் போல கால் செய்து பேசி அவர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டிருந்தேன். இதை நான் வேலையை விட்டு வரும் வரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

#16

#16

என்னிடம் கஸ்டமர்கள் யாரேனும் கோபமாக பேசி மேலாளருடன் பேச கால் கனக்ட் செய்ய கூறினால், வெளியூர் சேர்ந்த மேலாளர் யாருக்காவது கனக்ட் செய்துவிடுவேன். எப்படியாவது பேசி, முட்டித் தீர்த்துக் கொள்ளட்டும், நம்மளை விட்டால் போதும் என்பது போல இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secret Confessions From People Who Work At Call Centers!

Life at a call center is not easy, the long hours, frustrated customers, change in shifts, the one working has to take a lot of pain in solving customers issues. and here is Secret Confessions From People Who Work At Call Centers!