ஏலியன் வசிக்கிற இடம் இதுவா? அசத்தல் புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இதுவரை நீங்கள் பார்த்திராத வித்யாசமான படங்களை பார்க்கப்போகிறீர்கள். வித்யாசமான படங்கள் என்பதை விட, நீங்கள் அன்றாடம் பார்க்கும், அல்லது ஏற்கனவே பல முறை பார்த்த இடங்கள், படங்கள்,பொருட்களை வித்யாசமான கோணத்தில் படம் பிடித்துக் காட்டினால் எப்படியிருக்கும்.

இந்த ஒவ்வொரு புகைப்படத்திற்கு பின்னாலும் பலரது உழைப்பு இருக்கிறது என்பதை உங்களுக்கு உணர்த்தும் வகையில் இருக்கிறது. உங்களை ஆச்சரியப்படுத்தும், புகைப்படங்களை பார்க்க தொடருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இந்தைப் பார்த்தால் எப்படியிருக்கிறது. ஈசல் போல, நிமிர்ந்து நிற்கும் தூண், மெழுகுத் திரி என்று வரிசையாக ஏதேதோ நினைத்தாலும் கடைசியில் அப்படியிருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகம் தான் வலுக்கிறது தானே... உண்மையில் இது என்ன தெரியுமா?

பூமியிலிருந்து நெருப்பைக் கக்கியபடி விண்வெளிக்கு செல்லும் ராக்கெட். இந்த புகைப்படம் பூமியை விட்டு மேலே செல்லும் போது எடுக்கப்பட்டிருக்கிறது நாசா வெளியிட்டிருக்கும் இந்தப் படத்தை இதுவரையில் நாம் பார்த்திருக்க மாட்டோம்.

Image Courtesy

#2

#2

இந்த இடத்தை பார்த்தால் பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போல இருக்கிறது அல்லவா? யாரும் அவ்வளவு சுலபமாக செல்ல முடியாத, ப்ரைவேட் ஏரியாவாக இருக்குமா? வரிசையாக இவ்வளவு கதவுகள் எங்கே இருக்கிறது இது போன்ற இடம், இங்கே யார் வருவார்கள், இங்கே என்ன செய்வார்கள்.

சாதரண மக்களுக்கு இங்கே உள்ளே சென்று பார்க்க அனுமதி கிடைக்குமா? என்று யோசிப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ் இங்கே சாதரண மக்கள் விவிஐபி என யாருக்குமே அனுமதி கிடையாது. மனிதர்கள் என்ன விலங்குகளுக்கு கூட அனுமதியில்லை வேண்டுமானால் பூச்சியினங்கள் தங்கலாம்!

என்ன பூச்சிகள் தங்குவதற்கு இவ்வளவு பெரிய வீடா என்று ஆச்சரியப்படாதீர்கள். இது என்ன தெரியுமா? கிட்டாரின் உள் பகுதி.... என்ன நம்ப முடியவில்லையா மேலே கம்பி தெரிகிறது பாருங்கள்.

Image Courtesy

#3

#3

எப்போது கடைசி நேரத்தில் செல்வது தான் பலரது வாடிக்கையாக இருக்கும். இந்த தியேட்டர் செல்லும் போது படம் ஆரம்பித்து ஐந்து நிமிடம் கழித்துச் சென்றால் தான் தியேட்டருக்கு போன மாதிரி இருக்கு என்பார்கள் சிலர். இன்னும் சிலரோ இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்று தியேட்டர் வாசலில் தவம் கிடப்பர்.

இங்கே இன்னும் கொஞ்சம் முன்கூட்டியே சென்றுவிட்டார் போல..... தியேட்டரில் ஸ்க்ரீன் மற்றும் சேர் எல்லாம் செட் செய்வதற்கு முன்னால் தியேட்டர் எப்படியிருக்கும் என்று பாருங்கள்!

Image Courtesy

#4

#4

ஆண்களே இந்தப் படத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? தினமும் ஷேவிங் க்ரீம் பயன்படுத்தியிருப்பீர்கள். அதன் உள்ளே என்ன மெக்கானிசம் என்று உங்களுக்குத் தெரியுமா? இதோ இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Image Courtesy

#5

#5

சூப்பர் ஸ்டார் ஸ்டைலாக இந்த லைட்டரை ஒரு ஆட்டு ஆட்டி நெருப்பை பற்ற வைப்பார். அவரது ஸ்டைலுக்காகவே விசில் சத்தங்களும் கை தட்டல்களும் பறக்கும். நாம் அதனை பார்க்கும் போது கூட ஆச்சரியமாக இருக்கும். உள்ளிருந்து எப்படி நெருப்பு வருகிறது. நடுவில் கேப் வேறு இருக்கிறதே.... என்று குழப்பிக் கொண்டவர்களுக்காக ஜிப்போ லைட்டரின் உள்ளே எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.

Image Courtesy

#6

#6

வெடிகுண்டு இன்று பல விதமான நவீனமய தொழில்நுட்பங்களுடன் வந்துவிட்டது. 100 கி.மீ ஏன் அதற்கு அப்பாலும் சென்று தாக்கக்கூடிய ஏவுகனைகள் இருக்கின்றன என்றாலும் உள்ளே எல்லாம் ஒன்று தான்.

Image Courtesy

#7

#7

தியேட்டர்,மால் ,ஹோட்டல் என்று எங்கு சென்றாலும் இப்போது எஸ்கலேட்டர் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். லிஃப்ட் மீதிருந்த மோகம் குறைந்து தற்போது பலரும் எஸ்கலேட்டர் பக்கம் வந்தாச்சு.

எஸ்கலேட்டர் கட்டும் போது எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.

Image Courtesy

#8

#8

இது என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா? நீங்கள் என்ன யூகித்திருந்தாலும் நீங்கள் சற்றும் எதிர்ப்பார்க்காத பதில் தான் இப்போது உங்களுக்கு கிடைக்கப்போகிறது.

கார் மற்றும் பைக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிற டயரின் உள் பாகம் தான் இது.

Image Courtesy

#9

#9

ஃபர்பி எனப்படும் இந்த வகை பொம்மை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. உடல் முழுவதும் புஸுபுஸுவென்று ஃபர்வுடன் இருப்பதால் பலரும் இதனை விரும்புவர் இந்த பொம்மை பல வண்ணங்கள் கிடைக்கிறது. கண்களைத் தவிர மற்ற அனைத்து பாகங்களும் ஃபர்ரினால் நிறைந்திருக்கும்.

இப்போது அந்த ஃபர் இல்லாமல் அதன் உருவம் எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.

Image Courtesy

 #10

#10

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கிட்டேயிருக்கு என்று புலம்பாத வாகன ஓட்டிகள் யாருமே இருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் இன்னைக்கு என்ன ஏறிருக்கா எவ்ளோ ஏறிருக்கு என்று பதைபதைப்புடனே இருப்பவர்கள் இந்த படத்தை பாருங்கள்.

பெட்ரோல் பங்க் ஆரம்பிப்பதற்கு முன்னால் எப்படி பெட்ரோலை நிரப்புகிறார்கள் என்று தெரியும்.

Image Courtesy

#11

#11

விசா க்ரிடிட் கார்ட் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஒருவரே நான்கைந்து கிரிடிட் கார்ட் வைத்திருப்பதும் உண்டு. நான்கைந்து பயன்படுத்தினாலும் அதன் உள்ளே எப்படி செயல்படுகிறது என்று இதுவரை யாராவது பார்த்திருக்கிறீர்களா?

Image Courtesy

#12

#12

கோல்ஃப் விளையாட்டு இங்கே அவ்வளவாக விளையாடப்படுவதில்லை, அதைப் பற்றிய விழிப்புணர்வும் பலருக்கும் இருப்பதில்லை. அவ்வப்போது திரைப்படங்களில் பார்ப்பதுடன் அதற்கும் நமக்குமான பந்தம் முடிந்து விடுகிறது. இது மக்கள் மத்தியில் பரவாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் இந்த கோல்ஃப் விளையாட்டு பணக்காரர்களின் விளையாட்டு என அடையாளப்படுத்தப்பட்டது தான்.

சரி, விஷயத்திற்கு வருவோம். கோல்ஃப் பந்தின் உள் பகுதி இப்படித் தான் இருக்குமாம்.

Image Courtesy

#13

#13

இது ஏலியன் வீடு..... என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் காத்திருந்து இதனை புகைப்படமெடுத்திருக்கிறார்கள்.

அட, அப்படியா என்று ஆச்சரியப்படாதீர்கள், இந்தப் படம் ஏர் மேட்ரெஸ். உள்ளே காற்றை செலுத்தியது, உப்பி மெத்தை போல காட்சியளிக்கும் மேட்ரஸின் உள் பகுதியை படம் பிடித்திருக்கிறார்கள். இதுவரை யாரும் இப்படியொரு கோணத்தில் மேட்ரஸ் பார்த்திருக்க மாட்டார்கள்.

Image Courtesy

#14

#14

பூல் டேபிள், பெரிய பெரிய ஹோட்டல்களில் இந்த கேம் இருக்கும். இரண்டு பெரிய குச்சிகளை வைத்து விளையாட வேண்டும். நமக்கு விளையாட தெரிகிறதோ இல்லையோ குச்சியை கையில் பிடித்து குறிபார்ப்பது போல போட்டோக்களை வரிசையாக எடுத்துக் கொள்வோம் அல்லவா? அந்த டேபிளின் உள் பாகம் இது.

Image Courtesy

#15

#15

தினமும் நீங்கள் பல் விளக்கப்பயன்படுத்தும் டூத் பேஸ்ட் தான் இது. பல வண்ணங்களில் டூத் பேஸ் கிடைக்கிறது தான் என்றாலும் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் எப்படி பல வண்ணக்கலவையாக பேஸ்ட் வெளிவருகிறது என்று ஆச்சரியப்பட்டால் இந்த படத்தில் உங்களுக்கு விடை கிடைத்திடும்.

Image Courtesy

#16

#16

பிரியாணி மற்றும் பிற மசாலா உணவுகளில் அவசியம் சேர்க்கப்படுகிற ஒன்று பட்டை. எப்போதும் நாம் பார்க்கிற பட்டை டார்க் பிரவுன் நிறத்தில் இருக்கும்.மரத்திலிருந்து எடுக்கப்பட்ட உடனே பட்டை எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.

Image Courtesy

#17

#17

காற்றாலைகளில் ராட்சத இறக்கைகளுடன் காற்றின் வேகத்திற்கு ஏற்ப சுழன்று கொண்டிருக்குமே அந்த ஒரு இறக்கையின் நீளத்தை பாருங்கள்.

Image Courtesy

#18

#18

பவுலிங் கேம் விளையாண்டிருக்கிறீர்கள் தானே, பவுலிங் என்றதும் கிரிக்கெட் பவுலிங் அல்ல பெரிய பந்தினை உருட்டி தூரத்தில் நின்றிருப்பதை விழச் செய்ய வேண்டுமே.....

ஒவ்வொரு முறையும் எப்படி பவுலிங் ஆலி வைக்கப்படுகிறது, நாம் உருட்டி விட்ட பால் எப்படி மீண்டும் ரொட்டேசனுக்கு வருகிறது என்று பல முறை ஆச்சரியப்பட்டிருப்போம். இதோ உள்ளே என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

Image Courtesy

#19

#19

உடலில் எங்கே என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க ஸ்கேன் செய்யப்படும். அதிலும் பல நவீங்கள் வந்துவிட்டன. சிடி ஸ்கேன் எல்லாருக்கும் பரிச்சயமானது தானே.... இதோ இதுவும் சிடி ஸ்கேன் மெஷின் புகைப்படம் தான். மேலே பொருத்தப்படுகிற கவர் இல்லாமல் இருக்கிறது.

Image Courtesy

#20

#20

கண் தானம் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்கு பரவலாக இருக்கிறது. கண் தானம் செய்த பிறகு அந்த கண்கள் பார்வையில்லாத ஒருவருக்கு பொருத்தப்படுகிறது என்று தெரியும். அப்படி பொருத்தப்பட்ட கண் எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.

இது தானம் பெற்ற ஒரு கண்ணை பொருத்தியவுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

#21

#21

மொபைல் போன் டவர் உட்பட பல டவர்கள் எப்படி பொருத்துவார்கள் என்று ஆச்சரியப்பட்டிருப்போம். இவ்வளவு உயரமானதை எப்படி கையாள்வார்கள் என்று திகைத்தவர்களுக்காக இந்த படம்!

Image Courtesy

#22

#22

உடல் முழுவதும் மிகவும் நுண்ணிய ரத்த நாளங்கள் இருக்கிறது. அதன் வழியாகத்தான் உடல் முழுவதும் ரத்தம் சென்று வருகிறது என்று படித்திருப்போம். இப்போது கைகளில் இருக்கிற ரத்த நாளங்கள் எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Rare And Unseen photos

Rare And Unseen photos
Story first published: Monday, January 29, 2018, 12:47 [IST]