For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  வரலாற்றில் நிகழ்ந்த சில சுவாரஸ்ய சம்பவங்களின் புகைப்படத் தொகுப்பு!

  |

  வரலாற்று நிகழ்வுகள் பலவற்றையும் இன்று புத்தகங்களில் படித்து வருகிறோம். அந்த காலத்தை தத்ரூபமாக எடுத்துக் காட்டுவதற்கு அந்த நாட்களை நினைவுப்படுத்த ஓவியங்கள் மூலமாக அதனை மீட்டுக் கொண்டு வருகிறோம். பல ஆண்டுகள், பல வகையான மனிதர்களைக் கடந்து வருவதற்குள்ளாகவே அதில் பல்வேறு கற்பனைகளை சேர்த்து தங்கள் இஷ்டத்திற்கு மாற்றிக் கொள்கிறார்கள்.

  உண்மையில் அன்றைக்கு நடந்த நிகழ்வு ஒன்றாகவும், இப்போது நாம் கேட்கிற கதை வேறுபட்டதாக இருக்கிறது. அதன் சாரம்சம் ஒன்றாக இருந்தாலும் முன்னும் பின்னும் பல்வேறு சேர்க்கைகள் இடம் பிடித்து விடுகின்றன. இன்று நாம் சர்வ சாதரணமாக பயன்படுத்தக்கூடிய விஷயங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்திய போது பல்வேறு எதிர்ப்புகளையும் சந்தித்திருப்பார்கள். அதையும் தாண்டி அதில் பல சுவாரஸ்யங்கள் நிரம்பியிருக்கும் வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  புல்லட் ப்ரூஃப் :

  புல்லட் ப்ரூஃப் :

  துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க இன்றைக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் பயன்பாடு என்பத்து அத்தியாவசியமான, கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் இதனை முதன் முதலில் அறிமுகப்படுத்திய போதும், அதனை கண்டுபிடித்து சோதனை நடத்திய போது பல்வேறு இடைஞ்சல்கள் வந்திருக்கின்றன.

  1538 ஆம் ஆண்டு ஃப்லிப்போ நெக்ரோலி என்பவர் இந்த புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டினை கண்டுபிடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் சில்க் மற்றும் இரும்பு கொண்டு இந்த ஜாக்கெட் தயாரிக்கப்பட்டது. 1923 ஆம் ஆண்டு வாசிங்டனில் அதை பரிசோதித்த போது எடுத்தப்படம்.

  Image Courtesy

  மாட்டு வண்டி :

  மாட்டு வண்டி :

  பார்க்க என்னவோ கண்ணுக் குட்டி வண்டி மாதிரி தான் தெரிகிறது. மாட்டு வண்டியை இன்றைய குழந்தைகள் பார்ப்பதே அரிதாகி விட்டது. இது 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மக்கள் பயன்படுத்திய வண்டி. கொல்கத்தா நகரத்தின் வீதிகளில் மக்களின் வாழ்க்கை முறையையும் அழகாக படம்பிடித்திருக்கிறார்கள்.

  Image Courtesy

  படகு :

  படகு :

  மாட்டின் தோலினைக் கொண்டு செய்யப்பட்ட படகினை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் சட்லஜ் நதியைக் கடக்க இந்த வகை படகைத் தான் ஆரம்ப நாட்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

  Image Courtesy

  இறுதிச் சடங்கு :

  இறுதிச் சடங்கு :

  ஆக்ராவின் கடைத் தெருவில் இந்து மக்கள் பங்கேற்ற இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் புகைப்படம். அப்போது அவர்கள் கடைபிடித்த நடைமுறைகள் ஆகியவற்றிற்கு சான்றாய் நிற்கிறது இந்த புகைப்படம்.

  Image Courtesy

  சுற்றுலா :

  சுற்றுலா :

  கல்விக் கூடத்திலிருந்து அப்போது வழிபாட்டுத்தளங்களுக்கு மட்டும் தான் சுற்றுலாவாக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அமிர்தசரஸில் இருக்கக்கூடிய புனித பொற்கோவிலிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகளும் ஆசிரியர்களும், கோவிலுக்கு முன்புறம் அமைந்திருக்கும் குளத்திற்கு அருகே புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.

  புகைப்படத்தினை பார்த்தாலே சில விஷயங்களை புரிந்து கொள்ளலாம். எந்த ஒரு பெண்ணுக்கும், கீழ் சாதியினருக்கும் படிக்க அனுமதியே இல்லை .

  Image Courtesy

  இந்திய குடியரசுத் தலைவர் :

  இந்திய குடியரசுத் தலைவர் :

  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் தன் பாதுகாவலர்களுடன் நகர் வலம் வந்த மிக அபூர்வமான புகைப்படம்.

  Image Courtesy

   ராமகிருஷ்ண பரமஹம்சர் :

  ராமகிருஷ்ண பரமஹம்சர் :

  இதுவரை விவேகானந்தரை காவி உடை அணிந்த நிலையிலேயே தான் பார்த்திருப்போம். அவரது உருவம் கூட உண்மையான முகமா என்று அல்லது கற்பனையில் வரைந்த ஓவியமா என்று நினைத்திருப்போம். இந்தப் படத்தினைப் பாருங்கள் ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்த நிகழ்வின் இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்ட படம் இது.

  இதில் இடமிருந்து நான்காவதாக வெள்ளை உடையில் நிற்பவர் தான் விவேகானந்தர்.

  Image Courtesy

   அன்னா ஹசாரே :

  அன்னா ஹசாரே :

  சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல்வாதிகளிக்கு எல்லாம் திகில் கிளப்பிய அன்னா ஹசாரே ராணுவத்தில் இருந்த போது எடுக்கப்பட்ட மிக அபூர்வமான புகைப்படம். இதில் வட்டமிட்டு காட்டப்பட்டிருப்பவர் தான் அன்னா ஹசாரே.

  Image Courtesy

  பகத் சிங் :

  பகத் சிங் :

  1930 ஆம் ஆண்டு லாகூரில் ஒட்டப்பட்ட போஸ்டர். சிறைத்தண்டனை கைதிகள் குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கிறது. மிக முக்கியமாக இதில் பகத் சிங்,சுக் தேவ்,ராஜகுரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும். பிறரது வழக்குகள் எந்த நிலையில் இருக்கின்றன என்று இருக்கிறது.

  Image Courtesy

  சுதந்திர போர் :

  சுதந்திர போர் :

  இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தினரால் தூக்கிலிடப்பட்ட இரண்டு இந்தியர்கள். இந்த சம்பவம் 1857 ஆம் ஆண்டு நிகழ்ந்திருக்கிறது.

  Image Courtesy

   பில் கேட்ஸ் :

  பில் கேட்ஸ் :

  இன்று உலகின் பணக்காரர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கும் பில் கேட்ஸ் 1977 ஆம் ஆண்டு லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

  Image Courtesy

  மிக்கி மவுஸ் :

  மிக்கி மவுஸ் :

  வால்ட் டிஸ்னி உருவாக்கிய கதாப்பாத்திரம் ஒன்று இன்று வரை உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் அது மிக்கி மவுஸ் தான். குழந்தைகள் எல்லாருக்கும் பிடித்தமான கார்ட்டூன் கதாப்பத்திரம் என்றே சொல்லலாம். முதன் முதலில் அதனை உருவாக்கும் போது போடப்பட்ட ஸ்கெட்ச் தான் இது.

  Image Courtesy

   நெருப்பு :

  நெருப்பு :

  பார்த்ததும் பதட்டமடைய வைக்கிற புகைப்படம் இது. வியட்நாமைச் சேர்ந்த புத்த மத துறவி ஒருவர் தன் உடல் மீது தானே நெருப்பு வைத்து தற்கொலை செய்து கொண்ட புகைப்படம் இது.

  வியட்நாம் அரசாங்கம் தங்களுகு எதிராக செயல்படுவதாக கூறி துறவிகள் எல்லாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு கட்டத்தில் திச் க்வாங் என்ற துறவி தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு நெருப்பு வைத்துக் கொண்டார். 1963 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த படம் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது.

  Image Courtesy

  போராட்டம் :

  போராட்டம் :

  2011 ஆம் ஆண்டு கனடாவில் நடைப்பெற்ற ஸ்டான்லி கப் ஃபைனல் ஐஸ் ஹாக்கிப் போட்டி நடைப்பெற்றது. வன்கவர் டீம் மற்றும் கேனக்ஸ் டீம் மோதிய அந்தப் போட்டியின் இறுதி முடிவு எட்டுவதற்குள் கலகக்காரார்கள் வீரர்களுக்கு எதிராக கோஷம் போட அது கைகலப்பாக மாறி அடிதடியாகி போலீஸும் வந்துவிட்டார்கள்.

  போலீஸ் வந்ததும் நிலைமை இன்னும் சீரியஸானது. போராட்டக்காரர்களும் கற்களைக் கொண்டு தாக்க ஆரம்பிக்க போலீசாரும் அவர்களை கட்டுப்படுத்தினர். நிலைமை கைமீறிச் சென்று விட்டது.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. ஊரே கலவர பூமியாய் இருக்க ஒரு காதலர்கள் நடு ரோட்டில் படுத்தபடி முத்தமிடுகிறார்கள்.

  Image Courtesy

   இன்னும் சேர்ந்தே தான் இருக்கிறீர்களா? :

  இன்னும் சேர்ந்தே தான் இருக்கிறீர்களா? :

  அன்று போட்டியை நானும் எனது காதலி அலெக்சாண்ட்ராவுடன் நண்பர் வீட்டில் தான் பார்த்தோம். போட்டி நடந்த ஸ்டேடியத்திலிருந்து பக்கத்தில் தான் வீடும் இருந்தது. போட்டி முடிந்ததும்,எங்கள் வீட்டிற்குச் செல்ல கிளம்பிய போது தான் வெளியில் போராட்டம் நடக்கிற விஷயமே தெரிய வந்தது.

  இருவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பக்கத்திலிருந்து கற்களை வீச ஆரம்பித்தார்கள், போலீசார் துறத்தி வந்தார்கள் எங்களையும் பிடித்து தள்ளினார்கள். அலெக்ஸான்ரா கீழே விழுந்து விட்டாள். அவளை நான் தூக்க முயற்சித்த போது அங்கு நடைப்பெற்ற கலவரத்தினால் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டாள், அவளது பயத்தை போக்கவே அங்கேயே நான் முத்தமிட்டேன்.

  அவள் சகஜமானதும் எழுந்து வந்துவிட்டோம். மறு நாள் இந்த புகைப்படம் குறித்து நண்பர்கள் கேட்க ஆரம்பித்தார்கள் முதலில் இது நீங்கள் தானா என்று கேட்டார்கள்? அடுத்தடுத்து டிவி, ரேடியோ, செய்தித் தாள்களிலிருந்து வரிசையாக போன்கள் வர ஆரம்பித்தன. சிலர் இதை தவறாகவும் விமர்சித்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் அந்த நிகழ்வு நடந்த நாள் வரும் போதெல்லாம் எங்களுக்கும் அழைப்புகள் வரும். தவறாமல் அவர்கள் கேட்கும் கேள்வி இன்னும் நீங்கள் சேர்ந்தே தான் இருக்கிறீர்களா? என்பது தான்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Rare Photos In history

  Rare Photos In history
  Story first published: Thursday, March 29, 2018, 15:27 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more