Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
திருநீறை எந்த விரலில் எடுத்துப் பூச வேண்டும்?... எந்த விரலில் எடுக்கக்கூடாது?...
திருநீறை முறைப்படி அணிய வேண்டும் என்றால் கட்டை விரல் மற்றும் மோதிர விரல் இரண்டையும் சேர்த்து தான் அணிய வேண்டும். ஆனால் நாம் ஏனோதானோவென எடுத்து பூசிக் கொள்கிறோம்.
திருநீறு அணிவதை வெறுமனே சமயம், ஆத்திகம் சார்ந்த விஷயங்களாக மட்டுமே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாகவும் அறிவியல் ரீதியாகவே நிரூபணம் செய்யப் பட்டிருக்கின்றன.

அப்படிப்பட்ட திருநீறு எப்படி அணிய வேண்டும், ஏன் அணிய வேண்டும் என்பது போன்ற ஆன்மீகக் காரணங்கள் மற்றும் அறிவியல் காரணங்களையும் இங்கே பார்க்கலாம்.

திருநீறு
image courtesy
திருநீறு இல்லாத நெற்றி பாழாகிப் போய்விடும் என்று பழமொழி ஒன்று உண்டு. நெற்றிப் பொட்டுக்குப் பின் உள்ள ஆக்கனா சக்தியைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் உடலுக்கு சக்தியை வழங்குகிறது இந்த திருநீறு.
திருநீறை எந்த விரலில் எடுத்து பூச வேண்டும். எந்த விரலில் எடுக்கக் கூடாது என்று சில கட்டுப்பாடுகள் சாஸ்திரங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன. அவற்றை முழுமையாக நம்பி கடைபிடிக்கும் போது தான் நாம் நெற்றியில் அணிகின்ற திருநீறு நம்முடைய தீய வினைகளை அறுக்கும் என்று கூறப்படுகிறது.
திருநீறு என்பது சுத்தமான மாசு இல்லாத ஆன்ம நிலை என்று பொருள். அதாவது நம்மிடம் இருக்கக்கூடிய மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றையும் அழித்து, நம்முடைய ஆன்மாவை தூய்மை வைத்திருப்பது தான் அதன் மகிமை.

நெற்றியில் அணிதல்
image courtesy
நாம் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா?... ஏன் நெற்றியில் திருநீறு அணிகிறோம் என்று. நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்ததை அப்படியே பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது.
நெற்றி என்பது நம்முடைய உடலில் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று. நம்முடைய உடலில் இருந்து மிக அதிக அளவிலான சக்தியை வெளிப்படுத்தவும் உள்ளிழுத்துக் கொள்ளவும் கூடிய இடமாக நெற்றியை வர்ம சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதனால் தான் நாம் திருநீறை நெற்றியில் அணிகிறோம்.

திசை
திருநீறு அணியும் போது, திசை அவசியமா என்று கேட்டால், மிக மிக அவசியம் என்று தான் கூறுவார்கள். ஆம். திருநீறை எப்போது அணிவதற்காகக் கையில் எடுத்தாலும் உடனே கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கித் திரும்பி நிற்க வேண்டும். வடக்கு அல்லது கிழக்குப் பக்கம் பார்த்து தான் திருநீறு அணிய வேண்டும்.

எங்கெல்லாம் அணியலாம்?
image courtesy
உடலில் திருநீறை நெற்றியில் மட்டும் தான் அணிய வேண்டுமா?... வேறு எங்கெல்லாம் அணியலாம் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும். உடல் முழுக்கவும் சில இடங்களில் திருநீறை பூசிக் கொள்ளலாம். அவை எங்கு எங்கு என்று பார்ப்போம்.
தலையின் நடுவில் (உச்சந்தலையில், நெற்றி, மார்பு, வயிறு, தோள்பட்டை, கைகளின் நடுவில், மணிக்கட்டுப் பகுதிகள், இடுப்பு, நடு கால் பகுதி, கீழ் முதுகு, கழுத்துப்பகுதி, காது பொட்டு ஆகிய இடங்களில் திருநீறை அணியலாம்.

பட்டை போடுதல்
image courtesy
ஆண்களில் சிலருக்கு திருநீறை எடுத்து நெற்றி முழுக்க பட்டை போட்டுக் கொள்வது வழக்கம். அதற்கான கைகளின் நடுவிரல்கள் மூன்றையும் பயன்படுத்துவார்கள். அந்த மூன்று விரல்களும் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று பேரையும் குறிக்கும்.

எந்த விரலில் எடுக்க வேண்டும்?
image courtesy
பொதுவாக திருநீரை ஐந்து விரல்களில் ஏதாவது ஒரு விரலில் தொட்டு எடுத்து நெற்றியில் வைப்பது வழக்கம். அது எவ்வளவு தூரத்துக்கு சரி?... திருநீரை குறிப்பிட்ட ஏதாவது விரலில் தான் எடுத்துப் பூச வேண்டுமா என்று கேட்டால் ஆம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
விபூதியை அணிவதற்கு சில விரல்களைப் பயன்படுத்தும் போது நன்மை உண்டாகும். சில விரல்கள் தீமையை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.
கட்டை விரலால் திருநீறை எடுத்து அணிந்தால் தீர்க்க முடியாத வியாதிகளுக்கு ஆளாக நேரிடும்.
ஆள்காட்டி விரலால் திருநீறை எடுத்து அணிந்தால், பொருள் நாசம் உண்டாகும்.
நடுவிரலினால் திருநீறைத் தொட்டு அணிந்தீர்கள் என்றால் மன நிம்மதி பறிபோய்விடுமாம்.
மோதிர விரலால் திருநீறை எடுத்து கிழக்கோ அல்லது வடக்கோ திரும்பி நின்று திருநீறை அணிந்தால், மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும்.
சுண்டு விரலினால் திருநீறை எடுத்து அணிந்து கொண்டால் கிரக தோஷங்கள் உண்டாகும்.
மோதிர விரல் மற்றும் கட்டை விரல் இரண்டையும் சேர்த்து வைத்து திருநீறினை எடுத்து, அதை மோதிர விரலில் குவித்து, மோதிர விரலின் மூலம் நெற்றியில் அணிந்து கொண்டீர்கள் என்றால், உலகமே உங்களுக்கு வசப்படும். நீங்கள் எந்த காரியத்தை நினைத்து திருநீறு அணிகிறீர்களோ அது நிச்சயம் வெற்றி பெறும்.

ஆரோக்கிய நன்மைகள்
திருநீறு எப்பேர்ப்பட்ட கொடுமையான வயிற்று வலியையும் கூட தீர்க்கும் திறன் பெற்றது. மழைக்காலங்களில் இது உங்களுக்கு பேருதவி புரியும். எப்படியென்றால், ஒரு வேளை நீங்கள் மழையில் நனைந்துவிட்டாலோ உடனே திருநீறை பூசிக் கொள்ளுங்கள். காய்ச்சல் ஏதும் வராது.
சிலருக்கு தலைக்குக் குளித்து முடித்ததும் தலை வலிக்க ஆரம்பித்துவிடும். தலையில் நீர் கோர்த்துவிடும். அத்தகைய நீரைக் கூட உடனே நெற்றி முழுக்க திருநீறைப் பூசி வெளியேற்றி விட முடியும்.
அதனால் திருநீறை வெறும் ஆன்மீகம் மற்றும் சமயம் சார்ந்த விஷயமாக மட்டுமே நினைத்து ஒதுக்கி வைத்துவிட வேண்டாம். அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நன்மைகளும் இருக்கின்றன என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
உண்மையான திருநீறு என்பது பசுவின் சாணத்தை எரித்த பின் கிடைப்பது தான். அதுதான் ஆன்மீக ரீதியாகசும் உண்மையான சுத்தமான திருநீறாகக் கருதப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம் வாசனைப் பொருளு்கள், ஜவ்வாது போன்றவை கலந்து திருநீறு தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப் படுகிறது.



Click it and Unblock the Notifications