For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நிஜமாவே இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தானுங்க... #FunnyPhotoCollection

  By Staff
  |

  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைவரும் அறிந்தது தான். அது உணவிலோ, உறவிலோ மட்டுமல்ல... நாம் பயன்படுத்தும் பொருட்களிலும் கூட. உலக சாதனை செய்கிறோம், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கிறோம் என்று சிலர் தேவையே இல்லாமல் சிலவற்றை மிகப்பெரும் அளவில் உருவாக்கி சாதனை செய்வார்கள். பேசாமல், அதை உருவாக்க தேவைப்படும் பணத்தை இயலாதோருக்கு கொடுத்தாவது உதவலாம்.

  சரி! அட்வைஸ் எல்லாம் பண்ணா யாருக்கு இப்ப பிடிக்குது... இங்குட்டு பாருங்க... நாம சின்னதா பார்த்த சில விஷயம் எல்லாம் எம்புட்டு பெருசா இருக்குன்னு...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  ஒரு காலத்துல நாமும் ஸ்கூலுக்கு குதிரை வண்டி, மாட்டு வண்டியில எல்லாம் போயிருப்போம். சரி, குதிரை, மாடு இல்லாத ஊருல ஒட்டகம் கூட பயன்படுத்தலாம். அதுக்குன்னு.. இப்படி ஏதோ டபிள் டக்கர் பஸ், ட்ரெயின் மாதிரி, டபிள் டக்கர் ஒட்டக வண்டி எல்லாம் பாவமுங்க. அந்த ப்ளூ க்ராஸ் இதெல்லாம் பார்க்க மாட்டாங்களா.. ஒருவேளை ப்ளூ கலர் அடிச்சு.. ப்ளூ க்ராஸ்யே மடக்கிட்டாங்லோ. அந்த ப்ளூ க்ராஸ் காரங்க யாராவது இருந்தா.. இவங்கள பிடிச்சு ஜெயில்ல போடுங்கப்பா.

  #2

  #2

  ஆமா, உலக சாதனை பண்றன்னு முடிவி பண்ணிட்டா... என்ன வேணாலும் பண்ணுவாங்க போல... யானைக்கு ட்ரெஸ் தைக்கிறது, ஷூ செய்யிறது... ஒரு கிலோமீட்டர் கணக்கா கேக் பண்றதுன்னு... எதாச்சும் பண்ணிக்கிட்டே தான் இருக்காங்க. ஒருவேளை இதுக்கூட அப்படி தான் இருக்கும் போல.சுதந்திர தேவி சிலைக்கு வக்கீல் கோர்ட்டு தெச்ச மாதிரியே இருக்குல.

  #3

  #3

  ரிட்டையர்ட் மிலிட்டரியா இருப்பாரு போல இந்த வூட்டு ஓனரு. யப்பா.. எல்லாம் ஜீப்பு, ஏர் ஃபோர்ஸ் ஃப்ளைட்டு, மிலிட்டரி தொப்பின்னு கலக்கலா வெச்சிருக்காரு. நல்ல ரசனையப்பா. ஒரு வேலை போர் காலத்துல அடிப்பட்டு, உடைஞ்சு போன பொருள் எல்லாம் வூட்டுக்கு எடுத்துட்டு வந்து அலங்காரம் பண்ணிட்டாரோ...

  #4

  #4

  நம்மூருல.. இருக்குறத வெச்சு வாழ கத்துக்கணும்ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அதாவது கையில இருக்குறத வெச்சு.. அதுக்கு ஏத்தாப்பு வாழனும். அதிகமா ஆசைப்பட்டு இருக்குறத எல்லாம் இழந்திட கூடாதுன்னு சொல்வாங்க. இது உறவுக்கும் பொருந்தும், வேலைக்கும் பொருந்தும், எல்லாத்துக்கும் பொருந்தும். நம்மவர் அப்படி தான் போல, பையன் தனியா நீச்சல் குலம் கேட்டிருப்பான் போல, பால்கனிய ஸ்விம்மிங் பூல் ஆக்கிட்டாப்புல.

  #5

  #5

  ஏம்பா... உனக்கு என்ன வருமோ.. அத தான் பண்ணனும். நீ ஆத்துல அரசனா இருக்கலாம்... ஆனா நிலத்துக்கு வந்தா சிலை மாதிரி தானே கிடப்ப... பல்லு பெரிசா இருக்குன்னு எதை வேணாலும் திங்க ஆசைப்படுறதா.... பல்லு சில்லு சில்லா தெரிச்சிடும்.

  #6

  #6

  ரொம்ப பாசக்கார பயலா இருப்பான் போலயே... இதெல்லாம் நாய் வளர்க்குற சிலர் பார்க்கலாம்... வேண்டா வெறுப்புக்கு புள்ள பேச்சு காண்டா மிருகம்ன்னு பெயரு வைக்கிற மாதிரி... ஊருல நாலு பேரு நாய் வளர்க்குறாங்கன்னு பார்த்துட்டு.. இவங்களும் வாங்கி வளர்ப்பாங்க. சின்ன ஸ்கின் டிசீஸ் வந்தா கூட டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகாம, எங்காச்சும் தூரமா கொண்டு போயி விட்டுடுவாங்க. இங்க பாருங்க.. பய எம்புட்டு பாசமா இருக்கான்னு.

  #7

  #7

  அதென்னமோ நம்மூருல மட்டும் தான் சிலருக்கு மூளை வழிஞ்சு ரோடு முழுக்க ஓடுதுன்னு பார்த்தா.. வெளிநாட்டுல சிலருக்கு அங்கெல்லாம் அருவியா நிரம்பி வழியுது போல. என்ன ஒரு பாதுகாப்பு... என்ன ஒரு புத்திசாலித்தனம்.

  #8

  #8

  இந்த ஆல் இன் ஆல் அழகுராஜான்னு ஒருத்தர் நம்ம ஊருல இருந்தாருல... அவருக்கு தூரத்து சொந்தம் தான் இவரு. பிறக்கும் போது உடல் எடை மட்டுமே தான் ஒவ்வொருத்தருக்கும் வித்தியாசமா இருக்கும், வேறுபடம்?! மூளை அளவு கூடவா வேறுபடும். இல்ல ஆண்டவன் இவங்களுக்கு மட்டும் மூளைய உடம்பு முழுக்க வெச்சு படைச்சுட்டானா...

  #8

  #8

  பூசணிக் காய பரங்கி காய்னும் சொல்லுவோம்... புனித தோமையார் மலைய பரங்கி மலைனும் சொல்லுவோம்... இத ஏன் இப்ப சொல்றன்னு கேட்கிறீங்களா.. ஒரு பஞ்ச கிடைச்சிருக்கு இந்த படத்துக்கு அத சொல்றதுக்கு தான்..

  பரங்கிக்காய் பெரிசா இருக்கும்ன்னு தெரியும், அதுக்குன்னு பரங்கி மலை சைஸ்லயா இருக்கும்...

  #10

  #10

  ஒரு மனுஷன் கிட்ட இருக்க கூடாத விஷயம் கஞ்சம். என்ன தான் நிறைய சொத்து சேர்த்து வெச்சாலும், கஞ்சத்தனம் இருந்துட்டா அத அனுபவிக்கவும் முடியாது, உறவுகள கூட அரவணச்சுக்கவும் முடியாது. ஆனா, இருக்குறது வெச்சு பிழைக்கிறதுன்னு ஒன்னு இருக்கு. முன்னாடி கூட நாம் இங்கயே பார்த்தோம். அது ரொம்ப நல்ல குணம். குடிசையில இருக்கவங்க கூட இந்த குணம் கொண்டிருந்தா... குபேரன் ஆயிடலாம்.

  #11

  #11

  இப்ப எல்லாம் அடிக்கடி நீங்க இப்படி ஒரு காட்சி பார்க்க முடியும். ஆடி, பி.எம்.டபிள்யூ மாதிரி சொகுசு கார் வெச்சிருப்பாங்க. ஆனா, அந்த காருக்கு பின்னாடி ஒரு சைக்கிள் கட்டி மாட்டியிருப்பாங்க. அதாகப்பட்டது, சைக்கிள் ட்ரெக்கிங் இல்ல, நல்ல இடத்துல சைக்ளிங் பன்றதுக்கு இப்படியான வேலைய இவங்க பண்றது உண்டு. அது காரு சரி.. பைக்ல கூடவ இப்படி மாட்டுவாங்க. சும்மாவே பைக்குல வேகமா போனா ஆக்சிடென்ட் ஆவுது. இதுல இப்படி எல்லாம் கட்டினு போனா ஆக்சிடென்ட் ஆகாமலா இருக்கும்.

  #12

  #12

  ஆடம்பரம்னா என்னன்னு யாராவது கேள்வி கேட்டா டக்குன்னு இந்த படத்த எடுத்து காமிச்சிடுங்க. மனுஷன் ரொம்ப ஆடுவாரு போல. சைடு மிரர் எங்க மாட்டி வெச்சிருக்காரு. எல்லாம் சரி, மழை வந்தாலோ, ஷாப்பிங் மால் பார்க்கிங் எல்லாம் போனா இந்த வண்டிய என்ன பண்ணுவாப்புல... நாறிடாது?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Oversize Things Funny Images

  Here it is collection of over sized images which will make you laugh like crazy.
  Story first published: Thursday, July 5, 2018, 16:38 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more