For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுக்கு டைட்டில் எல்லாம் இல்ல, நீங்களே வந்து பாருங்க... வயிறு வலிக்க சிரிப்பீங்க - # Epic Fails

|

ஆங்கிலத்துல Epic Failனு ஒரு வாக்கியம் இருக்கு. ஃபெயில்னா தோல்வி., எபிக் ஃபெயில்னா... வரலாற்றுல இப்படி எல்லாமாடா மோசமா தோப்பீங்கன்னு கரடியே காறித்துப்புன மாதிரியான தோல்வின்னு வெச்சுக்குங்களே... இத விளையாட்ட.. கேலியா நிறையவே நாம இன்டர்நெட்ல பார்த்திருப்போம்.

Most Epic Fail Moments

எபிக் ஃபெயில்ல நிறையா வகையறாக்கள் இருக்கு. அதுல ஒன்னு தான் டிசைன். ஏதோ ஒன்ன டிசைன் பண்ண போக... அங்க தெரிஞ்சோ, தெரியாமலோ பண்ண ஆல்டர் வேலைகள் ச்சீ... ச்சீ... சொல்ல வைக்கிற மாதிரியா மாறிடும். அப்படியான சில எபிக் ஃபெயில் புகைப்படத் தொகுப்ப தான் நாம இன்னிக்கி இந்த தொகுப்புல பார்க்க இருக்கோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

முன்ன எல்லாம் வீட்டுல, ஆபீஸ்ல படிக்கட்டுகளுக்கு டைல்ஸ், மார்பில்ஸ், கிரானைட் வெச்சு கட்டுனாங்க. இப்ப, அதுக்கு மேட் ஃபினிஷிங் பண்றாங்க. அதுலயும் பல டிசைன் எல்லாம் இருக்கு. அதுல ஒரு டிசைன் தான் இதோ நீங்க பார்த்துட்டு இருக்க இந்த படிக்கட்டுக்கு ஒட்டியிருக்க மேட் டிசைன். பார்த்தா படிக்கட்டு மாதிரி தெரியவே இல்லல்ல. அப்படி தான் அங்குட்டு படிக்கட்டுல இறங்கிட்டு இருந்தவருக்கும் தெரியல. அதான் டக்குன்னு ஒரு போட்டோவ எடுத்து தள்ளிட்டாரு.

#2

#2

ஹாலோவீன் கொண்டாடுறது நமக்கு எல்லாம் தெரிஞ்சுது தான். பயமுறுத்துறது மாதிரி ஹாலோவீன் மேக்கப், வீட்டு அலங்காரம், உடை அலங்காரம் எல்லாம் பண்ணுவாங்க. ஆனா, இங்க ஒரு மருத்துவமனையில, நோயாளிகளுக்கு சாப்பிட தர பிஸ்கட்ல, ஹாலோவீன் கொண்டாட்டத்தின் ஒரு பங்கா... ரெஸ்ட். இன். பீஸ். எழுதிய கல்லறை கல் வடிவத்துல பிஸ்கட் கொடுத்திருக்காங்க. இதெல்லாம் தகுமா?

#3

#3

ஏம்பா தம்பி... பர்த்டே கேக் வெட்டுறதுக்கு நல்ல மெழுகுவர்த்தி கேட்டா.. இப்படி.. ஏதோ முதராத்திரி கொண்டாடுற இடத்துல கூட பத்த வைக்க கூச்சப்படுற மாதிரியான வடிவத்துல மெழுகுவர்த்தி கொடுத்து வெச்சிருக்கீங்களே... இதுவும் டிசைனா...

#4

#4

நம்ம ஊருலயும் டவுன் பஸ், வெளியூர் பஸ்ல எல்லாம் அனுஷ்கா போட்டோவுல இருந்து நயன்தார போட்டோ வரைக்கும் நாம பலவன பார்த்திருக்கோம். அம்புட்டு கச்சிதமா வரைஞ்சு வெச்சிருப்பாங்க. இதோ! இங்கன பாருங்க... பொண்ணுன்னா வளைவு நெளிவோட இருப்பாங்க.. அதான் கவர்ச்சின்னு.. அதுக்குன்னு இம்புட்டு வளைவு நெளிவோட வா...?

#5

#5

போட்டோஷாப், கிராப்பிங் எல்லாம் பண்றது ஒகே தான். ஆனா, அத கொஞ்சம் ஒழுங்கா பண்ணக் கூடாதா? அதென்ன... மூணாவதா ஒரு கை அந்த பொண்ண இடுப்ப கட்டிப்பிடிச்சுட்டு இருக்கு. ஏம்பா டிசைனர்.. இத எல்லாம் நோட் பண்றது இல்லையா? பார்க்குறவங்க... அந்த பொண்ண தான தப்பா பேசுவாங்க...

#6

#6

இது என்னடா சூப்பர் மேனுக்கு வந்து சோதனை. சுவத்துல... சூப்பர் மேன், பேட் மேன் வரைஞ்சு வெச்சா மட்டும் போதாது. வாஷ் பேஷின ரெண்டு அடி தள்ளி வெச்சா என்னவாம்... சூப்பர் ஹீரோவ இப்படி பார்ன் மூவி ஆக்டர் மாதிரி ஆக்கிடீங்களேடா அப்ரசெண்டிகளா....

#7

#7

இதுக்கு எல்லாமா சர்டிபிகேட் கொடுக்குறாங்க... பார்த்துப்பா... நம்ம ஊருல இதுக்கும் போயி கியூவுல நிக்க போறானுங்க... விளையாட்டுக்கு பண்ணி இருக்கானுங்களா.. இல்ல நிஜமாவே ஏதோ எழுத போயி, ஏதோ எழுதி வெச்சிருக்காங்களா..

#8

#8

பெரும்பாலான ஆபீஸ் ஜன்னல்கள்ல இந்த ப்ளைண்ட்ஸ் நாம பார்க்க முடியும். வெளிச்சம் அதிகமா இருந்தா இத வெச்சு மூடி வெச்சிப்போம். வெளிச்சம் குறைவா இருந்தா.. திறந்து வெச்சுப்போம். எல்லாம் சரி... எதுக்கு அந்த மூலையில ஒத்தவரி ப்ளைண்ட்ஸ்... மிச்சம் மீது ஆயிட்டா கிடைக்குற கேப்புல மாட்டிவிட்டுட்டு போயிடுவாங்க போல...

#9

#9

ஸ்டிக்கர் டிசைன் பண்றதுல தான் குழறுபடி பண்றாங்கன்னு பார்த்தா... ராசா.. ஓட்டுறதுலயுமா? இதுக்கு புவர்னு கொடுத்தாலும் சிரிச்ச முகமா ஏத்துப்பாங்க போலயே.... விவி புவர் டா இது.

எங்க ஊருக்கு வந்து பாருங்கய்யா செம்மையா ஸ்டிக்கர் ஓட்டுவாங்க.. அதுக்குன்னே ஒரு க்ரூப் இருக்கு... வெள்ளம்னு வந்துட்டா பாஞ்சு, பாஞ்சு ஒட்டுவங்க...

#10

#10

அய்யோ பாவம்... வோட்காவுக்கு மாடலா நிக்கிறது எல்லாம் தப்பு இல்ல ராசாத்தி. ஆனா, slutனு தெரியிற மாதிரி போஸ் கொடுக்கிறது தான் தப்பு. நிச்சயமா Slutக்கு என்ன அர்த்தம், எதுக்காக சொல்லுவாங்கன்னு அந்த பொண்ணுக்கு தெரிஞ்சுருக்கும். இந்த போட்டோவ எடுத்த கேமரா கார பையன் தான் வேணும்னே இப்படி ஒரு போட்டோ எடுத்திருப்பான் போல... அடேய்!!!

#11

#11

மகராசா உங்கள உதவ வேண்டாம்னு யாரும் சொல்லல... ஆனா, உதவுறதுல தான் உங்க இன்னவேட்டிவ், கிரியேடிவ் திங்கிங் எல்லாம் காமிக்கணுமா? அதுல நீங்க அன்ப வெளிக்காட்டுனாலும்... பசியில வாடி கிடக்குற அந்த பிஞ்சுக்கு பாதி ப்ரெட் தான் கண்ணுக்கு தெரியும். உதவின்னு வந்துட்டா மனசு இருந்தா போதும், இன்னவேட்டிவ் எல்லாம் கொஞ்சம் ஓரம்கட்டி வைக்க கூடாதா?

#12

#12

இத என்னன்னு சொல்றது... ஏதோ சர்ச் வாசல்ல வெச்சிருக்க சிலைன்னு மட்டும் தெரியுது. அய்யா அவரு பக்கத்துல இருக்க குட்டி பையன் சிலைக்கு ப்ரெட் கொடுக்குற மாதிரியான சிலை தான் இது. ஆனா, நம்ம பக்கிப்பயலுக கண்ணுக்கு அதுமட்டுமா தெரியுது.... வேணாம்.. நான் சொல்ல விரும்புல...

#13

#13

முதல்ல இந்த கேள்விகள தூக்கணும்... ஏனுங்க தம்பி... அப்பாவோட மிடில் நேம் என்னன்னு கேட்டீங்க... paulக்கு நாலு எழுத்து தான் இருக்கு. இப்ப வந்து 5 எழுத்தாவது வேணும்னு கேட்டா.. இதுக்காக அப்பாவோட பெயரையா மாத்த முடியும்..

#14

#14

இதுக்கு தான் காசு கொடுத்து ஸ்டாக் போட்டோ வாங்கிக் கொடுக்கனும். சங்கடப்பட்டு பெயிண்ட் பண்ண வந்தவருக்கு லோ குவாலிட்டி போட்டோ எடுத்து கொடுத்தா இப்படி தான் வாட்டர் மார்கோட பெயிண்ட் பண்ணுவாங்க...

#15

#15

சிலர்கிட்ட கஞ்சத்தனம் இருக்கும்னு நமக்கு தெரியும். அப்படி நம்மள சுத்தி சிலரை பார்த்திருப்போம். ஆனா, மக்களே.. இப்படி ஒரு மனுஷன எங்கையாவது பார்க்க முடியுமா? டாயலெட் பேப்பர அந்த பக்கமா மாத்தி வைக்க ஒரு சில நூறு ரூபாய் செலவாகுமா...? இவரு வீட்டுக்கு வர சொந்தக் காரன் எல்லாம் ரெண்டாவது தடவ வரவே மாட்டான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Epic Fail Moments

If you had a stressful day and you need something to have fun with, we have gathered the fifty more epic fails of all time to enjoy.
Story first published: Monday, August 27, 2018, 13:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more