For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இவருதான் உண்மையான 'அயன்' - இலட்சக்கணக்கான டாலர்கள் ஏமாற்றிய பக்கா ஃபிராடு!

  |

  கே.வி. ஆனந்த இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் அயன். இந்த படத்தின் வெற்றிக்கு காரணமே திருட்டு, கொள்ளை, கடத்தல் சம்பவங்கள் எப்படி எல்லாம் நடக்கின்றன. கொள்ளைக்காரர்கள் மத்தியில் பொருள் பரிமாற்றம் எப்படி நடக்கின்றன என காட்டப்பட்ட விதம் தான்.

  Meet Frank William Abagnale, The World Class Fraud From History!

  Image Courtesy: vignette.wikia

  இந்த படத்தில் நடிகர் சூர்யா பல கெட்டப்புகளில் ஆள்மாறாட்டம் செய்து தோன்றி அதகளம் செய்திருப்பார். நடிகர் சூர்யா அயன் படத்தில் செய்த காரியத்தை போன்று பல மடங்கு வேலைகளை... பல வருடங்களுக்கு முன்னரே ஒரு அமெரிக்கர் அசால்ட்டாக செய்து முடித்திருக்கார்.

  சில காலம் சிறை தண்டனையும் பெற்று, பிறகு மனம் திருந்தி ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார் அந்த நபர்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பிராங்க் வில்லியம் அபாக்னேல்!

  பிராங்க் வில்லியம் அபாக்னேல்!

  பிராங்க் அபாக்னேல் என்று அறியப்படும் இவரது முழுப்பெயர் பிராங்க் வில்லியம் அபாக்னேல் ஜூனியர். இவர் 1948 ஏப்ரல் 27ம் நாள் பிறந்தவர். இவர் தற்போது அமெரிக்காவின் பிரபல ஆலோசகர் என்ற நற்பெயருடன் வாழ்ந்து வருகிறார். ஆனால், இவர் தனது இளம் வயதில் செய்யாத ஆள் மாராட்டமே இல்லை. பல கெட்டப்புகள், பல போலி ஆவணங்கள் உண்டாக்கி அசால்ட்டாக பல இலட்ச டாலர்களை அபேஸ் செய்துள்ளார் பிராங்க் வில்லியம் அபாக்னேல்.

  ஆள்மாறாட்ட கில்லாடி!

  ஆள்மாறாட்ட கில்லாடி!

  பிராங்க் வில்லியம் அபாக்னேல் தன்னுடைய 15வது வயதில் இருந்து 21ம் வயது வரையிலும் மட்டுமே விமானி, டாக்டர், வக்கீல், சிறை அதிகாரி, போலீஸ், பேராசிரியர் என்று பல ஆள்மாறாட்ட வேலைகளில் ஈடுப்பட்டு அமெரிக்காவையே அதிர வைத்துள்ளார். அன்றைய மதிப்பிலேயே இவர் ஏமாற்றிய பணத்தின் மதிப்பு பல இலட்சம் டாலர்களை தாண்டும் என்று கூறப்படுகிறது.

  இளம் வயது வாழ்க்கை!

  இளம் வயது வாழ்க்கை!

  பிராங்க் வில்லியம் அபாக்னேல்வின் தந்தை அபாக்னேல் சீனியருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். இதில், பிராங்க் வில்லியம் அபாக்னேல்க்கு பன்னிரண்டு வயதிருக்கும் போது, இவரது பெற்றோர் இருவருக்கும் விவாகரத்து நடந்தது. அப்போது இவர்கள் நியூயார்க் நகரில் வசித்து வந்தனர்.

  பிராங்க் வில்லியம் அபாக்னேல் முதன் முதலில் தனது திருட்டுத்தனத்தை காட்டியது, இவரது அப்பாவிடம் தான். கிரெடிட் கார்டு மூலமாக 3400 டாலர்களை ஏமாற்றி தப்பித்து ஓடிவிட்டார்.

  மோசடி மன்னன்!

  மோசடி மன்னன்!

  பிராங்க் வில்லியம் அபாக்னேல் பல வங்கிகளில் போலியான பெயரில் வங்கி கணக்குகள் துவங்கி காசோலைகளை கொடுத்து இலட்சக்கணக்கான அமெரிக்க டாலர்களை ஏமாற்றியுள்ளார். வங்கி வாடிக்கையாளர்களிடம் தனது போலியான காசோலைகளை கொடுத்து, அவர்களது பணத்தை தனது கணக்கில் சேமிக்கும்படி செய்து ஏமாற்றியுள்ளார் பிராங்க் வில்லியம் அபாக்னேல்.

  விமானி!

  விமானி!

  ஒன்றா, இரண்டா என்று கூறுவது போல எண்ணற்ற ஆசைகள் கொண்டிருந்தார் பிராங்க் அபாக்னேல். அதில் ஒன்று தான் விமானியாக இருப்பது. விமானியாக இருப்பதால் செலவே செய்யாமல் உலகம் முழுக்க சுற்றி பார்க்கலாம் என்று எண்ணினார். இந்த கனவிற்காக இவர் தேர்வு செய்த நிறுவனம் பான் ஆம்.

  போலி ஆவணங்கள்!

  போலி ஆவணங்கள்!

  ஒரு விமானியாக என்னென்ன ஆவணங்கள் வேண்டுமோ, அவற்றை எல்லாம் போலியாக தயார் செய்து பயிற்சி விமானி என்ற பெயரில் உலகம் முழுக்க பறக்க துவங்கினார் பிராங்க் அபாக்னேல். ஏறத்தாழ, இந்த போலி பயிற்சி விமானி என்ற பெயரில் இவர் 26 நாடுகளுக்கு 250 பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார்.

  மன மாற்றம்!

  மன மாற்றம்!

  ஒருமுறை விமானத்தை ஒட்டும்படி கூறியதற்கு ஆட்டோமேட் மோடில் போட்டு விமனத்தை இயங்க செய்து அந்த விமானத்தில் பயணித்த 140 பேரின் உயிருடன் விளையாடி இருக்கிறார் பிராங்க் அபாக்னேல். இந்த தருணத்தில் தான், தனது தவறை உணர்ந்து உண்மையை கூறி அந்த வேலையில் இருந்து விலகினார் பிராங்க் அபாக்னேல். அது நல வரை ஒரு விமானிக்கு கிடைக்கும் அதே சம்பளம், சலுகைகள் என அனைத்தையும் சகலவிதத்திலும் அனுபவித்து இருக்கிறார் பிராங்க் அபாக்னேல்.

  டாக்டர்!

  டாக்டர்!

  விமானி கனவு முடிந்தவுடன், போலியான மருத்துவர் ஆவணங்கள் தயாரித்து நகரில் இருந்து பெரிய மருத்துவமனையில் சூப்பர்வைசர் பணியில் சேர்ந்துள்ளார் பிராங்க் அபாக்னேல். அங்கே மருத்துவம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால், திடீரென ஒரு நாள்.... அவசர சிகிச்சைக்காக ஒரு குழந்தை அட்மிட்டானது.

  திணறல்!

  திணறல்!

  திணறிய பிராங்க் அபாக்னேல், உடன் இருந்த மருத்துவ மாணவர்களை வைத்து மருத்துவம் செய்து தப்பித்தார். ஆனால், இந்த சம்பவத்தில் மீண்டும் மன வருத்தம் அடைந்த பிராங்க் அபாக்னேல், அந்த பணியையும் விட்டு வெளியேறினார்.

  இது மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றதாக போலி ஆவணங்களை தயார் செய்து வழக்கறிஞர் பணியிலும் சில காலம் நீடித்திருந்தாராம் பிராங்க் அபாக்னேல்.

  தண்டனை!

  தண்டனை!

  நீண்ட காலம் போலீசுக்கும், அரசுக்கும் டிமிக்கி கொடுத்து வந்த பிராங்க் அபாக்னேல் 1969ம் ஆண்டு... இவருடன் ஏர் பிரான்ஸ் என்ற விமானத்தில் வேலை செய்த இவரது காதலி அடையாளம் காட்டிக் கொடுத்த போதுப் பிடிபட்டார்.பிறகு ஸ்வீடனில் ஆறுமாத சிறை தண்டனை அனுபவித்து, அமெரிக்க அரசின் நெருக்கடியால் நாடு கடத்திவரப்பட்டு 12 ஆண்டுகள் அமெரிக்க சிறையில் அடைக்க தண்டனை வழங்கப்பட்டது.

  மனமாற்றம்!

  மனமாற்றம்!

  ஆனால், சிறையில் பிராங்க் அபாக்னேல் மிகவும் திருந்தி வாழ்ந்து வந்தார். இனிமேல் தான் எந்தவொரு தவறிலும் ஈடுபட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். ஆகையால், 12 வருட தண்டனை 5 வருடமாக குறைக்கப்பட்டு விடுதலை ஆனார் பிராங்க் அபாக்னேல்.

  ஆலோசகர்!

  ஆலோசகர்!

  தண்டனை காலத்திற்கு முன்னதாகவே விடுதலை ஆன பிராங்க் அபாக்னேல். ஒருசில வேலைகள் செய்து வந்தார். திருந்தி வாழ்ந்தாலும் கூட இவரது தவறுகள் மற்றும் குற்றங்கள் அறிந்த பிறகு இவரை யாரும் வேலைக்கு வைத்துக் கொள்ள சம்மதிக்கவில்லை.

  இதனால் ஒரு கட்டத்தில் மனம் உடைந்து போனார் பிராங்க் அபாக்னேல். பிறகே, தனது திறமையை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.

  நேர்மையாக!

  நேர்மையாக!

  ஒரு நாள் ஒரு வங்கி மேலாளரை சந்தித்து தனது மொத்த வரலாற்றையும் கூறி, மோசடிகளை எப்படி எல்லாம் தடுக்கலாம் என்று கூறி, அந்த வேலையை தான் செய்ய விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார் பிராங்க் அபாக்னேல்.

  அந்த வங்கி மேலாளரும் பிராங்க் அபாக்னேலின் அப்ரோச் பிடித்து போக உடனே வேலை தர சம்மதம் தெரிவித்தார்.

  ஐநூறு டலார்கள்!

  ஐநூறு டலார்கள்!

  அந்த வங்கி அதிகாரி ஒரு ஊழியருக்கு பயிற்சி அளிக்க ஐநூறு டாலர்கள் சம்பளம் அளிப்பதாகவும் தெரிவித்தார். இதன் பிறகு, அபாக்னேல் அசோஸியேட் என்ற பெயரில் நிதி நிறுவனங்கள் எமாற்றமால் இருக்க ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஒன்றை துவக்கினார் பிராங்க் அபாக்னேல்.

  இன்று 14,000 கம்பெனிகள் இவரது நிறுவனத்திடம் ஆலோசனை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  இவரது வாழ்க்கை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் 'கேட்ச் மீ இப் யூ கேன்' (2002) என திரைப்படமாக வெளியாகியுள்ளது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Meet Frank William Abagnale, The World Class Fraud From History!

  Meet Frank William Abagnale, The World Class Fraud From History!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more