இந்தியாவில் நிகழ்ந்த ‘மாஸ் ரேப்’ நீதிக்காக 27 வருடங்களாக போராட்டம்!

Posted By:
Subscribe to Boldsky

காஷ்மீரில் இருக்கக்கூடிய மிகவும் சிறிய கிராமம். குனன் மற்றும் போஷ்போரா இதனை இரட்டை கிராமம் என்றே அழைக்கிறார்கள். 27 வருடங்களுக்கு முன்பு பிப்ரவரி 23 ஆம் தேதி 1991 ஆம் ஆண்டு அங்கு நிகழ்ந்த சம்பவம் இன்றளவும் இந்தியாவிற்கும் இந்திய ராணுவத்திற்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

பிப்ரவரி மாதம் என்றல்ல எப்போதும் அங்கு பயங்கரமான குளிர் அடிக்கும், இரவு நேரங்களில் சொல்லவே வேண்டாம். அன்றைய தினமும் குளிரைத்தாண்டி உறைந்து ஐஸ் மழை, வீட்டின் ஜன்னல் உறை பனியால் மூடிவிட்டிருந்தது. மூச்சடைக்கும் அளவிற்கு குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. காஷ்மீரில் இருக்கக்கூடிய குப்வாரா என்ற மாவட்டத்தில் தான் குனன் கிராமம் இருந்தது.

இங்கே பிப்ரவரி 23 ஆம் தேதி இரவு திடீரென நுழைந்த ராணுவ வீரர்கள் அங்கிருந்த கிராமப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தனர் சம்பவம் நடந்து 27 வருடங்கள் ஆன பின்பும் இன்னமும் அவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்த நாள் :

அந்த நாள் :

அந்த நாள் மிகவும் நல்லபடியாகத்தான் முடிந்திருந்தது. இரவு நானும் என் தங்கை ஃபாதிமாவும் ஒரே கட்டிலில் படுத்திருந்தோம். எங்களுக்கு அருகில் தம்பி ஹூசைன் கடைக்குட்டி. அப்போது எங்களுக்கு இருந்த ஒரே பொழுது போக்கு ரேடியோ கேட்பது மட்டுமே.... செய்திகளையும் காஷ்மிரி பாடல்களையும் அதில் கேட்போம். பெரும்பாலும் ரேடியோவை என் தாத்தா தான் கேட்டுக் கொண்டிருப்பார்.

Image Courtesy

திருமணம் :

திருமணம் :

எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது, அருகில் இருந்த போஷ்பொரா கிராமத்திலிருந்து என் தோழி அமினாவும் அன்று என்னுடனே இருந்தாள். என் திருமணத்தன்று பாட வேண்டிய பாடல்கள் என்று சொல்லி நான் தோழி அமினா மற்றும் தங்கை ஃபாத்திமா ஆகியோர் சேர்ந்து பாடலை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்தோம்.

எங்கள் வீடு இரண்டே இரண்டு அறைகளைக் கொண்டது. முன்னறையில் அம்மா, அப்பா தாத்தா படுத்திருக்க அதற்கு அடுத்த அறையில் நாங்கள் இருந்தோம்.

Image Courtesy

திருமணத்திற்கு பின் என்ன செய்வாய் :

திருமணத்திற்கு பின் என்ன செய்வாய் :

நான் பாடுவதைப் பார்த்து அம்மா, வெளியிலிருந்து சிரித்துக் கொண்டிருந்தார், பின்னர் இந்நேரம் உனக்கு திருமணமாகியிருந்தால் என்ன செய்து கொண்டிருப்பாய் என்று கேட்டார், நான் பதில் சொல்லும் முன்னரே அப்பா, என்ன சமைத்துக் கொண்டும் தைத்துக் கொண்டும் இருப்பாள் என்றார்.

அதைக்கேட்டு தோழி அமினா கிண்டல் செய்ய எல்லாருமே சிரித்தோம்.

Image Courtesy

கதவைத் தட்டுகிறார்கள் அம்மா :

கதவைத் தட்டுகிறார்கள் அம்மா :

மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரும் உறங்கினோம் சரியாக மணி 11 ஆகியிருக்கும் வாசலில் யாரோ கதவு தட்டும் சத்தம், திடுக்கிட்டு எழுந்தேன், உள்ளறையிலிருந்து முன்னறைக்கு வருகிறேன், என் காலடி சத்தம் கேட்டு அம்மா எழுந்து கொண்டார்.

திறக்காதே.... பின்னால் வா

மீண்டும் கதவு தட்டும் சத்தம் சற்று ஆழமாக ஓங்கி அடித்தார்கள். அம்மா யாரோ கதவு தட்டுகிறார்கள் என்றேன். நான் இங்கே பேசிக் கொண்டிருக்கும் போதே தாத்தா கதவைத் திறந்து விட்டார்.

Image Courtesy

வெளியே வா :

வெளியே வா :

ஒரு ராணுவ வீரர், எத்தனை ஆண்கள் உள்ளே இருக்கிறீர்கள் அப்பாவும் தாத்தாவும் கையை உயர்த்திக் கொண்டு முன்னால் வந்தார்கள். அமினாவும் ஃபாத்திமாவும் இரண்டு பக்கம் என்னை இருக்கமாக பிடித்திருந்தார்கள். பயத்தில் எங்களுக்கு உடல் எல்லாம் நடுங்கியது. அம்மா ஹூசைனை வைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

வெளிய வா என்று அப்பாவையும் தாத்தாவையும் அழைத்துச் சென்றார்கள். அப்பா பின்னால் திரும்பி அம்மாவைப் பார்த்தார். அம்மா வேண்டாம் என்பது போல சைகை செய்தார். ஆனால் ராணுவ வீரர்கள் இழுத்துச் சென்று விட்டார்கள்.

Image Courtesy

அரக்கர்கள் :

அரக்கர்கள் :

வெளியே சென்றது தான் தாமதம், எங்கள் வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு ராணுவ வீரனுக்கு பின்னால் ஆறேழு ராணுவ வீரர்கள் வந்துவிட்டிருந்தார்கள் எல்லாரும் குடித்திருந்தார்கள், மது வாடை அவர்கள் மீது வீசியது.

அம்மாவின் கையிலிருந்த தம்பி தூக்கி வெளியில் கிடாசப்பட்டான். ஒருவன் அம்மாவின் முடியைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றான். அமினாவும் ஃபாத்திமாவும் ஒவ்வொரு மூலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். என்னையும் சுவற்றோரமாய் தள்ளினார்கள்.

Image Courtesy

அம்மா காப்பாற்று :

அம்மா காப்பாற்று :

எதோ விபரீதம் நடக்கப்போகிறது புரிந்தது, கடவுளே.... என்னைக் காப்பாற்று கையெடுத்து கும்பிட்டேன், என்னை விட்டுவிடுங்கள் எனக்கு எதுவும் தெரியாது ஷூ காலில் என் தலையை வைத்து கும்பிட்டேன் தன்னுடைய ஒற்றை கையால் என்னை அலேக்காக தூக்கி கிச்சனுக்குச் சென்றான்.

மூலையில் அம்மாவின் கால் தெரிந்தது, அம்மா இருக்கிறாள் என்ற தைரியத்தில் அம்மா என்னைக்காப்பாற்று என்று கத்தினேன், இன்னொரு அடி எடுத்து வைத்து உள்ளே சென்று பார்த்தால் ஒரு கணம் உலகமே நின்று விட்டது போல தோன்றியது அங்கே ராணுவ வீரன் அம்மாவை பாலியல் வன்புணர்வு செய்து கொண்டிருந்தான். தொடர்ந்து எனக்கும் இதே கொடுமை அரங்கேறியது.

அவ்வளவு தான் என் உலகம் நான் வாழ்ந்த வாழ்கை எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த ஒரு இரவு தான் அடுத்து வரப்போகிற என் வாழ்நாளை நிர்ணயிக்கப்போகிறது என்பதை அப்போதே உணர்ந்தேன்.

Image Courtesy

பரிதாபம் :

பரிதாபம் :

ஒவ்வொரு வீட்டிலும் அப்படி நுழைந்திருக்கிறார்கள். சிறுமிகள்,பருவ வயது பெண்கள்,வயதானவர்கள்,உடல் ஊனமுற்றோர் கர்பிணிகள் என யாரும் தப்பவில்லை. அப்படி ஒரு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட இளைஞர்களில் சிலருக்கும் பயங்கரமான டார்ச்சர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வீட்டில் இருந்த பெண் பிரசவத்திற்காக தன் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள் இன்னும் சில வாரங்களில் அவளுக்கு பிரசவம் என்று சொல்லப்பட்டிருந்தது. ஒன்பது மாதங்கள் அவளும் இந்த கொடுமைக்கு உல்லானாள். இந்த கொடுமையை அனுபவித்த சில நாட்களிலேயே அவளுக்கு பிரசவமானது.

Image Courtesy

ஆர்மி ஆட்கள் :

ஆர்மி ஆட்கள் :

அதே இரவில் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண், மேல் அறையில் இருந்த எனக்கு சத்தம் கேட்டது, கீழே பார்த்தால் ராணுவத்தினர் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போதே விபரீதத்தை உணர்ந்து விட்டேன்.

இரண்டு பேர் என்னுடைய கையை பிடித்துக் கொண்டார்கள். இரண்டு பேர் காலை, பின்னர் என்னை பாலியல் வன்புணர்வு செய்தார்கள் எனக்கு நினைவு தெரிந்தவரையில் எட்டு முதல் பத்து பேர் பாலியல் வன்புணர்வு செய்தார்கள். அவர்கள் கையில் பெரிய பேட்டரி டார்ச் இருந்தது அதை வைத்து எங்களது முகங்களையும் முழு நிர்வாண உடலையும் பார்த்தார்கள்.

Image Courtesy

சத்தம் வராமல் செய்திடுங்கள் :

சத்தம் வராமல் செய்திடுங்கள் :

ஆங்காங்கே கூச்சல்கள், கூக்குரல்கள், கெஞ்சல்கள், அழுகை சத்தம் என கேட்டுக் கொண்டேயிருந்தது. யாரோ ஒருவர் உயர் அதிகாரி போல, அவர் நடுவில் நின்று கொண்டு சத்தம் போட அனுமதிக்காதீர்கள், சத்தமில்லாமல் வேலையை முடியுங்கள் என்று சொன்னார்.

இதற்கு அந்த கிராமத்திலிருந்த போலீஸும் உடந்தையாக இருந்திருக்கிறது என்பது பின்னாளில் தான் தெரிந்தது.

Image Courtesy

உயிருடன்... :

உயிருடன்... :

கண்விழித்த போது முழு நிர்வாணமாக கிடந்தேன். அந்த இரவு எங்கள் குடும்பத்தையே சிதைத்து விட்டது. இதை நான் வெளியில் சொல்லவில்லை, அப்படிச் சொன்னால் எனக்கு திருமணம் நடக்காது என்றார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இப்படியான கதைகளை அடுத்தடுத்த நாட்களில் கேட்க முடிந்தது,அவர்களில் பெரும்பாலானோர் மறந்து விடு, பெரிது படுத்தாதே, வெளிய சொன்னா உனக்கு தான் அசிங்கம் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல 27 வருடங்கள் கடந்து விட்டது, மூச்சு இருக்கிறது தான் ஆனால் நான் என்றோ இறந்துவிட்டேன்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse women
English summary

Mass Rape In Kunan and Phospora By Indian Army

Mass Rape In Kunan and Phospora By Indian Army
Story first published: Saturday, February 24, 2018, 16:30 [IST]