60 ஆண்டுகளாக இரும்புக்கூண்டிற்குள் அடைபட்டு கிடக்கும் மனிதர்!

Subscribe to Boldsky

போர் அடிக்கிது வெளிய போலாமா? ரொம்ப நேரம் ஒரே இடத்துல உக்காந்திருந்தா ஹெல்த்துக்கு நல்லதில்ல என்று சொல்லி பயங்கரமாக பயமுறுத்தப்பட்டிருப்போம். எல்லாம் சரி, ஒரு மனிதன் அறுபது ஆண்டுகளாக ஒரேயிடத்தில் அடைப்பட்டுக் கிடந்தால், சாத்தியமே இல்லை என்று நினைக்கிறீர்களா? இந்த கதையை படியுங்கள்....

தனக்கென தனி வீடோ அல்லது தனியறையோ அவருக்கு இருக்கவில்லை, அவருக்கு இருந்ததெல்லாம் ஒரேயொரு இரும்புப் பெட்டி. கழுத்து மட்டும் வெளியே தெரிய உடலை இரும்பு பெட்டிக்குள் திணித்திருப்பார்கள். இப்படியே தான் கடந்த அறுபத்தாறு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் பால் அலெக்சாண்டர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போலியோ :

போலியோ :

வளர்ந்து வரும் மருத்துவத்தின் வளர்ச்சியினால் முந்தைய காலங்களில் பெரும் அச்சுறுத்தலில் இருந்த பல நோய்களை நாம் முற்றிலுமாக அழித்துவிட்டோம் அப்படி ஒழிக்கப்பட்ட நோய்களில் முதன்மையானது போலியோ.

போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் கை கால் மட்டும் ஊனமாவதுடன் அவர்களது சுவாசத்திலும் பிரச்சனை ஏற்படும் படிப்படியாக முற்றிலுமாக உடலை இயக்கமுடியாது இறுதியாக உயிரை இழப்பர்

Image Courtesy

இளமை :

இளமை :

அது 1952 ஆம் ஆண்டு ஐந்து வயதிலிருந்த சிறுவன் பால் அலெக்சாண்டருக்கு போலியோ பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடிய மூச்சுத்திணறல் ஏற்பட மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

Image Courtesy

மருத்துவமனையில்.... :

மருத்துவமனையில்.... :

சுவாசப்பிரச்சனை இருப்பதால் மருத்துவனையிலிருந்த ஐந்து வயது சிறுவனான பாலிடம் கலரிங் புக் மற்றும் சில க்ரேயான்ஸ் கொடுக்கப்பட்டு ஒரு வார காலத்திற்கு நீ இப்படியிருந்தபடியே கலரிங் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

Image Courtesy

இறுதிக்கட்டம் :

இறுதிக்கட்டம் :

ஒவ்வொரு நாளும் க்ரேயான்ஸ் பிடிக்கும் பிடிப்பு வலுவிழந்து கொண்டே வந்தது, கையை அசைப்பதிலும் வேகம் குறைந்தது. எழுவதில், உட்காருவதில், நடப்பதில் என எல்லாவற்றிலும் தடுமாற்றங்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சில நாட்கள் சிகிச்சையளிக்கப்பட பாலுக்கு குணமாகவில்லை.

பால் அலெக்ஸாண்டர் தன்னுடைய இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று மருத்துவர் அறிவித்துவிட்டார்.

Image Courtesy

இரும்புப் பெட்டி :

இரும்புப் பெட்டி :

குறிப்பிட்டு சொல்ல முடியாதெனினும் விரைவில் உயிரிழப்பார் என்று சொல்லிட இரண்டு நாட்கள் கண்ணீரும் கதறுலுமாக நாட்கள் நகர்ந்தது. இரண்டு நாட்கள் கழித்து வந்த மருத்துவர் மீண்டும் சோதனை செய்கிறார்.

உயிரை காப்பாற்ற சிறுவன் பால் அலெக்ஸாண்டர் போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது.மருத்துவத்தின் படி இந்நேரம் உயிர் பிரிந்திருக்க வேண்டும். அதையும் தாண்டி போராடுகிறார் என்றால்..... யோசித்த மருத்துவர் உடனடியாக சிறுவன் பாலை தன் மார்போடு அணைத்து தூக்கி மாடிக்கு ஓடினார். அங்கே அறையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டிக்குள் பாலை வைத்து இயக்க சிறிது நேரத்திலேயே சகஜ நிலைக்குத் திரும்பினார் பால்.

Image Courtesy

வரப்பிரசாதம் :

வரப்பிரசாதம் :

அன்றைய காலத்தின் மிகச்சிறந்த சிகிச்சை முறை இது! சுவாசப்பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களை இதற்குள் வைத்து தான் செயற்கை சுவாசம் அளிப்பர். அந்த இரும்புக்கூட்டினை திறந்து பாதிக்கப்பட்ட நபரை படுக்க வைத்து கழுத்துக்கு மேலே முகம் மட்டும் தெரியுமாரு அடைத்து விடுவர்.

அடைக்கப்பட்டவுடன் பெட்டிக்குள் வெற்றிடம் உருவாகி நுரையிரலுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும் வகையில் இந்த பெட்டி உருவாக்கப்பட்டிருந்தது.

Image Courtesy

உள்ளே எப்படியிருந்தது? :

உள்ளே எப்படியிருந்தது? :

சில நேரத்தில் வெளியில் தெரிந்து கொண்டிருந்த முகத்தையும் ப்ளாஸ்டிக் கவரினை கொண்டு மூடியிருந்தார்கள். நான் எங்கேயிருக்கிறேன், இது வீடா? பள்ளியா? டிவியில் பார்த்த விசித்திர நகரமா? சொர்கமா? என்று எதுவும் அப்போது புரியவில்லை அந்த சிறுவனுக்கு.

பல வாரங்கள் இப்படியே நாட்கள் நகர்ந்தது. எங்கும் அசைய முடியவில்லை, நகர முடியவில்லை. அவ்வப்போது கண்களை திறந்து பார்க்கும் போது அம்மா நின்று கொண்டிருப்பார். இனம்புரியாத மகிழ்ச்சி எட்டிப்பார்க்கும். அம்மா இங்கேயே தான் இருக்கிறார் அப்படியானால் எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. பயப்படவேண்டாம் என்று அமைதியாகி சிரிக்கத் துவங்கி விடுவாராம் அலெக்ஸ்.

Image Courtesy

18 மாதம் :

18 மாதம் :

பாலுக்கு இப்படி சுமார் பதினெட்டு மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பொதுவாக குழந்தைப் பருவத்தில் இப்படி பாதிக்கப்படும் போது இந்த இரும்பு பெட்டியில் வைத்து சிகிச்சையளிப்பர் சற்று வளர்ந்ததும் இயல்பு நிலைக்குத் திரும்ப இனி இரும்புப் பெட்டியில் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் பாலுக்கு சிக்கல் தொடர்ந்தது. பருவ வயதை எட்டிய போதும் பாலுக்கு சுவாசப்பிரச்சனை சீராகவில்லை தொடர்ந்து இரும்புப் பெட்டியிலேயே இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Image Courtesy

கல்லூரிக்கு.... :

கல்லூரிக்கு.... :

1971 ஆம் ஆண்டு வரை பாலை பெற்றோர் மிகுந்து கவனிப்புடன் வளர்த்து வந்தார்கள், இரும்புப் பெட்டியும் பெற்றோரின் ஆதரவாலும் வாழ்நாளை நகர்த்திக் கொண்டிருந்தார் பால்.பெற்றோர் எனக்கு சுயமரியாதையையும், பெருமையையும் கற்றுக் கொடுத்தார்கள். கடவுள் எனக்கு தன்னம்பிக்கை அளித்தார்.

சோர்ந்து போகாதே.... எழுந்து நில்.... உன் வாழ்க்கைக்காக போராடு, ஜெயிக்க போராடு என்று என்னுள் சொல்லிக் கொண்டேயிருந்தேன். நாளடைவில் கழுத்துக்கு கீழே எந்த உறுப்பும் செயல்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தார்கள் பெற்றோர் வருத்தத்தில் அழுது கொண்டிருக்க, நான் அம்மாவை அழைத்தேன்.

அம்மா.... நான் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். படிக்க வேண்டும் என்றேன்.

Image Courtesy

போராட்ட வாழ்க்கை :

போராட்ட வாழ்க்கை :

மகனின் தன்னம்பிக்கையை நினைத்து பெருமிதம் கொண்டாலும் இது சாத்தியமா என்று யோசித்தார்கள் பெற்றோர் பின் என்ன நடந்தாலும் மகனின் ஆசையை நிறைவேற்றுவது என்று முடிவெடுத்தனர் பெற்றோர். மருத்துவர்களும் பச்சைக்கொடி காட்ட மருத்துவமனையிலிருந்து டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார் பால் இரும்புப்பெட்டியுடன்.

பல்கலைக்கழகமே ஒரு கணம் அதிர்ந்து வரவேற்றது. கல்லூரியில் பாலுக்கு உதவி செய்ய அங்கே படிக்கக்கூடிய ஒரு மாணவரை அழைத்துக் கொண்டார்.

Image Courtesy

போன் செய் :

போன் செய் :

மகனை வகுப்பறையில் இரும்புக்கூண்டில் அடைத்தபடி விட்டுவிட்டு செல்ல பெற்றோருக்கு மனம் வரவில்லை, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இரும்புகூண்டிற்கு வெளியே தெரிந்த கழுத்தை எக்கி பால் சொன்னாலும் சற்று தயக்கத்துடன் நின்றனர்.

அப்போது பாலின் அப்பா ஒரு ஐடியா செய்தார். வாய்க்கு அருகில் கைய்யினைக் கட்டி ஒரு பென்சிலை மாட்டிவிட்டார். முகத்திற்கு பக்கவாட்டில் போன் வைக்கப்பட்டது. உனக்கு எதாவது தேவையென்றால் இந்த பென்சில் மூலமாக போன் பட்டனை தட்டினால் போதும் நாங்கள் வந்து விடுவோம். வாயை அசைத்து உன்னால் எளிதாக போனை அழுத்த முடியும் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.ஆனால் அதை அலெக்ஸாண்டர் செய்யவில்லை. என்ன நடந்தாலும் தானே சமாளிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

Image Courtesy

 முதல் மூன்று நாட்கள் :

முதல் மூன்று நாட்கள் :

விடுதி அறையில் இரும்பு பெட்டிக்குள் படுத்திருந்த மகனின் கண்களைப் பார்த்தபடியே விடைப்பெற்றனர் பெற்றோர். முதல் மூன்று நாட்கள் யாரும் அலெக்ஸுக்கு உதவி செய்ய வரவில்லை, மூன்று நாட்கள் தனியறையில் ஒரேயிடத்தில் மேல் சுவற்றைப் பார்த்தபடி கிடந்தார். சாப்பிடவில்லை, கழிவரைக்குச் செல்லவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை.

பழைய நினைவுகளை அசைபோட்டபடியே அப்படியே கிடந்தார். தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படியான கூண்டில் தானே அடைப்பட்டுக்கிடக்கிறார்.

Image Courtesy

இரண்டு பேர் :

இரண்டு பேர் :

திடிரென்று பயங்கர சத்தம், இதுவரை அப்படியொரு சத்தத்தை கேட்டதில்லை, மரண தேவன் வந்து விட்டானா.... மரணத்திற்கு நான் இன்னமும் தயாராகவில்லை, நான் இன்னமும் எந்த சாதனையையும் செய்யவில்லை, வாழ்க்கையில் இன்னமும் என் போராட்டத்தை துவக்கவில்லை என்று அந்த சோர்விலும் பரபரப்பானது அலெக்ஸின் முகம்.

இரண்டு பேர் வந்திருந்தார்கள். விடுதியில் தங்கியிருப்பதாகவும் உங்களுக்கு உதவி செய்கிறோம் என்று சொன்னார்கள். உற்சாகமானார் அலெக்ஸ்.

Image Courtesy

கடவுள் அனுப்பிய தேவதை :

கடவுள் அனுப்பிய தேவதை :

உதவிக்கு ஆள் கிடைத்துவிட்டது, இனி வெற்றியுடன் தான் திரும்ப வேண்டும் என்று உறுதியேற்றார். வாய்க்கு அருகில் இருந்த கயிறும்,பென்சிலும் போனும் சதா வீட்டையும் அம்மாவையும் நினைவுப்படுத்தி உறுத்திக் கொண்டேயிருந்தது. பாலுக்கு இது மிகவும் சங்கடமாக இருந்தது. எக்கி எக்கி பென்சிலை வாயில் பிடித்தார். வாயில் வைத்துக் கொண்ட படியே பென்சிலை தூரத்துப்பினார்.

ஹ்ம்..... இனி என்னால் போன் செய்ய முடியாது என்று சிரித்துக் கொண்டார்.

மறுநாள். உதவிக்கு வருவதாக சொன்ன இரண்டு பேர் வரவில்லை..... காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போன நேரத்தில் பெண்ணொருத்தி வந்து நின்றாள். தான் ஒரு செவிலியர் என்றும் இனி நான் தான் உங்களை பார்த்துக் கொள்ளப்போகிறேன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டாள். யார் அனுப்பியது, உதவிக்கு வருகிறேன் என்று சொன்னவர்கள் எங்கே என்றெல்லாம் தெரியாது.... உதவியை ஏற்றுக் கொண்டேன் எனக்கு அவள் கடவுள் அனுப்பிய தேவதை.

Image Courtesy

15 வருடங்கள் :

15 வருடங்கள் :

செமஸ்டர் முழுவதும் உடனிருந்தாள்..... படிப்பு தொடர்ந்தது. எல்லாரும் பாலுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்கள். தன் கவனத்தை படிப்பில் மட்டுமே வைத்து கூர்ந்து கவனித்து படிக்க ஆரம்பித்தார் பால். சுமார் பதினைந்து வருடங்கள் மூன்று வெவ்வேறு டிகிரிகளை முடித்து வேறு சில பட்டப்படிப்புகளையும் தொடர்ந்து சட்டத்தை படித்து வக்கீலானார்பால்.

வளர வளர..... ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும் இரும்புக்கூண்டின் உதவி இல்லாமல் சுவாசிக்க முடியும் என்ற நிலை உருவானது.

Image Courtesy

விந்தை உலகம் :

விந்தை உலகம் :

தொடர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியால் இந்த மூச்சுத் திணறுலுக்கு அட்வான்ஸ்டு கருவிகளையும், போலியோ தாக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகளையும் கண்டுபிடித்திருந்தார்கள்.

இந்த இரும்பு நுரையிரல் முறை 1960களுக்குப் பிறகு வழக்கொழிந்து போனது. சிறிது சிறிதாக இப்படி கூண்டில் அடைக்கபட்டு சிகிச்சையளிப்பது முற்றிலும் நின்று போனது.

Image Courtesy

பத்து பேர் :

பத்து பேர் :

உலகிலேயே இதுவரை பத்தே பத்து நபர்கள் தான் இப்படி இரும்புக் கூண்டின் உதவியுடன் வாழ்ந்து வருகிறார்களாம். அவர்களில் பாலும் ஒருவர். 1960களுக்கு பின்னால் போலியோ என்ற நோய் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டது. இன்றைய மருத்துவ வளர்ச்சியினால் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு நோய்க்கு யார் செலவு செய்து மருந்துகளையோ அல்லது உபகரணத்தையோ கண்டுபிடிக்க முன்வருவர்..... போலியோவினால் தப்பிப் பிழைத்த வெகு சிலருக்காக அதுவும் வயோதிக காலத்தில் இருக்கக்கூடிய அவர்களுக்காக புதிய கண்டுபிடிப்புகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி தற்போது வரையில் இரும்புப்பெட்டியில் அடைப்பட்டிக்கிடக்கிறார் பால்

Image Courtesy

மரண பயம் :

மரண பயம் :

தற்போது எழுபது வயதாகும் பால் 2015 ஆம் ஆண்டு மிகப்பெரிய சிக்கலில் சிக்கினார். ஆம், பால் இருந்த இரும்புக்கூண்டு பழுதானது உடனடியாக அதனை சரிபார்க்க வேண்டிய கட்டாயம். ஆனால் உலகிலேயே இப்படியான மெஷினை பயன்படுத்துவது பத்தே பத்து பேர் தான். இதனைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் உயிருடன் இருப்பது நிச்சயமில்லை.

இதில் செய்யப்பட்டிருக்கும் ப்ராசஸ் என்ன? அதில் என்ன கோளாறு ஆகியிருக்கிறது? மாற்ற வேண்டிய பொருள் என்ன? அது எங்கே கிடைக்கும்? இவற்றில் எந்த கேள்விக்கும் பாலுக்கு விடை கிடைக்கவில்லை.பாலுக்கு லேசாக மரண பயம் எட்டிப் பார்த்தது. ஒரு வேலை இதனை சரி செய்திடும் மெக்கானிக் கிடைத்தால்? நினைக்கும் போதே சிரிப்பு வந்தது. இந்த நூற்றாண்டில் இப்படியொரு மெஷின் இருப்பதே தெரியாத போது மெக்கானிக்கை எப்படித் தேடுவது.

Image Courtesy

கடவுளின் மெக்கானிக் :

கடவுளின் மெக்கானிக் :

தன்னைப் பற்றியும், தன் பிரச்சனையைப் பற்றியும், என் உயிரைக் காப்பாற்ற அவசரமாக ஒரு மெக்கானிக் வேண்டும். இந்த மெஷினை சரி செய்திட வேண்டும் என்று சொல்லி இணையத்தில் பகிர்ந்து கொள்கிறார் பால். முதல் இரண்டு மாதங்களில் எந்த தகவலும் இல்லை, சோர்ந்து போனார். மூன்றாம மாதத்தின் நடுவில் பாலுக்கு ஒருவர் பேசினார்.

தான் ஒரு மெக்கானிக் என்றும், தனக்கு இந்த மெஷின் பற்றிய அறிமுகம் இருக்கிறது ஆனால் பார்த்ததில்லை, கையாண்டதில்லை நான் வேண்டுமானாலும் முயற்சிக்கவா என்று கேட்க உடனேயே சம்மதம் தெரிவித்தார் பால். வீட்டிற்கு வந்தவர் மெஷினை ரிப்பேர் செய்து கொடுத்தார். கடவுள் தான் இந்த மெக்கானிக்கை என்னிடம் அனுப்பி வைத்து என்னை காப்பாற்றியிருக்க வேண்டும் என்று சொல்லும் பால் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

Image Courtesy

புத்தகம் :

புத்தகம் :

தன்னைப்பற்றிய ஆட்டோபயோகிராபி புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். கல்லூரியில் சேரும் போது ஏதாவது வேண்டுமென்றால் போன் செய் என்று சொல்லி அப்பா வாய்க்கு அருகில் பென்சிலை வைத்தாரே அதே டெக்னாலஜி!

இம்முறை போனுக்கு பதிலாக கீபோர்டு. வாயில் பென்சிலை பிடித்துக் கொண்டு பக்கவாட்டில் இருக்கும் கீபோர்டில் எழுத்துக்களை தட்டச்சு செய்து தான் கடந்து வந்த பாதையை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறார் பால் அலெக்ஸாண்டர். அதோடு தன்னம்பிக்கை பேச்சாளராகவும் இருக்கிறார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync pulse
  English summary

  Man Lives With Iron Lungs

  Man Lives With Iron Lungs
  Story first published: Saturday, February 17, 2018, 13:10 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more